தன் பிறந்த வீட்டவர்கள் முன் அதுவும் குறிப்பாக தன் அண்ணி முந் மகன் மருமகளுக்கு ஆதரவாக பேசிய பேச்சில்..
“அது எப்படிடா வரும்.. மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது போல.. குந்திக்கு குழந்தை பிறந்தது போல.. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழாது குழந்தை வந்து விடுமா..?” என்று அவர்களின் அந்தரங்கத்தை அந்தரத்தில் தொங்க விட்டு விட்டார் கோசலை தேவி..
இந்த பேச்சில் வம்சி வாய் திறக்கும் முன் செந்தூரா பொங்கி விட்டாள்..
“நாங்க எப்படி குழந்தை பெத்துக்குறோம் என்பது எல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது.” என்று விட..
செந்தூராவின் இந்த பேச்சில் கோசலை மட்டும் அல்லாது குடும்பமே அதிர்ந்து தான் அவளை பார்த்தது..
ஏன் என்றால் செந்தூரா இதை சொல்லும் போது மாநிறமாக இருந்த அவளின் முகம் அவ்வளவு சிவந்து தெரிந்தது.. அவளின் கோபத்தில்..அதோடு தன் கோபத்தை குரலில் ,மட்டும் அல்லாது முகத்திலும் மறைக்காது தான் காட்டினாள்..
இது கோசலைக்கு இன்னும் இறக்கத்தை கொடுத்து விட்டது.. அதுவும் அண்ணி தன்னை பார்த்த அந்த பார்வையில் ஏற்கனவே வார்த்தைகளை விட்ட கோசலை இன்னும் அதிகமாக வார்த்தைகளை விட தொடங்கினார்..
“நான் கேட்க கூடாதா.. உன் மூலம் ஒரு குழந்தை இதுக்காக தான் உன்னை என் மகனுக்கு உன்னை கட்டி வைத்தது. இல்லேன்னா உன்னை போய் எனக்கு மருமகளாக எடுத்து இருப்பேனா..” என்ற வார்த்தையில் வம்சி கிருஷ்ணா.
“அம்மா..” என்று ஒரு அதட்டல் போட்டான்..
கூடவே அவன் சொன்ன.” நீங்க எதற்க்காக அவளை எனக்கு கட்டி வைத்திங்க என்று எனக்கு தெரியாது.. ஆனால் நான் பிடித்து தான் அவளை கட்டிக்கிட்டேன்..” என்ற பேச்சை பாவம் செந்தூரா உணரும் நிலையில் இல்லை..
காரணம் கோசலை அடுத்து அடுத்து பேசிய பேச்சான. “நீ குழந்தை உண்டாகினாலும் நான் தான் உன்னை பார்க்கனும்.. உனக்கு நல்லது கெட்டது எல்லாமே நான் தான் பார்க்கனும்.. நாங்களே படிக்க வைத்து இந்த வீட்டுக்கு மருமகள் ஆக்கி இருக்கேன்.. இன்னொரு பெண் என்றால்,அப்படி நல்லவிதமா நடந்து இருப்பா.. நீ உன் அம்மா போல தானே இருப்ப சுயநலமாக..” என்று விட.
செந்தூரா கோசலையின் இந்த பேச்சில் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டாள்.. அவளுக்கு மட்டுமே அந்த நிலை இல்லை.. அப்போது தான் பிரன்ஸ் கூட வெளியில் சென்று விட்டு வந்த சசிதேவ்வும் நின்று விட.
தாரகராம் தான்.. “என்ன கோசலை என்ன பேச்சு எல்லாம் அதிகமா போகுது.,.” என்று அவருமே அதட்ட.
தன் தாய் வீடு முன்.. அதுவும் நானும் மகனுக்கு திருமணம் செய்து வைத்து . மாமியார் ஆன பின்.. இன்னுமா இவர்களின் ஆதிக்கம் என்ற கோபத்தில்.
“என்ன மாமா நான் அதிகமா பேசிட்டேன் இருக்குறதை தானே சொன்னேன்.. ஏன் இவள் அம்மா ஒடி போன போது நம்ம உறவு முறை எல்லாம் எப்படி பேசினது.. இது எல்லாம் மறந்துட்டிங்கலா.. பத்மினியை காட்டி.. உன் இன்னொரு பெண்ணுக்கு இடம் தழைவதில் தான் எத்தனை பிரச்சனை.. அது எல்லாம் மறந்துட்டிங்கலா..” என்று ஆவேசத்துடன் கோசலை பேச..
