சஞ்சய் மீண்டும் மீண்டும் அவன் பேச்சில் தேவியை கொண்டு வர… செல்லம்மா இப்போது தீர்க்கமாக தன் அண்ணன் முகத்தை பார்த்து..
“ நீங்க எந்த மோட்டீவில் தேவியை பற்றி கேட்கிறிங்க அண்ணா..?” என்று கேட்டு விட்டாள்..
செல்லம்மாவின் இந்த கேள்விக்கு சஞ்சய்யால் உடனே பதில் அளிக்க முடியவில்லை.. அதுவும் தங்கை இப்படி முகத்திற்க்கு நேராக கேட்பாள் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை.
.
கூடவே அவனுக்குமே தான் எந்த மோட்டீவில் தேவியை பற்றி அறிய முயல்கிறோம் என்று பிடிப்படாத நிலையில், அவன் என்ன என்று சொல்வான்.. ஆனால் செல்லம்மா சொல்லி விட்டாள்..
“ வேண்டாம் அண்ணா நீங்க எந்த மோட்டீவில் கேட்டாலுமே.. அவள் உங்களுக்கு சரிப்பட்டு வர மாட்டாள் ..” என்று விட்டாள்..
செல்லம்மாவின் இந்த பேச்சில் சஞ்சய் அதிர்ந்து தான் போய் விட்டான்.. தவறு செய்தவர்களுக்கு, அதுவும் செய்யாதவர்கள் செய்தால், எந்த பேச்சு வந்தாலுமே, அவர்கள் தன் தவறை தான் சுட்டி காட்டி பேசுகிறார்களோ என்று எண்ணம் தோன்றும்.. அதே நிலையில் தான் சஞ்சயும் இருந்தான்.
பின் தங்கைக்கு தான் அந்த விசயம் தெரியாதே, என்ற ஆசுவாசத்தில்.. “ ஏன் அப்படி சொல்ற செல்லம்..?” என்று அவன் மனதே அவனுக்கு விளங்காக போதும்.. செல்லம்மா எதற்க்கு அப்படி சொன்னால் என்று தெரிய வேண்டி கேட்டான்..
அதற்க்கும் செல்லம்மாவிடம் இருந்து உடனடியாக பதில் வந்தன.. “ அவள் இராயப்பேட்ட்டையில் இருக்கா.. அதோட அவள் சொந்தம்மா மெக்கானிக் கடை அவள் அப்பாவுடையது தான் எடுத்து நடத்துறா.. படிப்பும் அது சம்மந்தப்பட்டது தான்.. நகைக்கும், இரும்புக்கும் எப்போதும் செட்டாகாது அண்ணா..” என்றவளின் பேச்சில் சஞ்சய் இப்போது அமைதி காத்தான்.
.
ஏன் என்றால் அவனுமே, கொஞ்சம் அந்தஸ்த்தை பார்ப்பவன் தான்.. அவன் தாத்தா மாதிரி இல்லை என்றாலுமே, அவன் கொஞ்சம் பார்ப்பான் தான்.. சுகன்.. அது வேறு நட்பு என்ற ரீதி வந்தால், அனைத்தும் தகர்ந்து விடும்.. இப்போது அமைதி காக்கும் இதே சஞ்சய் தான் பின் நாளில் தேவிக்காக பொங்க போகிறான் என்று தெரியாது..
அதே போல் தான் நட்பில் மட்டும் கிடையாது… காதலுக்கும், அனைத்தும் தகர்த்து எரியும் சக்தி இருக்கிறது என்பது..
சிறிது நேரம் அமைதி காத்த சஞ்சய் பின் எதுவும் சொல்லாது போய் விட செல்லம்மா மனதிற்க்குள் சிரித்து கொண்டாள்..
