?பூவிழியில் ஏற்றி
வைத்த தீபம் இது
புயல் காற்று
அடித்தாலும் அணையாதது
புன்னகையில் போட்டு
வைத்த கோலம் இது
மழை மேகம்
பொழிந்தாலும் அழியாதது
நாயகன் ஆடிடும்
நாடகம் தான்
யாருக்கு யார் என்று
எழுதி வைத்தார்
நடக்கட்டும் திருமணம்
நல்ல படி
துடிப்பதும் ஒரு முறையே…?
இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்ய தொடங்கியிருந்தனர்.
ஒரே மேடையில் இரு திருமணங்களும் வைத்துக் கொள்ளலாம் என்று இரு நண்பர்களும் முடிவெடுக்க பெண்கள் எதுவும் கூறாமல் அமைதி காத்து வந்தனர்..
பத்து நாட்களில் திருமணம் என்னும் வேக வேகமாக வேலைகள் எல்லாம் நடக்க தொடங்கியது. இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் வெங்கடேஷ் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய தொடங்கினான்..
” நந்தினியும் சூர்யாவும் ஒரே இடத்துல இருக்க வேணாம் .அது நம்மளோட வழக்கம் இல்ல ” என்று கங்கா சொல்ல
“அதுக்கு இப்போ அவள எங்க அனுப்புறது இது அவளோட வீடு . நம்ம வேணும்னா சூர்யாவ உங்க அக்கா வீட்ல இருக்க சொல்லலாம் ” என்று சிவசங்கரன் கூற
“அது எப்படிங்க என் பையன் போய் அங்க இருப்பான் .இது அவனோட வீடு அவன் இங்க தான் இருப்பான் ” என்று அழுத்தி கூற சிவசங்கரனோ “எது இது அவனோட வீடா ” என்று கேட்டு அழுத்தமாக பார்வையை பதிக்க..
அதை பார்த்த மஹாலிங்கம் ” எதுக்கு இப்படி புருஷனும் பொண்டாட்டியும் சண்ட போட்டுட்டு இருக்கீங்க ” என்று கேட்ட படி வர..
“அண்ணா நீங்களே கேளுங்க ணா கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணும் பையனும் ஒரே வீட்டுல இருக்க கூடாது .அதான் நந்தினிய வேற எங்கேயாவது தங்க வைக்க சொல்லி கேட்டுட்டு இருக்கேன் அண்ணா ” என்று சொல்ல
அதை கேட்டவர் ” இதுக்கு எதுக்கு மா நந்தினிய வேற எங்கேயாவது அனுப்பனும் நான் அவள என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் . உதய் இங்க இருக்கட்டும் அவனும் மாப்பிள்ள தான அங்க சுமி இருக்கும் போது இங்க உதய் இருக்கட்டும். இரண்டு மாப்பிள்ளைகள் இங்கேயும் மணப்பெண்கள் இருவரும் என்கூடயும் இருக்கட்டும் ” என்று மஹாலிங்கம் சொல்ல..
சிவசங்கரன் மனதிலோ ” சொந்த இரத்ததோட வேலை டா இது எல்லாம் ” என்று நினைத்தவர் ” சரி டா நந்தினி உங்க கூடவே இருக்கட்டும் ” என்றார்..
இதனை கேட்ட கங்காவிற்கு நிம்மதியாக இருந்தது ” எப்படியோ இந்த பத்து நாளைக்காவது அவளோட முகத்த பாக்க மா இருக்கலாமே ” எண்ணிக் கொண்டாள். ஆனால் எதர்சியாக அங்கே வந்து சூர்யா கேட்டு விட அவனுக்கு கோபமாக வந்தது . எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே சென்று விட்டான்…
மஹாலிங்கம் சொன்ன படியே நந்தினியை அவருடனே அவரது வீட்டில் வைத்துக் கொண்டார்.. ஏனோ அவருக்கு அவரோட தங்கச்சி விந்துவே கூட இருக்கின்ற மாதிரியான ஒரு உணர்வு…
அடுத்தநாள் கல்யாணத்திற்கு தேவையான ஜவுளிகளை வாங்க சென்றனர்…
சூர்யா நந்தினிக்கு பார்த்து பார்த்து புடவையை செலக்ட் செய்தான் . ஒவ்வொன்றையும் அவள் மீது வைத்து பார்த்து வைத்து பார்த்து தேர்வு செய்தான். நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவளால் எதிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை அவளுக்கு கிருஷ் ஞாபமாகவே இருந்தது. ஆனால் அவளுக்கு அவன் எப்படி இருப்பான் எங்கிருக்கிறான் என்று கூட தெரியாதே .அதனாலோ என்னவோ விதி போட்ட வழியில் தானாக சென்றாள்..
