இது வரை கோபத்தில் கூட முகத்தில் காட்டாது அப்படி இருந்த செந்தூராவின் விழிகள் கலங்கி விட்டது.. தன் கண்ணீரை யாருக்கும் காட்ட கூடாது என்று முன் தாங்கள் இங்கு வந்தால் தங்கும் அந்த அறைக்குள் ஒடி விட்டாள்..
வம்சிக்கோ தன்னை வசீகரிக்கும் அந்த நீலநிற கண்களில் கோர்த்த அந்த நீர்த்துளிகளை பார்த்து மனது கலங்கி விட்டது..
அவள் அங்கு இருந்து செல்லும் போதே அவள் கை பிடித்து. செந்தூரா..” என்று தடுத்தான் தான்.. ஆனால் தன்னை திரும்பி பார்த்து..
செந்தூரா தன்னை பார்த்து சொன்ன.. அந்த “ப்ளீஸ்..” என்ற வார்த்தையில் தன்னால் அவள் கையை விடுவித்து விட்டான்.. செந்தூரா சென்றதும் வம்சியும் அந்த இடத்தை விட்டு வெளியில் சென்று விட்டான்..
கோசலைக்கு அப்போது கூட தன் தவறு புரியாது. “நான் என்ன தப்பா சொல்லி விட்டேன்.. அத்தை.. நான் இன்னைக்கும் நீங்க கேட்பதற்க்கு பதில் சொல்றேன் தானே அத்தை..” என்று கேட்ட மருமகளை ஒரு பார்வை பார்த்த சரஸ்வதி .
“பதில் சொல்லுவே.. நான் உன்னிடம் சொல்லும் படியான பேச்சை தான் பேசுவேன்.. இது வரை என் மகனே ஆனாலும், அவன் அந்தரங்கத்தின் உள் நுழைந்தது கிடையாது..” என்று சொன்ன அத்தையின் பேச்சு கோசலைக்கு புரிந்ததா என்று தெரியவில்லை..
ஏன் என்றால் அவர் அடுத்து பேசிய பேச்சு அப்படி இருந்தது.. “என்னை ஏன் அது போல கேள்வி எல்லாம் கேட்க போறிங்க. நான் தான் எங்க முதல் திருமண நாளிலேயே உங்க பேரனை கையில் வைத்து இருந்தேனே..” என்று சொல்லி விட்டு செல்பவரை தான் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் பார்த்து கொண்டு இருந்தனர்..
சரஸ்வதி தான்.. “என்னங்க இவள் இப்படி பேசிட்டு போறா..?” என்று தன் ஆதங்கத்தை சொல்ல..
தாரகராம் தான்.. “செந்தூராவுக்கு குழந்தை பிறந்தா தான் நம்ம வீட்டுக்கு அடுத்த வாரிசு என்பதை வைத்து தான் இப்படி பேசுது மருமகள்.. இல்லேன்னா இப்படி பேசுபவளா..?” என்று அவர் சரியாக யூகித்து தான் சொன்னார்..
சரஸ்வதி தேவியும்.. “எனக்கு புரியுதுங்க.. ஆனா பேத்தி கிட்ட இது போலவே பேசிட்டு இருந்தா.பேரனிடம் எப்படி நெருங்குவா..? அது புரியுதா..?” என்று இருவரும் தன் பேரன் பேத்தியின் எதிர்க்கால வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்..
தாரகராம் சொன்னது போல் தான் கோசலை அவருக்கு அவரே.. ‘நான் என்னவோ என் நல்லதுக்கு சொல்றது போலவே என்னை வில்லி போல பார்க்கிறாங்க..இவளுக்கு ஒரு குழந்தை பிறந்தா தானே.. அடுத்து வீட்டில் நல்லது நடக்கும். நான் என்னவோ என் நல்லதுக்கு மட்டும் சொல்றது போல இந்த பெரியவங்க என்னை பார்க்கிறாங்க.” என்று புலம்பி கொண்டு இருந்தவர் பின் அவரே.
