யாரும் எதிர் பார்க்கவில்லை.. மனீஷ் அப்படி தன்னை விட அனைத்து வகையிலும் கீழ் நிலையில் இருக்கும் பெண்ணிடம்..
“ வாயால் மட்டும் மன்னிப்பு கேட்டால் போதுமா..? இல்லை காலில் சாஷ்டங்கமாக விழ வேண்டுமா..? கேட்பான் என்று..
முதலில் இவன் கிண்டல் செய்கிறானா என்று தான் அவன் வக்கீலும், தேவியின் வக்கீலுமே அவனை பார்த்து இருந்தனர்..
ஆனால் அவன் முக பாவனையில் சிறிதும் கிண்டல் இல்லை.. உண்மை நீ எது செய்ய சொன்னாலும், நான் செய்ய தாயார் என்று தான் தெரிந்தது..
தேவி கை கட்டி கொண்டு கெத்தாக அவனை பார்த்த வாறு.. அங்கு இருக்கும் நான்கு சுவரை சிட்டு காட்டி.. “ இதற்க்குள் எல்லாம் கிடையாது..” என்று தாங்கள் பேசிக் கோண்டு இருந்த வக்கீல் அறையை சுட்டி காட்டி கேட்டவளுக்கு பதில் தான் தராது, தன் கை பேசியை எடுத்து..
“ மீடியா முன் என்றால், எந்த சேனல் என்று நீ முடிவு செய்து விட்டாயா…? “ என்று கேட்டு கொண்டே தற் சமயம் புகழ்மிக்க இரு டிவி சேனலில் பெயரை சொல்லி..
“ நான் இவங்களை அழைக்கிறேன்.. நீ வேறு என்றால் அவங்களையும் அழைத்து கொள்.. பிரச்சனை கிடையாது.. விழுறது என்று ஆகிடுச்சி.. அதுவும் மீடியா முன்.. அது ஒரு சேனலா இருந்தால் என்ன.. ஒன்பது சேனலா இருந்தால் என்ன..? எப்படியும் வைத்து செய்துட போறாங்க…” என்று மிக சாதாரணமாக பேசிக் கொண்டு போனவனையே யோசனையுடன் பார்த்து இருந்தாள் தேவி..
தேவிக்கு மனீஷ் பேச பேச…மனதில் குழப்பம் தான்.. இந்த குழப்பம் இதோ இப்போது இவன் பேசியதால் வந்தது கிடையாது..
நீதி மன்றவளாகத்தில் நுழைந்தது முதலே வந்து விட்டது… நீதி மன்றத்தின் வளாகத்தினுல் நுழையும் போது தெரியாது.. மனீஷ் வந்து இருக்கிறான் என்பது..
இது எல்லாம் அவனுக்கு ஒரு விசயமே இல்லை.. செல்லம்மா அவனை பற்றி சொன்னதில் புரிந்து கொண்டது..
தன் வக்கீல்.. “ நீ கொஞ்சம் கவனமா பேசும்மா…பெரிய இடம்.. அந்த இன்ஸ்பெக்டர் சொன்னதினாலே தான் உன் கேசை எடுத்தேன்.. ஆனால் அவரே வருவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை..” என்று சொன்ன வக்கீல் மனீஷ் நின்று கொண்டு இருந்த பக்கம் பார்வையை செலுத்தினார்..
வக்கீல் சென்ற பார்வையை தொடர்ந்து தேவியின் பார்வையும் செல்ல அங்கு ஒய்யாரமாக காரின் மீது சாய்ந்து கொண்டு தன்னையே பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்த தேவியின் பார்வை சட்டென்று அவன் கண்களை தான் சந்தித்தது..
பின் பார்த்த வேகத்தில் உடனே திரும்பி கொண்டவள்.. இவன் இந்த பார்வையும், செல்லம்மா இவனை பற்றி சொன்னதில் ஒன்று கூட ஒத்து போகவில்லையே என்று தோன்றியது..
பின் அதை பற்றி அதற்க்கு மேல் சிந்திக்காது.. மனீஷ் வக்கீல் என்ன என்ன கேள்வி கேட்பார்.. அதற்க்கு தான் என்ன சொல்ல வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை மனதில் வரிசைப்படுத்திக் கொண்டாள்..
