கரிகாலனும், மதுமிதாவும் , அவள் வீட்டில் தான் தங்கி இருந்தார்கள். அவள் வீட்டில் கூட நடந்ததை சொல்ல வில்லை. இவர்கள் வீட்டார் தலையிட்டால் பிரச்சனை வேறு மாதிரி போய்விடும் அல்லவா… இரவு கிளம்ப வேண்டும். மாதவன் குடும்பமும் வந்து இருந்தது. அவன், மாமியார் வீட்டில் இருந்து தற்போது தான் வந்திருப்பான் போல… ரம்யா, மதுவை பார்த்ததும் பின் வாங்கி விட்டாள். வீணாக யாரோ ஒருத்தியை பேசி, தன் வாழ்வை ஏன் சிக்கலாக்க வேண்டும்.
சுந்தரம் தம்பதிகள் தங்கள் பிள்ளைகளை நிறைவாக வழி அனுப்பி வைத்தார்கள். மாதவன் செல்லும் போது காரில் பல பொருட்களை கொடுத்து அனுப்பி வைத்தார் மீனாட்சி.
“இதே மாதிரி மதுக்கும் எடுத்து வச்சையா மீனாட்சி. எங்க அதை காணம்…” கேள்வி கேட்டார் சுந்தரம். மகள் விசயத்தில் திரும்ப ஒரு தவறு நடந்து விட கூடாதே…
“இவன் கார்ல போறான் எடுத்து வச்சேன். மது பஸ்ல தான் போறா…. மாசமா இருக்குற பொண்ணு, இவ்வளவு தூக்கிட்டு போக முடியுமா…” சாதரணமாக தான் சொன்னார். நெருடல் கரிகால பாண்டியனுக்கு தான். உடன் பிறந்தவன் ஆடம்பரமாக வாழ, மது அடிப்படை வசதி கூட இன்றி வாழ்கிறாள். யார் பொருட்டு அவனால் தானே… இவ்வளவுக்கும் வசதியான பெண் தான் மது. பழைய ரம்யாவாக இருந்தால் குத்தி காட்டி இருப்பாள். தற்போது மதுவின் வாய்க்கு பயந்து ஓடுகிறாள்.
பஸ்ஸில் வரும் போது மது கணவன் முகத்தை தான் அடிக்கடி பார்த்து கொண்டு வந்தாள். அதை கண்ட கரிகாலன்,
“ என்ன மதும்மா?…”
“என்னை எதுவும் கேட்கல… எம் மேல கோபப்படுவீங்கன்னு நினைச்சேன்…”
“உண்மையான கோபம் எம் மேல தான் மது, உம் மேல இல்லை… இதையெல்லாம் நான் தான் பேசணும். என் வீட்டை பார்த்து நான் கேட்கணும்… எனக்காக எம் பொண்டாட்டி நிக்குறா… உங்களை நான் கௌரவபடுத்த தவறிட்டேன் மது. எனக்காக எவ்வளவு பேர எதிர்த்து நின்ன, என்னோட போராடி என்னைய ஜெயிக்க வச்சிருக்க… நான் யோசிக்கவே இல்லை மது. என் கௌரவம் தான் என் மனைவி, பிள்ளைக கௌரவம்ன்னு யோசிக்காம போனேன். இனி உங்களை பாதிக்கிற செயலை என்னைக்கும் நான் செய்ய மாட்டேன் மது…” மனைவியின் கைகளை பிடித்து கொண்டு உறுதியளித்தான் கரிகாலன்.
“எனக்கு வீடு வேண்டும் கரிகாலன்…” என்ற மனைவியை அதிர்ந்து பார்த்தான் கணவன்.