“என் மகனே என்னை அப்படி பார்த்துட்டு போறான்.. இவனுக்கு பிடித்த பெண் தானே.. குடும்ப நடத்துறதுக்கு என்ன..?” என்று அவரின் எண்ணம் அதுவாக தான் இருந்தது..
வம்சி பிடித்து செந்தூராவை திருமணம் செய்து இருந்தாலுமே.. நெருக்கம் என்பது தானாக வரும் ஒரு உணர்வு.. அதுவும் வம்சிக்கு செந்தூராவின் மீது வந்த அந்த பிடித்தம்.. செந்தூராவுக்கும் வம்சி மீது வர வேண்டும்.. அதன் பின் தானே அடுத்து..
கோசலை இப்படியே பேசி கொண்டு இருந்தால் செந்தூரா தன்னிடம் நெருங்குவது என்ன பார்க்க கூட செய்ய மாட்டாள் என்று. இந்த அம்மாவுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..
அதோடு இது எங்க பர்சனல்.. இதில் யார் தலையீடும் இருக்க கூடாது. அம்மா அப்பா என்றாலுமே.. வம்சியின் எண்ணம்.. அப்போது செந்தூராவின் எண்ணம்.. அது அவளுக்கே தெரிந்த வெளிச்சம்..
வீட்டில் நடக்கும் குழப்பத்தை எல்லாம் பார்த்த வருண் கிருஷ்ணா தலை சுற்றி தலையின் மீது கை வைத்து அமர்ந்து விட்டான்.. வர்ஷாவோ தன் அன்னைக்கு மருந்து கொடுக்கும் நேரம் என்று அன்னையை தேடி சென்று விட. விந்தியாவும் தன் கணவன் பேசியில் அழைக்க. கணவனிடம் தனிமையில் பேச தன் அறைக்கு சென்று விட்டாள்..
அந்த ஹாலில் மீதம் இருந்தது.. ஸ்வேதா வருண் மட்டுமே. வருண் அப்படி அமர்ந்ததை பார்த்து சிரித்து கொண்ட ஸ்வேதா.. “என்ன வருண் இப்போவே கண்ணை கட்டுதா..?” என்று கிண்டலுடன் கேட்க.
வருண் கிருஷ்ணாவோ ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்தான்.. கொஞ்ச நேரம் முன் எவ்வளவு ஜாலியாக பேசி கொண்டு இருந்தோம்.. இப்போது.. என்ற எண்ணம் தான்..
ஸ்வேதா தான்.. “விடு வருண்.. இது எல்லாம் பெருசா எடுத்துக்காதே..” என்று சொன்னவள்..
ஸ்வேதா.. “நல்லா யோசிச்சிக்கோ வருண் வர்ஷாவே தான் வேண்டுமா.. என்று கேட்டவளை முறைத்த வருண் பின் சீரியஸான குரலில்..
“கண்டிப்பா வர்ஷா தான் என் மனைவி ஸ்வேதா. இதுல எந்த மாற்றமும் இல்ல…” தன் முடிவை ஆணித்தரமாக சொன்னான்..
வம்சி கிருஷ்ணா செந்தூரா திருமணம் முடிந்து இரு வாரம் கடந்து விட்டது.. அவர்களின் உறவில் எந்த வித மாற்றமும் இல்லாது தான் சென்று கொண்டு இருந்தது. எந்த வித மாற்றமும் என்றால், நெருங்கவும் இல்லை.. அவர்களுக்குள் பிரச்சனையும் இல்லை.. ஸ்வேதாவும் தன் கணவனோடு அமெரிக்கா சென்று விட்டாள்..
வம்சி தன் பிசினஸில் மூழ்கி விட்டான்.. செந்தூராவுமே ஏதோ வேலை பழக சொல்கிறார்கள் என்று தங்கள் தொழிலை மெல்ல கற்று கொண்டவளுக்கு இப்போது அதில் சிறிது ஈடுபாடு வர ஆரம்பித்து விட்டது..அதனால் முன் எல்லாம் அதாவது திருமணத்திற்க்கு முன் மூன்று மணியளவில் வீடு வந்து விடும் செந்தூரா இப்போது எல்லாம் ஆறுமணிக்கு தான் வரும் அளவுக்கு அந்த தொழில் அவளை ஈர்த்து விட்டது..
