எப்போதும் இங்கு வந்தால் செந்தூரா தன் தம்பியுடன் மட்டுமே தான் நேரம் செலவிடுவாள்.. ஆனால் இன்று அது முடியாது போனதில் வருத்தம் தான்.. ஆனால் இனி தம்பியுடன் தானே இருக்க போகிறேன் என்று தன்னை தேற்றிக் கொண்டதோடு, சசிதேவ் தான் நின்று கொண்டு இருந்த இடம் தேடி வந்து..
“என்ன அக்கா..” என்று ஒரு மாதிரி முகம் வைத்து கேட்ட போது..
அவனிடமும் செந்தூரா.. “அடுத்த மாதத்தில் இருந்து இனி ஒன்னா தானே .. இருக்க போறோம்.. என்ன தான் இவங்க நம்மை பிரித்து வளர்த்தாங்க என்று குறைப்பட்டு கொண்டாலுமே, நமக்கு ஒரு நல்ல படிப்பை கொடுத்து இருக்காங்க தேவ்.. அதை நாம எப்போதும் மறக்க கூடாது..
சொல்லலாம் தேவ் பேச்சுக்கு அனாதை விடுதியில் கூட ஒன்னா இருந்து இருக்கலாம் என்று..ஆனா பிராக்டிக்கலா நினச்சி பாரு.. நீ வளர்ந்துட்ட தேவ். உனக்கும் ஒரு சிலது தெரியும்.. அது போல இடத்தில் கூட பாதுகாப்பு இல்ல. நான் என்ன சொல்ல வரேன் என்று உனக்கு புரியும்..” என்ற அக்காவின் பேச்சை ஏற்று கொண்டான் தான்..
சசிதேவ் பத்தாம் வகுப்பு முடிந்த பின் “அடுத்து என்ன படிக்க ஆசை என்று கேட்டு தான் தாத்தா அதற்க்கு ஏற்றது போல் நீட் கோச்சிங் எடுக்கும் பள்ளியாக பார்த்து பதினோரம் வகுப்பு சேர்த்தார்.. இந்த படிப்பு அநாதை விடுதி கொடுத்து விடாது தான். இருந்தும் அவன் மனது என் அம்மா என்ன தப்பு செய்தாங்க. காதல் என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்பது தான்.
அதை கேட்டாலும் செந்தூரா. “நம் கண்ணுக்கு வெள்ளை கருப்பு என்று இரண்டு நிறம் தான் தெரியும் தேவ்.. ஆனால் இதற்க்கு நடுவில் ஏகப்பட்ட நிறம் இருக்கிறது.. அது நம் கண்ணுக்கு புலப்படுவது இல்லை..” என்று.
அதனால் ஒரு மாதிரி முகத்தை வைத்து கொண்டு தான் தேவ் மீண்டும் வருண் பக்கத்தில் வந்தவர்களை வரவேற்க்க நின்று கொண்டான்..
வருண் கிருஷ்ணா தேவ் செந்தூராவிடம் பேசி விட்டு வந்ததையும் பார்த்தான்.. அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்பதையும் புரிந்து கொண்டான்..
அதனால் முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு நின்றவனிடம்.. “இப்படி வெல்கம் பண்ணினா வரவங்க உள்ளே வர மாட்டாங்கடா.. அப்படியே வெளியில் ஒடி போயிடுவாங்க. முகத்தை கொஞ்சம் சிரித்தா மாதிரி வை டா..” என்று சொன்னவனிடம்..முறைத்த தேவ்..
“ஆமா அப்படி போயிட்டா. உங்க பிசினஸில் ஒரு சிலதும் போயிடுமே.. கடவுளை காட்டி.. இதற்க்கு மட்டுமா வராங்க..” என்று வருண் பேச்சுக்கு நக்கலாக கேட்டான்..
“அட நம்ம தேவ்வுக்கு கோபத்தை பாரேன்..” என்று சொன்னவன்..
“பின் ஆமா இது போல இடத்தில் நாம பிசினஸையும் முடித்து கொள்கிறோம் தான்.. ஆனா இதுல என்ன தம்பி தப்பு இருக்கு..? அந்த பிசினஸ் கொடுக்கும் வசதியில் எல்லாம் அனுபவிப்பது தப்பு இல்லேன்னா.” வீட்டின் உள் ஒரு சிலர் பிசினஸ் பேசி கொண்டு இருப்பவர்களை சுட்டி காட்டி.