“நிஜமா தான். எனக்கு மட்டுமே சொந்தமான நம்ம வீடு வேணும். இன்னைக்கு நான் போய் உக்காரும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா… நாலு பக்கம் சுவர் தான், ஆன அது கொடுத்த சொந்தம். சொல்ல தெரியலை கரிகாலன். நமக்குன்னு ஒரு சொந்த வீடு நிச்சயமா வேணும். நிம்மதியான தூக்கம் வேணும்…” பேருந்தில் விளக்கு அணைக்க பட்டிருக்க, மெதுவாக மனைவியை நெஞ்சில் சாய்த்து கொண்டான்.
அடுத்தடுத்த நாட்களில் கரிகாலன் பணம் வேண்டும் என்றதில் உறுதியாக நின்றான். சின்ன மாயன் தான் இரு பக்கமும் பேச்சு வார்த்தை நடத்தினார். ஐந்து மாத வயிற்றோடு மது உண்ணாமல் சென்றது, ஊரில் பேசு பொருள் ஆகிவிட்டது. இதுவரை மது மீது இவர்கள் உருவாக்கிய பிம்பம் உடைந்தது. அடுத்த ஒரு மாதத்தில் கரிகாலன் வந்து பணத்தை வாங்கி கொண்டான்.
பணம் கொடுக்கும் போது சகுந்தலாவின் அழுகை கரிகாலனை பாதித்தது. ஆனால், தாலி கொடியை வித்த அன்று மனைவி அழுத அழுகை கண் முன் தோன்றி, மற்றதை பின் தள்ளியது. அன்று ஒரு நாள் மது, தரையில் இருக்கும் கறையை துடைக்க பாத்ரூம் ஆசிட் ஊற்றினாள். ஆனால், கறை போகாமல் டைல்ஸ் எறிந்து விட்டது. அம்பிகாவோடு நல்ல பழக்கம் தான் என்றாலும், அவர் கணவர் ஒத்து கொள்ள மாட்டார் அல்லவா… வீடு, வாடகை வீடு எனும் போது நயந்து தான் செல்ல வேண்டி இருந்தது. மது அத்தனை முறை மன்னிப்பு கேட்டு, டைல்ஸ்சை மாற்றி கொடுத்தும். கொஞ்சம் சுணக்கம் தான் அம்பிகா கணவருக்கு… அப்போதே கரிகாலன் முடிவு செய்து விட்டான். தன் மனைவியை சொந்த வீட்டுகாரியாக ஆக்குவது என்று… அதனால் தான் அழுத்தி பணத்தை கேட்டு வீட்டு வேலையை துவங்கினான்.
பணத்தேவை, சொந்த வீடு இல்லாமை என்று மதுவின் வளைகாப்பு ஆடம்பரமாக செய்ய வில்லை. அம்பிகா மற்றும் சுமதி கொண்டு தான் நடத்தினான். மதுவின் பெற்றோர் மட்டுமே வந்தார்கள். மது பிரசவத்துக்கு தாய் வீடு வந்து விட்டாள்.
அன்று கரிகாலன் மனைவியை பார்க்க மதுரை வந்தான். தற்போது எல்லாம் மாமனார் வீட்டோடு மட்டுமே வருகையை நிறுத்தி கொள்வான். தன் ஊர் பக்கம் செல்வதே இல்லை. தந்தையிடம் மட்டுமே பேச்சு. அவ்வளவு நேரமும் மசக்கையில் சோர்ந்து கிடந்தவள், கணவனை கண்ட பின் தான் முகமே தெளிந்தாள்.
அதுவரை படுக்கையை விட்டு கூட எழாமல் ஓய்வில் இருப்பவள். கணவன் வந்த உடன், அவசரமாக சமையலறையை ஆராய்ந்தாள். வேக வேகமாக இட்லி ஊத்தி, மீன் இருக்க, அதில் புளி தூக்கலாக போட்டு குழம்பு வைத்தாள். அடுத்த கால் மணி நேரத்தில் உணவு உண்ண கணவனை அழைத்து விட்டாள். அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், அவள் பெற்றோர் கண்டு கொண்டார்கள். கரிகாலனை கொண்டு மகள் சமையலை ருசி பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மார்கழி திங்கள் முதல் தேதியில் கரிகாலனின் இளவரசி வந்து விட்டாள். கரிகாலன் ஜாடை தான் அதிகம். அதில் கொஞ்சம் சுணக்கம் தான் மீனாட்சிக்கு. முறையாக வீட்டுக்கு தகவல் கொடுத்தான் கரிகாலன்.