கோசலையோ செந்தூரா இது வேண்டும் என்று தான் செய்கிறாள் என்ற எண்ணம்.. அதை தன் கணவனிடமும் கூறினார்..
கிருஷ்ண மூர்த்திக்கு தன் தாய் மூலம் கோசலை பேசியது தெரிய வந்ததால், மனைவியிடம்..
“நீ இது போல பேச்சிட்டே இரு, அது உன் மகன் வாழ்க்கைக்கு பிரச்சனையில் கொண்டு போய் முடிய போகுது..” என்று அவர் நாளை நடக்க போவதை முன்பே தீர்க்கதரசியாக தான் சொன்னார்..
ஆனால் அதை மனைவி கேட்க வேண்டுமே. “நான் என்ன தப்பா சொல்றேன்.. ஒரு மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தா அடுத்து பேரனோ பேத்தியோ பார்க்க தானே ஆசைப்படுவாங்க..” என்ற பேச்சுக்கு கிருஷ்ண மூர்த்தி.
“இதே ஆசை நாம பெண்ணை கொடுத்து இருக்கும் சம்மந்திக்கும் இருக்கும் தானே. ஒரு முறைக்கு இரு முறை அபார்ட் ஆகியும்.. நம்ம பெண்ணை பத்தி அவங்க குறையா ஏதாவது சொன்னாங்கலா.. நம் பெண் உடம்பை பத்தி தானே கவலை பட்டாங்க..” என்று நியாயம் சொல்ல..
கோசலைக்கு கணவன் கேட்டதற்க்கு பதில் இல்லாது போக அமைதியாகி விட்டார்..இந்த அமைதி எத்தனை நாளைக்கு என்று பார்க்கலாம்..
பத்மினிக்கு தன் மகளோடு சின்ன பெண் திருமணம் முடிந்து இதே வீட்டில் இருக்க. தன் மகள் தனித்து இருப்பதில் அவ்வளவு வேதனை.. இதை தன் அப்பா அம்மாவிடம் சொல்ல.. மகளின் கவலை பெற்றோர்களுக்கும் புரிந்தது..
அவர்கள் தன் மூன்று மகன்களிடமும் இதை கூற மீண்டும் பத்மினிக்கு மும்மூரமாக மாப்பிள்ளை தேடப்பட்டது.. வருணுக்கோ மீண்டும் ஒரு மாப்பிள்ளை அவள் கண் முன் கொண்டு வரும் முன் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்ற எண்ணம்..
வர்ஷாவுக்கு மீண்டும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்ட ஸ்வேதா பேசியில் வருணை அழைத்து விட்டாள்..
“வாழை பழம் உரிச்சு உன் வாயில் வைக்கனும் என்று நீ வாயை திறந்துட்டு இருக்கியா டா..” என்று எடுத்த உடனே பொறிய ஆரம்பித்து விட்டாள்..
“ஸ்வேதா நானே கடுப்பில் இருக்கேன் .. நீயும் என்னை எரிச்சல் படுத்தாதே..” என்று சொன்னதும்..
ஸ்வேதா சீரியஸனா மோடில்.. “நீ லவ் சொல்வது போல காணும்.. ஒன்னு செய்.. வர்ஷா வழுக்கி விழுவது போல அவள் நடக்கும் இடத்தில் எண்ணையை ஊத்து.. அவள் விழும் போது அவளை தாங்கி பிடி..” என்று சொல்லும் போதே வருண்..
“நிறுத்து… அதர பழசு.. நீ அமெரிக்காவில் இருக்க என்று சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க..” என்று எரிச்சல் மாறாத குரலில் சொன்னவனிடம்..
“ சரி அமெரிக்கா ஸ்டைலில் ஒரு ஐடியா சொல்லட்டா.. வர்ஷாவுக்கு ஒரு லிப் லாக் கொடுத்து விடு..” என்று சொன்ன ஸ்வேதாவின் அந்த இரண்டு ஐடியாவுமே தான் ஒரே நேரத்தில் நிகழ போகிறது என்று தெரியாது. வருண் கோபத்துடன் பேசியை வைத்தான்..