பத்மினிக்கு இது சிறிது மகிழ்ச்சியை கொடுத்தது.. தனக்கு என்று ஒரு வீடு இல்லாது பெற்றோர்களையும் கூட பிறந்தவனையும் அண்டி பிழைக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு வர கூடாது..
அப்படி வந்து விட்டாள்.. அந்த பெண்ணின் மனது எந்த அளவுக்கு மனதளவில் பலவீனமாக இருக்கும் என்பதை அந்த பெண் நிலையில் இருப்பவர்களை தவிர யாராலும் கணிக்க முடியாது..
பத்மினிக்கு முன்னாவது தன் பெண் இந்த வீட்டில் தான் வாழ போகிறாள் என்று ஒரு பிடிப்பு இருந்தது.. வம்சிக்கு செந்தூராவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்த பின்னே.. அந்த பிடிப்பும் விட்டு போக.. தன் வாழ்க்கை தான் இப்படியாகி விட்டது.. தன் மகளாவது தான் வாழாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் தற்போது பத்மினிக்கு இருந்தது..
கூட பிறந்தவர்கள் அனைவருமே குடும்பமாக செல்வத்தோடு வாழும் போது அவர்களுக்கு நடுவில் இப்படி பட்ட மரமாக தனித்து அவர்களை அன்டி வாழும் வாழ்க்கையை நினைத்து மனதில் எந்த அளவில் பத்மினி வேதனை பட்டு கொண்டு இருந்தாலுமே , அதை வெளியில் சிறிதும் காண்பித்து கொள்ளாது ஒரு செருக்கோடு தான் பத்மினி எப்போதும் இருப்பார்.. அது தன் அம்மா வீடாக இருந்தாலுமே தன்னை யாரும் இறக்கி பார்க்க கூடாது என்ற எண்ணத்தில்..
மகள் தன் போல் இல்லாது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததில் பத்மினிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.. இருந்தும் அதை முகத்தில் காட்டி கொள்ளாது தன் பெற்றோர்களையும் அண்ணன் அண்ணிகளையுமே பார்த்தார்.. அதுவும் குறிப்பாக வருணின் அப்பா அம்மாவை..
வருணின் தந்தை வாசுதேவ். சாந்தியிடம்.. “அது தான் எல்லோர் முன்னும் சொல்லிட்டானே.. இன்னும் என்ன என் முகத்தை பார்த்துட்டு இருக்க..” தன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த தன் மனைவியை ஒரு அதட்டல் போட்ட. வாசுதேவ்..
தன் அம்மா அப்பாவை.. பார்த்து. “அது தான் உங்க பேரன் பேத்தி கிட்ட சொன்னானே. நேத்து குடித்து விட்டு வந்தேன் என்று.. கல்யாணம் செய்து வைக்காமல் போனா.. அது தினம் தான் நடக்கும்.. வர்ஷா யார் என் தங்கை மகள் தான். நாம பார்த்து வளர்ந்த பெண்.. வயசு ஒத்து போகாததால் இதை பத்தி யோசிக்கல. வருணுக்கும் வர்ஷாவுக்கும் பிரச்சனை இல்லை என்றால் கல்யாணம் செய்து வைத்து விடலாம்.” என்று விட.. அடுத்து என்ன வர்ஷா வருண் திருமண வைபோகம் தான்..
இங்கு நடந்த நிகழ்சியை சசிதேவ் நிகழ்ச்சி என்றால் அந்த இதழ் முத்தம் தவிர. வீடியோவாக எடுத்து ஸ்வேதாவுக்கு அனுப்பி வைத்து விட்டான்.
சசிதேவ்வுக்கு செந்தூராவை போல் இப்போது ஸ்வேதாவிடமும் நன்றாக பேசி கொண்டு இருக்கிறான்.. சசிதேவ்வை ஸ்வேதா பேச வைத்து விட்டாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
சசிதேவ் செந்தூராவிடம் பேசும் பேச்சில் அன்பு பாசம் அக்கறை என்று வெளிப்படும்.. ஆனால் ஸ்வேதாவிடம் அது போல் இல்லாது கலாட்டாவாக பேசுவது சசிதேவ்வுக்கு மிக இயல்பாக அவளிடம் பேச முடிந்தது.
ஒன்று இரண்டு முறை ஸ்வேதா வருணிடம் தனித்து பேசும் போது தேவ் என்ன என்று கேட்ட போது அது எல்லாம் ஒன்னும் இல்ல.. நீ சின்ன பையன்.. என்று கிண்டல் செய்து என்ன என்று சசிதேவ்வுக்கு இப்போது புரிந்து போனதால் வருணின் செயல்களை வீடியோ எடுத்து ஸ்வேதாவுக்கு அனுப்பி வைத்து விட்டான்..