“இதுவும் தப்பு இல்ல தான்..” வருண் கிருஷ்ணாவும் ஒரு மாதிரி குரலில் தான் சசிதேவ்வுக்கு பதில் கொடுத்தான்..
“நாங்க ஒன்னும் வசதியை அனுபவிக்கல.” என்ற இந்த பேச்சு,, சசிதேவ்வின் முன் பேச்சை விட குரல் குறைந்து விட. “உனக்கே புரியுது ராசா. நீ படித்த ஸ்கூல் ஹாஸ்ட்டல் என்ன தரம். அதுக்கு பீஸ் எவ்வளவு.. நீட் கோச்சிங் என்று அதுக்கு தனியா எவ்வளவு பீஸ்.. இப்போ நீ படித்து கொண்டு இருக்கும் கல்லூரியின் தரம்.. இதுல நான் உனக்கு சொல்ல தேவையில்லை.. உன் அக்காவுடையதையும் சேர்த்து கணக்கு போடு ராசா..” என்று விட்டான்..
வருண் கிருஷ்ணாவின் இந்த பேச்சில் சசிதேவ் அமைதியாகி விட. வருண் கிருஷ்ணாவுக்குமே ஒரு மாதிரியாகி விட்டது.. சின்ன பையன் அவன் கிட்ட போய் என்று நினைத்து கொண்டவன்..
“சரி முகத்தை இப்படி வைத்து கொள்ளாதே. புரியுதா.. சிரி..” என்று பேச்சை சாதாரணமாக்க தான் வருண் முயன்றான்.. ஆனால் சசிதேவும் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டுமே..
“ஆமா ஆமா சிரித்து வர வழைத்து பிசினஸ் பண்ணா தான் நான் படிக்க பீஸ் கட்ட முடியும்..” என்று எரிச்சல் குரலில் பேசியவனிடம்..
“ஏன்டா நாங்க எல்லாம் முழு வில்லன் போலவும்.. நீயும் உன் அக்காவும் பாவம் பட்ட ஜீவன் போலவும்.. ரொம்ப தான் பண்றிங்கடா..” என்று பேசியவனிடம்..
“அப்போ நீங்க எல்லாம் வில்லன் கிடையாதா.?” என்று இப்போது கேட்ட சசிதேவ் குரலில் அவ்வளவு எகத்தாளம் காணப்பட்டது.
“நாங்க வில்லனோ இல்லையோ. ஆனா இப்போ தெரியுதுடா நீங்க பாவப்பட்டவங்க கிடையாது என்று..” முதலில் கோபம்.. பின் கிண்டல்.. என்று ஆரம்பித்த இவர்களின் பேச்சு பின் கொஞ்சம் சகஜமாக சென்றது.
செந்தூரா அங்கு இருந்தே தன் தம்பியின் செயல்களை கவனித்து கொண்டு தான் இருந்தாள்.. அதை தேவ் கவனித்தானோ இல்லையோ வருண் கவனித்து..
“உங்க அக்கா அங்கு இருந்தாலும் பார்வை எல்லாம் இங்கு தான்டா இருக்குது..” என்று சொல்லியவனிடம்..
“பேச்சுக்கு கூட என் அக்காவை கிண்டல் செய்ய கூடாது.. அது எனக்கு பிடிக்காது..” என்று இவ்வளவு நேரம் இருந்த இலகு பேச்சு மறைய சட்டென்று சொல்லி விட்டான்..
அதற்க்கு வருண் கிருஷ்ணாவும்.. “எனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு டா. உனக்கு அக்கா என்றால் எனக்கு அத்தை மகள் டா… அவளை கேலி கிண்டல் எல்லாம் செய்யும் உரிமை எனக்கு இருக்கு..” என்று விட்டான்..
அதற்க்கு சசி தேவ் பதிலுக்கு என்ன சொல்லி இருப்பானோ.. அதற்க்குள் அங்கு வந்த வம்சி கிருஷ்ணா.
“என்ன இது வர வழியில்.. எல்லோரும் வரும் போது இது போல சின்ன பசங்க போல சண்டை போடுவது..” என்று கடிந்து கொண்டான்..
அதற்க்கு சசிதேவ் அசல் சின்ன பிள்ளை போல் தான்.. “இவர் தான் என் அக்காவை கிண்டல் செய்யிறார்.” என்று போட்டு கொடுத்து விட்டான்..
அதற்க்கு வருண் கிருஷ்ணாவுக்கு வம்சி கிருஷ்ணாவிடம் இருந்து முறைப்பு பலமாக கிடைக்க.
