தாரகராம் இல்லத்தில் அனைத்து பண்டிகளையும் விட கிருஷ்ண ஜெயந்தியை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.. காரணம் மூன்று தலை முறை முன்… கிருஷ்ணன் கோயிலின் தர்மகர்த்தவாக இவர்கள் முன்னோர்கள் இருந்து வந்தனர்..
அது தாரகராம் காலத்தில் பார்க்க முடியாது மற்றவர்கள் வசம் விட்டு விட்டாலுமே, முன்னோர்கள் சொல்லி சென்ற..
“நமக்கு கிருஷ்ணர் ராசியான கடவுள்.. அவனை வழி படாது விட்டு விடாதிங்க..” என்ற பேச்சை கேட்டு இன்றும் அந்த பண்டிகையைய் அவ்வளவு பிரமண்டமாக கொண்டாடுவார்கள்..
அதன் படியும் தாரகராம் முன்பே நினைத்த படியும் செந்தூரா சசிதேவ்வை பேசியில் அழைத்து.. “கட்டாயம் வந்து விட வேண்டும்..” என்று அழைத்தார்.. அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லை..
செந்தூராவிடம் “உன்னை அழைக்க நானும் பாட்டியும் வரோம்..” என்றதுமே செந்தூரா யோசிக்க தொடங்கினாள்.. அதை தன் தம்பியிடம் பேசியின் மூலம் தெரிவிக்கவும் செய்தாள்..
“என்னவோ தெரியல தேவ். இந்த நான்கு நாட்களாய் அந்த வீட்டில் இருந்து ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.. ஏன்னு தெரியல..” என்றதும்.. சசிதேவ்வுக்கும் அந்த விசாரிப்பு நடந்தது..
என்ன திடிர் என்று அவனுமே நினைத்து கொண்டான்.. அக்கா இப்படி சொன்னதுமே.. அவனுக்கு ஒரு சந்தேகம்..
“அக்கா ஒரு சில பிராப்பர்ட்டிஸ் மூதையார் சொத்து. அது விருப்பம் பட்டாலும் இல்லை என்றாலும் பேரன் பேத்திக்கு வந்து விடும்.. அது தொட்டு ஏதாவது..” என்று சசிதேவ் தன் சந்தேகத்தை கூறினான்.
“இது வரை பணம் சொத்து எல்லாம் பேச்சு வந்தது இல்லையேடா. இது என்னவோ வேறு ஒரு விசயமா இருக்கனும் என்று தான் தோனுது.”செந்தூரா இப்படி சொல்ல..
சசிதேவ்.. “கிருஷ்ண ஜெயந்திக்கு இன்னும் நான்கு நாள் தான் இருக்கு. அங்கு போனா தெரிந்து விட போகிறது.. நீ ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம் அக்கா.” என்று விட்டான்..
செந்தூராவும் சரி அது என்ன என்று வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று விட்டாள்..
இங்கு தாரகராம் இல்லத்தில் வம்சி கிருஷ்ணா தன் அறையில் இருக்கும் அந்த பெரிய அளவிலான டிவியில் அன்று தாத்தா பாட்டி சதாபிஷேகத்தின் போது எடுத்த அந்த புகைப்படத்தை தான் திரையில் பார்த்து கொண்டு இருந்தான்..
இது வரை இந்த பெண்ணை நான் அந்த கண்ணோட்டத்தில் பார்த்தது இல்லை.. செந்தூராவை மட்டும் இல்லை.. வம்சி கிருஷ்ணா எந்த பெண்ணையும் பார்த்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
அதுவும் பெண்கள் விசயத்தில் தவற அவனுக்கு அவ்வளவு வாய்ப்பு வெளியில் கிடைத்தும்.. வீட்டில் சின்ன வயதில் இருந்து இவளை தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் என்று வர்ஷாவை அடையாளம் காட்ட பட்ட போதும். அவனின் பார்வை வேறு மாதிரி அவர்களின் மீது படிந்தது கிடையாது.. இவர்கள் தன் வீட்டு பெண். இப்படி தான் நினைப்பான்..