உதயோ அன்று காலை தான் எங்கோ சென்றவன் வந்திருந்தான். அவன் முகத்தில் எதையோ சாதித்து விட்டு வந்த திருப்தி அப்பட்டமாக தெரிந்தது..
மிக சந்தோஷமாக சுமிக்கு புடவை செலக்ட் செய்ய உதவி செய்தான். அதே போல் யாரும் அறியா வண்ணம் நந்தினிக்கென்று அழகிய குங்கும நிறத்தில் புடவை எடுத்து வைத்தான்.
பெண்களுக்கு புடவை லெஹங்கா என அனைத்தையும் எடுத்து முடிக்க அடுத்ததாக ஆண்களுக்கு உடை எடுக்க சென்றனர்..
சூர்யா மற்றும் உதய்க்கு அவர்களே பெண்களின் உடைகளுக்கு ஏற்றவாறு ஆடை எடுத்துக் கொண்டனர்..
அனைத்து ஆண்களுக்கும் உடை எடுத்த பின்பு தாலி வாங்குவதற்காகவும் நகை வாங்குவதற்காகவும் நகை செக்ஷனுக்கு செல்ல நந்தினி மரகதத்திடம் ” ஆண்டி கொஞ்சம் தல வலிக்கிற மாதிரி இருக்கு நான் இங்கேயே உட்காந்துருக்கேன் நீங்க போய் ஜுவல்ஸ் வாங்கிட்டு வாங்க ” என்று தலையில் கை வைத்தவாறு சொல்ல
” சரி மா நீ போய் அப்படி உட்காரு மா நான் சூர்யா கிட்ட சொல்லி அனுப்புறேன் ” என்றவர் வீல் சாரை தள்ளும் படி சுஜியிடம் கூற அவளும் அவரின் வீல் சாரை தள்ளிக் கொண்டு சென்றாள்…
[the_ad id=”6605″]
இதனையெல்லாம் தூரத்தில் இருந்து கங்காவுடன் அமர்ந்து சுமி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
மரகதம் நேராக சூர்யாவிடம் வந்து ” தம்பி நந்தினி பாப்பாவுக்கு கொஞ்சம் தல வலிக்கிதாம் என்னென்னு கொஞ்சம் பாருங்க தம்பி ” என்று சொல்ல
“அச்சசோ நந்தினி இப்போ எங்க மா இருக்கா ” என்று வேகமாக கேட்க
“அதோ அந்த சைட் உட்காந்துருக்கா மா ” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்..
ஜீவா அங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அம்முவிற்கு தலை வலி என்று தெரிந்தும் அமைதி காத்தான்..
கங்கா இதனை கண்டு மனதினுலே பொருமி தள்ளினாள். அடுத்த நொடியே நகைகளை பார்க்க தொடங்கி விட்டார். (www.drogueriasanjorge.com)
வேகமாக நந்தினி இருக்கும் இடத்திற்கு வந்த சூர்யா ” நந்து மா உனக்கு என்ன ஆச்சி தல வலிக்குதுன்னு ஆண்டி கிட்ட நீ சொன்னீயாமே ” என்று அக்கறையுடன் கேட்க..