அதற்கு தான் காத்திருந்தோம் என்பது போல வந்து விட்டார்கள் கரிகாலன் குடும்பம். கரிகாலன் என்ற ஒருவனுக்காக அவர்களை அனுசரிக்க தான் வேண்டும். அதில் தெளிவு தான் மது, அமைதியாக இருந்து கொண்டாள்.
பாண்டி, வசந்தி அளவுக்கு கருப்பாயி குழந்தையோடு ஒட்ட வில்லை. தலை முட்டு எனக்கு ஆகாது, முப்பது கழியட்டும் என்று விட்டார். அவருக்கு மகன் ஒருவன் மட்டுமே வேண்டும். அவனின் ஒதுக்கம் தான், அவரை தள்ளி கொண்டு வந்தது. தன் கைக்குள் இருக்கும் மகன், தன்னை ஒதுக்குவான் என்று ஒரு நாளும் நினைக்க வில்லை. அவனின் பாராமுகம் தாள முடியாமல் தான் வந்து விட்டார்.
கரிகாலன் டீ வாங்கி வந்து கொடுத்தான். மது எப்படியோ, சின்ன பாண்டிக்காக அண்ணன் உறவு வேண்டி, வசந்தி அத்தை உறவை காத்து கொண்டாள். மதுவும் கணவன் என்ற ஒருவனுக்காக அவர்களை இழுத்து கொண்டாள். வேற வழி இல்லை. வெட்டி எறியும் உறவும் இல்லை. மனதில் ஆயிரம் இருந்தாலும், வெளியில் அமைதி காத்து கொண்டார்கள். வெளியில் வாங்கி வந்த டீயை கூட கருப்பாயி தொட வில்லை.
இதில் பெரிய பாண்டி குடும்பம் வரவில்லை. மாலை போட்டு இருக்கானாம்… வந்தவர்கள் கிளம்பி விட்டார்கள். கருப்பாயி தான், “ நீயும் எங்களோடு வா சின்ன பாண்டி… அண்ணன் மாலை போட்டு இருக்கான். நீ இங்க இருக்க கூடாது. தலை முட்டு, சாமி குத்தம் ஆகிபோகும். உனக்கு ஆகாது…” என்ற தாயை நிதானமாக பார்த்தவன்.
“என் பிள்ளை எனக்கு ஆகாத…” என்றான் கோபத்தை மறைத்து.
“ஆமா, தலை பிள்ளை. நம்மளை எப்படி சேரும். தாய் வீடு தான் பார்க்கணும்… உங்கண்ணனும் மாலை போட்டு இருக்கான். ஒரே குடும்பம் வேற… இது சரியில்லை தீட்டு சின்ன பாண்டி. நீ வா எங்களோட…” என்றார் தெளிவாக.
“என் பிள்ளை, எனக்கு எப்படி தீட்டு ஆகும்… என் இரத்தத்தை நானே தீட்டுன்னு ஒதுக்க முடியுமா… நீங்க என்னை பெத்தவங்க, உங்க கிட்ட வார்த்தை மீற விடாதீங்க…” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான்.
கருப்பாயிக்கு கண் கலங்கி விட்டது. அவரின் சின்ன மகனை ஒதுக்க மட்டும் அவரால் முடியவே இல்லை. தன் பிள்ளைகள் ஒற்றுமை இன்றி பிரிந்து இருப்பதை ஏற்கவும் முடியாமல் தவித்தார்.
