கோசலை.. “செந்தூரா வம்சி உன் கிட்ட தான் கேட்கிறான்..” என்று ஒரு அதட்டல் போட்டவர் மகனிடம்.. “அது எல்லாம் முடிஞ்சிடுச்சி வம்சி ஸ்வேதா நீ தனிப்பட்டு கிப்ட் கொடுப்பது பற்றி கேட்கிறா…” என்று அன்னை சொன்ன விளக்கத்தில்..
கோசலை கத்தலில் நிமிர்ந்து தன்னை பார்த்த செந்தூராவிடம்..
வம்சி.. “கிப்ட் வேண்டுமா..?” என்று கேட்டான்.. அதற்க்கு உடனே செந்தூரா வேண்டாம் என்று மறுப்பாக தலையாட்ட.
ஸ்வேதா தான் மீண்டும்.. “அத்தான் உங்க பாடு திண்டாட்டம் தான்.. மேரஜிக்கு கிப்ட்.. சர்பிரைஸா வாங்கி கொடுப்பது.. அது தான் இல்ல நான் சொன்ன போது நீங்க அவளை கூட்டிட்டு போய் அவளுக்கு பிடித்தது போல் வாங்கி திருவீங்க என்று பார்த்தா.. போங்க அத்தான்..” என்று சலிப்பது போல் சொல்ல.
வம்சி..சிரித்து கொண்டு செந்தூராவிடம்.. “கிளம்பு வெளியே போகலாம்..” என்று செந்தூராவிடம் சொல்ல செந்தூராவின் கண்களோ கோசலை பக்கம் சென்றது.. அவர் ஏதாவது மறுக்கிறாரோ என்று.
அவள் எதிர் பார்த்தது போல் தான் கோசலை தன் மகனிடம்… “இரண்டு நாளில் தனியா எல்லாம் போக வேண்டாம்.. கண் படும்.. விந்தியா கூட இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு இருக்கா அவளையும் அழைத்து கொண்டு எல்லோரும் போவது என்றால் போங்க…” என்று சொல்லும் போதே விந்தியாவும் வந்து விட கோசலை சொன்னது போல் தான் வம்சி அனைவரையும் அழைத்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு பெரிய மாலுக்கு அழைத்து சென்றான்..
அங்கு ஜூவல்லரி ஷாப்பும் இருக்கிறது.. முதலில் செந்தூராவுக்கு கை கடிகாரம் கை பிரஸ்லேட்.. வைர கழுத்து ஆரம் என்று பரிசு வாங்கியதும்..
ஸ்வேதா. “அத்தான் நாங்களும் உங்க அத்தை மகள்கள் தான்..” என்று கேட்க.
“வாங்கிக்கோங்க..” என்று சொன்னதுமே ஸ்வேதா கூச்சம் படாது தனக்கு ஒரு வைர மோதிரம் வர்ஷாவுக்கு ஒரு வைர மோதிரம் என்று வாங்கி கொண்டாள்..
இரண்டையும் ஸ்வேதா தான் தேர்தெடுத்தாள்.. ஆனால் வருண் வர்ஷாவுக்கு எடுத்த தேர்வு சரியில்லை என்று விட்டு இரண்டு இதயம் இணைந்தது போல் சிறு வைர கற்கள் பதித்த மோதிரத்தை தேர்தெடுத்து ஸ்வேதாவிடம் கொடுத்தவன்.. “இது அவளுக்கு நல்லா இருக்கும்.” என்று சொன்ன வருணையே வம்சி பார்த்து கொண்டு இருந்தான்..
தான் நினைப்பது சரியா.? இல்லை சாதாரணமாக தேர்ந்தெடுத்து கொடுப்பதை நான் தான் வேறு மாதிரி நினைத்து கொள்கிறேனா என்று.. வருண் அனைவரிடமும் ஜாலியாக பேசும் பேர் வழி.. அவனை சட்டென்று தவறாகவும் நினைக்க முடியவில்லை..
ஆனால் அந்த மோதிரத்தை தேர்ந்தெடுக்கும் போது அவன் முகத்தில் வந்து போன பாவனை. தேர்ந்தெடுத்த பின் அந்த மோதிரத்தை பார்த்து ரசித்து சிரித்த அந்த முகம்.. ஸ்வேதாவிடம் கொடுக்கும் போது ஸ்வேதா பார்த்த அந்த பார்வை.. ஸ்வேதாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டவனுக்கு அடுத்து ஸ்வேதாவிடன் தனித்து பேசும் வாய்ப்பே அவனுக்கு கிடைக்கவில்லை.
