ஆனால் செந்தூராவுக்கு புரியவில்லை போல்.. திருமணம் என்று முடிவு செய்த நாளில் இருந்து ஏதோ சடங்கு என்று தான் செய்து கொண்டு இருக்கிறார்களே… அது போல் இது ஒரு சடங்கு என்று தான் பெண்ணவள் நினைத்து கொண்டது.
ஆனால் கோசலை அடுத்து சொன்ன.. “அவன் டைm எடுத்துக்கலாம் என்று தான் சொல்வான்.. ஆனா நீ தான் இன்னைக்கே நடப்பது போல் பார்த்துக்கனும் புரியுதா செந்தூரா,.. “ என்று சொன்னதுமே ஸ்வேதா ..
“அத்தை..” என்று ஏதோ சொல்ல பார்க்க.. விந்தியா. “இதை அண்ணன் கிட்ட சொல்ல வேண்டியது தானேம்மா…” என்று விந்தியா நறுக்கு என்று தான் அன்னை என்று கூட பாராது கேட்டாள்..
ஆனால் கோசலை.. “மகன் கிட்ட எப்படி இதை பத்தி பேசுறது விந்தியா..எல்லாம் உங்க இரண்டு பேர் நல்லதுக்கும் தான் சொல்றேன் புரிஞ்சிக்கோங்க.” என்ற கோசலையின் இந்த பேச்சில்..
ஸ்வேதாவும் விந்தியாவும்.. “என்ன சொல்றிங்க..” என்று கேட்க கோசலை ஜோதிடர் சொன்னதை அவர்கள் இருவருக்கும் நியாபகம் படுத்தியவர்..
“இந்த வீட்டின் முதல் வாரிசு வம்சி செந்தூராவுக்கு தான்.. அடுத்து தான் மத்தவங்களுக்கு என்று சொல்லி இருக்கார். அதுக்கு தான் நான் இவ்வளவு .பேசுறேன்..” என்று சொல்லியும்..
இன்றைய தலை முறைகளான ஸ்வேதாவும் விந்தியாவும்.. இது அவங்க பர்சனல் இதை பத்தி நாம் பேசுவதே தவறு என்று தான் கூறினர்..
ஆனால் கோசலை விடாது செந்தூராவிடம் மீண்டும் அதே பேச்சை வலியுறுத்த. செந்தூராவின் மனது அப்படி ஆழி பெருங்கடல் போல் கொதித்து கொண்டு இருந்தது..
தன் கையில் கொடுத்த பால் ப்ளாஸ்க்கை தூக்கி விசிறி அடித்து விட வேண்டும் என்ற வேகம்.. ஸ்வேதா விந்தியாவும் அது போல் பேசி இருந்தால், கண்டிப்பாக வீசி ஏறிந்து இருப்பாளோ என்னவோ.. ஆனால் அவர்கள் நியாயமான அந்த பேச்சில், தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்று கொண்டு இருந்தாள்..
கோசலை மீண்டும் ஏதோ சொல்ல வர அதற்க்குள் விந்தியா செந்தூராவின் அந்த முக மாற்றத்தை கவனித்து விட்டு..
“அம்மா டைம் ஆகுது.” என்று நல்ல நேரத்தை நியாபகம் படுத்த..
“ஆமாம் நான் பாரேன்.. ஐய்யர் இந்த நேரத்தில் சாந்தி முகூர்த்த அறைக்கு அனுப்புங்க என்று நேரம் குறித்து கொடுத்து இருக்கார்..” என்று சொன்னவர் ஸ்வேதாவிடமும் விந்தியாவிடமும் அழச்சிட்டு போங்க என்று சொல்ல.
அவர்கள் படிக்கட்டு வழியாக போக பார்த்தவர்களை கோசலை.. “லிப்ட்ல போங்க.” என்று மட்டும் கோசலை சொல்லி இருந்தால் பரவாயில்லை.. ஏன் என்றால் வம்சி கிருஷ்ணாவின் அறை நான்காம் தளத்தில் இருக்கிறது..
ஆனால் கூடுதலாக “படிக்கட்டு ஏறி கலைத்து விட்டால்..” என்ற கோசலையின் அந்த வார்த்தையில் லிப்ட் நோக்கி நடந்து கொண்டு இருந்த செந்தூரா சட்டென்று திரும்பி தன் அத்தையை பார்த்தாள்.. தவறு தவறு முறைத்தாள்..
கோசலை மருமகளின் அந்த பார்வையின் மாற்றம் புரிவதற்க்குள் விந்தியா தான்.. “வா செந்தூரா..” என்று அவசரப்படுத்தினாள்.. ஏன் என்றால் அவளுமே செந்தூராவின் கோபம் முகத்தை பார்த்ததினால்…
இதே கோசலையின் அந்த பேச்சு இல்லாது போனால் விந்தியாவும் ஸ்வேதாவும் வம்சி அறையில் விடும் முன் கூட ஏதாவது கலாட்டா செய்து தான் அனுப்பி வைத்து இருப்பர்.. ஆனால் செந்தூராவின் முகத்தை வைத்தே.. ஒன்றும் சொல்லாது இருவரும்ம்.
