வம்சி கிருஷ்ணா கீழே அப்படி பேசி விட்டு வந்து விட்டாலுமே, தன் அறைக்கு வந்தவனால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.. ஏதோ ஒரு விதம் எரிச்சல்.. கோபம்.. ஆற்றாமை.. அங்கும் இங்கும் தன் அறையில் நடந்து கொண்டு இருந்தவன் தன் அறையின் பால்கனிக்கு பின் படிக்கட்டில் ஏறி சென்று மாடி தோட்டத்தை அடைந்தான்.. அங்கு ஒரு ச சின்னதாக ஒரு மாடித்தோட்டம் இருந்தது…
அந்த மாடித்தோட்டம் அவனுக்கு மட்டுமானது.. அவன் அறையில் இருந்து மட்டும் தான் இந்த மாடி தோட்டத்திற்க்கு வர முடியும்..
தொழில் பிரச்சனை யோசிக்கவோ.. இல்லை ஏதாவது டென்ஷனுடம் இருந்தாலோ வம்சி இங்கு தான் வருவான்.. இன்றும் அவன் கால்கள் அவனை இங்கு அழைத்து வந்து விட்டது..
சிறிது நேரம் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து இயற்க்கை காற்றை சுவாசித்து.. கண்ணுக்கு குளிச்சியாக அங்கு பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை பார்த்தால், எப்போதும் அவன் மனது அமைதி அடைந்து விடும்..
ஆனால் இன்றும் அந்த அமைதி ஏனோ அரை மணி நேரம் அமர்ந்த பின்னும் வம்சி கிருஷ்ணாவுக்கு கிட்ட வில்லை.. இது வரை வீட்டில் அவன் ஸ்மோக் செய்தது இல்லை.. இன்று அதையும் செய்தான்.. இருந்தும் ஒரு வித எரிச்சல் மனதில்..
பின் கண் மூடி சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மனது அவனுக்கு எடுத்து உரைத்தது.. ஒரு வாரம் ஜஸ்ட் ஒன் வீக் தான்டா.. செந்தூராவை மேரஜ் செய்ய போவதாக வீட்டில் பேசியது.. அதுக்கு நீ இப்படி டென்ஷனை மனசுல ஏத்துப்பியா.? விடு.. என்று அவனுக்கு அவனோ சொல்லி கொண்ட பின் ஏனோ மனது சிறிது அமைதி கொண்டது.
பாவம் அந்த அவனின் அந்த அமைதி சிறிது நாள் தான் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை. அதே போல் ஒரு வாரம் முன் தான் அவளை உனக்கு திருமணம் செய்வது பற்றி பேசியது பற்றி அவன் மனதுக்கு சொல்லி கொண்டவனுக்கு தெரியவில்லை..
வருட கணக்காக வர்ஷாவை தான் அவனுக்கு திருமணம் செய்ய இருந்தது.. ஜாதகத்தை காட்டி அவள் இல்லை எனும் போது இது போல் அவன் இல்லை என்பதும்.. இது தெரியாது..
தன் அறைக்கு சென்றதும் வழக்கமான வேலை செய்து வந்த பேசியை ஏற்று பேசி.. என்று அவன் நிலைக்கு திரும்பி விட்டான்..
செந்தூராவும் தங்கள் அறைக்கு வந்ததுமே தன் தம்பி சசி தேவ்விடம்..
“நான் தப்பு செய்து விட்டேனா.. தேவ்..?” என்று கேட்டால்..
“மேரஜ் உன் சொந்த விருப்பம் அக்கா.. படிக்க வைத்தாங்க. அடைக்கலம்.. கொடுத்தாங்க என்று எல்லாம் மேரஜ் செய்துக்க முடியாது..” என்ற சசிதேவ் பேச்சில்..
செந்தூரா.” ம் நான் அதை கேட்கல தேவ்.. கோயம்பத்தூர் வேலை நாம அங்கு வீடு எடுப்பது பற்றி.” எனும் போது சசிதேவ்வும்.
“ஆமாம்கா எனக்கும் அது தான் தோனுது.. நாம முடிவு செய்த விசயம் தப்பு கிடையாது.. இங்கு இருக்குற பெரியவங்க கிட்ட முன்னவே சொல்லி இருக்கனும்.. “ என்று சொன்னவன்..