நள்ளிரவு பால்கனியில் நின்று மழை விட்ட பின் ஒன்றிரண்டு தூறலோடு வரும் குளிர் காற்றை, உடல் குளிர அனுபவித்து கொண்டிருந்தாள் மதுமிதா. இன்று தான் கணவன் வருகிறான். அவனை பார்த்தே இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது. வீட்டு வேலை இழுத்து கொண்டதாம். தங்களை போல் அன்றி, தங்கள் பிள்ளை சொந்த வீட்டில் தான் குடியேற வேண்டும் என்று அவ்வளவு ஆசை. அத்தோடு பிள்ளை பெற்ற உடம்பு என்று கரிகாலன் வருவதை மறைமுகமாக சுட்டி காட்டி விட்டார் மீனாட்சி. அதனால் தான், அவன் வரவு குறைந்து போனது. தொடர் விடுமுறை இருக்க, இன்று தான் வருகிறான்.
இந்த மாதிரி ஏகந்த இரவு இவளை பித்தம் கொள்ள வைக்கும். பால்கனி கம்பியில் படர்ந்திருந்த மல்லிகை பந்தல் வாசமும், மழை நின்ற பின் வரும் மண் வாசமும் உள்ளத்து உணர்ச்சியை தட்டி எழுப்ப, அங்கிருந்த மர ஊஞ்சலில் சாய்ந்து சுகமாய் கனவுகளில் மிதந்திருந்தாள் பெண்.
ஏதேதோ சுகமான கனவுகளும், கற்பனைகளும் மனதில் வலம் வர, மனம் உற்சாகத்தில் பொங்கியது.
இரவு – தனிமை – குளிர் – இளைய ராஜா பாடல் என்று தன்னை மறந்து, என்னவென்று பிரித்தறிய சுகத்தில் திளைத்து இருந்தவளை களைத்தது ஒரு சத்தம். யாரோ மாடி ஏறி வரும் சத்தம் கேட்க. இனிய கனவு கலைந்து போன கடுப்போ டு வேகவேகமாக பால்கனி கதவை மூடியவள், அவசரமாக உள்ளே வந்து போர்வையை இழுத்து போர்த்தி படுத்து கொண்டாள்.
“மது” என்று ஒரு குரல் கதவை தட்ட,
அம்மா தான் என்று சலிப்பாக எண்ணியபடி கதவை திறந்தாள் மகள்.
கையில் பால் டம்ளரோடு நின்றவர், “ மழை திரும்ப வரும் போல, குளிர் காத்தும் சேராது. இந்த மாதிரி நேரத்தில போய் நனைஞ்சுட்டு நிக்காத இழுவை வரும். இந்தா பால் சூடா இருக்கு, குடிச்சுட்டு படுத்துக்க” என்று அதட்டலோடு சொல்லியவர் கீழே செல்ல.
நல்ல பிள்ளை போல அமைதியாக தலையாட்டியவள், தாயின் தலை மறைந்ததும் நேரம் பார்க்க.
“ ஐயோ! ரொம்ப லேட் ஆச்சே!” என்று புலம்பிய படி. குளிர் சூழலையும் பொருட் படுத்தாது வேக வேகமாக ஒரு குளியல் போட்டு,ஈர துண்டை தலையில் சுற்றி கொண்டு உடையை ஆராய்ந்தாள்.
பத்து நிமிச பட்டிமன்றத்தில் தன்னவனுக்கு பிடித்த காபி கொட்டை கலரில் சாப்ட் சில்க் சேரியும், குடை சிமிக்கியோடு கையில் கண்ணாடி வளையல் குடியேற, முதுகு வரை மட்டுமே இருக்கும் கட்டை கூந்தலில் ஜாதி மல்லி பூவை சூடி தன் அலங்காரத்தை முடித்தவள். லிப்ஸ்டிக் மட்டும் போட வில்லை, அது தன்னவனுக்கு பிடிக்காது. முத்தம் கொடுக்கும் போது, அவன் முகம் முழுக்க சாயம் போல் ஒட்டுவதால் விரும்புவதில்லை.