“ஆல்த பெஸ்ட்.” என்று மட்டும் வாழ்த்தி அனுப்பினர்.. விந்தியா மட்டும் மனதிற்க்குள் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று குறித்து கொண்டாள்..
செந்தூரா வம்சி அறைக்குள் நுழைந்த போது அவன் அறையில் காணும்.. வம்சியின் அறை முதல் இரவுக்கு தகுந்தது போல் தான் அலங்கரித்தும் இருந்தது.. மல்லியின் மனம் அந்த அறைக்குள் நுழைந்ததுமே குப் என்றும் நாசியை தொட. பார்க்கவும் அந்த அறை அனைத்து வசதிகளையும் கொண்டு மிக பிரமாண்டமாகவே காணப்பட்டது..
மற்ற பெண்களாக இருந்தால் அதை ரசித்து இருப்பார்களோ.. ஏன் செந்தூராவே அப்போது நல்ல மனநிலையில் இருந்தால் ரசித்து இருக்க கூடும்.. சற்று முன் கோசலை அத்தை பேசிய பேச்சில் அப்போது கோபத்துடன் அவரை முறைத்தாலுமே, மனதில் ஏதோ சொல்ல முடியாத ஒரு பாரம் ஏறி அமர்ந்து கொண்டது போல் இருந்தது..
மனம் அவளுக்கு ஒரே சொந்தமான தம்பியை தேடியது.. ஆனால் அவள் முன் வந்து நின்றதோ. அந்த அறைக்கு சொந்தக்காரன் ஆன வம்சி கிருஷ்ணா தான் குளித்து அப்போது தான் வந்து இருந்தான்..
வெறும் துண்டோடு வந்து நின்று இருப்பான் என்று நீங்கள் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு கிடையாது.. அந்த அறையில் குளியல் அறையோடு ட்ரஸ்ஸிங்க அறையும் சேர்ந்தே உள்ளது. இன்று செந்தூரா வந்து இருப்பாள் என்ற எல்லாம் வம்சி குளித்து விட்டு அங்கு இருந்த உடை மாற்றும் அறையில் முழு இரவு உடையை அணிந்து கொண்டு படுக்கை அறைக்கு வரவில்லை..
அவனின் பழக்கமே அது தான். இனி வேண்டும் என்றால் மாற கூடுமோ என்னவோ. ஆனால் அன்று முழு உடையுடன் தான் வம்சி கிருஷ்ணா மனைவியின் முன் வந்து நின்றது.
ஏதோ ஒரு யோசனையில் இருந்த செந்தூரா தன் முன் ஒருவர் வந்து நின்றதில் பயந்து அனிச்சை செயலாக இரண்டு அடி தள்ளி நின்றவளை பார்த்த வம்சி..
“ஏன் இவ்வளவு பயம்..? நம்ம அறையில் என்னை தவிர யார் வர போறாங்க…” என்று கேட்டதற்க்கு செந்தூராவிடம் பதில் இல்லாது போக. அவள் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட வம்சி கிருஷ்ணா..
அவள் கையில் இருந்த ப்ளாஸ்க்கை வாங்கி அங்கு இருந்த டேபுலில் வைத்து விட்டு.
“எவ்வளவு நேரம் இப்படியே நிற்கிறதா உத்தேசம்..?” என்று கேட்டதும் பதில் சொல்லவில்லை என்றாலுமே, செந்தூரா வம்சியின் பேச்சுக்கு மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.. ஏற்கனவே கால் வலி என்பதினால் அமர்ந்தாளோ தெரியவில்லை.
அதே படுக்கையில் பக்கத்தில் அமர்ந்து கொண்ட வம்சி கிருஷ்ணா செந்தூராவையே தான் பார்த்து கொண்டு இருந்தான்..
ஆனால் செந்தூராவின் பார்வை தரையை பார்த்ததே தவிர.. அவனை பார்க்க காணும்.. சிறிது நேரம் பார்த்தவன் பின் தொண்டை கனைக்க. பேசும் போது பார்க்காத பெண்ணவள்.. இந்த கனைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
“கால் வலி எப்படி இருக்கு.?” என்று கேட்டவன் குனிந்து பாதத்தை பார்க்க, பெண் சட்டென்று கால் பின் இழுத்து கொள்ள பார்க்க.
ஆனால் வம்சி கிருஷ்ணா அதற்க்கு விடவில்லை.. சட்டென்று கீழே அமர்ந்து கொண்டவன்.. அவள் பாதத்தை தன் தொடை மீது எடுத்து வைத்து கொண்டவன்.. சிவந்து இருந்த அவள் பாதத்தையே சிறிது நேரம் பார்த்தவன்..
