ஷிவானியின் வெட்கம் வலி வேதனை ஒருபக்கம் அவன் தலையை திங்க இன்னொருபக்கம் கபிலனை நினைத்து பதறியது நெஞ்சம். கபிலனுக்கு நுரையீரல் சுருங்கி விரிய கஷ்டப்படுகிறது. தொடர் சுருட்டு பிடிப்பது நுரையீரலை பாதித்திருக்கிறது என்றார்கள்.
விடியலுக்குள் ஓர் முடிவுக்கு வந்தவன் தந்தையிடம் சென்றான் “யப்பா நீ ஒடம்ப தேத்திகிட்டு வர வழியை பாரு உனக்கு வீட்ல மருமக காத்துட்டு இருப்பா” என்றவன் விடியற்காலை வக்கீலை சந்திக்க சென்றான். வக்கீலிடம் தேவையான தகவல்கள் எல்லாம் வாங்கிக்கொண்டான். மற்ற ஏற்பாடுகளை எல்லாம் அவரை பார்க்க சொல்லிவிட்டு அருணை சந்திக்க சென்றான். அருணிடம் “அடுத்த பத்து நாளைக்கு நான் என்ன பண்ணாலும் கண்டுக்கமாட்டேன்னு வாக்கு குடு மச்சி” என்று கேட்டான்
விசித்திரமாக பார்த்தான் அருண் “உனக்கு என்ன தோணுதோ செய் மச்சான் நான் இருக்கேன்” என்றான்.
கிளம்பி தந்தையை சேர்த்திருக்கும் மருத்துவமனைக்கு வந்தான். ஐசியு அட்டென்டர் டாக்ட்டராக இருந்தவளை பார்த்து “அப்பாக்கு எப்படி இருக்கு” என்று கேட்டான். கபிலனை பார்க்க சிரஞ்சீவி வருவான் என்று தெரியும் ஆனாலும் நேற்று கையை இறுக்கி உண்மையை வாங்கியவன் முகத்தை இன்று இந்த நிலைமையிலும் பார்க்க வெட்கமாக இருந்தது.
“நல்லா இருக்கார். இன்னும் ரெண்டு நாள்ல ஐஸியூ விட்டு நார்மல் வார்டுக்கு மாத்திடலாம். பயப்படாத எந்த இன்பெக்ஷனும் வராம இருக்கத்தான் ஐஸியூல இருக்கார். இது டேஞ்சர் இல்ல…ஆனா இனி ஜாக்கிரதையா இருக்கணும்” என்றாள்
சிரஞ்சீவி “சரி வரியா கொஞ்சம் பேசணும்”என்று அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கான்டீன் அழைத்துச்சென்று பத்திரம் கட்டினான். அதிர்ச்சியாகி நின்றாள் ஷிவானி. அந்த பத்திரம் அவள் அப்பா இறந்துபோன மருத்துவமனையின் சேல் டீட். அவள் அந்த மருத்துவமனையை வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறாள். இப்போது அது சிரஞ்சீவி பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது.
ஷிவானி கோபமாக “ஏன்டா இப்படி பண்ண” என்று கோபமாக கேட்க
இன்னொரு பெரிய குண்டை தூக்கிப்போட்டான் “இப்போ என்கூட வந்து என்னை கல்யாணம் செய்துக்கோ இல்லன்னா இந்த ஹாஸ்பிடல் என்கிட்டே தான் இருக்கும் அதை இடிச்சிட்டு தியேட்டர் கட்டுவேன் அங்க” என்றான்
ஷிவானி “பைத்தியமா நீ”கேட்டாள்
சிரஞ்சீவி “அதை போற வழியில டிஸ்கஸ் பண்ணிக்கலாமா” கேட்டவன் அவளை திருமணம் செய்துகொள்ள போகலாம் வா என அழைத்தான்.
ஷிவானிக்கு அதிர்ந்தாலும் அவன் முகத்தில் தெரியும் அடம் இவன் நினைத்தை செய்து முடிக்கும் வெறியில் இருக்கிறான் என்றது.