வருண் வர்ஷா விசயம் முடிந்து ஒரு வாரம் கடந்து விட்டது.. அனைவரும் வர்ஷாவுக்கு வருணை திருமணம் செய்து வைத்து விடலாம் என்று முடிவு செய்து இருந்தாலும், அது எப்போது என்று நாள் குறிக்கவில்லை..
காரணம் பயம்.. ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமா என்று..
அந்த சமயத்தில் தான் ஸ்வேதவிடம் இருந்து வருணுக்கு அழைப்பு வந்து விட்டது.. அப்போது வருண் பக்கத்தில் வர்ஷாவும் இருந்தாள்.. அருகில் எல்லாம் இல்லை.. சிறிது இடை வெளி விட்டு தான் அமர்ந்திருந்தார்கள்..
இப்போது எல்லாம் வருண் முன் போல் வர்ஷாவிடம் கலாட்ட பேச்சுக்கள் கிடையாது.. ஆனால் பார்வை பார்த்து விடுவான்.. அதுவும் முன் போல் இல்லாது.. தன்னவள் என்ற அந்த உரிமை பார்வை தான் வர்ஷாவை பார்ப்பான்..
வர்ஷாவுக்கோ அந்த பார்வை என்னவோ போல் இருக்க..அதுவும் அனைவரின் முன்னும் அது போல் பார்த்து வைத்ததில் தலை நிமிராது தான் அமர்ந்து இருப்பாள்.. தலை நிமிராது இருந்தாலும் அது என்னவோ வர்ஷாவுக்கு வருண் பார்வையில் இருந்து தூரம் நின்று விட வேண்டும் என்று மட்டும் நினைக்க தோன்றவில்லை..
வர்ஷாவுக்குமே அந்த அனுபவம் புதியது தானே.. ஆண்டுக்கணக்காக வர்ஷா வம்சியை தான் திருமணம் செய்வதாக இருந்தது.. ஆனால் வம்சி வர்ஷாவை இது போல் ஆவளாக ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது.. ஏன் வர்ஷா கூட அதை வம்சியிடம் எதிர் பார்த்து காத்திருக்கவில்லை என்பது தான் உண்மை..
அது ஏன் என்று வர்ஷாவுக்கு இப்போது கூட புரியவில்லை.. ஒரே வீட்டில் இருந்து கொண்டு வம்சி அத்தானை தான் நான் திருமணம் செய்ய போகிறேன் என்று இருந்த போது வம்சி அத்தான் தான் தன்னை பார்க்கவில்லை என்றாலும்.. நானும் எதிர் பார்க்கவில்லை.. அதோடு நானும் அது போல் வம்சி அத்தானை பார்க்கவில்லை..
ஆனால் வருண்.. தன் விருப்பம் சொல்லு ஒரு வாரம் தான் கடந்து உள்ளது.. அதற்க்குள் ஒராயிரம் முறை அவன் காதல் சொன்ன அந்த கணத்தை மனதில் அசைப்போட்டு விட்டாள்.. தைரியம் அதிகம் தான்.. அப்பா அம்மா தாத்தா பாட்டி எல்லாம் இருக்கும் போது.. காதல் சொல்றான்..
வர்ஷாவுக்கு தெரியாத அந்த இதழ் ஒத்தடத்தை விட காதல் சொன்ன பின்.. கொடுத்த அந்த நெற்றி முத்தத்தை நினைத்தால், இன்றும் மயிர் கால்கள் எல்லாம் சிலிர்த்து கொள்வது போல் இருந்தது.. நெற்றியில் அவன் எச்சத்தின் ஈரம் ஒட்டு இருப்பது போல் ஒரு மாயைய்.. அது கொடுத்த தாக்கத்தில் அவள் கை தன்னால் நெற்றியை தொட்டு பார்க்க.
‘உனக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்கு வர்ஷா.கொடுத்து ஒரு வாரம் ஆகுது.. இந்த ஒரு வாரத்தில் நீ குளிக்கவில்லையா.. முகம் கழுவவில்லையா..அப்படி எதுவும் செய்யாமல் இருந்தா கூட அவன் கொடுத்த முத்தத்தின் எச்சம் காற்றில் ஆறி இருக்கும் டி’ என்று அவள் மனது சொல்லி கொண்டது..