பின் மீண்டும் தொண்டையை கனைத்து கொண்டவன்.. “இனி இது போல் செய்யாதே.. புரியுதா.. அம்மா அந்த செருப்பு போட சொன்ன போது என் கிட்ட சொல்லி இருந்தா நான் அம்மா கிட்ட பேசி இருப்பேன்..” என்று சொன்னவன் அமர்ந்த வாக்கிலேயே எக்கி அங்கு இருந்த ட்ராவில் பஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து.. அவள் பாதத்திற்க்கு ஆயில் மெண்டை மெல்ல பூசினான்..
வம்சி கிருஷ்ணா அந்த ஆயில் மெண்டை செந்தூராவின் பாதத்தில் தன் ஒற்றை விரலை கொண்டு அவ்வளவு மென்மையாக தடவி விட்டு கொண்டு இருந்தான்.. அவன் பார்வை முழுவதுமே அந்த பாதத்தில் தான் நிலைத்து இருந்தது.. மனமோ.. அவளில் கால் அடி தடத்தில் விழுந்து கிடந்தன..
செந்தூராவுக்கோ வம்சி கிருஷ்ணா இப்படி பாதத்தை தன் தொடை மீது வைத்து கொண்டதில் ஒரு வித கூச்சம். அந்த கூச்சத்தில் தன் பாதத்தை இழுத்து கொள்ள தான் பார்த்தாள்..
ஆனால் அதற்க்கு வம்சி கிருஷ்ணா விட்டால் தானே.. செந்தூராவை ஒரு முறை முறைத்து விட்டு பேசி கொண்டே அந்த ஆயில் மெண்டை பூசும் அந்த மென்மையில் செந்தூரா அவன் முகத்தையே பார்த்திருந்தாள்..
செந்தூராவுக்கு அவனின் முகம் சரியாக தெரியவில்லை.. அவன் தான் குனிந்த கர்ம சித்தியாக ஆயில் மெண்டை பூசிக் கொண்டு இருக்கிறானே.. பெண்ணவள் பார்த்தது எல்லாம் அவனின் அந்த உயரத்திற்க்கும் உடம்பிற்க்கும்.. ஏன் திடமான அவனின் அந்த கரத்திற்க்கும் சம்மந்தமே இல்லாது போல்… அவ்வளவு மென்மையாக பூசியதே..
பின் எழுந்து கொண்டவன் அந்த ஆயில் மெண்டை இருந்த இடத்தில் வைத்து விட்டு கை கழுவிக் கொண்டு மீண்டும் பெண்ணவள் பக்கம் அமர்ந்து கொண்ட பின்..
“எனக்கு எதுவுமே இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும் செந்தூரா…” என்று இனி இது தன் அறை மட்டும் கிடையாது .. தங்கள் அறை என்று ஆகி விட்டதினால், தன் பழக்கத்தை சொன்னவன்.. பின்..
செந்தூராவின் முகத்தை பார்த்தவன்.. “இப்போ சொல்..” என்ற வம்சி கிருஷ்ணாவின் பேச்சு புரியாது அவனை பார்த்தவளிடம்..
“இந்த அறைக்கு வந்த போது ரொம்ப கோபமா இருந்தே என்ன பிரச்சனை..?” என்று கேட்டான்..
செந்தூராவுக்கு மீண்டும் கோசலை பேசிய பேச்சு நியாபகத்திற்க்கு வந்து விட்டது.. கொஞ்சம் இலகுவான மனம் மீண்டும் ஒரு மாதிரியாகி விட. செந்தூராவின் முகத்திலும் அது எதிர் ஒலித்தது..
முன் போல் அதிகம் கோபம் இல்லை என்றாலும், சிறிது நேரத்திற்க்கு முன் இருந்த அந்த இலகு தன்மை மறைந்து விட்டதில்..
“என்ன இங்கு அனுப்பும் போது ரொம்ப சொல்லி விட்டாங்கலோ..?” என்று வம்சி கிருஷ்ணா சரியாக யூகித்து தான் கேட்டான்.
அதற்க்கும் செந்தூராவிடம் இருந்து பதில் இல்லாது போக.. தலையை கோதிக் கொண்டவன் முனு முனுப்பாக ரொம்ப கஷ்டம் என்று சொன்னவன்..
பின் .. “இதோ பார் செந்தூரா.. இங்கு அனுப்பும் போது சொல்றவங்க என்ன வேண்டும் என்றாலுமே சொல்லி அனுப்புவாங்க. ஆனா அந்த பேச்சு எல்லாம் இந்த அறைக்கு வெளியில் விட்டுடனும்..இந்த ரூம் நமக்கானது மட்டும்.. இதில் யாரின் தலையிடும் இருக்க கூடாது..
இன்னைக்கு இங்கு என்ன நடக்கனும் என்பதை நாம தான் முடிவு செய்யனும்.. வேறு யாரும் கிடையாது புரியுதா..?” என்று இப்போது சொல்பவன் பேச்சு வாழ்க்கை முழுவதற்க்கும் காப்பாற்றுவானா.. பார்க்கலாம்..