உடலில் இருந்த தெம்பு மொத்தமும் வடிய அவன் மார்பினில் வேதனை எல்லாம் கொட்டி தீர்த்தவள் அவனை விடவே மாட்டேன் என்னும் அடமாய் மேலும் மேலும் இறுக்கமாக அணைத்திருக்க, அவள் விருப்பத்தின்படி அசைவற்று சிறைப்பட்டு சிரிப்போடு கிடந்தான்.
இருவர் மனதிலும் வார்த்தைகள் சொல்லாத நிம்மதி. சேர வேண்டிய இடத்தில் பத்திரமாக அடைந்த கூட்டு குருவிகள் போல் ஒருவரை ஒருவர் உணர்ந்து நிம்மதியாக இருந்தனர். நேரம் கடக்க அவர்களின் துயரங்களும் தூரம் கடந்து போனது.
கடந்த கால மன சஞ்சலங்களை பேசி இருவரின் குற்ற உணர்ச்சியை மற்றவர் கிளறும் எண்ணம் சுத்தமாக இல்லை, தவறுகள் இன்னதென்று உணர்ந்து இனி அவை நடக்கவே கூடாதென்று அனுபவம் எடுத்துரைத்தது தம்பதிக்கு.
சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நாம் இணையின் உணர்வுகளை படிக்க தவறி அவர்களின் கண்களில் தவறாகி போகிறோம். தவற்றை உணர்ந்து அதனை திருத்திக்கொள்ளும் தம்பதிகள் அதில் சிலரே.
‘சாரி… சாரி’ இருவருக்குமே அவரவர் பக்க தவறுகளை புரிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இருவரும் அவரவர் நியாயத்தை மற்றவருக்கு வார்த்தை பேசாமலே புரிய வைத்துவிட்டனர்.
“ஹே கோவிந்தம்மா கை வலிக்கிதுடி” அவள் தோளில் சோர்வாய் முகம் புதைத்து தகவல் கொடுத்தான்.
அவளோ நீ பேசிக்கொண்டே இரு என நிம்மதியாய் அவள் மார்பினில் கிடந்தாள். இவள் நகரப்போவதில்லை என உணர்ந்தவன் அப்படியே மனைவியை மெத்தையில் சரித்து விழ, இருவருக்கும் மேலும் வசதியாக போனது.
“ரகு..”
“ம்?”
“நிஜமா நாம ஹனி மூன்க்கு ஆஸ்திரேலியா போறோமா?”
அவள் கேள்வியில் சத்தமாய் வாய் விட்டு சிரித்தவன், “அது உன்ன சமாளிக்கிறதுக்கு சும்மா சொன்னேன்டி”
தலையை தூக்கி அவனை முறைத்தவள் அவன் நெஞ்சத்தில் சற்று பலமாய் கடித்து, “ச்சீ பிராடு… சரியான கஞ்சன்டா நீ”
“ஹாஹா… அது என்னவோ உண்மை தான். ஆனா இனி இல்ல. அய்யா டபுள் இன்க்ரீமென்ட் வாங்கிட்டோம்ல” என்றான் மீசையை முறுக்கி.
மகிழ்வதற்கு பதில் அடி தான் இரு மடங்காக விழுந்தது, “ஏன்டா இன்னும் என்ன என்னடா என்கிட்ட இருந்து மறைச்சிருக்க, இதுல இந்த வேலையே பிடிக்கல எல்லாம் இவளாலனு கதை விட்டுட்டு இருக்குறது” வெளுத்து வாங்கிவிட்டாள் மனைவி.
“உண்மையை சொல்லு உனக்கு எத்தனை பிள்ளைங்க இருக்கு?”
“அறிவு கொழுந்தே, மூணு மாசத்துல யாருக்குடி புள்ள பிறக்கும்? வேணும்னா நீ ம்ம் சொல்லு பத்து மாசத்துல ரெடி பண்ணிடலாம்”
ஒவ்வொரு அடியும் இடி போல் விழுங்க, ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் மீண்டும் மன்னிப்பு வேண்டி மனைவியே சரணாகதி என அவளிடம் சரணடைந்தான்.
