கோசலை தன் மாமனார் வம்சிக்கு உன் அண்ணன் பெண்ணை பார் என்றதும்… அன்றே தன் அண்ணனை அழைத்து விட்டார்.. இங்கு நடந்ததையும் சொன்ன கோசலை..
“அண்ணா உன் பெண் ஜாதகத்தை அனுப்பு அண்ணா… கண்டிப்பா பொருத்தமா தான் இருக்கு… வம்சிக்கும் சொந்தத்தில் தான் அமையும் என்றும் அந்த ஜோதிடர் சொன்னார்..” என்று தன் மனதில் இருந்து மகிழ்ச்சியில் கோசலை கட கட என்று அனைத்தும் கூறிய பின்னும்..
கோசலையில் அண்ணன் ஒன்றும் சொல்லாது அமைதியாக இருக்கு.. பின் தான்.. “என்ன அண்ணா என் மகனுக்கு உன் பெண்ணை கொடுப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா. .” என்று சந்தேகமாக கேட்டார்.
இதற்க்கு மட்டும் கோசலையின் அண்ணன்.. “என் மாப்பிள்ளைக்கு என்ன குறை கோசலை..? பெண் கொடுக்க விருப்பம் இல்லாது போக..என் யோசனை மாப்பிள்ளை மனசுல அந்த பெண் மீது ஏதும் ஈடுபாடு இருந்தா.. ஏன்னா சின்ன வயசுல இருந்து பேசிய பேச்சு.. பெண்ணை பெத்தவன்.. நாளும் தானே யோசிக்கனும்..” என்று ஒரு பெண்ணின் தந்தையாக தன் சந்தேகத்தை கூறினார்..
“அண்ணா வீடு முழுவதும் முறை பெண் இருந்தும் என் மகன் யாரையும் நிமிர்ந்து பார்த்தது இல்ல அண்ணா. இது நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை.. இப்போ இந்த பேச்சு நடந்து கொண்டு இருந்த போது கூட வம்சி அங்கு தான் இருந்தான்.. நான் என் மாமனாரிடம் அண்ணன் பெண்ணுக்கு பார்க்கிறேன் என்று போது கூட மறுக்கல” என்று சொன்னதும் தான்..
“ஜாதகத்தை வாட் சாப்பில் அனுப்புகிறேன்.” என்று சொன்னவர் அனுப்பியும் விட்டார்..
கோசலையும் மறு நாளே தன் ஜாதகத்தை பிரண்ட் அவுட் எடுத்து கொண்டு தன் மகன் ஜாதகத்தையும் எடுத்து கொண்டு ஜாதகம் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியோடு சென்றவர் வீடு வந்த போது அவர் முகத்தில் இருந்த அந்த மகிழ்ச்சி துணி கொண்டு துடைத்தது போலாகி விட்டது..
நேற்று போலவே அனைவரும் இருக்கும் போது தான் கோசலை பொதுவாக. “வம்சிக்கு என் அண்ணன் பெண் ஜாதகமும் பொருந்தல..” என்று கூறியவர்..
பின்…. “எனக்கு என்னவோ அந்த ஜோதிடருக்கு வயசு ஆனதால கண் தெரியாது சரியா பார்க்காது பொருந்தவில்லை என்று சொல்லி விடுகிறாரே என்று தோனுது..” ஏன்று கோசலை தேவி தன் அபிப்பிராயத்தையும் சேர்த்து கோசலை கூறினார்..
உடனே பத்மினியும்.. “ஆமா அண்ணி எனக்கும் சந்தேகமா தான் இருக்கு… வம்சிக்கு சொந்தம் தான் முடியும் என்று சொல்லிட்டு யாருடையதும் பொருந்தல என்று சொன்னா.. எப்படி..?” என்று கேட்டார்..
பதிமினிக்கு இதையே வைத்து வேறு ஒரு ஜோதிடரிடம் காட்டினால் தன் பெண் ஜாதகம் பொருந்தாத. என்று ஒரு ஆசை..
ஆனால் வருண் கிருஷ்ணா.. தன் தாத்தாவிடம்.. “ வம்சி அண்ணா ஜாதகத்தை செந்தூரா ஜாதகத்தோடு பார்த்திங்கலா தாத்தா..?” என்று கேட்கவும்.
