என்ன ஒன்று அனைத்தும் ஆடம்பரமாக தான் நடந்து.. எதுவும் இவர்கள் முறைப்படி ஒரு திருமணமும் நடக்கவில்லை..
இவர்கள் முறையில் என்றால் முன் நாள் இரவு தான் திருமணம்.அதுவும் அதற்க்கு முன் மெகந்தி.. குதிரையில் மாப்பிள்ளையை அழைத்து வந்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருக்கும்.. அப்படி இல்லாது தன் வீட்டில் இரண்டு திருமணங்கள் முடிந்ததில் அந்த வீட்டின் பெரியவர்களான தாரகராம்.. சரஸ்வதி தேவிக்கு ஒரு வருத்தம் தான்..
அதை திருமணம் முடிந்து பெண்கள் அவர் நாட்டுக்கும் அவர் ஊருக்கும் என்று சென்ற பின் ஒரு நாள் பேச்சி வாக்கில் தாரகராம் கூறினார்..
இந்த பேச்சை கேட்டு கொண்டு இருந்த பத்மினி.. “அதுக்கு என்னப்பா.. உங்க பெரிய பேரன் பேத்தியோடான கல்யாணத்தை உங்க விருப்பபடி செய்து விடலாம்.. இதுக்கு ஏன் கவலை பட்டுட்டு இருக்கிங்க..?” என்று பத்மினி தந்தைக்கு ஆதரவாக பேசுவது போல் பேசி விட்டு.
தன் பெரிய அண்ணன் கிருஷ்ண மூர்த்தியிடம்.. “அண்ணா அப்பா ஆசைப்பட்டது போல் வம்சிக்கும் வர்ஷாவுக்கும் திருமணத்தை முடித்து விடனும்.. என்ன அண்ணா சொல்றிங்க..” என்று கேட்டதற்க்கு கிருஷ்ண மூர்த்தியும் ..
“முடிச்சிடலாம் பத்து.. அப்பா ஜாதகம் பார்க்காது கல்யாணம் செய்ய மாட்டார்.. நீ வர்ஷா ஜாதகத்தை கொண்டா பொருத்தம் பார்த்திடலாம்..” என்று கூறியவர்.. மனைவியிடம்..
“ நீ வம்சி ஜாதகத்தை எடுத்து மேல வை கோசலை..” என்று சொல்ல கணவனின் பேச்சுக்கு.
“ம்..” என்று மட்டும் மெல்ல முனு முனுத்து விட்டு கணவன் சொன்னது போல் வம்சி ஜாதகம் எடுக்க தன் அறைக்கு வந்த கோசலை தேவி..
சத்தமாகவே. “என்னவோ அப்பா ஆசையை நிறைவேற்ற மட்டும் தான்.. இந்த கல்யாணம் நடக்கனும் என்று சொல்றத பாரு..” என்று பேசி கொண்டே தான் தன் மகனின் ஜாதகத்தை கணவர் சொன்னது போல நாளை கொண்டு செல்ல ஏதுவாக கண்ணில் படும் படி மேல வைத்தது.
கோசலைக்கு கிருஷ்ண மூர்த்தியோடு திருமணம் முடிந்து வம்சி கிருஷ்ணா நான்கு வயதாக இருந்த போது தான் பத்மினிக்கு திருமணம் நடந்தது..
அவருக்கும் அனைத்துமே தெரியும்,. இவருக்கு முன் மூத்த பெண் துர்கைக்கு மட்டும் தான் திருமணம் முடிந்து இருந்தது..அப்போதே வெளிநாட்டு வாசம் தான்..
அதனால் தன் மூத்த நாத்தனாரினால் கோசலைக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை.. ஆனால் பதிமினி.. அப்போதே அப்படி ஒரு திமிரில் தான் சுத்துவாள்…. நான் தான் ராணி என்ற கணக்காக..
அதுவும் அண்ணன் தம்பிக்கு என்று பெண் கேட்டு வந்த அந்த இடத்தின் வசதியில் இன்னும் ஆட்டம் போட்ட பதிமினியின் செயல்கள் எல்லாம் அப்பப்பா.