“இல்ல விளையாட்டா தான்..” என்று இழுத்து நிறுத்தியவனிடம்..
“மத்தவங்க கிண்டல் செய்தா நாம கண்டிக்கனும்.. நீயே நம்ம வீட்டு பெண்ணை கிண்டல் செய்வாயா..” என்று திட்டியவன்..
“வேலையை ஒழுங்கா பாருங்க..” என்றும் சொல்லி சென்றான்..
வம்சி கிருஷ்ணா அந்த இடத்தை விட்டு சென்ற உடன் சசிதேவ்.. “ உங்களோட அவரே மேல்..” என்று கூற..
“இன்னும் கொஞ்ச நாள் போனா யாரோடு யார் மேல் என்று தெரியும் ராசா.. தெரிந்து விடும்..” என்று வருண் கிருஷ்ணா சொன்னது பாவம் அப்போது சசிதேவ்வுக்கு புரியவில்லை..
புரிந்தது விழா முடிந்து.. வந்தவர்கள் அனைவரும் சென்ற பின் வீட்டு ஆட்கள் மட்டும் இருந்த போது முன் என்றால் செந்தூரா சசிதேவ்வோடு தங்கள் அறைக்குள் சென்று விடுவாள்..
ஆனால் இப்போது தான் புதியதாக தன்னை வீட்டு ஆட்களாய் நடத்துகிறார்களே என்று நினைத்து அவர்கள் சாப்பிட்ட பின் கூட.
செந்தூராவையும் சசிதேவ்வையும்.. “ரூமுக்கு போகாததிங்க உங்க கிட்ட பேசனும்..” என்று இப்படி அவர்களிடம் சொன்னது அவர்களின் பெரிய தாய் மாமன் கிருஷ்ண மூர்த்தி.. அதுவும் அந்த சமயம் அனைவரும் அங்கு இருக்க.. முக்கியமான விசயம் தான் என்பது செந்தூராவுக்கும் சசிதேவ்வுக்கும் தெரிந்தது..
அதுவும் தாத்தா “உட்கார்” என்று சொல்லி தாத்தாவுக்கும் பாட்டிக்கும் இடையில் அமர வைத்ததும்.. என்ன என்று தெரியாது அனைவரையும் பார்த்தவள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த தன் தம்பியையும் பார்த்தாள்..
பின் என்ன சொல்லி விடுவார்கள் என்ற தைரியத்தில் அவர்களை பார்த்தாள்.
தாரகராம் தான்.. “உனக்கு மேரஜ் செய்து வைக்கனும் என்று நாங்க முடிவு பண்ணி இருக்கோம் செந்தூரா..” என்று சுற்றி வளைக்காது பேச்சை ஆரம்பித்து விட்டார்..
செந்தூராவும் சரி சசிதேவ்வும் சரி.. இது போல இருக்கும் என்று நினைக்கவில்லை..
அதுவும் செந்தூரா தன் திருமணத்தை பற்றி இது வரை நினைத்து பார்த்தது இல்லை.. அவள் நினைத்தது எல்லாம் தம்பி இருக்கும் இடத்தில் ஒரு வேலை வேண்டும்.. இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும்.. அவ்வளவே.. இது என்ன புது குழப்பம் என்று பார்த்தவள்..
இவள் முகத்தையே ஆர்வமுடன் பார்த்து கொண்டு இருந்த வர்ஷாவை காட்டி.. “என்னோடு இவங்க பெரியவங்க. இவங்களுக்கு செய்யாது எனக்கு எப்படி..?” என்று கேட்டாள்…
இந்த பேச்சுக்கள் நடந்து கொண்டு இருக்கும் போது வம்சி கிருஷ்ணாவும் அங்கு தான் இருந்தான்.. எப்போதும் போல் செல்லில் தன் தலையை புகுத்தி கொண்டவனாக.
செந்தூராவின் இந்த கேள்விக்கு. பத்மினி. “என்ன செய்யிறது.. என் துரதிஷ்ட்டம் என் மகளுக்கும் பிடிச்சி இருக்கு போல.. இல்லேன்னா ஜாத.” என்று ஏதோ கூறும் போதே தாரகராம்.
“பத்து அமைதியா இரு என்றால் இங்கு இரு.இல்லேன்னா உன் ரூமுக்கு போய் விடு..” என்று கொஞ்சம் கத்தவும்..