இதோ இப்போது இவ்வளவு பெரிய திரையில் செந்தூராவை பார்க்கும் போது கூட தவறாக எல்லாம் பார்க்கவில்லை… அவனின் பார்வை செந்தூராவின் முகத்தில் மட்டுமே தான் நிலைத்து இருந்தது.
அவர்கள் வீட்டு பெண்கள் மூக்குத்தி குத்தி கொள்ள மாட்டார்கள்.. அவன் அம்மா கோசலையே மூக்குத்தி போட்டு கொள்வது இல்லை.. ஒற்றை வெள்ளை கல்லாக அந்த செந்தூராவின் அந்த கூர் முக்கில் அழுத்தி இருந்தது பார்க்க அவ்வளவு அழகாக அவன் கண்களுக்கு தெரிந்தது..
வம்சி கிருஷ்ணா செந்தூராவை நேரில் இந்த அளவுக்கு கவனித்தது கிடையாது.. அதனால் அவள் மூக்குத்தி போட்டு இருக்கிறாளா.. இல்லை என்று எல்லாம் அவனுக்கு தெரியாது..
டிவி திரையில் அழகாக தெரிவது போல் நேரிலும் இருக்குமா..? என்று சந்தேகம் அவனுக்கு. ம் நாளை நேரில் பார்த்து கொள்ளலாம் என்று அவனுக்கு அவனே சிரித்து கொண்டான்..
அவனின் அந்த சிரிப்பு மறு நாளும் அவன் முகத்தில் தெரிய வருண் கிருஷ்ணா தான்.. “அண்ணா தாத்தா பாட்டிக்கு பதில் நீங்க போறிங்கலா…?” என்று கேட்டவனின் கேள்வி புரியாது..
“என்ன சொல்ற வருண்.” என்று வம்சி கிருஷ்ணா கேட்டான்..
“செந்தூராவை அழைக்க தாத்தா பாட்டி போறாங்க. சேலத்தில் ஒரு வேலை இருக்கு நானே கூட்டிட்டு வரேன் என்று சொல்லிடுங்க.” என்றவன் தலையில் கொட்டிய வம்சி கிருஷ்ணா.”
“போடா அந்த ஜெ.பி அவங்க கொடுத்த செக் பவுன்ஸ் ஆயிடுச்சி.. முதல்ல அது என்ன என்று பாரு.” என்று அவனை அனுப்பி வைத்தாலுமே.
வம்சி கிருஷ்ணா. ‘சேலம் வரை தாத்தா பாட்டி போறாங்கலா. இந்த வயதான காலத்தில் எதுக்கு அலச்சல்.’ என்று நினைத்து தாத்தா பாட்டியின் அறைக்கு சென்ற வம்சி கிருஷ்ணா..
“எதுக்கு தாத்தா அவ்வளவு தூரம் ட்ராவல்.. அதுவும் போன உடனே ரிட்டன் ஆகிடனும்.. கூட நாளை கிருஷ்ண ஜெயந்தி நிறைய பேர் வருவாங்க… நீங்க சும்மா இல்லாம உட்கார்ந்துட்டு பேசுட்டு இருப்பிங்க.. உடம்புக்கு முடியாம போயிடும்.. அதனால சேலத்துக்கு எல்லாம் நீங்க போக தேவையில்லை..” என்று விட்டான் வம்சி கிருஷ்ணா.
உடனே சரஸ்வதி தேவி.. “அப்போ நீ போய் அழச்சிட்டு வர போறியா வம்சி..” என்று ஒரு வித எதிர் பார்ப்போடு கேட்டார்.
“பாட்டி நான் உங்களை போகாதே என்று சொன்னேன்.. அதுக்கு நான் போகனும் என்பது இல்ல. எப்போவும் ட்ரைவர் தானே அழச்சிட்டு வருவார்.. எப்போதும் போல வரட்டும்..” என்று விட்டான்..