.இவ்வளவு நேரமும் யாருடைய திருமணத்தை பற்றியோ பேசி கொண்டு இருப்பது போல் தன் பேசியில் ஈமெயிலை பார்த்து கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணா வருண் கிருஷ்ணாவின் இந்த பேச்சுக்கு சட்டென்று தலை நிமிர்ந்து தன் தாத்தனை பார்த்தான்..
தாரகாரம்.. “பார்க்கல..” என்று மெல்ல முனு முனுக்க. கோசலைக்கும் யோசனை.. ஆம் பார்க்கல என்று. நினைத்தார்.
பத்மினி தான்.. “அது எப்படி பொருந்தும் அண்ணி.. இரண்டு பேரையும் பக்கம் பக்கம் நிற்க வைத்தால் எள்ளும் பச்சரிசியும் போல இருக்கும்..” என்று நிறத்தை வைத்து பேச..
பத்மினியின் இந்த பேச்சுக்கு முதல் எதிர்ப்பு அவர் மகளிடம் இருந்தே வந்தது..
“நம்ம வீட்டு எந்த ஒரு பங்கஷன் போட்டோவையும் எடுத்து பாருங்க அம்மா.. செந்தூரா சும்மா மாடல் போல இருக்கா.. வெள்ளையா இருந்தா மட்டும் அழகு இல்ல..” என்று சொன்னவளை பத்மினி முறைத்து பார்த்தார்..
இது போல ஒரு தத்தியை வைத்து கொண்டு நான் என்ன செய்வேன்.. அப்படியே அவள் அப்பனை கொண்டு பிறந்து இருக்கு.. என்று மனதில் அங்கலாய்த்து கொண்டார்..
அடுத்து என்ன செய்வது.. வம்சி கிருஷ்ணாவுக்கு இருபத்தி ஒன்பது வயது.. மறு மாதம் முடிவடைய இருக்கிறது.. அதே போல் தான் வர்ஷாவுக்கும் இருபத்தி நான்கு முடிவடைய போகிறது.. இரண்டு பேருக்கும் கல்யாண வயது..
இது வரை இருவருக்கும் என்றதினால் ஸ்வேதா.. விந்தியா திருமணம் முடிந்த உடனே இவர்களுக்கு முடித்து விடலாம் என்று வேறு எங்கும் கூட சொல்லவில்லை.. ஏன் சொந்தம் அனைவருக்கும் இருவருக்கும் தான் திருமணம் செய்ய உள்ள விசயம் தெரியும். அதனால் யாரும் பெண்ணும் கேட்கவில்லை..
இனி தான் பார்க்க வேண்டும்.. வம்சிக்கு சொந்தம் எனும் போது மாமன் மகள் இருக்கிறாள் என்று நினைத்தால், அதுவும் பொருந்தவில்லை.. பாவம் வர்ஷாவுக்கும் சொந்தம் தான் என்று ஜோதிடர் சொன்னதை கவனிக்கவில்லை.. கவனித்து வீட்டில் சொல்லி இருந்தால், தாரகராம் வேறு மாதிரி கூட யோசித்து இருக்க கூடும்..
வர்ஷாவோடு வருண் மாத கணக்கில் சின்னவன் என்பதினால் இருவருக்கும் என்று யாருமே யோசிக்கவில்லை..
பின் ஒரு மனதாக தாரகராம் வம்சி கிருஷ்ணா பெற்றோரான கோசலை கிருஷ்ண மூர்த்தியிடம்..
“செந்தூராவுக்கு வம்சி கிருஷ்ணா ஜாதகத்தோடு பொருத்தம் பார்ப்பதில் நீங்க என்ன சொல்றிங்க..? ஏன்னா நாளை பின்ன இது பத்தி என்னை பற்றி எதுவும் பேச கூடாது பாருங்க..” என்று பெரியவராக அவர்கள் விருப்பத்தை கேட்டார்..
கோசலைக்கு பிரச்சனை கிடையாது.. செந்தூராவை பற்றி அதிகம் தெரியாது.. ஆனால் நல்ல பெண் என்ற அபிப்பிராயம் இருக்கிறது.. வர்ஷாவும் நல்ல பெண் தான் பத்மினி வைத்து தான் பிரச்சனையே.. அதோடு பத்மினிக்கு ஒன்றும் இல்லை..