பின் கடைசி நாத்தனார் பிரச்சனை ஆகி திருமணம் நின்று.. என்று பின் தான் தன் நிலை உணர்ந்து அடக்கி வாசித்தது..அவள் கணவன் வீடு ஜப்தி என்று தன் கணவன் போய் திட்டி வந்து ஒருவாரம் கழித்து தற்கொலை செய்து கொண்டதில்..
கடன் பிரச்சனை தாங்காகது தற்கொலை செய்து கொண்ட அந்த மரணத்தை கூட என்ன நேக்காக அந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு விட்டாள்.. தன் நாத்தனார்..
“அண்ணா நீங்க வந்து திட்டிய நாள் முதல் அவர் சரியா தூங்கவே இல்ல அண்ணா.. உன் அண்ணா என்னை திட்டிட்டார் மானம் போச்சு மரியாதை போச்சி என்று சொல்லிட்டே இருந்தாரே அண்ணா..” என்று இப்படி பேசி பேசியே தன் கணவர் மனதிலேயே அவள் கணவன் இறக்க நான் தான் காரணம் என்று நினைக்க வைத்து விட்டாளே..
இதோ அந்த ஒரு செயல் கொண்டு இதோ அவள் பெண்ணை என் மகன் தலையில் கட்டுவதில் வந்து நிற்கிறது..
என் மகனுக்கு எவ்வளவு பெரிய இடத்தில் எல்லாம் சம்மந்தம் தேடி வந்து இருக்கு.. என் தலையெழுத்து இவன் கணவன் பட்ட கடனை அடச்சி.. வாழ் நாள் முழுவதும் இங்கேயே வந்து உட்கார்ந்து விட்டு பெண்ணை கட்டனும் என்று..கோசலையின் இந்த புலம்பல் இன்று நேற்று ஆரம்பித்தது கிடையாது.
என்று பத்மினி என் பெண்ணை உன் மகனுக்கு தான் கட்டனும் என்று முன் பதிவு போல் தன் மகளின் கல்யாணத்தை என் மகனோடு பதிவு செய்து வைத்து விட்டாளோ.. அந்த நாளில் இருந்து இதே புலம்பல் தான்.. ஆனால் அனைத்து புலம்பலும் மனதோடு தான்..
தன்னுடைய இந்த நிலையை ஒரவத்திக்கு கூட சொல்லியது கிடையாது.. ஏன் அவள் அம்மா வீட்டில் கூட. அந்த பெண்ணை தான் உன் மகனுக்கு கட்ட போறிங்கலா என்று பெண்ணை வைத்து கொண்டு இருக்கும் அண்ணி கேட்ட போது கூட.
ரொம்ப பெருந்தன்மையாக. “நாங்க கட்டலேன்னா எப்படி அண்ணி.. எங்களை நம்பி எங்க வீட்டில் இருக்கும் பெண்.”
என்று விட்டார்.. ஆனால் மனதில் அப்படி ஒரு ஆற்றாமை.. அதுவும் உன் மகனுக்கு அந்த பெண்ணை தான் கட்ட வேண்டுமா என்று பெண்ணை வைத்து இருக்கும் அண்ணி கேட்பது எதற்க்கு என்று தெரியாத அளவுக்கு கோசலை தேவி புரிந்து கொள்ளாத பெண் மணி இல்லையே..
கோசலைக அனைத்து ஆதங்கத்தையும் மனதில் போட்டு தான் புழுங்கி கொள்வார்.. பெற்ற மகனிடமோ.. மகளிடமும் கூட பகிர்ந்தது கிடையாது..
இன்றும் அதே போல் புலம்பி கொண்டு தான் மகனின் ஜாதகத்தை வெளியில் எடுத்தது.. எப்போதும் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் தாரகராம் தன் மனைவியோடு செல்வார்..
இன்று. “ எனக்கு கொஞ்சம் உடம்பு முடியல நீங்களே போய் பார்த்துடுங்க வந்துடுங்கலேன்..” என்று விட்டார். அங்கு என்ன சொல்வார்களே என்ற என்ணத்தில்..
சரி என்று கோசலையும் கிருஷ்ணமூர்த்தியும் கிளம்பி வர. பத்மினி.. “நானும் வரேன் அண்ணா.. நம்ம பிள்ளைங்க நல்லா இருப்பாங்க என்று அவர் சொல்வதை கேட்க ஆசை..” என்று.