“ம் இனி கொஞ்சம் யோசித்து செய்யலாம் அக்கா.”
செய்து முடித்த விசயத்தை இனி என்ன செய்ய முடியும்.. இனி பார்த்து கொள்ளலாம் என்று விட்டான்..
எப்போதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் முடிந்தால் அந்த வீடு ஒரு வாரத்திற்க்கு அந்த மகிழ்ச்சி குறையாது இருக்கும்.. ஆனால் அந்த வருடம் மறு நாளே அனைவரின் முகமும் அந்த மகிழ்ச்சி தெரியாது ஒரு வித சங்கடம் மட்டுமே இருந்தது.
செந்தூரா சேலத்திற்க்கும், சசிதேவ் கோயம்பத்தூருக்கும் தன் படிப்பை பார்க்க சென்று விட்டனர்.. செந்தூராவுக்கு தன் படிப்பு முடிய இன்னும் இரண்டு வாரமே இருந்தது..
இப்போது செந்தூராவும் இன்னும் இரண்டு வாரத்தில் கோயம்பத்தூரில் சசிதேவ்வோடு அந்த வீட்டில் தங்க போவதால் கோயம்பத்தூரில் இருக்கும் அந்த வீடு அதற்க்கு ஏற்ற படி தயாராகி இருந்தது..
வம்சி கிருஷ்ணா தங்கள் தொழிலை கவனித்து கொண்டான்.. வருண் கிருஷ்ணா அண்ணனுக்கு உதவியாக இருந்தான்..
வீட்டில் கோசலை தன் மகனுக்கு பெண் தேடுவதை தீவிரப்படுத்தி இருந்தார்.. அதே போல் வர்ஷாவுக்கும் மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தனர்.
பத்மினிக்கு தன் மகளுக்கு வெளியில் பார்ப்பது மனதுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலுமே, மகள் வாழ்க்கையையும் பார்க்க வேண்டுமே என்று அமைதியாக இருந்தார்.. அவருக்கு இருந்த சந்தோஷம்.. வர்ஷாவுக்கு மாப்பிள்ளை பெரிய இடமாக தான் பார்த்து கொண்டு இருந்தனர்..
ஐநூறு சவரன் தங்கம்.. ஐந்து செட் வைர நகைகள்.. பணம் இரண்டு கோடி கொடுத்து. கிராண்டாக திருமணம் செய்து கொடுக்கிறேன் நீ கவலை படாதே.. என்ற தந்தையின் பேச்சில்.
பத்மினி தன் மகளுக்கு பெரிய இடமான மாப்பிள்ளைகளின் போட்டோவை எடுத்து வைத்து பார்த்து கொண்டு இருந்தார்.. கோசலை தன் மகனுக்கு வெளியில் பெண் பார்க்கிறேன் என்றதும் தான் தூர சொந்தம். தொடங்கி… தொழில் முறையில் தெரிந்தவர்கள்.. நட்பு வட்டம் என்று அவ்வளவு இடம் வந்தது தான்..
வம்சி.. “நீங்களே பார்த்து முடிவு செய்ங்க பைனல் எனும் போது என் கிட்ட வந்தா போதும்..”
அவனின் அம்மா.. “இந்த பெண் போட்டோ பாருடா..” என்று கொண்டு வந்து காட்டிய போது சொல்லி விட்டான்.. தாரகாரமும்..
“ஆம்பிளைங்க நாங்க வெளியில் போயிடுவோம்.. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பிடித்தது போல் மருமகள் வந்தால் தான் வீடு நல்லா இருக்கும்.. நீ பாரும்மா .. கூட பல்லவி சாந்தி வைத்து பார்த்து முடிவு செய்துக்க.” என்று தம்பி தம்பிகளின் மனைவிகளை துணை சேர்த்து கொள் என்று விட்டார்..
கோசலை தேவி தன் மகனுக்கு வந்து குவிந்த இடத்தை பார்த்து அவ்வளவு பெருமை..கணவன் சொன்னது போல் தன் ஒரவத்தியோடு தான்..
தன் மகன் அழகுக்கும் படிப்புக்கும்.. தங்கள் அந்தஸ்த்துக்கும் தோதாக இருக்கும் பெண்களளி ஜாதகங்களை தனியே எடுத்து வைத்து கொண்டு தன் ஒரகத்திகளை அழைத்து கொண்டு தான் அவர்கள் எப்போதும் பாக்கும் அந்த ஜோதிடரிடம் தான் சென்றது.