மனீஷ் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஏதாவது தன்னை தரம் தாழ்த்தும் படி கேள்வி கேட்பான் என்று நினைத்து தான் சென்றாள்.
ஆனால் அது போல எதுவும் பேசாது.. ஏன் மனீஷின் வக்கீல் சும்மா ஒப்புக்கு சப்பாவாக அமர்ந்து இருப்பதை பார்த்ததுமே தேவி மனீஷை தான் பார்த்தது..
அப்போதும் அவனின் பார்வை தேவி மீது தான்.. தன்னையே பார்க்கிறான் என்றால், அது தவறான பார்வை இல்லை.. அதையும் அவள் நன்கு உணர்ந்தாள்..
சின்ன வயதில் இருந்தே தனித்து இந்த உலகில் போராடும் பெண்ணுக்கு தெரியாதா..? ஆண்களின் வக்கிர பார்வையில் இருக்கும் வித்தியாசத்தை… மனீஷின் அந்த பார்வையில் தேவி ஒரு மரியாதையை கண்டாள்..
மரியாதை என்றால் அவன் பார்வை தன்னை மரியாதையோடு பார்ப்பது பார்த்தவளுக்கு, அதற்க்கு மேல் அவனை பார்க்காது தன் கேசில் தன் கவனத்தை திசை திருப்பி விட்டாள்..
இருந்தும் செல்லம்மா இவனை பற்றி சொன்னதற்க்கும், இவனுக்கும் ஒத்து போகவில்லையே.. மீண்டும் குழப்பம்.. இருந்தும் முன் நினைத்தது போல் தான் மனீஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றது..
ஆனால் இப்படி காலில் விழவா.. அதுவும் மீடியா முன்.. அவன் பேசியது விளையாட்டு பேச்சு இல்லை என்று நிரூப்பிக்கும் வகையாக அவன் சொன்ன படி தமிழ் நாட்டின் முன்நிலையில் இருக்கும் மீடியாவை அழைத்ததோடு.. காலில் விழவா..? என்று மூடியா முன் கேட்க..
சிரித்துக் கொண்டே “ நீ சொன்னா சரி தான்..” என்று இரு கை கூப்பி வணங்கியவாறு..
“ இந்த சின்ன பெண்.. என் கடையில் அவமானப்பட்டதிற்க்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்..” என்று அழகான தமிழில் சொன்னவனை மீடியா வளைத்து வளைத்து அவனை சுற்றி கேமிரா வந்து போக..
அவனின் முகத்தின் அழகும்.. அதில் சின்னதாக மின்னி மறைந்த அந்த சின்ன சிரிப்பும்.. அதுவும் சின்ன பெண்ணிடம் எந்த ஈகோவும் பாராது கேட்ட அந்த மன்னிப்பு… செல்லம்மாள் அசிங்கப்படுத்த என்று செய்த அந்த செயலே அவனை பெருமை அடைய செய்து விட்டது..
அனைத்தும் முடிந்து தேவி செல்லம்மா தனியாக சந்தித்து கொண்டார்கள்… இப்போது ஒளிவு மறைவு இல்லாது பொது இடத்தில் தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது…
செல்லம்மா கடந்த இரண்டு நாளாக இந்த மீடியா மனீஷை பெரிய ஹீரோவாக ஆக்கி… பணத்தில் செறுக்கு இல்லை.. பணிவு.. இது தான் எந்த பின்புலமும் இல்லாது தனித்து வெற்றி அடைய காரணம் என்று மனீஷின் அந்த சிரித்த புகைப்படத்தை போட்டு.. அதுவும் அனைத்தும் செய்திதாள்.. பத்திரிக்கை.. ஏன் இப்போது வளைதளத்தில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் அவனின் சிரித்த புகைப்படத்தை தன் முகநூலில் பதித்து..
“ என் அடுத்த கதையின் நாயகன்..” என்று புக் செய்யும் அளவுக்கு அவன் பெரிய நாயகனாக உலா வர ஆரம்பித்து இருந்தான்..
.. தவறு தவறு.. செல்லம்மாள் ஆக்கி விட்டாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
இப்போது அதை பற்றி தான் செல்லம்மா.. “ நான் சொல்லலே அவன் கேடி பார்த்தியா.. நாம என்ன செய்ய நினைத்தோம் அவன் என்ன செய்து முடித்து இருக்கிறான் என்று..”