அவரை விட ஆவேசத்துடன் தன் ஒற்றை விரல் நீட்டி.. “போதும்.. நீங்க பேசுனது போதும்..” என்று தன் பேச்சால் மட்டும் அல்லாது விழியினாலும் மிரட்டி தன் மாமியாரை எச்சரிக்கை செய்ய.
பாவம் கோசலை அதோடவாவது விட்டு இருக்கலாம்.. ஆனால் விதி யாரை விட்டது…
செந்தூராவின் இந்த பேச்சில் கோசலைக்கு இன்னும் தனக்கு அவமானம் உணர்ந்ததாக தான் எண்ணினார்.. அதனால். “யாரும் இல்லாம வளர்ந்தாலும் திமிர் போகவில்லை பார்..” என்ற பேச்சில் செந்தூராவுக்கு முன் சசிதேவ்..
“பார்த்து பேசுங்க..” என்று அவனுமே அக்காவை போல் விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய.
அதில் கோசலை என்ன நீ விரல் நீட்டி பேசுறியா அநாதை என்று விட்டார்..
இந்த பேச்சில் செந்தூரா வயதிற்க்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் கூட மறந்து போக. வம்சி தன் அன்னையிடம் ஏதோ கோபமாக பேசுகிறான் என்று கண்ணில் பட்டாலும் கருத்தில் படாது.
ஆவேசத்துடன்.. “அநாதையா.? யார் அநாதை.. அவனுக்கு நானும் எனக்கு அவனும் இருக்கான்.. அதோட எங்க இந்த நிலைக்கும் இந்த குடும்பம் தான் காரணம்..” என்று கத்தியவள்..
தன் தாத்தா பாட்டியின் முன் வந்து நின்றவள் அதே ஆவேசத்துடன்.. “பாட்டியை கை காட்டி.. இவங்களுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்வி பட்டு தான் என் அப்பா அம்மா சென்னைக்கு வாடகை காரில் அந்த நையிட் என்னையும் என் தம்பியையும் அவுஸ் ஒனர் வீட்டில் விட்டு விட்டு வந்தாங்க. உங்களை பார்க்க வந்தவங்க பிணமா தான் நாங்க பார்த்தோம்.
ஆனா பாருங்க., நீங்க அறுபதாம் கல்யாணம் என்பதாவது கல்யாணம் என்று கோலாகலாம கல்யாணத்திற்க்கு மேல கல்யாணம் செய்துட்டு இருக்கிங்க.. அன்னைக்கு உங்க அந்த என்பதாம் கல்யாணம் அன்னைக்கு எப்படி இருந்தது தெரியுங்கலா.
அம்மா இவங்களை பார்க்க வந்த நீங்க அந்த வயசிலேயே போயிட்டிங்க. ஆனா இவங்க பெண் இறந்த துக்கமும் இல்ல… அவங்க பெத்த எங்களையும் கூட வளர்க்கல என்று தான் நினச்சிட்டு இருந்தேன்..
ஆனா ஒன்னு சொல்லனும்.. உங்க மருமகள் சொன்னது போல இந்த ஜாதகம் மட்டும் இல்லை என்றால் இந்த வீட்டிற்க்கு நான் மருமகளா வந்து இருக்க மாட்டேன் தான்..” என்று இத்தனை ஆண்டுகள் மனதில் வைத்து இருந்தது கத்தி விட்டு மீண்டும் கோசலை பக்கம் வந்தவர்..
“இனி நீங்க என் அம்மாவை ஒடி போனவ என்று சொன்னா அவ்வளவு தான்..” “சொன்னா என்னடி செய்வ..?” கோசலையும் விடாது பேச வம்சி தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டான்..
தன் அம்மா பேச்சு சரியில்லை என்று அவனுமே உணர்ந்தான் தான். இருந்தும் சூழ்நிலை அவனையும் மீறி சென்று கொண்டு இருக்கிறது என்பதும் தெரிந்தது..
அம்மாவை அடக்கினாலும்.. இல்லை செந்தூராவை அடக்கினாலுமே இன்னும் நிலை மோசமாக தான் போகும்.. என்று நினைத்து அமர்ந்து விட்டான்..