வெளி வரன் என்று சொன்னதுமே அந்த ஜோதிடர் முகத்தில் ஒரு அதிருப்தி தெரிந்தது..
பின் தான் கொண்டு வந்த பெண்களின் ஜாதகத்தை கொடுக்க..
அதில் ஒன்று கூட பொருத்தமே இல்லை என்று சொன்னதோடு.. வம்சி கிருஷ்ணா ஜாதகத்தை காண்பித்து இந்த பையனுக்கு சொந்தத்தில் தான் அமையும்.. கட்டனும்..இல்லேன்னா இந்த வரனுக்கு திருமண யோகமும் இல்லை.. உங்கள் வீட்டில் அடுத்து ஒரு சுபநிகழ்ச்சி நடை பெறாது என்று தீர்த்து சொல்லி விட்டார்..
மகிழ்ச்சியோடு சென்ற கோசலையும் அவரின் ஒரகத்தியும் மனதில் கலத்தோடு வீடு வந்தனர்.. கோசலைக்கு தன் மகன் திருமணம் நினைத்து கவலை என்றால் அவளின் ஒரகத்திகளுக்கோ.. அடுத்து வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறாது என்றதில் கலக்கம்..
அந்த வீட்டின் இரண்டாம் மருமகள் பல்லவிக்கு பிள்ளை பாக்கியம் இல்லை.. ஆனாலுமே.. தனக்கு குழந்தை இல்லை என்றாலும் தன் மூத்தார் ,மச்சினர் குழந்தை மீது அவருக்கு பாசம் இருந்தது.. அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டுமே என்று கவலை பட்டார்.
கடைசி மருமகள் தன் மகன் வருண் கிருஷ்ணா இருக்கிறானே.. இவர்களுக்கு எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக திருமணம் முடிந்தால் தானே.. தன் மகனுக்கு திருமண வயது வரும் போது சரியாக இருக்கும் என்ற கவலை அவருக்கு.
இதன் நடுவில் செந்தூரா தன் படிப்பை முடித்து விட்டு கோயம்பத்தூரில் தான் செலக்ட் ஆன அந்த கம்பெனியில் சேர்ந்து கொண்டதோடு.. அந்த கோயம்பத்தூரில் வீட்டிலேயே தங்கி கொண்டனர். சசிதேவ்வும் விடுதியை விட்டு வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டான்..
அந்த வாழ்வு அவர்களுக்கு புதியது.. தங்களுக்கு என்று ஒரு வீடு.. தங்கள் வீடு இல்லை என்றாலும், இப்போதைக்கு தங்களுடையது என்ற எண்ணம்.. அலுவலகம் செல்லும் போது டிபன் பாக்ஸில் உணவு எடுத்து கொண்டு செல்வது.. முன் இது போல் எடுத்து கொண்டு பள்ளி சென்றது செந்தூராவுக்கு கனவு போல் நினைவுக்கு வந்தது.
பாவம் சசிதேவ்வுக்கு அந்த கனவு நினைவு கூட இல்லை எனலாம்… எப்போதும் ஒரே வீடு என்பதால் இப்போது தங்கள் படுக்கையை பிரித்து கொண்டனர்.. அதே போல் முன் போல் எந்த நேரமும் கை கோர்த்து எல்லாம் திரிவது இல்லை..
எப்போதும் எப்போதாவது என்றால் தான் ஒன்றாக இருக்க தோன்றும். இப்போது ஒரே வீட்டில் இருப்பதால் அது போல் தோன்றவில்லையோ என்னவோ..
ஆனால் சமைக்கவே தெரியாத செந்தூரா தன் அலுவலக விடுமுறை நாளான சனி ஞாயிறு.. அன்று அங்கு சமையல் செய்யும் பெண்மணியிடம்..
“இன்று நாங்கள் செய்கிறோம்.” என்று சொல்லி அக்காவும் தம்பியும் யுடியூப் உதவியோடு முதலில் சுமாராக சமைக்க ஆரம்பித்த, உணவு இப்போது பரவாயில்லையே அவர்களே சொல்லி கொள்ளும் அளவுக்கு நன்றாக தேறி இருந்தனர்.