இதோ நல்ல முறையில் ஷாப்பிங்க முடிந்து உணவு உண்டும் விட்டு வீடு செல்லலாம் என்று முடிவு செய்து மின் தூக்கியில் ஏற செந்தூரா சசிதேவ் பக்கத்தில் நின்று கொண்டாள்..
சசிதேவ்.. தன் பேசியில் ஏதோ ஒன்றை காட்டி பேசி கொண்டு இருந்த வேளையில் அடுத்த தளத்திள் ஒரு மூன்று இளைஞர்கள் ஏறினார்கள்
செந்தூராவும் சரி சசிதேவ்வும் சரி.. அதை எல்லாம் கவனிக்கவில்ல.. அவர்கள் இருவரின் கவனமும் சசிதேவ் கையில் இருந்த பேசியில் மட்டுமே தான் இருந்தது.
ஏறியதையே கவனியாத போது அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் மெல்ல மெல்ல செந்தூராவின் பின் பக்கம் நகர்ந்து வருவதையா கவனித்து இருக்க போகிறார்கள்..
மின் தூக்கியில் நல்ல கூட்டம்.. அந்த இளைஞன் செயலை கண்டு கொண்ட வம்சியால் சட்டென்று இந்த பக்கம் நின்று கொண்டு இருந்த செந்தூராவின் அருகில் செல்ல முடியவில்லை..
வருண் என்ன செய்கிறான் என்று பார்க்க அவன் வர்ஷாவை பார்வை இட்டு கொண்டு இருந்தான்.. பல்லை கடித்து கொண்டு செந்தூராவுக்கும் தனக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று கொண்டு இருந்தவர்களை இடித்து தள்ளி விட்டு செந்தூராவின் பின் பக்கம் நின்று கொண்டதோடு அவளை இடிக்காத வாறு அணைவாக தன் கையை போட்டு கொண்டு வம்சி கிருஷ்ணா அந்த இளைஞனை பார்த்து ஒரு முறை முறைக்க…அந்த இளைஞன் மெல்ல தன்னோடு வந்தவர்களோடு சேர்ந்து கொண்டான்..
செந்தூரா வம்சி கிருஷ்ணா தன் கை கொண்டு அவள் தோள் சுற்றி போடவும் தான் அதிர்ந்து பின் பார்த்தாள்..
“பரவாயில்லை இப்போவாவது உன்னை சுற்றி பார்க்கனும் என்ற் தோனுச்சே..” என்று வார்த்தையை கடித்து துப்ப சசிதேவ் என்ன என்பது போல் பார்த்தவனிடம்..
“உன் பக்கத்தில் உன் அக்கா நின்னா.. என்ன என்று பார்..அப்படி பார்க்க முடியலேன்னா உன் அக்காவை உன் கூட நிற்க வைத்து கொள்ளாதே.” என்று திட்டியவன் மீண்டும் அந்த இளைஞனை பார்க்க.. அந்த இளைஞனும் இவர்களை பார்க்க.. அதை கவனித்து விட்ட சசிதேவ்…
“சாரி அத்தான்..” என்று மன்னிப்பு கேட்டான்.. ஆனால் செந்தூரா அது கூட கேட்காது தன் தோள் மீது இருந்த அவனின் கையை விலக்க முயற்ச்சி செய்து கொண்டு இருக்க. வம்சி கிருஷ்ணாவின் கை அழுத்தம் இன்னும் கூட்டியதே தவிர விலக வில்லை..
இப்படியாக அன்றைய நாள் முடிய.. மறு நாள் அந்த வெள்ளை மாளிகை முழுவதுமே உறவு முறை கூட்டம் தான்.. ஸ்டார் ஒட்டல் குக்கை ஒரு வாரத்திற்க்கு வர வழைக்கப்பட்டு உறவுகளுக்கு விருந்து ஒரு பக்கம் நடந்து கொண்டு இருந்தது..என்றால் மறுப்பக்கம் ஆட்டம் பாட்டம் என்று இளைஞர்கள் கொண்டாட்டம் அது பாட்டுக்கு நடந்து கொண்டு இருந்தது மெகந்தி இடும் விழா. என்று கலை கட்டியது..
