அவன் வசித்த ஊருக்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்றார் போல் எப்பொழுதும் அடர்ந்த வண்ணத்திலே கால்சராயும், மிடுக்கான மேற்சட்டையும் அணிந்து இருப்பவன், இன்றோ இளம் மஞ்சள் வண்ண சில்க் காட்டன் சட்டையும் அதே நிறத்தில் சன்னக் கரை வைத்த சாம்பல் வண்ணத்தினாலான பருத்தி வேஷ்டியும் அணிந்து, ஆறடி உயரத்தில் கன கம்பீரமாக அந்த அறையில் இருந்த கண்ணாடியின் முன்னே நின்றவன், அதில் விழுந்த தன் விம்பத்தை பார்த்து தனக்குத் தானே, “நாட் பேட்…” என்று சொல்லிக்கொண்டான் சிபிரஞ்சன்.
அதைக்கேட்டிருந்த அக்கண்ணாடியோ, “ஏன்டா… என் கண்ணே பட்டுடும்போல இவ்ளோ அழகா இருந்துட்டு நாட் பேடா? என்ன இருந்தாலும் உனக்கு இவ்ளோ தன்னடக்கம் கூடாதுடா?” என்று புலம்பத் தொடங்கியது.
அதன் புலம்பலை எல்லாம் சட்டையே செய்யாது, “புல் (காளை) சப்டியூட் பண்றதுக்கு இவ்ளோ ஸ்மார்ட்டான ட்ரெஸ்ஸா?” என்று முனுமுனுத்தபடி தன் முழுக்கைச் சட்டையினை முட்டிவரை மடித்து விட்டு மீண்டும் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்தவன், சமீப நாட்களின் பழக்கமாய் மீசையையும் நீவி விட்டே அங்கிருந்து அகல…
அவன் சட்டைப் பையில் இருந்த கைபேசியோ அவனது உடன்பிறப்பின் அழைப்பைக் காட்டி அதிர்ந்தது.
அதில் நின்று நிதானித்தவன் கைபேசியை எடுத்து உயிர்பிக்க, “ஹாய்டா சிபி… ஹவ் ஆர் யூ?” என்று திரையில் தோன்றினான் ஸ்ரீரஞ்சன்.
“பைன் ஸ்ரீ… நீ எப்டி இருக்க?” என்று அவனுக்கு பதில் கொடுத்தவன், “ஹௌ இஸ் ஒர்க் கோயிங் ஆன்?” என்று வினவ…
“குட் அண்ட் ஸ்மூத்டா.” என்றவன் அப்பொழுது தான் சகோதரனின் உடையை கவனித்து, “ஹேய் சிபி வாவ்டா…! இந்த காஸ்ட்யூம்ல ஒரிஜினல் வில்லேஜ் பீப்பில் போலவே இருக்க. சோ ஹாண்ட்சம்டா…” என்று கூறியவன்,
“வாட் அபௌட் நெக்ஸ்ட் டா? இப்போ என்ன டாஸ்க் வைக்க போகுதுங்க அந்த வில்லேஜ் பீப்பில்ஸ்?” என்றான் சற்று சலிப்பான குரலில்.
அதில், “ஸ்ரீ…” என்று அதட்டியவன், “ஐ ஹேவ் ஆல்ரெடி அட்வைஸ் யூ டூ நெவெர் ஸ்போக் லைக் தட் அபௌட் எல்டெர்ஸ் ஸ்ரீ. கிவ் தெம் ரெஸ்பெக்ட். மோரோவர் தேய் ஆர் யுவர் ஃபியூச்சர் இன் லாவ்ஸ்.” என்று கண்டனக் குரலில் கூறி விட்டு, “திஸ் ப்ளேஸ்ள இன்னிக்கு ஜல்லிக்கட்டு பெஸ்டிவலாம். அதுல விடுற காளையை அடக்குனாதான் வீரமான ஆம்பிளைன்னு ஒத்துப்பாங்களாம்.” என்று சொல்ல…
அதைக்கேட்டு, “வாட்…! காளையை அடக்கணுமா?” என்று ஏகமாய் அலறியவன், “ஒரு வில்லேஜ் கேர்ள்ள லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் எவ்ளோ டேஸ்கு தான் இவங்க பேச்சை கேட்கணுமோ? இவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்களா? இல்ல அவங்க வீட்டு கௌ ஷெட்கு ஆள் எடுக்குறாங்களா?” என்று அழாத குறையாய் அங்கலாய்த்தான்.
கூடவே, “தாங்க் காட் சிபி… வி ஆர் ட்வின்ஸ். அதர்வைஸ் ஐ டோன்ட் நோ வாட் ஐம் அப் டு. உனக்கு பதிலா நான் மட்டும் வில்லேஜ்கு போயிருந்தேன் உங்க பொண்ணும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு ஒரே நாள்ள மும்பைக்கு பிளைட் ஏறிருப்பேன்.” என்றும் புலம்பத் தொடங்கியவன் சட்டென்று நிறுத்தி, “சிபி… உனக்கும் இது போல விஷயம் எல்லாம் பழக்கம் இல்லிலடா? கேன் யூ மேனேஜ்? காளை உன்ன முட்ட வந்தா என்னடா பண்ணுவ?” என்று கவலை குரலில் பாசமலர் படமும் ஓட்டத் தொடங்கி இருந்தான் ஸ்ரீரஞ்சன்.
சகோதரனின் அந்தக் கூற்றில் அத்துணை நேரம் இருந்த இறுக்கம் மறைந்து சிறிதான புன்னகையை உதடுகளுக்குக் கொடுத்தவன், “டோன்ட் ஒர்ரி ஸ்ரீ. புல் சப்டியூட் பண்றது பத்தி ஒன் வீக்கா ட்ரைனிங் எடுத்துருக்கேன். சோ ஐ வில் மேனேஜ். சீக்கிரமே மேரேஜ்க்கு சம்மதம் வாங்கிடலாம்.” என்று பலவாறு சகோதரனைத் தேற்றிவிட்டு அலைபேசியை அணைத்தவன், அறைவாயிலை நோக்கி எட்டு வைக்க…
அங்கோ, ‘ப்ளீஸ் ரஞ்சன் சார்… காளையை அடக்கப் போகாதீங்க.’ என்பது போன்ற இமாலய தவிப்பை விழிகளில் தேக்கி, அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் அவன் இரட்டையின் காதலி மதுரிமா. தற்சமயம் அவன் காதலியாக.