“நா..ன் இரு..பத..” என்று ஆரம்பித்த பேச்சு தன் பெரிய அண்ணன் பார்த்து முறைத்த முறைப்பில் அடங்கியது..
இப்போது கோசலை தான்.. “அவளுக்கு தான் ஜாதகம் பொருத்தம் பார்த்தோம்.. ஆனா பொருந்தல.. உன் ஜாதகத்தோடு தான் பொருந்தி இருக்கு..” என்று சொல்லவும் செந்தூராவுக்கு புரிந்தும் புரியாத பாவனை.. அதிர்வுடன் தம்பியை பார்த்தாள்.. சசிதேவ்வின் முகத்திலும் அதே அதிர்வலைகள் தான்..
இவங்க என்ன சொல்றாங்க என்று யோசிக்கும் போதே. தாரகராம்.. “வம்சிக்கு வர்ஷாவை தான் பார்த்தோம்.. ஆனா பொருந்தல.. ஏன் கோசலை அண்ணன் பெண்ணுக்கு கூட பார்த்தோம் செந்தூரா. அதுவும் வம்சிக்கு கட்ட கூடாது என்று சொல்லிட்டாங்க. உன் ஜாதகத்தோடு மட்டும் தான் பொருந்தியது..” என்று அந்த சாபம் எல்லாம் சொல்லாது.. இதை மட்டுமே சொன்னார்..
செந்தூராவுக்கு இதில் விருப்பம் இல்லை.. சொல்ல வேண்டும்.. ஆனால் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அனைவரும் தன்னை விட வயதில் மூத்தவர்கள்.
தன் தம்பியிடம் சொன்னது போல்.. தங்களை அப்படியே விடாது பாதுகாப்பு கொடுத்து படிக்க வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்க்காக கூட எப்படி.. ? மனது புண் படாது எப்படி சொல்வது..?
தாய் தந்தை இல்லாத தங்களின் நிலை இப்போது மிக பெரியதாக தெரிந்தது.. அவர்கள் இருந்தால் அவர்களிடம் தன் மறுப்பை சொல்லி இருக்கலாமே.. முதலில் இவர்கள் தன்னிடம் கேட்டு இருக்க மாட்டார்களே. அம்மாவிடம் தானே பேச்சு ஆரம்பித்து இருக்கும்.. என்று மனதில் தத்தளித்து கொன்டு இருக்கும் போது, அவளையும் மீறி கண்கள் குளமாக, இதை எதிரில் இருந்து சசிதேவ் மட்டும் கவனிக்கவில்லை..
தாத்தாவும் அம்மாவும் கேட்டு செந்தூரா இவ்வளவு நேரம் எதுவும் சொல்லாது இருந்ததில் வம்சி கிருஷ்ணா செல்லில் இருந்து தலையை நிமிர்த்தி அவளை பார்த்த போது அவளின் கலங்கிய கண்களே அவன் கண்ணுக்கு தெரிந்தது..
வம்சி கிருஷ்ணா இந்த பேச்சை விடுங்க என்பதற்க்குள் சசிதேவ்..
“அக்காவுக்கு கோயம்பத்தூரில் வேலை கிடைத்து இருக்கு.. அங்கு வேலைக்கு ஜாயின் பண்ணிட்டு தனியா வீடு எடுத்துட்டு நாங்க இரண்டு பேரும் ஒன்னா தங்கலாம் என்று இருக்கோம்..” என்று அறிவுப்பு போல சொன்ன இந்த பேச்சில் தாரகராமுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டது.
“இவ்வளவு தூரம் வளர்ந்து ஆளாக்கி விட்டவங்க கிட்ட.. இப்படி தான் எல்லாம் முடிவு செய்து சொல்வீங்கலா…முடிவு செய்யும் முன் பெரியவங்க கிட்ட என்ன ஏது என்று கேட்க மாட்டிங்கலா..?” என்று கோபத்துடன் கேட்டார்..
வம்சி கிருஷ்ணா செந்தூராவோடான இந்த திருமணத்தை விட இப்போது சசிதேவ் சொன்ன விசயம் அவருக்கு பெரியதாக தோன்றியது.. சின்ன பசங்க இவங்க முடிவு பண்ணி என் கிட்ட சொல்வாங்கலாமா.. என்ற கோபம் அவருக்கு.
இது வரை தந்தை திட்ட போகிறார் என்று அமைதியாக இருந்த பத்மினி.