ஆனால் செந்தூராவும் சசிதேவ்வும் விடுதியில் தங்கி படித்தாலுமே, அவர்கள் அன்னைக்கு சேர வேண்டியது கொடுத்து விடுவதாக மாமனார் பேசியது தெரியும்.. அதனால்.. “பார்க்கலாம் மாமா பொருந்தினால் முடிக்கலாம்..” என்று தனக்கு விருப்பம் தான் என்பதை சொல்லி விட்டார்.
பத்மினி தான்.. “அது எப்படி என் மகள் மனதில் ஆசையை வளர்த்துட்டு..” எனும் போதே வர்ஷா.. “அப்படி எல்லாம் இல்ல அம்மா..” என்று அவள் உடனே சொல்லவும்.. இது வரை தன் பேசியை குனிந்து பார்வை இட்டு கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணாவே சிரித்து விட்டான்..
பத்மினி.. “அப்படியே உன் அப்பனை போலவே இரு டி.. உன் அப்பன் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தினார்.. நீ என்னை இங்கு இருந்து வீதியில் கொண்டு போய் நிறுத்து.” என்று பட பட என்று பொறிந்து விட்டு எப்போதும் போல தன் அறைக்குள் சென்று விட்டார்..
தாரகராம் தான்.. “ஒருத்தர சார்ந்து வாழ்ந்தா அது ரொம்ப கொடுமை.. யாரும் அவளை தப்பா நினச்சிக்காதிங்க..” என்று தன் மகளுக்கா பேசினார். மூன்று பிள்ளைகளுமே ..
“பத்து பத்தி தெரியாதா.” என்று விட்டார்கள்..
பின் தாரகராம் யோசனையுடன் தன் மூத்த பேரனை பார்த்தவர். “நீ என்னப்பா சொல்ற..?” என்று கேட்டார்..
இது வரை பேசியில் கவனத்தை செலுத்தி கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணா அதை டேபுல் மீது வைத்து விட்டு.
“தாத்தா உங்களுக்காகவது.. இப்போவாவது கேட்கனும் என்று தோன்றி இருக்கே.. தேங்க காட்..” என்று சொன்னதுமே..
கோசலை.. “என்ன வம்சி. இப்படி சொல்ற.” என்று ஆதங்கமாக கேட்ட அன்னையை சமாதானம் செய்தவன் பின்..
“எது என்றாலும் செந்தூராவையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு ஜாதகம் பார்க்க போங்க..” என்று சொன்னவன்.. வேலை இருக்கிறது என்று வெளியில் சென்று விட்டான்..
வீட்டில் இருந்த அனைவருமே. ..இவன் என்ன சொல்றான்.. பாருங்க என்றானா..? வேண்டாம்.. என்று சொல்றானா என்று குழம்ப..
அவர்களின் அந்த குழப்பத்தை வருண் கிருஷ்ணா தான்.. “ வம்சி அண்ணாவுக்கு ஒகே தான்.. செந்தூராவுக்கும் ஒகே வா என்று கேட்க சொல்றார்.. இது கூட புரியல. இதை ஒரு சின்ன பையன் சொல்ல வேண்டி இருக்கு.. நீங்க என்ன தான் பிசினஸ் பண்றிங்கலோ..” என்று சலித்து கொள்வது போல் பேசினான்..
வர்ஷா.. “யாரு நீ சின்ன பையன்..? என்னை நம்ப சொல்ற..?” என்று அவன் காது பிடித்து கேட்டவளிடம் வருண் கிருஷ்ணா..
“அப்போ உன் கண்ணுக்கு நான் சின்ன பையனா தெரியலையா ..?” என்று அவளையே பார்த்து கேட்ட வருண் கிருஷ்ணா பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசத்தை வர்ஷா முதல் முறை உணர்ந்தாள்..
ஆனால் அது என்ன என்று உணரும் முன் வருண் கிருஷ்ணா தன் பார்வையை மாற்றி கொண்டவனாக சாதாரணமாக பார்த்து கொண்டு மீண்டும் அதே கேள்வியை கேட்டான்..
அவன் பக்கத்தில் நின்று அவன் உயரத்தையும்.. அவன் உடற்பயிற்ச்சியால் தோன்றிய அவனின் உடல் கட்டையும் காண்பித்து.
“உன்னை போய் சின்ன பையன் என்று சொன்னா யாராவது நம்புவாங்கலா போடா போ..” என்று கிண்டலுடன் சொல்லி விட்டு போக பார்த்தவளின் கை பிடித்து..
“அப்போ என்னை அத்தான் என்று கூப்பிடு..” என்று கேட்டவனிடம்..