” ஆமாம் அத்தான் லைட்டா தல வலிச்சது அதான் இங்க வந்து உக்காந்தேன் ” என்று சொல்ல
“சரி டா காஃபி எதாவது வேணுமா இல்ல மாதிரி எதாவது போடுறீயா டா ” என்று வாஞ்சையுடன் கேட்க
“இல்ல… அதெல்லாம் வேணாம் அத்தான் . கொஞ்சம் நேரம் இப்படி அமைதியா உக்காந்தாளே சரியா பொயிடும் நீங்க போய் அவுங்க கூட இருந்து தாலி செலக்ட் பண்ணி கொடுங்க அத்தான் ” என்று சொல்லி அவனை வர்புருத்தி அனுப்பி வைத்தாள்..
அவன் சென்ற சில நொடிகளிலே அவள் முன் தைலத்தை நீட்டியது ஒரு கரங்கள்..
அதை கண்டவள் ” அத்தான் எனக்கு எதுவும் வேணாம் ” என்று சொல்லியபடி நிமிர்ந்து பார்க்க அங்கே தைலத்தையும் வலது கையில் ஏதோ கப்பையும் வைத்தபடி உதய் நின்றிருந்தான் .
“இது உன் அத்தான் இல்ல கிரு…. உதய் ” கிர்ஷ் என்று கூறவந்தவன் உதய் என்று மாற்றி கூறினான்..
“இல்ல சார் எனக்கு வேணாம் ” என்று சொல்ல அவள் பக்கத்தில் அமர்ந்தவன் ” தல வலின்னு தான அம்மாகிட்ட சொன்ன . அதான் நான் தைலம் எடுத்துட்டு வந்தேன் நந்தினி ” என்றான் அவனுக்கே உரித்தான குரலில்…
” இல்ல ” என்று ஏதோ சொல்ல வருவதற்குள் அவளின் இதழ்கள் மேல் கை வைத்து “ஷூஷூ ” பேசாத என்று சைகை செய்ய நந்தினிக்கு தான் மூச்சு விட சிரமமாக போனது..
” இது என்னோட கடமை டி .உனக்கு எதாவது ஒன்னுன்னா அது என்னால தாங்கிக்க முடியாது டா ” என்று அவளின் கண்ணை பார்த்து கூற நந்தினியோ பேச்சற்று இருந்தாள் இது என்னோட கடமை என்ற வாக்கியத்தை கேட்டு அடுத்ததாக அவன் பேசிய எந்த பேச்சும் அவள் காதில் விழவில்லை….
நந்தினியின் நெத்தியில் எதோ சில்லென்று ஆவது போல் உணர்வு ஏற்பட மாயையில் இருந்து மீண்டவல் உதய் தைலத்தை தேய்த்து விட வருவதை கண்டு” அச்சோ விடுங்க சார் நானே சேச்சிக்கிறேன் ” என்று அவன் கையில் தைலத்தை வாங்கி தேய்த்துக் கொண்டாள். அது முடிந்தவுடன் அவன் காப்பியை நீட்ட எதுவும் பேசாமல் அமைதியாக அதை வாங்கி குடித்து முடித்தாள்…
கவி ஒவ்வொரு நகைகளாக பார்த்துக் கொண்டே வர அவளுக்கு முன் நடந்து செல்லும் பாதையில் சோப்பு நுரை இருக்க அதை கவனியாமல் கால்லை வைக்க போன கவியை இரு கரங்கள் இழுத்து அவனுடன் சேர்த்து நிறுத்திக் கொண்டது..
பயத்தில் கவி அழுக அந்த ஆடவனின் சட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டு அழுக ஆரம்பிக்க அதை கண்ட அவன் அவளை தள்ளி நிறுத்தியவன் ” பாரதி இப்போ எதுக்கு அழுகுற ” என்று கேட்டிட..
தெரிந்த குரலாக இருக்கவே மெதுவாக கண்ணை திறந்து பார்க்க அவள் முன் ஜீவா அவளை பிடித்த படி நின்றிருந்தான். அவனை காணவும் அவனை இறுக அணைத்து கொண்டு தேம்ப ஆரம்பித்தாள்…
இப்படி ஒரு அணைப்பை எதிர்பார்த்தவன் திடுக்கிட அடுத்த நொடியே அவளின் கேசத்தை ஆதரவாக தடவியன் ” பாரதி மா இப்போ எதுக்கு அழுகுற சொல்லு ” என்று கேட்க..