“அது தான் சொன்னனே.. அவள் அம்மா போல தான் என்று.. அவளுக்கும் அவ்வளவு பெரிய வாழ்வு காத்துட்டு இருக்கும் போது நம்ம கிட்ட வேலை பார்த்தவனை இழுத்துட்டு ஒடினா. இவளும் இந்த வீட்டுக்கு மருமகளா வர அவ்வளவு பெரிய பாக்கியம்.. அதை வேண்டாம் என்று சொல்லிட்டு வேலைக்கு போறேன் என்று சொல்றா. சொல்ல முடியாது அங்கேயே கூலி வேலை பார்ப்பவனை இவள் கல்யாணம் கூட செய்து கொள்ளலாம்..” என்று விசமாக பேசினார்.
சரஸ்வதி தான்.. “சும்மா இருக்க மாட்ட.” என்று அதட்டினார்.
கோசலை ஏதும் சொல்ல வரும் முன் வம்சி கிருஷ்ணா.
“இனி என் மேரஜ் பத்தி இங்கு பேச வேண்டாம்.. செந்தூரா வேலை அது சம்மந்தப்பட்டதா மட்டும் தான் பேச்சு இருக்க வேண்டும்.” என்று சொல்லி விட்டு செந்தூராவை முறைத்து பார்த்தவன் மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்று விட்டான்..
கோசலையும்.. “என் மகனுக்கு என்ன குறை..? என் மகனுக்கு வெளியில் பெண் பார்க்கிறேன் என்று சொன்னா போதும்.. பெண்கள் வரன் தேடி வரும்.. அந்த ஜோசியர் வம்சிக்கு சொந்தத்தில் தான் முடியும் என்று சொன்னதினால் தான் யாரின் ஜாதகமும் பொறுந்தவில்லையே என்று உன்னுடையதை எடுத்து பார்த்தது.. இல்லை என்றால் உன்னுடையதை யார் பார்ப்பா..?” என்று விட்டு அவருமே சென்று விட்டார்.
பின் கிருஷ்ண மூர்த்தி தான். “வேலைக்கு போற உன் முடிவு உன் வரை சரி என்றாலும்.. எங்க கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டு இருக்கனும் தானே. சரி எங்கு வேலை பார்க்கிற சொல்.. நான் கொஞ்சம் விசாரிக்கனும்.. நீ என்னை கேட்காம போனாலும் நான் உங்களை அப்படியே விட முடியாது பார்..” என்று சொல்லி விட்டு அவரும் சென்று விட..
செந்தூராவும் சசிதேவ்வும் பாவம் போல் அங்கு அமர்ந்து இருந்தார்கள். இவர்களின் அந்த பேச்சில் நாம் தான் தப்பு செய்து விட்டமோ.. என்ற எண்ணம் அவர்கள் இருவரின் மனதில் எழுந்தன.
செந்தூரா.. “தாத்தா.’ என்று ஆரம்பிக்கும் போதே.
“நான் ஏதேதோ நினச்சி கனவு கண்டுட்டேன் மா.. கேட்டு இருக்கனும்.. வம்சியோட உன் கல்யாணத்தை உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கனும். இப்போ என் மூத்த மருமகள் சொன்னாளே என் மகனுக்கு என்ன குறை என்று.. அதே தான் நானும் நினைத்தேன்.. ஆனா வம்சியை நீ கல்யாணம் பண்ணா நீ நல்லா இருப்ப அது எனக்கு தெரியும்.. ஆனாலும் யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.. வேலைக்கு போகும் இடத்தில் பார்த்து நடந்துக்கோங்க.
கோயம்பத்தூரில் தனியா எல்லா வீடு எடுக்க வேண்டாம்.. அங்கு நம்ம வீடு இருக்கு அங்கேயே தங்கிக்கோங்க.
இப்போ முதல்ல வர்ஷா வம்சி அப்புறம் உனக்கு. என் காலத்துக்குள்ள உனக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று நானும் உன் பாட்டியும் நினைத்தோம்.. ஆனா பாரு என்ன நடக்கனுமோ. அது தான் நடக்கும்.” என்று சொன்ன போது..
சரஸ்வதி தேவி.. அவள் கிட்ட சொன்னா கேட்டுக்க போறா. சின்ன பெண் தானே..” என்று செந்தூராவின் பாட்டி பேரனுக்கு செந்தூராவை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற எண்ணம்.
தாரகராம் தான்.. “யாரையும் கட்டாயப்படுத்த முடியாது சரசு.” என்று விட்டார்..