இதையே தான் செல்லம்மா இந்த காபி ஷாப்பில் வந்ததில் இருந்து திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறாள்..
ஆனால் அதற்க்கு உண்டான எந்த எதிர் வினையும் தான் தேவியிடம் இருந்து வர இல்லை..
இதை சிறிது நேரம் கழித்தே செல்லம்மாள் உணர்ந்தாள்.. அதுவும் வந்தது முதல் தான் மட்டுமே பேசிக் கொண்டு இருக்க.. ஒரு வார்த்தை கூட பேசாது தன்னையே யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்து..
“ தேவி.. ஏன் அமைதியா இருக்க..?” என்று கேட்டவள். பின் ஏதோ யோசனை வந்தவளாக..
“ ஏய் அவன் மீடியா முன் அப்படி பேசிட்டு அப்புறம் அப்புறம் ஏதாவது..?” என்று பதட்டத்துடன் கேட்டவளுக்கு.. பதில் அளிக்காது சிரித்த தேவி..
தன் எதிரில் இருந்த தண்ணீரை கொஞ்சமாக பருகியவள் தன் உதட்டின் மீது இருந்த தண்ணீரை டிஷ்யூ பேப்பரை கொண்டு ஒத்தி எடுத்து விட்டு…
“ எங்க அப்பா என்னை பார்க்கும் போது அவர் கண்ணீல் அன்போடு பெருமை தான் அதிகம் இருக்கும்.. அதை நான் உணர்ந்து இருக்கேன் செல்லம்மா.. அதே பார்வை.. அதே உணர்வு ரொம்ப வருஷம் கழித்து நான் பார்த்தேன்..” என்று பேச பேச.. இது என்ன சம்மந்தம் இல்லாது பேசுகிறாள்.. என்று தான் செல்லம்மா பார்த்திருந்தாள்..
ஆனால் கடைசியாக தேவி சொன்ன.. “ மனிஷின் பார்வையில்..” என்ற வார்த்தையின் செல்லம்மா..
“ உன் கண்ணை நல்ல கண் டாக்டாரா பார்த்து செக் பண்ணிக்கோ..” என்று சொன்னவளிடம்..
“ நல்ல வேளை கண் டாக்டர் என்று சொன்ன.. நான் இதை சொன்னா நீ என்னை பைத்தியக்கார ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்வ என்று நினைத்தேன்..” என்று தேவி சொல்ல..
“ நீ பேசுவதை பார்த்து எனக்கு லேசா அந்த சந்தேகமும் இருக்கு..” என்று கிண்டல் பேசியவள்.. பின் அதை எல்லாம் விடுத்து…
“ தேவி.. நீ அவன் பாசமா பார்த்தான்.. மரியாதையா பார்த்தான் என்று தத்து பித்து என்று உளறிட்டு இருக்காதே.. அவன் நீ சொல்வது போல நல்லவன் கிடையாது..” என்று சொன்னதும் தேவியிடம் மீண்டும் மெளனமே..
இப்போது செல்லம்மாளுக்கு பயம் தட்டி விட்டது.. சும்மா இருந்த பெண்ணை இதில் இழுத்து விட்டு அவளின் மனதை கலைத்து விட்டோமோ என்று..
பாவம் செல்லம்மாளுக்கு தெரியவில்லை.. தேவி தெளிவாக தான் இருக்கிறாள்.. பாசம் என்ற முகமூடியில் அவள் தான் ஒரு தெளிவு இல்லாது இருக்கிறாள் என்பதை தேவி தன் மெளனத்தை உடைத்து விளக்கினாள்..
“ ஒரு பெண்ணை வலுக்காட்டாயம் படுத்தினாலோ.. இல்லை அவளை சுய நினைவு இழக்க வைத்து அவளை தொட்டா தான் அது ரேப்..
பதினெட்டு வயது முடிவடைந்து அவளும் உடன் பட்டா அது ரேப் கிடையாது..” என்றவளின் பேச்சை செல்லாம்மா எந்த இடையூறும் செய்யாது கேட்டு கொண்டு இருந்தாள்..