“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு என்று தெரியல ஒரு மார்க்கமா தான் இருக்க..” என்று அவனின் பேச்சை விளையாட்டு பேச்சை போல் திசை திருப்பி விட்டு செல்பவளையே பார்த்திருந்த வருண் கிருஷ்ணாவின் மனது..
“எப்போ வர்ஷி நீ என்னை புரிஞ்சிப்ப. இல்ல என்னையும் என் பேச்சையும் நீ எப்போதும் சின்ன பிள்ளை தனத்தில் தான் எடுத்து கொள்வீயா…?” என்று நினைக்கும் வருண் கிருஷ்ணா வர்ஷாவை கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு தலை பட்சமாக காதலித்து கொண்டு இருக்கிறான்..
வம்சி கிருஷ்ணா செந்தூராவை கேட்டு விட்டு அடுத்து பாருங்க என்று சொல்லியும்.. அவளிடம் அதை பற்றி கேளாது.. செந்தூரா அன்னை தந்தை இறந்த உடன் அவர்கள் இருந்த வாடகை வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் பழைய பொருட்கள் வைத்து இருந்த அறையில் வைக்கும் போது முக்கியமானதை மட்டும் தாரகராம் தன் பீரோவில் வைத்து கொண்டார்.. அதில் செந்தூராவின் ஜாதகமும் அடக்கம்..
அதை எடுத்து நல்ல நேரம் பார்த்து கொடுத்த தாரகராம் பூஜை அறையில் அமர்ந்து கொண்டார்..எதேதோ நினைவுகள் அவருக்கு. கணவனை பார்த்த சரஸ்வதி தேவியும் அவர் கணவன் பக்கம் அமர்ந்து கொண்டவர்..
“என்னங்க என்னவோ போல் இருக்கிங்க.. எல்லாம் நல்ல படியா தாங்க நடக்கும்.. நீங்க தைரியமா இருங்க.. “ என்று சரஸ்வதி தேவி கணவனுக்கு தைரியம் கூற..
ஆனால் தாரகராம் முகம் அப்போது கூட தெளியவில்லை.. “இப்போ நம்ம பசங்க.. அவங்க பசங்க என்று வரும் போது அவங்க வாழ்க்கை மகிழ்ச்சி தான் என்று முடிவு எடுத்தாங்க. அன்னைக்கு அது ஏன் நம்ம நினைக்கல சரசு..” என்று இத்தனை நாள் மனதில் நினைத்து கொண்டு இருந்ததை கூறினார்.
சரஸ்வதி தேவியோ.. “இந்த காலம் போல் அப்போ எல்லாம் இல்லையேங்க..” என்று முடித்து கொண்டார்…
செந்தூரா ஜாதகம் கையில் எடுத்த போது அது என்னவோ அனைவரும் போகலாம். பக்கத்தில் தான் அவர்கள் குலதெய்வ கோயிலும் இருக்கு.. அப்படியே குடும்பமாக சாமீ தரிசனம் பார்த்து விட்டு வரலாம் .. தடங்களாக வந்து கொண்டு இருக்கிறதே என்று முடிவு செய்து மூன்று காரில் அனைவருமே தான் முதலில் ஜோதிடரிடம் சென்றது.
அந்த ஜோதிடர் செந்தூராவின் ஜாதகத்தையும் வம்சி கிருஷ்ணா ஜாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்த்தவர்..
இந்த ஜாதகத்திற்க்கு இது தான். பொருந்தும். வேறு செய்யலாம் என்று நினைத்தால் கண்டிப்பா முடியாது.. முடியவே முடியாது..” என்று இது வரை அமைதியாக பேசி கொண்டு இருந்த அந்த ஜோதிடர் ஒரு ஆக்ரோஷமாக சொன்னவர்.
“உங்க குடும்பத்தில் பெண் சாபம் இருக்கு அய்யா பெண் சாபம் இருக்கு.. தாரகராமை பார்த்து சொன்ன அந்த ஜோதிடர்.