மெல்ல மெல்ல பேச்சுகள் அழகாய் நீல, மதிய உணவை வெளியில் வாங்கி உண்ட இருவரும், இரவு உணவிற்கும் வெளியில் போகலாம் என கூறிய ரகுவிடம் தானே சமைப்பதற்கு மனைவி கூறினாள்.
அவளது சமையல் கலையை தெரிந்தவன் தானே உடன் சென்று அவளை சீண்டி தீண்டி இரவு உணவை முடித்தனர். கையேடு மனைவியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று அந்த இரவினை குளிமையாக்கினான்.
மகிழ்ச்சியாய் கட்டிலில் படுத்திருந்தவன் கதவு சாத்தப்படும் சத்தத்தில் தலை திருப்பி பார்க்க, தொள தொளவென ஒரு கிரீம் நிற டீ-ஷர்ட் அணிந்து கூந்தலை முடித்து வர அந்த சிறிய டீ-ஷர்ட் அவளது இடையினை பளிச்சிட்டு காட்டியது.
“ஐயோ” தலையை தலையணையில் புதைத்து குப்புற படுத்து கிடந்தவனை உரசிக்கொண்டு அருகே படுத்த மனைவியை மறந்தவன் போல் இருந்தான். அவளது உரசும் உடல் வேறு கிளர்ச்சியை தூண்டியது.
“ரகு, தூங்கிட்டியா?” அவன் இடையோடு கை போட்டு சோர்வாக கேட்டாள்.
“ஆமா” என்றான்.
அதோடு விடாமல் அவன் மேல் உருண்டு மறு பக்கம் வந்தவள் செயல் அவனை தன்வசம் இழக்க வைத்தது, “என்னடி பண்ற?” உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கோவமாக கேட்டான்.
“என்கிட்ட கொஞ்ச நேரம் பேசேன், தூக்கம் வரல” அவனோடு நெருங்கி படுத்து வினவினாள்.
“நான் பேசுற மூட்ல இல்ல. பேசாம படுடி”
“ம்ம்ஹூம் முடியாது”
காலை அவன் மேல் போட்டு மூக்கு உரசும் நெருக்கத்தில் வந்து, “அப்போ மூட் இருக்கா?” கேட்டாள் குழைவாக.
“என்ன மூட்?”
“மூடான மூட்” இறுக மூடியிருந்த அவன் கையை அவள் இடையோடு போட்டு கேட்க,
“கோவிந்தம்மா நீ சரியில்ல பாத்துக்கோ, அப்றம் நீ தான் கஷ்ட படுவ” எச்சரித்தான் பல நாள் ஆசையை மனதில் வைத்து.
கணவனின் கண்கள் தன்னுடைய கண்கள், உதடு, நாடி என கீழே இறங்க, அவன் நாடியில் கை வைத்து மேலே இழுத்தவள், “நான் பேசுற மூட் சொன்னேன், நீ என்ன பண்ற?”
கிறக்கம் குரலில் அப்பட்டமாய் தெரிய, தன்னை வம்பிற்கு இழுக்கும் திவ்யாவின் செயலில் சிரித்தவன் அவள் விரலை பிடித்து கடிக்க, திவ்யா கையை எடுத்த நொடி அவள் முகத்தை சற்று மேல் தூக்கி இதழ்களை சிறை செய்தான் வன்மையாக.
ஆசை மோகத்திற்கு தூபமிட, வெட்கம் தயக்கம் விடைபெற்று தேடல் துவங்கியது. இதழ்கள் ஆசையாய் அவளது ஒவ்வொரு இதழின் ஓரத்தையும் பதம் பார்த்து முற்று பெறாத போதையை தேனாய் பருகியது.
நீண்ட நொடிகள் பிறவியின் பயனை அடைய விடாமல் தடுக்க ரகுவின் கைகள் மனைவியின் மேல் தங்கு தடையில்லாமல் பயணித்தது. அவனை இரண்டு நாட்களாக இம்சித்த அவளது வெண்ணை இடையை வளைத்து அழுத்தி பிடிக்க, மூச்சுக்காக ஏங்கிய அவளது உடல் அந்த நொடியை பயன்டுத்தி அவன் இதழிலிருந்து பிரிந்தது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தத்தளித்த பெண்ணின் சுவாச தேவை ஆணுக்கு இல்லை போல், இதழ்களுக்கு கொடுத்த பரிசை அவளது நாடி, கன்னம், கழுத்து காது என பாதை முடிவில்லாமல் நீண்டது.