தேவியின் மெளனத்தை விட.. இந்த பேச்சு அவளுக்கு பரவாயில்லையாக தோன்றியதோ என்னவோ…
“ உன் அண்ணனுக்கு பதினெட்டு முடிந்து வருடங்கள் பல கடந்து விட்டது என்று நான் நினைக்கிறென்..” என்று சொல்லவும் தான் செல்லம்மாளுக்கு தேவியின் பேச்சி எதை நோக்கியது என்று புரிந்தது…
அதையும் அவள் மறுக்கவில்லையே.. தன் அண்ணன் செய்தது தப்பு தான்.. ஆனால் அதற்க்கு என்று மனீஷ் செய்தது சரி என்று ஆகிவிடுமா..?”
தேவி சிரித்து கொண்டே.. “ துருவங்கள் பதினாரு… படம் பார்த்து இருப்பே அதுல ரகுமான் கதையின் கடைசியில் ஒன்று சொல்வார்..
இந்த கதை என் பார்வையில் கொண்டு சென்றால் நான் நாயகன்.. அதே எதிர் பார்வையில் கொண்டு சென்றால் நான் தான் இதில் முக்கிய வில்லன் என்று..”
இப்போது செல்லம்மாளுக்கு தேவியின் பேச்சு பிடிப்பட்டு போனது.. இருந்தும் எதுவும் பேசாது அமைதியாக இருந்தாள்..
“ நான் இதை சொன்னால் நீ கோபப்டுவாய்..” என்று தேவி சொன்னதற்க்கு மட்டும் செல்லம்மா..
“ என் கிட்ட எது என்றாலும் நீ பேசலாம்.. நான் அதற்க்கு கோபமே பட்டாலும், நீ உன் நிலையில் ஸ்டாங்கா இருந்தா எனக்கு நீ அதை விளக்கி புரியவைக்கலாம்..” என்றதும்..
தேவி எந்த மேல் பூச்சும் இல்லாது.. “ என்னை பொறுத்த வரை மனீஷோட உன் அண்ணன் தான் பெண்கள் விசயத்தில் நான் வீக் என்று சொல்வேன்…”
எப்படி சொல்ற..? என்று எந்த கோபமும் இல்லாது தான் தேவியிடம் செல்லம்மா கேட்டது..
“மனீஷ்க்கு எந்த பெண்ணை எங்கு நிறுத்தனும்.. என்று தெரிந்து அங்கேயே நிறுத்தியும் விட்டுடுவார்.. ஆனால் உன் அண்ணன்.. அந்த மீனா.. அதாவது மனீஷ் காதல் நாடகத்தோடு வந்து விடு என்றதினால், உன் குடும்பம் தப்பித்தது..
இல்ல கல்யாணம் வரை நீடிக்க செய் என்று சொல்லி அனுப்பி இருந்தால், கண்டிப்பா உன் அண்ணன் அந்த பெண்ணை கல்யாணம் செய்து இருப்பார்…” என்று தேவி இதை ஆணித்தரமாக சொன்னாள்..
செல்லம்மாவும் இதையும் நினைத்தாள் தானே… அதனால் அவளுமே அதை ஒத்து கொண்டால் தான்.. ஆனால் செல்லம்மா இதையும் சொன்னால்…
“பெண்களிடம் நிறைய பழக்கம் என் அண்ணனுக்கு இல்ல.. அதனால் இனம் காண தெரியல.. ஆனா உன்னை மரியாதையோடு பார்த்தவனுக்கு. இதில் கரை கண்டவன். அதனால தான் யாரை எப்படி பார்க்கனும் எங்கு நிறுத்தனும்.. என்று தெரிந்து இருக்கு..” என்று ஒரு குதர்க்கமாக செல்லம்மா சொல்ல. தேவி சிரித்து விட்டாள்..
“என் செல்லம்மாவுக்கு இப்போ எல்லாம் ரொம்ப கோபம் வருதே.. இது நல்லதுக்கு இல்லையே.. “ என்று கிண்டல் செய்ய..
செல்லம்மா சீரியஸாக.. “தேவி விளையடாதா.. நான் என் அண்ணன் நல்லவன் உத்தமன் என்று சொல்லலே.. ஆனா மனீஷ் நல்லவன் கிடையாது அவ்வளவு தான்..” என்று அழுத்தி சொன்னாள்..
“நானும் மனீஷை உத்தமன் என்று சொல்லலே செல்லம்.. நானுமே அவன் கேடுகெட்டவன் கிடையாது… பெண்களை வைத்து தான் அவன் பார்வை வேறுபடுகிறது..” என்கிறேன்.. என்றதும்..