நேர்த்தியாக தன்னை அலங்கரித்த பின். கொலுசு, வளையல் சத்தம் கேட்காதவாரு பூனை அடி வைத்து கீழே சென்றவள் ஹாலில் அமர்ந்து கொண்டாள்.
மெதுவாக கதவை தட்டும் சத்தம் கேட்க, பதறி போய் வேகமாக வந்து கதவை திறந்தாள். அவளுக்கு பயம், எங்கே உறங்கும் தாய், தந்தை விழித்து விடுவார்களோ என்று!
கதவை திறக்க உள்ளே வந்தவன் அவளை பார்த்து அதிர்ந்து நின்றான். சத்தம் கேட்டு உறங்கி கொண்டிருந்த மதுவின் அம்மா, அப்பாவும் எழுந்து வர பதறி போனாள் மதுமிதா.
வந்தவர்களும் மகளின் கோலம் கண்டு அதிர்ந்து நிற்க. அவளுக்கு தான் முகத்தை எங்கே கொண்டு வைப்பதென்று தெரியவில்லை.
அதிர்ந்து பார்த்தவன் கொஞ்சம் வெட்கமும், தயக்கமும் மேலிட மாமனார், மாமியாரை பார்த்தான். தங்கள் அதிர்வை மறைத்து வீட்டின் மாப்பிள்ளையை வரவேற்றனர்.
நலவிசாரிப்பு முடிந்து சத்தமில்லாமல் கணவன் மாடி செல்ல. மாட்டிக்கொண்டது என்னவோ மது தான். திருதிருவென விழித்த படி மது நின்றாள்.
ஒரு சின்ன சிரிப்போடு உள்ளே சென்றார் சுந்தரம். மது தயங்கியே தாய் முகம் காண, அங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“ என்னடி கூத்து இது? ராத்திரி பதினொன்று மணிக்கு மோகினி மாதிரி ரெடியாகி நிக்குற!” என்று கடுப்போடு தாய் மீனாட்சி கேட்க.
அவரை அசால்டாக பார்த்தவள், “ ரெண்டு புள்ளை பெத்துட்ட! உனக்கு தெரியாதா?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
“அடி செருப்பால! நாயே ! பேச்சை பாரு பேச்சை. டாக்டர் என்ன சொன்னாங்க. அப்ரேசன் பண்ணின உடம்பு பாத்து இருக்கணும்ன்னு சொன்னாங்க தானே. அதை மறந்துட்டு மூணு மாசத்துக்கு அப்புறம் புருசன் வாறன்னு” மேல சொல்ல முடியவில்லை மீனாட்சிக்கு. மகளே என்றாலும் எப்படி சொல்ல.
தற்போது தான் குழந்தை பெத்த உடம்பு, பார்த்து ஜாக்கிரதையாக தாங்க. இவள் என்னடா வென்றால்?
“இங்க பாரு மது! ஒரு ஆறு மாசமாது போகட்டும். முட்டு பிள்ளைன்னு உடனே நிக்கும். மூணு வருசமாச்சும் தள்ளி போனும் பார்த்துக்க. ஏற்கனவே டாக்டர் சொன்னது தானே, நியி என்னன்னா இந்த கூத்து எடுக்குற!” இதற்கு மேல் வெட்கம் களைந்து மகளிடம் சொல்ல முடியவில்லை.
தாய் சொல் எல்லாம் அவளுக்கு ஏறவே இல்லை. மூன்று மாதத்திற்கு பின் பார்க்கும் கணவன் முகமே கண் முன் நின்றது.
மீனாட்சிக்கு ஆச்சர்யம் தான். இவனோடு வாழவே மாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணா இது!…
பாலை சூடு செய்து தங்கள் அறைக்கு எடுத்து செல்ல, மகள் தமிழிசையை பார்த்தவன். பின் குளித்து உடை மாற்றி, சற்று முன் மது ரசித்த பால்கனியில் நின்று கொண்டான். மகளுக்கு பெயர் கூட அவன் தான் தேர்வு செய்தான்.