“ரகு…” காது மடலில் அவன் கடித்த சுகம் பெண்ணவளை முனக வைத்தது.
சிரிப்போடு கடித்த இடத்தில் முத்தம் வைத்து முத்த வேட்டையை இரக்கமின்றி பேதையின் கழுத்தை தாண்டி கீழே இறக்க, துடித்தது திவ்யாவின் பெண்மை.
மாய போர்வை இரவின் இருளையும் கிழித்து அவ்வறை முழுதும் பரவ, தேடல்கள் தொலைந்து காதலின் பரிணாமத்தை தெரிந்து புரிந்து அது காட்டும் வழிகளில் ஒருவரை மற்றொருவர் வெல்ல விட்டு இன்பம் அடைந்தார்.
மனைவியின் தேவை உணர்ந்தவன் அவள் ஆசையை ஆசையாய் தீர்க்க, கணவனின் முரட்டுத்தனத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு ரகுவின் நெஞ்சத்தில் கலைந்த முடியோடு அழகிய ஓவியம் போல் ஓய்ந்து கிடந்தாள் திவ்யதர்ஷினி.
எ.சியின் உபயத்தால் வியர்வை துளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்க, விடாமல் ஓடிய அந்த இயந்திரம் அறையை தன்னுடைய குளிரால் உறைய வைத்தது.
உடல் நடுங்குவதை கூட பொருட்படுத்தாமல் சோர்வில் இருந்தவள் உடலை சரியாக தழுவாத போர்வையை உடல் வரை மூடி விட்டு நெற்றியை தொடர்ந்து இதழில் மென்மை முத்தம் கொடுத்து அவள் உறங்கும் அழகை ரசித்து கிடந்தான்.
குறுகுறு பார்வையில் பாதி உறக்கத்தில் இருந்தவள் விழித்து அவனை கேள்வியாக பார்க்க, மெல்ல சிரித்தவன் ஒன்றும் இல்லை என்றான்.
நெளிந்து அவனை நோக்கி நன்றாக திரும்பியவள் அவனது தாடியை தடவிவிட்டு சிரிக்க, அந்த சோர்வோடு சிரிக்கும் அந்த கண்களுக்கு ஆயிரம் முத்தம் குடுத்தால் என்ன? என்று தான் தோன்றியது.
அழகு அவள். அவன் கண்களுக்கு எந்த தோற்றத்திலும் அவள் அழகே.
நிம்மதியை தாண்டி அவள் கண்களில் ஒரு அலைப்புறுதல் இருந்தது. “என்ன?” என்றான் அவன் கன்னம் வருடி.
“நான் உன்கிட்ட சொல்லலனா நீ டிவோர்ஸ் கேன்சல் பண்ணிருக்கவே மாட்டல ரகு?”
“அது என்னவோ உண்மை தான். நீ தான் பிடிவாதமா இருக்கனு நான் நினைச்சேன். ஆனா என் கோவிந்தம்மா மனசுல இவ்ளோ யோசிச்சு பீல் பண்ணிருக்கானு தெரிஞ்சிருந்தா இவ்ளோ தூரம் இத வளர விட்ருக்க மாட்டேன்”
“பொய் தான சொல்ற?”
“இல்லடி… வீறாப்புல போனு சொல்லிட்டேன், ஆனா அதுக்கு அப்றம் மனசு தவிச்சது. கிட்சேன் போனா தீஞ்ச ஸ்மெல் வரல, வீடு கிளீன் பண்ற தேவையே இல்லாம நீட்டா இருந்தது, காய் வாங்க போனா ஒரு ஆர்வமே இல்ல, அப்டி பல விசியம்.
கடைசில தான் தெரிஞ்சது தனிமையை வெறுக்கல, நீ இல்லாத இந்த இடத்தையே வெறுத்துட்டேன்னு. சரியா பொட்டிய தூக்கிட்டு வந்து நின்ன, அப்பவும் ஒரு திமிரு, ஈகோ உன் பக்கத்துல வர விடாம தடுத்துச்சு. நாள் ஆக ஆக ரொம்ப கஷ்டமாச்சு. அதுல அந்த கவின் வேற வந்து என் முன்னாடியே நீ அழகா இருக்கனு சொன்னது எவ்வளவு கோவம் தெரியுமா?