பத்மினிக்கு தன் மகளை தன் மருமகளாக ஆக்கி கொள்வதில் அன்ணி கோசலைக்கு அந்த அளவுக்கு விருப்பம் இல்லை என்பது தெரியும்..
தன் அம்மா அப்பா ஜாதகம் பார்க்க போவது என்றால் பரவாயில்லை.. அண்ணி என்றால், இதில் ஏதாவது செய்ய போகிறாரே என்ற பயத்தில் தான் கூடவே ஜாதகம் பார்க்க பத்மினி சென்றது..
அது வரை நல்லதாக போயிற்று… இரண்டு பேர் ஜாதகத்தையும் ஒன்றாக வைத்து பார்த்த அந்த ஜோசியர் இரண்டு ஜாதகத்தையும் தூரம் வைத்து விட்டார்..
“இந்த இரண்டு ஜாதமும் நல்ல யோகமான ஜாதகம் தான்..” என்று ஜோதிடர் பேச்சை ஆரம்பிக்க பத்மினி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.
ஆனால் அவர் அடுத்து சொன்ன..” ஆனால் இந்த இரண்டு ஜாதகத்துக்கும் சேரவே சேராது..” என்று விட பத்மினி அதிர்ந்து போனார் என்றால் கோசலை முகத்தில் ஒரு நிம்மதி..
கிருஷ்ண மூர்த்தி தான்.. “ அதுக்கு பரிகாரம்..” என்று கேட்டதற்க்கு.
“இந்த கல்யாணம் நடந்தால் இந்த பெண்ணுக்கு தாலி தங்காது..” என்ற பேச்சில் கிருஷ்ண மூர்த்தி அடுத்து வாய் திறக்க வில்லை..
தங்கை கணவன் தன்னால் தான் தற்கொலை செய்து கொண்டானோ.. அது உண்மையா இல்லையா தெரியவில்லை.. அவர் மனதில் சின்ன சந்தேகம்.. அதன் தொட்டே தங்கை என் மகளை உங்க மருமகளாக்கி கொள் என்று கேட்ட உடனே ஒத்து கொண்டது..
ஆனால் தன் மகனுக்கே பிரச்சனை எனும் போது அவர் வேறு எதுவும் பார்ப்பதாக இல்லை.. பத்மினி அப்போது கூட விடாது..
“நீங்க தானே சாமீ ஒரு முறை வம்சி ஜாகத்தை பார்த்துட்டு இந்த பையனுக்கு சொந்தத்தில் தான் முடியும் என்று சொன்னிங்க. சொந்தத்தில் என் அக்கா மகளுக்கு கல்யாணம் முடிந்து விட்டது.. “ என்று பத்மினி அந்த ஜோதிடரை குடைந்து குடைந்து கேட்க ஆரம்பித்து விட்டார் .. செந்தூராவும் சொந்தம் தான் என்று யாரும் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை போல..
என் மகன் ஜாதகத்தை இவள் எப்போ பார்த்தா என்பது போல் அதிர்ந்து கோசலை நாத்தனாரை பார்த்தார்.. கோசலை நினைத்தது போல் தான் வம்சி ஜாதகத்தை முன்னவே பார்த்தது சொந்தம் என்று இவர் சொன்னதில் பத்மினி அன்று அப்படி திருப்தி பட்டு கொண்டார்.
இன்று என்ன இப்படி மாற்றி பேசுகிறார்.. என்று கேட்டு விட்டார்.
அந்த ஜோதிடர்.. “இப்போதும் சொல்றேன் இந்த பையனுக்கு சொந்தத்தில் தான் முடியும்.. அதே போல் இந்த பெண்ணுக்கும் சொந்தத்தில் தான் முடியும்.” என்று அந்த ஜோதிடர் குழப்பி விட்டு விட்டார்.
ஆனால் கோசலை சொந்தம் என்றதில் மனது துள்ளியது.. தன் அண்ணன் மகளை கேட்கலாம் என்று.. மூன்று பேரும் வேறு …வேறு… மனநிலையில் தான் அன்று வீடு வந்தனர்.
பத்மினிக்கு தான் மனது ஆறவில்லை.. தன் மகளை வம்சிக்கு கொடுக்க வேண்டும் என்பது அவரின் எத்தனை நாள் கனவு.. இன்று அது நடவாது என்றதில் மிகவும் சோர்ந்து போய் விட்டார்.