அவளை அழைத்துக்கொண்டு வக்கீலிடம் சென்று அவர் ஏற்பாடு மூலம் திருமணத்தை பதிவு செய்தான். அவர் எதிரிலேயே மருத்துவமனை யூனிபோர்ம்மில் இருந்தவள் கழுத்தில் தாலி கட்டினான்.
ஷிவானி “அந்த ஹாஸ்பிடல் எனக்கு குடுத்துருவ தானே” கேட்டாள்
சிரஞ்சீவி “கொடுப்பேன்” என்றான்
அடுத்து ஷிவானி வீட்டிற்கு செல்ல அங்கே எல்லோருக்கும் அதிர்ச்சி.சிரஞ்சீவியை ஷிவானியின் அம்மா வசைபாட விஷயம் கேள்விப்பட்டு அடித்துபிடித்து வீட்டிற்கு வந்த அருண் சிரஞ்சீவி கன்னத்திலே ஓங்கி ஒரு குத்து விட்டான். வாங்கிக்கொண்ட சிரஞ்சீவி பதிலுக்கு ஒன்றுமே செய்யாமல் நின்றான். ஷிவானி அவள் பொருட்களை எடுத்துக்கொண்டு வர கபிலன் வீட்டுக்கு புறப்பட்டனர்.
“அருண் அண்ணாகிட்ட சொல்லலையா டா பாவி. என்ன நினைப்பான்” என்று கேட்டவள் அழுதுகொண்டே வந்தாள்.
வீட்டிற்க்குள் நுழைந்தவர்கள் நேராக அவன் அறைக்கு செல்லும்போது இரவு கருத்திருந்தது. “நீ தூங்கு, எனக்கு இன்னும் ரெண்டு மூணு வேலை இருக்கு அதெல்லாம் பார்த்துட்டு வந்து தூங்குறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போனான்.
சோபாவில் ஒரு பக்கமாக சாய்ந்து உறங்கிப்போனாள் ஷிவானி. அடுத்து கண் விழிக்கும்போது மெத்தையில் கவிழ்ந்து கிடந்தாள். கைகளில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிரூந்தது முதுகில் காயம் தைக்கப்பட்டிருந்தது.
வலிக்குமென நினைத்தால் வலிக்கவில்லை “என்னடா பண்ண”
சிரஞ்சீவி “தொந்திரவு பண்ணிட்டு இருந்த காயத்தை தெச்சிட்டேன்”என்றான்
ஷிவானி “இதுக்கா இவ்ளோ அவசரப்பட்ட… இத நானே செய்றேன் தானே சொன்னேன்”
சிரஞ்சீவி “எப்போ இன்னும் ரத்தமெல்லாம் போய் வெளுத்து பல்லி போல ஆன பின்னடியா” கேட்டவன் “இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு நாளைக்கு நீ ஹாஸ்பிடல் போகலாம்ன்னு சொன்னாங்க”
ஷிவானி “சரி உங்க அப்பா எப்படி இருக்காங்க”
சிரஞ்சீவி “நாளைக்கு வார்டக்கு வந்துருவார் அடுத்து ரெண்டு மூணு நாள்ல வீட்டுக்கே வந்துருவார் சொன்னாங்க” என்று பதில் சொல்லியவன் “டெல்லி போய் உன் செர்டிபிகேட் வாங்கிட்டு வந்துடலாமா” கேட்டான்.பதறியடித்து வேண்டாமென பதில் சொன்னாள் ஷிவானி.
அவள் தெரிவித்ததை காட்டிலும் உண்மை இன்னும் ஏதோ இருக்கிறது என அறிந்தாலும் மனைவியை அவள் போக்கிலேயே விட்டான் சிரஞ்சீவி.
புவன் விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து “எனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிட்டியேடா பாவி…” என்றான்
சிரஞ்சீவி கூலாக “உன் கல்யாண ரிஷப்ஷன்லே ஜோடியா நின்னு அனௌன்ஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன் மச்சான்” என்றான்
புவன் “அடப்பாவி”
கபிலன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவருக்கு சிரஞ்சீவியுடன் ஷிவானியை பார்க்கும்போதெல்லாம் உள்ளம் குளிர்ந்தது.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.