அவனை விட்டு விலகியவள் ” என்ன யாரோ இழுக்கவும் பயந்துட்டேன் பிரகாஷ் அத்தான் ” என்று தேம்யபடியே கூற ” சரி சரி அழுகாத கண்ண முன்னாடி வச்சி பாத்து போகனும் மா அப்படியே ஜுவல்ஸ பாத்த படியே போக கூடாது அப்படி போனா அங்க இருக்கிற மாதிரி சோப்பு நுரையில கால வச்சி விழுக வேண்டியது தான் ” என்று ” பாத்து போ ” என்று விட்டு அவளின் கையை சட்டையிலிருந்து எடுத்து விட்டு சென்றான்…
இருவருமே மற்றொருவரை அழைத்த பெயரை மறந்து விட்டனர். ஒருவருக்காக ஒருவர் யாரும் அழைக்க படாத செல்ல பெயராக வைத்து அழைத்திருந்தனர்..
இருவருக்குமான பொன்தாலி எடுத்த பின்பு அனைவரும் ஹோட்டல் சென்று சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றனர்…
நாட்கள் வேகமாகவே சென்றது…
பந்தக்கால் நட்டு வைப்பது நலங்கு வைப்பது என்ன அனைத்து சடங்குகளும் நடந்து முடிய அன்று இரவே மண ஜோடியை மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்…
உதய்க்கும் சுமி அன்றிரவே நிச்சயம் வைத்தனர். நந்தினி சுமியின் தோழியாக நிற்க சூர்யாவும் உதய்க்கு தோழனாக நின்றிருந்தான்.. இருவரும் பெரியோர்களின் முன்பு மோதிரம் மாற்றிக் கொண்டார்…
அடுத்ததாக சிறியவர்கள் எல்லாம் சேர்ந்து விளையாடலம் என்று முடிவு செய்ய கவியோ” என்ன விளையாடலாம் ” என்று கேட்டு யோசிக்க ” அதான் உனக்கு மூல இல்லன்னு எனக்கு தெரியுமே .பேசாம நாம தம்ஷராட்ஸ் விளையாடலாம் ” என்று சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.
பெண்கள் ஒரு அணியாகவும் ஆண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து அமர்ந்தனர்…
முதலில் பெண்களே போட்டியை தொடங்கி வைத்தனர்..
பெண் : பெண்களோட
போட்டி போடும் ஆண்கள்
இங்க யாரு
ஆண் : ஆ ஹா ஆ ஹா
பெண் : கூந்தலோட
மல்லு கட்டும் மீச
ஜெயிக்காது
ஆண் : ஹே ஹே
ஹே ஹே ஹே
பெண் : மல்லிகைப்ப்பூ
வச்சு வந்தா உங்க மனசு
காத்தில் ஆடும் பட்டு விழி
சுட்டு விட்டா ஆம்பளைக்கு
வழியும் வழியும் பலே பலே
பலே பலே வா பாக்கலாம் வா
ஆண் : ஆண்களோடு
போட்டி போடும் பெண்கள்
இங்க யாரு
பெண் : ஆஅ ஹா ஆஅ ஹா
ஆண் : மீசையோடு
மல்லுகட்டும் கூந்தல்
ஜெயிக்காது
பெண் : ஆஅ ஹா ஆஅ ஹா
ஆண் : மணப்பது
மல்லிகைதான்
உங்களுக்கொரு
வாசம் இல்ல
சுட்டதெல்லாம்
அப்பளம் தான்
அடுப்படியில்
தெரியும் தெரியும்
பலே பலே பலே பலே
வா பாக்கலாம் வா
பெண் : பெண்களோட
போட்டி போடும் ஆண்கள்
இங்க யாரு
ஆண் : ஆ ஹா ஆ ஹா
பெண் : கூந்தலோட
மல்லு கட்டும் மீச
ஜெயிக்காது ஹே
ஆண் : எப்பா எப்பா