பின் அவர்களுக்கு இடையில் மீண்டும் ஒரு மெளனம் போராட்டம்.. இதை முதலில் யார்.? உடைப்பது என்று நினைக்கும் போது தான் அந்த இடத்திற்க்கு செல்லம்மாளின் அண்ணன் சஞ்சய் வந்தான்..
அவனை அங்கு செல்லம்மா எதிர் பார்க்கவில்லை… சஞ்சய் மட்டும் இல்லாது அவன் நண்பனோடு தான் வந்து இருந்தான்.. அந்த நண்பனையும் செல்லம்மாவுக்கு தெரியும்.. சஞ்சய் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்தவன் தான் இந்த ஆகாஷ்..
ஆகாஷை தெரிந்ததால்.. சிரித்து ஹாலோ எப்படி இருக்கிங்க..? “ என்று செல்லம்மா விசாரித்து கொண்டு இருக்கும் போது சஞ்சயின் பார்வை தன் தங்கையுடன் இருந்த தேவியிடமே நிலைப்பெற்று இருந்தது..
ஆனால் தேவி அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. தன் அண்ணன் என்று சொன்னதுமே தேவி தலை குனிந்து விட்டாள்..
காபியின் வகைகள் அதன் விலையின் பட்டியல் அதையே தீவிரமாக பார்வையிட… அந்த தீவிர பார்வை சஞ்சயிடம் இல்லை என்றாலுமே தேவியை அவ்வப்போது பார்த்தவன்..
பின் செல்லம்மாவிடம்.. “ ஆகாஷ் சென்னை வந்தான்.. என் கிட்ட பேசனும் என்றான்.. அது தான்..” என்று சஞ்சயின் இந்த விளக்கம் செல்லம்மாவுக்கு புதியதாக இருந்தது..
இது என்ன சின்ன குழந்தை போல.. என்று நினைத்து கொண்டே தன் அண்ணனை உற்று கவனிக்கும் போது தான்.. அவனின் பார்வை அவ்வப்போது தேவியை தொட்டு தொட்டு மீண்டு வருவதை கவனித்தது…
செல்லம்மாவும் முன்பு இதை தானே ஆசைப்பட்டாள் .. ஆனால் இப்போது.. அதுவும் தேவி கொஞ்ச நேரம் முன்..மனீஷோட உன் அண்ணன் தான் பொம்பளை விசயத்தில் வீக் என்று சொன்ன பின் அந்த ஆசைக்கு பயன் இல்லாது போய் விட்டது.. இது என்ன புதியதாக.. என்று நினைத்தவள் பின் சட்டென்று சஞ்சயிடம்..
“ சரிண்ணா நீங்க பேசிட்டு வாங்க நாங்க கிளம்புறோம்..” என்று அந்த இடத்தை விட்டு விரைவில் அகல பார்த்தாள்.. சரியாக சொல்வது என்றால், அண்ணன் கண் முன் தேவி அதிக நேரம் நிற்க வைப்பது அவளுக்கு அவ்வளவு நல்லதாக படவில்லை..
ஆனால் அந்த நினைப்பு சஞ்சைக்கு இல்லை போலும்.. “ நீங்க பேசிட்டு இரு செல்லம்மா.. நாங்க அந்த டேபுள் போயிடறோம்..” என்றான் ..
“இல்லேன்னா பேசி விட்டோம்..” என்று சொல்லி விட்டு தேவியோடு அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்..
அதோடு முடிந்தது என்று செல்லம்மா இருக்க.. ஆனால் அன்று இரவே சஞ்சய் தேவி பற்றிய பேச்சை ஆரம்பித்தான்..
“அந்த பெண் தானே க்ளாசிக் கோல்டன் அவுஸ் மனீஷ் எதிரா வழக்கு போட்டது..?” என்று கேட்க..
“ம்..” என்று மட்டும் பதில் சொன்னவள்.. பின் வேறு ஏதோ உப்பு சப்பில்லாத விசயத்தை மிக தீவிரமாக செல்லம்மா சஞ்சயிடம் பேச…
ஆனால் சஞ்சயோ செல்லம்மா பேசியதிற்க்கு பதில் சொல்லி விட்டு மீண்டுமே தேவியின் பேச்சை தான் எடுத்தான்..