“நாங்க பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் நீங்க வரப்ப தான் வருவீங்கன்னு தெரியும் மாப்பிள்ளை. எதுக்கு இதெல்லாம்?…” என்றான் கிஷோர்.
“ம்க்கும், பழனிக்கு பால்காவடி எடுக்காரு. ஏன் ரெண்டுமாசம் தள்ளி வச்சு கல்யாணம் செஞ்சா என்னவாம்? அதை செய்ய வேண்டியது தான?…” என்று கஸ்தூரி சொல்ல கிஷோர் அவர்களுக்கிடையில் மாட்டிக்கொண்டான்.
“அதானே?…” விஷ்வாவும் பார்க்க,
“வந்தன்னைக்கேவா? வேணும்னா இன்னொருக்க உங்க முன்னாடி ஒரு கல்யாணம் பன்றேன்…” என சொல்ல பாதி கேட்டபடி அருணா வந்தவர்,
“உன்னைய இப்படித்தான் வளர்த்தேனா? இப்பத்தான கல்யாணம் முடிஞ்சிருக்கு. அவருக்கிட்ட போய் இன்னொரு கல்யாணம் பன்றேன்ற. என்ன நினைப்பாரு?…” என கண்டிக்கிறேன் பேர்வழி என்று பேசிவிட கஸ்தூரியும், விஷ்வாவும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.
“பாத்துக்கோங்கத்த உங்க பிள்ள லச்சணத்த. அப்பறம் எம்மவன் அப்பிடி இப்படின்னு பொட்டிய தூக்கிட்டு என்னை கவுக்க வர கூடாது சொல்லிட்டேன்…” என்று கஸ்தூரி சொல்ல,
“தேவையடா இதெல்லாம்?…” என்றார் அருணா.
“என்னத்த இப்படி சொல்லிட்டீங்க? அவர் புரட்சி பண்ண நினைக்காரு. நல்லது தானே? என்ன கிஷோர்?…” என்று அருணாவிடம் ஆரம்பித்து கிஷோரிடம் வர அருணா பயந்து போனார்.
“மாப்பிள்ள என்ன இது? அவன்தான் கூரில்லாம பேசறான்னா…”
“நானும் கூரில்லாம கேட்கறேன்னு சொல்ல வரீங்களா?…” என்று விஷ்வாவும் சாதாரணமாய் பேச அருணாவுக்கு நெஞ்சே நின்றுவிட்டது.
“விஷ்வா…” என சத்தம் போட்டாள் வர்ஷினி.
“ஹேய் வர்ஷி, அவங்க சொன்னதுக்கு தான் நானும் கேட்டேன்…” என்று விஷ்வா சிரிக்க,
“நீ உள்ள வா உன் வாயில நாலு வப்பு வைக்கறேன்…” என்று மகனை மிரட்டினார் அருணா.
“ஏன் இங்க எம்முன்னால என் புருஷனுக்கு அந்த வப்பு வச்சுத்தான் பாருங்களேன்?…” என வரிந்துகட்டிக்கொண்டு நின்றாள் கஸ்தூரி.
“என்னடி நீயும்?…” அருணா ஓய்ந்துபோனார்.
“ம்மா, அவ உங்ககிட்ட என்னை அடிவாங்க வைக்க ப்ளான் பன்றா. நீங்க போங்க…” என்று அருணாவை போக சொல்ல,