எப்பா பொம்பளைங்க
நீங்க வெத்து டப்பா
குழு : ஹே பலே பலே
ஹே பலே பலே ஹே
பலே பலே பலே பலே ஹே
பெண் : எப்பா எப்பா
எப்பா சிக்கிகிட்ட
நீதான் எக்குதப்பா
ஆண் : ஆண்கள்
எந்நாளுமே ஒஸ்தியென
மனசில் வச்சிக்கனும்
பெண் : பெண்கள் இல்லாவிட்டால்
ஆம்பளைங்க சுவரில் முட்டிக்கனும்
ஆண் : ஹேய் பெண்களை
சேராமலே வாழ்ந்திடும்
ரிஷி இல்லையா
பெண் : யோகியர் ஆனாலுமே
பெற்றவள் பெண் இல்லையா
ஆண் : பொம்பள இளமை
சில வருஷம் ஆம்பளைக்கு
அது பல வருஷம்
பெண் : அரே பலே பலே
பலே பலே வா பாக்கலாம்
வா ஹேய்
ஆண் : ஆண்களோட
போட்டி போடும் பெண்கள்
இங்க யாரு
பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
பெண் : கூந்தலோட
மல்லு கட்டும் மீச
ஜெயிக்காது
ஆண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : நினைச்சபடி
முடிக்கும் பொண்ணு
ஆண் : அதுக்குபின்ன
இருக்கு இருக்கு கத ஒன்னு
பெண் : சிறகடிக்கும் பறந்து
பருவ சின்ன சிட்டு
ஆண் : கயிற கட்டு
அடுப்பில் அளந்து
கட்டுப்பட்டு
பெண் : பொன்னு சிரிப்பில்
வழியுறதாரு
ஆண் : இடுப்ப வெட்டி
நெளியுறதாரு
பெண் : ரவுண்ட் அடிக்கும்
சாட்லைட்டின் மொட்டு
ஆண் : பவர் இப்ப கட்டு
பெண் : சுட்டு விடும் பொட்டு
ஆண் : அணைச்சிடுவோம் தொட்டு
பெண் : பெண்கள்
கோவ பட்டால்
ஆம்பளைங்க வால
வெட்டி வைப்பா
குழு : ஹே பலே பலே
ஹே பலே பலே ஹே
பலே பலே பலே பலே ஹே
ஆண் : பெண்ணின்
கோவம் எல்லாம்
முத்தம் வைத்து
ஆம்பள மாத்தி வைப்பான்
பெண் : கட்டில் தள்ளி
வச்சா ஆம்பளைங்க
நெஞ்சை பாதிக்குமே
ஆண் : கட்டில் தள்ளி
வைக்கும் பொம்பளைய
தென்றல் சோதிக்குமே
பெண் : ராத்திரி
ஊடல்களில் யாரிடம்
யார் தோற்பது
ஆண் : ஊடலில்
தோற்றால் அவை
தோல்வியாய் யார்
சொல்வது
பெண் : சுத்துமா ஒடஞ்ச
சொத்து பத்திரம்
பொம்பளைங்க ஆட்டி
வைக்கும் மந்திரம் அரே
பலே பலே பலே பலே
வா பாக்கலாம் வா
பெண் : பெண்களோட
போட்டி போடும் ஆண்கள்
இங்க யாரு
ஆண் : அ ஹா அ ஹா……
ஆண் : மீசையோடு
மல்லுகட்டும் கூந்தல்
ஜெயிக்காது
ஆண் : ஆ ஹா ஆஹா
ஆண் : ஹேய் ஹேய்
ஹேய்
பெண் : மல்லிகைப்ப்பூ
வச்சு வந்தா உங்க மனசு
காத்தில் ஆடும்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : சுட்டதெல்லாம்
அப்பளம் தான்
அடுப்படியில் தெரியும்
தெரியும்
பெண் : அரே பலே
பலே பலே பலே
வா பாக்கலாம் வா
ஆண் : ஆண்களோடு
போட்டி போடும் பெண்கள்
இங்க யாரு
பெண் : ஆஹா ஆஹா ……
பெண் : கூந்தலோட
மல்லு கட்டும் மீச
ஜெயிக்காது
ஆண் : ஆஹா ஆஹா ……
பெண்கள் தொடங்கிய பாட்டையே ஆண்கள் தொடர்ந்து பாடினர்..