விட்ட மழை சிறு தூறலாக குளிர் காற்றோடு வீச, வெட்கமும், தயக்கமுமாக மனைவி வருவதை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு கரிகாலனுக்கு.
அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, கீழ் இருந்து மேல் வரை மனைவியை பார்த்தவன் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான்.
வெட்கம் போய் கோபம் குடி கொள்ள, “ எதுக்கு இந்த சிரிப்பு?” என்று கையை ஆட்டி கடுப்பாக மது வினவ.
“எதுக்கு இந்த அலங்காரம்” எதிர் கேள்வி வந்தது.
“ம்ம்… மழையில போய் நின்னு மேக்கப் மறைஞ்சு போகுதான்னு பார்க்க தான்” எகத்தாளமான பதில் வந்தது.
பாண்டியின் புன்னகை விரிந்தது . தன் கை கொண்டு மனைவியின் கையை சுண்டி இழுக்க, பூ போல அவன் மேலே விழுந்தாள்.
அவளை தன்னோடு சேர்த்து அணைத்து முகர்ந்து அவள் வாசம் பிடித்தவன்.
“ம்ம்… எவ்வளவு நாள் ஆச்சு!” என்று கிறங்கி போய் அவன் கூற.
“ம்ம்ம்ம்… எட்டு மாசம் பதிமூனு நாள்” என்று கணக்கை சரியாக சொன்னாள்.
பாண்டியன் சத்தமாக சிரித்து விட்டான்.அவசரமாக அவன் வாயை பொத்தியவள்.
“ யோவ் வாயை மூடுயா! உன் சத்தம் கேட்டு, எங்கம்மா மேலேறி வந்து என்னை கூட்டிட்டு போனாலும் போய்ருவாங்க” என்று கணவனை அதாட்டியவள், அவனோடு உடல் அழுந்த ஒன்ற.
தவித்து போனான் பாண்டியன், “ மது பிரசவம் முடிஞ்சு மூணு மாசந்தான் ஆகியிறுக்கு. என்னை உசுப்பேத்தி விடாத!. அப்புறம் பஞ்சாயத்து உனக்கு தான்” என்று நயந்த குரலில் கணவன் சொல்ல.
அதை காதிலே வாங்காமல் கணவன் மார்பில் தஞ்சம் புகுந்தவள். தங்களின் ஏகாந்த பொழுதின் இனிமையை கூட்ட, கணவன் கற்று கொடுத்த இசையை கையில் எடுத்தாள்.
கணவனை உருக்கும் வீனையாக தான் காலையில் தேடி தேர்வு செய்த பாடலை மீட்ட தொடங்கினாள். தன் சேலை முந்தியை கொண்டு கண் மட்டும் தெரியுமளவு கணவனின் முகம் மறைதவள்….,
என்ன மாதிரியான அழைப்பு இது. ஆறடி ஆண் மகன் தன்னையே வெட்கம் கொண்டு குறுக வைத்து விட்டாளே, பாவி!… மனைவியின் காதல் உருக வைக்க தன்னைப்போல் பாடல் அவனில் இருந்தும் வெளி வந்தது.
“நம்மை போல் இன்பம்…!! அடைஞ்சதில்லை…
நா நூறு முத்தம் கொடுத்ததில்லை….!!
ஆனாலும் இன்னும்…
மிச்சமிருக்கு…!!
ஆயிரத்து நுத்தி எட்டு வகை இருக்கு…!!
போதும்.. போதும்.. எனக்கு
ஐயோ…! பொறுமையில்லை
எனக்கு…! நீ கட்டில் மேல வீடு கட்ட…! நானும் எங்கே
ஈடு கட்ட…!! பூ போல உடம்பெனக்கு…!!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.