அன்று மதியம் திருமண மண்டபத்திற்க்கு சென்று விட .. பின் குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு.. அடுத்து திருமணம் என்று அழைத்து முக்கியமான விஐப்பிக்கள் எல்லாம் ஒன்று விடாது வந்து விட்டனர்..
வம்சி கிருஷ்ணா தன் முகத்தில் சிரிப்பு துளியும் குறையாது வந்தவர்களை வர வேற்று செந்தூராவிடம் முறையாக அறிமுகமும் செய்து வைத்தான்.
ஆனால் செந்தூராவுக்கு தான் ஒரு நிலைக்கு மேல் அவளால் ஒழுங்காக நிற்க கூட முடியாது பாதம் இரண்டும் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது…காரணம் ஒன்று அத்தனை மணி நேரம் மேடையில் நின்று கொண்டு இருப்பது ஒரு காரணம் என்றால், மற்றோரு காரணம்.. பழக்கம் இல்லாத இந்த உயர்ந்த குதி காலணிகளை அணிந்து கொண்டு நிற்பது தான்.
இரண்டு முறை வம்சி கிருஷ்ணா செந்தூராவின் காதருகில் சென்று.. “நான் இன்டியூஸ் செய்யிறவங்க கிட்ட கொஞ்சம் சிரிப்பது போல முகத்தை வைத்து பேசு..” என்று சொல்லும் போது சிரிப்பவள் அடுத்து அவளின் முகம் கால் வலியில் மீண்டும் சுருங்கி போய் விட..
அப்போது தான் அவள் முகத்தை கூர்ந்து கவனித்தவன்.. “என்ன..?” என்று கேட்டான்..
“கால் வலி..” என்று தன் பேச்சை சுருக்கமாக சொல்ல..
வம்சி கிருஷ்ணா இவ்வளவு நேரம் நிற்பதால் கால் வலிக்கிறது என்று நினைத்து அங்கு இருந்த இருக்கையில் உட்கார் என்று விட. செந்தூரா சட்டென்று உட்கார்ந்து விட்டவளின் முகத்தில் அந்த வலி இன்னும் போகாது இருப்பதை கவனித்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டவனிடம்.
“செருப்பை கழட்டிடட்டுமா.. இது போல ஹில்ஸ் போட்டு எனக்கு பழக்கம் இல்லை..” என்று செந்தூரா சொன்னதும் தான் வம்சி கிருஷ்ணா குனிந்து மனைவியின் பாதத்தை பார்த்தான்..
இப்போதும் மேடையில் நின்று கொண்டு இருப்பது வர வேற்ப்பு நிகழ்ச்சி திருமணத்தில் அவன் போட்டு விட்ட மெட்டி தெரியாத அளவுக்கு அந்த செருப்பு வடிவமைக்கப்பட்டு ஒரு அரை இன்சுக்கு உயர்ந்து இருக்க.
“கழட்டு..” என்று சொன்னான்.. செந்தூரா செருப்பை கழட்டியதும் அவள் பாதத்தை பார்ந்த வம்சி கிருஷ்ணாவின் கை தன்னால் அவள் பாதம் தொட பார்க்க.. அவனின் செயலை ஊகித்து சட்டென்று தன் பாதத்தை பின் நோக்கி இழுத்து கொண்டவள்..
“வேண்டாம்..” என்று மறுப்பாக தலையசைத்து நிமிர்ந்து வந்தவர்களை பார்த்தாள்.. நல்ல வேலை யார் கவனமும் மேடையில் இல்லை.. பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவர்களிடம் பேசி கொண்டு இருந்தார்கள்..
வம்சி கிருஷ்ணா இருக்கையில் அமரும் போதே வருண் கிருஷ்ணாவை அழைத்து பார்த்து கொள் என. மேடைக்கு வர பார்த்தவர்களை மேடை ஏற விடாது சாப்பிட அழைத்து சென்று விட்டான்..வம்சியோ செந்தூராவின் அந்த பதட்டமான பார்வையில்.. “இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் உனக்கு யார் பார்த்தாலும் என்ன இப்போ..?” என்றும் கேட்டான்.. அவனை யோசனையாக செந்தூரா பார்த்து கொண்டு இருக்கும் போதே செந்தூராவின் பாதத்தை வம்சி கிருஷ்ணா பற்றி இருந்தான்.. அதே சமயம் மகனையும் மருமகளையும் சாப்பிட அழைக்க கோசலையும் மேடை ஏறிக் கொண்டு இருந்தார்..