அவனை அடிச்சு மூஞ்சி முகரைய எல்லாம் ஒடைக்கணும்னு தான் தோணுச்சு. ஆனா எந்த உரிமைல பண்றது? எனக்கு அவனை தான் பிடிச்சிருக்குன்னு நீ சொன்னா… ஆஆ வலிக்கிதுடி” பேசிச்சின் இடையே அவன் வார்த்தைகள் பிடிக்காமல் அவன் கைகளில் கடித்திட கத்திவிட்டான்.
“மேல சொல்லு” என்றாள் அவன் முகத்தை பார்த்து சிரிப்போடு.
கடித்து வைத்து சிரிப்பை பார் என முறைத்தவன், “ம்… எங்க விட்டேன். ஆ… உன்கிட்ட இருந்து தெரியாம கூட அப்டி ஒரு வார்த்தையை கேக்க விரும்பல அதான் போடினு வந்துட்டேன். அப்றம் உன் அப்பாகிட்ட பேசி நீ தனியா இருக்குறத சொன்னேன். வந்துட்டாங்க எல்லாரும் என் பின்னாடியே”
“அப்பயும் ஒரு பக்கம் என் மனசு தவிச்சது தெரியுமா, மனசு மாறி என் கூட வந்துட மாட்டியானு” அவன் அணைப்பு அவளிடம் கூடியது.
மேலும் மேலும் தன்னோடு இழுத்துக்கொண்டான் மனைவியை.
“பண்றது எல்லாம் பண்ணிட்டு என்ன இழுத்து பிடிக்கிற, நான் உன்கிட்ட சொன்னேனாடா லூசு பயலே, என் அப்பா வேணும், அண்ணனுங்க வேணும்னு?
தன்னோட பிடிவாதம் தான் முக்கியம்னு போனவங்கனு தெரிஞ்சாலும் என்னைக்கு என் கைல காச குடுத்து வெளிய போக சொன்னாங்களோ அப்பயே அவங்கள முழுசா வெறுத்துட்டேன்.
இதுல போய் பேசுனதை பெருமையா சொல்லிட்டு வந்துட்டான் தியாகி பட்டம் கட்டிட்டு”
“என்ன என்னடி பண்ண சொல்ற, எப்ப பாரு மூஞ்ச தூக்கிட்டே சுத்துன, கண் மூடுனா கூட நிம்மதி இல்ல. இன்னும் சொல்ல போனா நான் தான் ஏதோ பண்ணுற மாதிரி ஒரு குற்றவுணர்ச்சி வேற என்ன கொன்னுட்டு இருந்தது.
அவள வற்புறுத்தி கூட இருக்க வைக்கிறோமோனு. ஏற்கனவே ஹியரிங் டேட்ட ரெண்டு வாரம் தள்ளி வச்சேன் பொய்யா காரணம் சொல்லி. இதெல்லாம் தாண்டி கடந்து வந்துடுவேன் நிம்மதியா சிரிச்சிட்டே குட் பாய் சொல்லலாம்னு நினைச்சா அப்டியே உல்டாவா நடக்குது”
“என்னது ஹியரிங் டேட்ட தள்ளி போட்டியா?”
“ஆமா, உன் லாயர் மூக்கை ஒடைச்சிட்டு வந்தேன் உனக்கு இனி போன் பண்ண கூடாதுன்னு”
“டேய் கேடிடா நீ” சிரிக்காமல் திவ்யாவால் இருக்க முடியவில்லை.
“சரி உன் அப்பா அம்மாவை இப்டியே தள்ளியே நிறுத்த போறியா?”
“நிறுத்துனா தான் என்ன? இப்ப போய் சொல்லு நாங்க செந்துட்டோம்னு. மறுபடியும் உனக்கு அடி விழுங்கும், ஆமா ஏன்டா அன்னைக்கு அடி வாங்குன, திரும்ப ரெண்டு தட்டு தட்டிருக்கலாம்ல?”