கோயம்பத்தூரில் செந்தூரா சசிதேவ் வாழ்க்கை மிக நன்றாக மகிழ்ச்சியோடு சென்று கொண்டு இருந்தது..
ஆனால் சென்னையில்.. அதாவது வம்சி கிருஷ்ணாவுக்கு பெண் அமையவில்லை.. பெண் பிடிக்கவில்லை.. அந்தஸ்த்து இல்லை.. ஏன் அழகு படிப்பு இல்லை என்று குறை இருந்தால், ஏதாவது அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்..
ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல் முதல் அடி எந்த ஜாதமும் வம்சிக்கு பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது..? அதுவும் இந்த ஜோதிடர் இல்லாது வேறு ஒருவரிடமும் காண்பித்து விட்டாகி விட்டது..
வம்சி கிருஷ்ணா ஜாதகத்திற்க்கு சேராத ஜாதகத்தில் திருமணம் செய்து வைத்தால் அந்த பெண்ணுக்கு மாங்கல்யம் நிற்காது எனும் போது அடுத்து யோசிப்பார்களா..
சரி வம்சி கிருஷ்ணாவுக்கு தான் இப்படி என்றால் வர்ஷாவுக்கும் சரி வர அமையவில்லை.. இத்தனை சவரன் நகை வைரம் கோடி வரதட்சணை கொடுக்கும் போதும்.. அவளுக்கு ஜாதகம் எல்லாம் பொருந்தி விட்டது ஆனால் ஒன்று போல் வந்தவர்கள் எல்லாம் சொன்ன ஒரே விசயம்..
இந்த வீட்டு பையனுக்கு தான் இந்த பெண்ணை கொடுப்பதாக இருந்தது. இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்து இருக்கிறாங்க. இப்போ அசல்ல பார்க்கிறது எப்படி…? என்பது தான்..
வம்சிக்கும் வர்ஷாவுக்கு திருமணம் அமையவில்லை என்றாலும்.. மீண்டும் இருவருக்கும் முடிச்சு போட இப்போது பயம்.. ஏன் பத்மினியே இப்போது அந்த ஜாதகத்தை முழுமையாக நம்பி விட்டார்..
அதுவும் தாரகராம் சொன்ன தன் திருமணத்தின் போதே அந்த ஜோதிடர் சொன்ன விசயத்தை கேட்டதில் இருந்து.. தான் வாழாத அந்த தீர்க்க சுமங்கலி வாழ்க்கையை தன் மகள் வாழ வேண்டும் என்று.. வம்சியோடு தன் மகள் திருமண பேச்சே எடுக்கவில்லை.. அவர் கவலை எல்லாம் தன் மகளுக்கு வயது கூடுகிறதே.
நாமே அம்மா வீட்டில் ஒன்றிக் கொண்டு இருக்கிறோம்.. முன்னாவது நம் மகள் இங்கு தான் வாழ போகிறாள் என்று நிம்மதியாக இருந்தோம்.. இப்போது வேறு ஒரு பெண் எனும் போது .. அந்த பெண் வரும் முன் நம் பெண்ணுக்கு சீரும் சிறப்புமாக திருமணத்தை முடித்து அனுப்பி விட வேண்டும்.. வந்த பெண் பிடித்து வைத்து கொள்ள நினைத்தால், இப்படி பலதும் நினைத்து கொண்டு இருக்க.. ஆனால் தன் மகளுக்கு இன்னும் ஒரு நல்ல இடமாக அமைய காணுமே என்ற கவலை அவருக்கு..
இப்படியான சூழ்நிலையில் தான் ஒரு மகிழ்ச்சியான தவறு தவறு இரண்டு மகிழ்ச்சியான செய்து அவர்கள் வீடு தேடி வந்தது..அது வம்சி கிருஷ்ணா தங்கை விந்தியா குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று.. அடுத்த இரண்டு நாள் சென்று அமெரிக்காவில் இருந்து ஸ்வேதா குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று..
வெள்ளி பங்களாவில் இருப்பவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.. கோசலைக்கும் மகிழ்ச்சி தான்.. ஆனால் ஏதோ ஒரு பயம் அவர் மனதில் வந்து ஒட்டி கொண்டது..