கோசலை சொன்ன சொன்னா என்ன டி செய்வ என்ன பேச்சுக்கு பதிலாக.. நீங்க என் அம்மாவை பற்றி பேசினா. நான் உங்க மகள் பத்தி பேசுவேன்.. அவளும் லவ் மேரஜ் தானே..” என்று விட்டாள்..
அவ்வளவு தான் கோசலை இது வரை ஆடிக்கொண்டு இருந்தவருக்கு உடுக்கை சத்தமும் கேட்டால் எப்படி இருக்கும்.. அது போலான நிலையின் தான் கோசலை இருந்தார்.
“என்ன என் பெண்ணும் உன் அம்மாவும் ஒன்னா. என் பெண்ணுக்கு நாங்க கல்யாணம் செய்து வைத்தோம்.. ஆனா உங்க அம்மா ஒடி போயிட்டா..”கோசலை அதே வார்த்தையே திரும்ப சொல்ல..
“ உங்க பெண்ணுக்கு நீங்க கல்யாணம் செய்து வைக்காது போனா ஒடி தான் போய் இருப்பாங்க.. ஆனா நீங்க பண்ணாம எல்லாம் இருக்க மாட்டிங்க.. அது தான் நீங்க எதிர் பார்த்த பணம் இருந்ததுலே.. பணத்தை பார்த்து கட்டி கொடுத்ததை விட. பணத்தை பாராது மனசு முழுவதும் காதல மட்டும் வைத்து கல்யாணம் செய்து கொண்ட என் அம்மா எவ்வளவோ மேல்.. இனி இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்..என் அம்மாவை அது போல பேசின உங்க கூட எனக்கு விருப்பம் இல்லை..
ஆ இன்னொன்னும் நீங்க எனக்கு டெலிவரி பார்க்கும் வேலையும் இனி இருக்காது.” என்று அவள் பேசி கொண்டு இருக்கும் போதே சசிதேவ் இருவரின் உடைகள் அடங்கிய பையை எடுத்து வந்து நிற்க.
தலை பாரத்தோடு கீழே வந்த செந்தூரா மனது பாரத்தோடு தம்பியோடு அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்..
வம்சி தடுக்க எந்த வித முயற்ச்சியுமே எடுக்கவில்லை.. வருணுக்கு அழைத்து ஏதோ பேசியவன்.. பின் அவனுமே தனக்கு தேவையான உடை இத்தியாதி பொருட்களோடு அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டான்..
போகும் முன் தன் அன்னையிடம்.. “வாய்க்கு வாய் அவளை அநாதை என்று சொன்னிங்கலே.. புருஷன் நான் இருக்கும் போது அவள் எப்படி அநாதையாவா..” என்று கேட்டு விட்டு தான் தன் வீட்டை விட்டு வெளியேறினான்..
மகன் போகும் போது தான் கோசலைக்கு நிலையின் தீவிரம் புரிந்தது… நான் இவனுக்காக தானே அனைத்தும் செய்தேன். மகனுக்கு செந்தூராவை பிடித்து இருக்கு. ஆனா செந்தூரா தான் தன் மகனை பார்க்க மாட்டேங்கிறாள்.. கூட அடுத்து வீட்டில் நல்ல விசயங்கள் நடக்க வேண்டும்.. அந்த ஆதங்கத்தில் தானே வார்த்தைகளை கொட்டினேன் என்று அவர் நினைக்க,..
ஆனால் இதற்க்கு எல்லாம் ஆரம்ப புள்ளி வைத்த கோசலையின் தாய் வீடு ..
“கொஞ்சம் அமைதியா பேசி இருக்கலாம் கோசலை.. சரி வீடு நிலை சரியில்ல இன்னொரு நாள் வரோம்..” என்று பொதுவாக சொல்லி விட்டு கோசலையின் தாய் வீடும் சென்று விட்டது.. கோசலையின் கணவர் மாமியார் மாமனார் ஏன் அவர் ஒரகத்தி கூட ஒரு மாதிரி கோசலையை பார்த்து விட்டு தான் சென்றனர்.. அந்த பெரிய ஹாலில் கோசலை தலை மீது கை வைத்து தனித்து அமர்ந்து விட்டார்…