“இப்ப இப்டி சொல்லுவ, நாளைக்கு நீங்க ஒன்னு சேந்துட்டா என் அண்ணனை அடிக்க நீ யாருனு கேப்ப… எதுக்கு வீண் சண்டை, அதான் பேசாம இருந்துட்டேன். இல்லனா எனக்கு அன்னைக்கு இருந்த ஆத்தரத்துக்கு உன் அண்ணனுங்க இருந்த இடம் தெரியாம எங்கையாவது ஓடிருப்பானுங்க”
“ரொம்ப தான்”
“பேச்சை மாத்தாம கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அவங்க மூணாவது மனுசங்க இல்ல என்னைக்குனாலும் அந்த சொந்தம் உனக்கு கண்டிப்பா தேவை. மத்தவங்க எப்டியோ உன் அப்பா உன் மேல உண்மையாவே பாசம் வச்சிருக்கார். நீ அன்னைக்கு போனது கூட தெரியாத மாதிரி சொல்றார்”
“அப்டி பாசம் இருக்குறவர் அண்ணன் உன்ன திட்டவும் ஏன் எதுவும் பேசாம வேடிக்கை பாத்தார்?”
“என்ன திட்டுனதுக்கெல்லாம் நீ ரியாக்ட் பண்ணிட்டு இருக்காத”
“உனக்கு மரியாதை இல்லாத இடத்துல எனக்கு ஒரு வேலையும் இல்ல. இதுக்கு மேல பேசுன, உன்ன கொன்னே போட்டுடுவேன். அவங்கள ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் என் மனசை பொறுத்து. நான் இப்போ தூங்க போறேன்”
உறுதியாக கூறி போர்வையை இழுத்து கழுத்தோடு போர்த்திக்க, அவள் கையை பிடித்து தடுத்தவன், “என்ன தூங்குற?”
“ரகு” கள்ள சிரிப்போடு தன்னை அணுகும் கணவனை பார்த்து பயந்தவள் அவனை முறைக்க, அவள் முறைப்பெல்லாம் அங்கு எடுபடவில்லை.
“டயர்டா இருந்த, அதான் கொஞ்சம் தெளிய வச்சேன். ஆறு மாசம் விட்டதெல்லாம் பிடிக்க வேணாமா செல்ல பொண்டாட்டி” என்றவன் அவளுக்கு நேரம் கொடுக்காமல் தன்னுடைய வேலையை துவங்க, அவனது காதல் தாக்குதலில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியாமல் மகிழ்ச்சியாய், இன்னும் இன்னும் ஆழமாய் அவனுள் புதைந்தாள் திவ்யா.
நிலவின் நிகழ்ப்படமாய் இருளிலும் ஜொலித்தவளை அன்றி வேறொருவரோடு இது போன்ற இரவுகளை கழித்திருக்க மாட்டோம் என அந்த நொடி அவன் மனம் அடித்து கூறியது.
சிரிக்க அவள், வருந்த அவள், அழுக அவள் என அனைத்திலும் அவள் மட்டுமே தன்னை கட்டுப்படுத்த முடியுமென தன்னை ஏந்தியவள் அழகாய் கூறியிருந்தாள் வார்த்தைகளற்று.
அவள் சிரிப்பு அவன் போதையானது, அவன் மூச்சுக்காற்று அவள் சுவாசமானது. இனி என்னை உரிமையாய் அழைக்காதே என்றவள், அவனுள் தன்னுடைய உரிமையை தேடி தேடி சேமிக்க,
அவள் பேசும் பொழுது காதை அடைத்தவன் அவள் கூறும் ஆயிரம் கதைகளை கேட்டு, அவளிடமிருந்து வரும் அவன் பெயர் உச்சரிப்பை இனிய கீதமாய் ரசிக்கிறான்.
கதை மொத்தமா எப்படி இருக்கு? புடிச்சிருக்கா எல்லாருக்கும்? ஏதாவது என்னுடைய எழுத்துல நான் மாத்தணும்னு தோணுனா தயங்காம சொல்லுங்க கண்டிப்பா மாத்திக்கிறேன், இல்ல என்கிட்டே என்ன எதிர்பாக்குறிங்கனு சொல்லுங்க கண்டிப்பா அதை அடுத்த கதைல கொண்டு வர்றேன்.
How is the chapter?? Seekiram epilogue oda varen… (apdiye with title of next story)