“அதுவும் வீட்டு பெண் சாபம்.. அந்த பெண் உயிரை விடும் போது அவ மக்களை நினைத்து உயிர் விட்டா.. இனி என் குழந்தைக்கு யார் என்று.. கடைசி மூச்சில் நம்பினா.. தன் பிறந்தகம் விட்டு விட மாட்டார்கள்.. கூட பிறந்தவர்கள் விட்டு விட மாட்டார்கள் என்று.. ஆனா நீங்க விட்டுட்டிங்க அய்யா.. விட்டுட்டிங்க. அந்த பிள்ளைங்க மனசு அப்படி தத்தளித்து கொண்டு இருக்கு.. நீங்க என்ன தான் தானம் தருமம் செய்தாலும், ஏன் கோயில் கட்டி கும்பாபிஷேகமே செய்தாலும் அந்த சாபம் போகாது..
இன்னொன்னு.. தன் கையில் இருந்த செந்தூரா ஜாதகத்தை காட்டி.. “இந்த பெண் வயிற்று வழி குழந்தை தான் உங்கள் குடும்பத்தில் அடுத்த தலை முறைக்கு பிறக்க போகும் முதல் குழந்தையா இருக்கும்.. மத்தவங்களுக்கு குழந்தை உருவாகினாலும் தங்காது.. ஆண்டுகள் போக போக. அந்த பெண் மனது இன்னுமே கோபமாகி கொண்டு இருக்கு..” என்று ஒரு மாதிரி ஆவேசம் வந்தது போல் கத்தி விட்டு பின் ஒரு வித மயக்க நிலைக்கு சென்று விட..
கேட்ட ஒரு சிலருக்கு. அதுவும் இன்றைய தலை முறைக்கு அதை நம்புவதா வேண்டாமா.. என்ற சந்தேகம்.. இது வரை இவர் இது போல் குறி சொல்வது போல் எல்லாம் சொன்னது இல்லையே என்ன இது என்று நினைத்து கொண்டனர்..
ஆனால் தாரகராமுக்கும் சரஸ்வதிக்கும்.. இனி செந்தூராவையும் சசிதேவ்வையும் விடுதியில் தங்கி படிக்க வைக்க கூடாது.. வீட்டில் இருந்தே போகட்டும் என்று முடிவு எடுத்து விட்டனர்..
அந்த வீட்டு மருமகள்களுக்கும்.. சிறிது பயம்.. பெண்கள் பெண் சாபம் என்றால் பயப்பட தானே செய்வார்கள். ஏன் பத்மினியே பயந்து விட்டார். என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
சரி கோயில் சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்து சென்றவர்கள் குல தெய்வத்திற்க்கு பட்டு உடுத்தி.. எப்போதும் குலதெய்வம் தரிசனம் செய்ய சென்றால் சாமீக்கு ஏதாவது நகைகள் உபயமாக கொடுப்பார்கள்..
அதே போல் இன்று கழுத்து அட்டிகை கொண்டு வந்தார்கள்.. அம்பாளுக்கு அட்டிகை போட்டு அலங்கரித்து தரிசனம் முடித்து வெளியில் வரும் வரை அனைத்தும் நன்றாகவே நடந்து முடிந்தது..
மூல தரிசனத்தை விட்டு வெளியில் வந்தவர்கள் கோயிலை விட்டு வெளி வரவில்லை. அப்போது வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி.. மஞ்சள் பூசி நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் இட்டு கொண்டு இவர்கள் முன் வந்து நின்றார்..
ஏதாவது யாசகம் கேட்கிறார் என்று நினைத்து சரஸ்வதி தேவி.. நூறு ரூபாய் தாளை அவர் கையில் கொடுத்தார்.. ஆனால் அந்த மூதாட்டி அந்த பணத்தாளை கையில் பிடிக்காது விட அது தரையில் விழுந்து விட்டது.
“பெண் சாபம் ஒரு குடும்பத்தை இப்படி தான் செய்து விடும்.. அம்பாளுக்கு நகை பூட்டினாலோ.. பணம் கொண்டு வந்து கொட்டினாலோ பெண் சாபம் தீராது.. கணக்கை நேர் செய்தால் மட்டுமே. தீரும்..” என்று சொல்லி விட்டு சென்ற அந்த மூதாட்டியே பார்த்து கொண்டு இருந்தார் சரஸ்வதி தேவி..
கணவரிடம் ..”என்னங்க.” என்று பயந்து போய் அவர் கை பிடித்து கொண்ட மனைவியின் கையை பிடித்து கொண்ட தாரகராம்..
“கிருஷ்ண ஜெயந்திக்கு வருவாங்கல.. நான் பேசுறேன்.. நம்ம காலம் இருக்கும் போதே செய்ததை நேராக்க பார்க்கிறேன்..’ என்று சொன்னார்.