அதற்கு அடுத்தாக உதய் அடுத்த பாடலை பாட தொடங்கினான்..
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
அதை தொடர்ந்தே நந்தினி தொடங்கினாள்.
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
அடுத்தாக சுமியும் சூர்யாவும் ஒரு சேர்ந்த அந்த பாடலின் அடுத்த வரியை பாடினர்.
எந்த வார்த்தைக்கும் ஒருவித அர்த்தம் இல்லாதது காதல்
இரு பார்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்
இங்கு கீழ்த்திசை சூரியன் மேல் திசை தோன்றினும்
பாதை மாறிப் போகாது
கடைசியாக அனைவரும் சேர்ந்து காதல் காதல் காதல் காதல் பாடிக்கொண்டே போக கங்கா தான் கடுப்பில் அனைவரையும் திட்டி அனுப்பி வைத்தார்..
[the_ad id=”6605″]
இதற்கிடையில் ஜான்வி அழுது கொண்டிருக்கிறாள் என்று சூர்யாவே அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
அடுத்தநாள் காலை ஆதவன் அதன் உதயத்தை தொடுக்க நாயகர் நாயிகளின் வாழ்வின் உதயத்தை கொண்டு வரும் நாளாக அமைந்தது …
மண்டத்திற்கு அனைத்து சொந்த பந்தங்களும் வருகை தர மண மேடையில் ஐயர் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.
மணமகன் அறையில் இரு மணமகன்கள் கிளம்பி அமர்ந்திருந்தனர்.
மணமகள் அறையில் கீர்த்தி சைந்தவி கவி சுஜி என அனைவரும் சேர்ந்து இரு பெண்களையும் தேவதைகள் போல் ஆக்கி கொண்டு இருந்தனர்…
மூகூர்த்தம் நேரம் வரவே ஐயர்கள் மாப்பிள்ளைகளை அழைத்து வர சொல்ல இரு ஆடவர்களும் முகத்தில் பொலிவின்றி கடமைக்கே வந்தமர்ந்தனர்…
ஐயர் கூறும் மந்திரத்தை கூறினாலும் இருவமே மணிக்கு ஒருமுறை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கடிகாரத்தையும் பார்த்தனர்…
பெண்களை அழைத்து வர சொல்ல இரு பெண்களும் தோழிகளின் படை சூழ வந்து அமர்ந்தனர் அவர் அவர்களுக்கான இடத்தில்…
ஐயர்கள் மந்திரங்கள் ஓத இரு தம்பதியனுரும் அதை அப்படியே சொல்லிக் கொண்டு இருந்தனர்…
தாலியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வர சொல்ல கீர்த்தியும் சுஜியும் சென்று அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று வந்து ஐயர்களிடம் ஒப்படைத்தனர்.
ஐயர்கள் மணமகன்கள் கைகளில் தாலி கொடுக்க முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிவாத்தோடு மணமகன்கள் இருவரும் நந்தினி மற்றும் சுமியின் கழுத்தில் நிமிடம் விட்டு பொன்தாலியை அணிவித்தனர் உதய் கிருஷ்ணன் மற்றும் சூர்யா இருவரும்…
இரு ஜோடிகளுக்கும் இனிதாக திருமணம் நடைப்பெற்றது. அடுத்து இருமணமகன்களும் தன்னவள்களின் வகுட்டில் குங்குமத்தை இட்டு அவர்களை அவர்களின் சரிபாதி என ஆக்கினர்…
எதையோ எடுக்கச் சென்ற கங்கா மண மேடைக்கு வந்து பார்த்து அதிர்ச்சியுற்றாள். அவளின் அதிர்ச்சியை கண்ட அனைவரும் அவளின் பார்வை சென்ற இடத்தை கண்டு மென்மேலும் அவர்களும் அதிர்ச்சியுற்று நின்றனர்.ஆனால் அதற்கு காரணமானவுங்களோ எதுவும் அறியா சிறு பிள்ளை போல் நின்றிருந்தனர்…
~தேடல் தொடரும்…??