இருந்தும் அவளின் பைத்தியக்காரதனத்தை அவளாள் விட முடியவில்லை.. வர்ஷாவின் உடை தேர்வு எப்போதும் சிறப்பாக தான் இருக்கும்.. இருக்கும் இடத்திற்க்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பது அவள் எண்ணம்.
ஆனால் இப்போது எல்லாம் அதில் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்த ஆரம்பித்து இருந்தாள்.. அவன் பார்க்கும் அந்த ரசனையான பார்வைக்காக…
தன்னை பார்த்து ஏ ஒன்.. என்று கை சைகையில் செய்யும் அந்த ஜாடைக்காக வேண்டி.. இப்படி இந்த ஒரு வாரத்தில் செய்தவை எத்தனையோ.
இதோ இப்போது கூட தூரம் இருந்தே வருண் பார்வையில் வர்ஷாவின் கன்னம் அப்படி சிவந்து போய் இருந்தது.. கூடுதலாக ஸ்வேதா வீடியோ கால் செய்து இருவரையும் ஒரு வழி செய்து விட்டாள்..
“வருண் உனக்கு தைரியம் தான் போ… காதல் சொல்லுன்னா. கிஸ் பண்ற.. அதுவும் எல்லோர் முன்னும்..” என்று அப்படி பேச்சு..
வர்ஷாவிடம்.. “நீ ரொம்ப லக்கி வர்ஷா வருண் உனக்கு கிடைத்ததிற்க்கு.. பக்கத்திலேயே வைரத்தை வைத்து கொண்டு.. கூழா கல் தேடிட்டு இருந்து இருக்க.” என்று மனதார தன் மகிழ்ச்சியை சொன்னாள்..
பின்.. “மேரஜ் என்ன உடனே வா. இல்லை கொஞ்சம் தள்ளி வைப்பிங்கலா… இப்போ தான்டா இந்தியாவில் இருந்து வந்தேன். திரும்பவுமா..” என்று சலித்து கொண்டு சொல்வது போல் இருந்தாலுமே ஸ்வேதாவின் பேச்சில் மகிழ்ச்சி மட்டுமே..
ஸ்வேதாவின் அம்மா துர்கா தேவியும் வாழ்த்த. குடும்பத்தின் மகிழ்ச்சி திரும்ப வந்தது போல் ஆனது.. ஆனால் அது வெளி பார்வைக்கு தான்.
வருணுக்கும் வர்ஷாவுக்கு திருமணம் செய்ய அதே ஜோதிடரை நாடிய போது அவர் சொன்ன..
“உங்க மூத்த பேரனின் கருவை கரு உங்க மருமகள் சுமக்காது எந்த நல்ல காரியம் செய்தாலும், அது நடக்காது. .” என்று விட்டார்..
வீட்டிற்க்கு வந்த பின் கோசலை.. “அது எங்கே நடக்குது.. காலையில் எழுந்துக்குறா.. நாம எல்லாம் செய்து வைத்தா பூஜை செய்யிறா சாப்பிடுறா… பிசினஸ் பார்க்க போறேன் என்று பேக் மாட்டிட்டு போயிடுறா…எங்கு இருந்து குழந்தை பிறக்க. அந்த ஜோதிடம் மட்டும் இல்லை என்றால் என் அண்ணன் மகளையே கொண்டு வந்து இருப்பேன்..” என்று செந்தூராவை பற்றி பேசும் போது சரியாக அந்த நேரம் வீட்டுற்க்குள் வந்துவளின் காதில் தன் அத்தை பேசியது தெளிவாக காதில் விழுந்தது.
ஆனால் அதை செந்தூரா பெரிது படுத்தவில்லை.. ஆனால் மனைவியின் பார்வை கொடுத்த அந்த தைரியத்தில் காஷ்மீருக்கு ஹனிமூன் புக் செய்து வந்த கணவனிடம் தன் மொத்த கோபத்தையும் காட்டி விட்டாள்..
அவளின் அந்த கோபம் வம்சி கிருஷ்ணா இந்த ஹனிமூன் புக் செய்ததிற்க்கு மட்டும் அல்லாது தானும் தன் தம்பியும் இத்தனை ஆண்டுகள் தனித்து வளர்ந்ததிற்க்கும் சேர்த்து வைத்து பெரியவர்கள் சிறியவர்கள்.. ஏன் கோசலை சொன்ன தன் அண்ணன் குடும்பம்..
தன் பெண்ணுக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைக்க வந்தவர்கள் முன்னும் அப்படி பேசி விட்டார்..
காரணம் கோசலையின் அண்ணன் குடும்பமும்.. அவளை தாக்கி பேசியதில்..