இதோ இது தான் வம்சி கிருஷ்ணா. செந்தூராவை திருமண செய்ய உள்ளோம்.. இன்னும் சரியாக கூட அவள் முகத்தை பார்த்தது இல்லையே என்று தான் சதாபிஷேகத்தின் போது எந்த எந்த புகைப்படம் பிரிண்ட் செய்து ஆல்பமாக போட வேண்டும் என்று இவன் தான் அந்த போட்டோ கிராபருக்கு சொன்னது.
அந்த புகைப்படங்கள் எல்லாம் அவன் கை பேசியில் தான் ஒரு போல்டரில் பதிவு செய்து வைத்திருந்தான்.. முகத்தையாவது சரியாக பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து தான் பார்த்தது. பார்த்ததில் பரவாயில்லை நன்றாக தான் இருக்கிறாள் என்றுஅபிப்பிராயம் அவ்வளவு தான்.
இதோ அவன் தன் தொழிலை பார்க்க சென்று விட்டான்.. அண்ணன் வேலையை பார் என்று அனுப்பி வைத்தாலும் போகாது அண்ணன் பின் சென்று அனைத்தும் கேட்ட வருண் கிருஷ்ணா.
ம் அது தானே பார்த்தேன்.. பிசினஸ் செய்து இத்தனை கோடி சம்பாதித்து என்ன பிரயோசனம்.. அதை ஆள ஒரு வாரிசு வேண்டாம்.. அதுக்கு முன் மனைவி வேண்டாம்.. ‘ என்று புலம்ப எப்போதும் போல் வர்ஷா அவன் புலம்பலை கேட்டு சிரித்து விட்டு சென்று விட்டாள்..
இவளுக்கு என்னை பார்த்தா சிரிப்பு தான் வருது போல வேறு எதுவும் வர மாட்டேங்குது,… வருண் கிருஷ்ணா உன் நிலமை ரொம்ப கஷ்டம் போ என்று புலம்பி கொண்டு அண்ணன் சொன்ன வேலையை பார்க்க சென்று விட்டான்..
வம்சி கிருஷ்ணா அவ்வளவு சொல்லிய பின் எப்படி போவது என்று நினைத்த தாரகராம் பேத்திக்கு பேசியில் அழைத்து.. வம்சி கிருஷ்ணா சொன்னதை சொல்லி விட்டு.
“நீ ட்ரைவரோடு வந்துடும்மா.. பத்திரம் ” என்று விட்டார்..
அதற்க்கு செந்தூரா.. “பரவாயில்லை தாத்தா. நான் எப்போதும் அப்படி தானே வந்துடுவேன்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்று சொன்ன செந்தூரா.. அதை உடனே தன் தம்பிக்கு அழைத்தும் விசயத்தை சொல்லி விட்டாள்..
தாத்தா சொல்லியதை சொன்னதோடு.. “எனக்கும் இப்போ தான் கொஞ்சம் ப்ரீயா இருக்கு தேவ்..” என்றும் சொல்ல..
“எதுக்கு அக்கா அப்படி சொல்ற..?” என்று சசிதேவ் கேட்டதற்க்கு..
“இல்ல அந்த வீட்டில் பார்த்தா நல்லா இருக்கோம் என்ற பேச்சை தவிர, நாம தாத்தா பாட்டி கிட்ட அதிகம் எல்லாம் பேசுனது கிடையாது.. அதிகம் பேசாதவங்க கூட அவ்வளவு நேரம் காரில் ட்ராவல் பண்ணுவது எல்லாம் அந்த அளவுக்கு கம்பர்டபுளா இருக்குமா..?.” என்று விட்டாள்..
பின் எப்போதும் போல் அன்று செந்தூரா சேலத்தில் இருந்தும்.. சசிதேவ் கோயம்பத்தூரில் இருந்தும்.. சென்னையில் இருந்த அந்த வெள்ளை பங்களாவுக்கு வந்து சேர்ந்தனர்.
ஆனால் அன்று அவர்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு எப்போதும் போல் இல்லாது.. அவர்கள் வீட்டிற்க்குள் செல்லும் போது வீட்டவர்களை யாராவது ஒருவரையோ. இல்லை இருவரையோ தான் பார்ப்பார்கள்..