அவர்கள் வீடு வரும் போது மாலை கடந்து விட்டது… வீட்டில் அனைவரும் இருக்க. கோசலை ஜோதிடர் சொன்னதை ஒன்று விடாது சொல்லி விட்டார்.
சொல்லும் போது கோசலை தன் மகனின் முகத்தையே தான் பார்த்திருந்தார். அதில் ஏதாவது ஏமாற்றம் தெரிகிறதா என்று.. அப்படி எதுவும் இல்லை என்றதில் ஒரு ஆசுவாசம் .பேச்சோடு பேச்சாக தன் அண்ணன் மகளை பற்றிய பேச்சை ஆரம்பித்து விடலாம் என்று..
“வம்சிக்கு சொந்தத்தில் தான் முடியும் என்று சொன்னாங்க… நான் என் அண்ணன் மகள் ஜாதகத்தை அனுப்ப சொல்லவா..?” என்று கோசலை கேட்டதற்க்கு பெரியவர்கள் என்ன சொல்வார்கள்..
“சரி..” என்பதை தவிர…
தாரகராம் தான்.. “உன் அண்ணன் பெண்ணுக்கு பாரும்மா.. ஆனா அப்படியே நம்ம வர்ஷாவுக்கு முதலில் மாப்பிள்ளை பார்க்கலாமே “ என்று கூற..
இப்போது கோசலை.. “அதுக்கு என்ன மாமா. நம்ம வீட்டு பெண் மாமா. பேஷா நல்ல இடமா பார்த்து ஜம்முன்னு கல்யாணம் செய்து விடலாம் மாமா..” என்று மகிழ்ச்சியோடு தான் சொன்னார் கோசலை.. இதில் ஒன்று அனைவரும் கவனிக்க தவறி விட்டனர்.. அது வர்ஷாவுக்கும் சொந்தத்தில் தான் முடியும் என்பதை..
கோசலை வர்ஷாவுக்கு இடம் பார்க்கிறேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னதில் பொய் கிடையாது.. அவருக்கு நாத்தனார் தான் பிரச்சனை.. அவர் மகள் கிடையாது.. தான் பார்க்க வளர்ந்த பெண்.. எந்த குறையும் சொல்ல முடியாது.
ஆனால் தன் மகன் என்று வரும் போது ஒன்றும் இல்லாது வரும் பெண்ணா. அதுவும் அவ்வளவு சீரோடு தன் அண்ணன் மகள் இருக்க என்பதில்.. தான் பிரச்சனை..
பத்மினிக்கு இந்த பேச்சு எல்லாம் ரசிக்கவில்லை.. அழுது கொண்டே தன் அறைக்குள் சென்று விட்டார்.
இதை எல்லாம் யாருக்கோ என்பது போல் கேட்டு கொண்டு இருந்த வர்ஷாவின் பக்கத்தில் சென்ற வருண் கிருஷ்ணா.. “இப்போ பேசுறது உன் மேரஜ் பத்தி வர்ஷா.. முதல்ல ஒருத்தர சொல்றாங்க.. இப்போ வேறு சொல்றாங்க. நீயும் அமைதியா கேட்டுட்டு இருக்க..” என்று என்ன பெண் இவள்.. இவளுக்கு என்று மனதில் ஒன்றும் இல்லையா என்ற ஆதங்கம் அவனுக்கு.
வருணை பார்த்து சிரித்த வர்ஷா… “நான் இது தான் வேண்டும் என்று கேட்க.. நான் என் அப்பா சம்பாதியத்தில் இல்லை வருண்.. இல்ல அவர் சேர்த்து வைத்த சொத்தில் வாழ்க்கை நடத்தல. என் அப்பா வைத்து விட்டு போனது கடன் மட்டும் தான்..இதுல என் ஆசை என்று இது வரை.. இந்த சாப்பாடு வேண்டும் என்று கூட இந்த வீட்டில் கேட்டது கிடையாது.. இதுல.. போ வருண்..” என்று சொல்லி விட்டு செல்லும் தன் அத்தை மகளையே வருண் கிருஷ்ணா அதிர்வோடு பார்த்திருந்தான்…