சிரித்த செல்லம்மாளுக்கும் அப்போது தெரியவில்லை… காதல் வந்து விட்டால், அந்தஸ்த்து என்ன ஒழுக்கம் கூட பார்க்காது என்பதனை… இப்போது மனீஷின் அந்த ஒழுக்கமற்றதனத்தை மட்டுமே பார்த்து அவனை ஒதுக்கிய செல்லம்மாள்…
பின் நாளில் அவன் மீது காதல் வந்த பின்.. அவனின் முன் வாழ்க்கையை நினைத்து அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது… காதல் மனது அவனை விடவும் முடியாது தத்தளித்து கொண்டு இருக்க போகிறது என்று அறியாது அவளுமே அவளின் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
அதுவும் மனீஷ் என்ற மனிதன் இருக்கிறான் என்பதனை சுத்தமாக மறந்தவளாக தன் படிப்பு முடிந்து விட்டதால், இப்போது எல்லாம் தங்கள் நகை கடைக்கு தான் செல்கிறாள்..
அதனால் தங்கள் குடும்ப தொழில் ஒரு பக்கம் பிஸியாக போனாலுமே, சுகம் ஜெயந்தி காதலை சேர்த்து வைக்க எண்ணி..
ஜெயந்தியின் பெரியம்மா பெரியப்பாவிடம்.. “ என் வீட்டில் இருக்கட்டும்.. எங்க கடையில் வேலை செய்யட்டும்..” என்று சொல்லி ஜெயந்தி சென்னை வர அவர்களின் அனுமதி கேட்டாள்…
அதற்க்கு ஜெயந்தியின் பெரியப்பா.. “ அங்கு ஜெயந்தி வந்தால், அவள் அப்பா அம்மாவுடைய நியாபகம் அதிகம் வரும் என்று தானே நாங்க இங்கு கூட்டிட்டு வந்தோம்.. திரும்பவும் அங்கு எப்படி..?” என்று கேட்டதற்க்கு தான் செல்லம்மா..
“ அவள் எங்கு இருந்தாலுமே, அவள் அப்பா அம்மாவை மறக்க முடியாது அங்கிள்.. அதோட… அவள் பேரண்ஸை நினைக்கும் போது அந்த இறப்பு மட்டுமா நியாபகத்தில் வரும்,, அவங்க கூட மகிழ்ச்சியா இருந்த நாட்களும் நியாபகத்தில் வரும் தானே அங்கிள்.. ?” என்ற செல்லம்மாவின் கேள்வியில் அவர் ஜெயந்தியை பார்த்தார்..
ஜெயந்தியின் கண்களில் சென்னை செல்ல வேண்டும் என்ற ஆவல் தெரிய.. “ ம் சரிம்மா..” என்று ஒத்து கொண்டார் ஒரு நிபந்தனையுடன்..
அது… “ ஜெயந்திக்கு நான் வரன் பார்த்துட்டு இருக்கேன்.. நல்ல மாப்பிள்ளை அமைந்தால் உடனே ஒத்து கொள்ள வேண்டும். அதோடு உன் நகை கடையில் வேலை என்பது சரி… ஆனாள் உன் வீட்டில் வேண்டாமே .. வயது பையன் இருக்கும் வீட்டில் கல்யாணம் ஆக வேண்டிய பெண் இருந்தால் அது சரிப்பட்டு வராது..” என்று விட்டார்..
செல்லாம்மாவோடு அவள் அண்ணனும் இருப்பதினால்..
செல்லம்மா அனைத்திற்க்கும் சிரித்து கொண்டே.. “ சரி.. சரி..” என்று விட்டாள்…கடையில் தானே சுகன் வேலை பார்ப்பது..
ஜெயந்தியின் இருப்பிடம் மீண்டும் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு மாறியது… செல்லம்மாவின் வீட்டு பக்கமாகவே ஒரு வீட்டை பார்த்து தனித்து தான் ஜெயந்தி இருந்தாள்.
இது அனைத்திற்க்கும் செல்லம்மாவுக்கு உதவி செய்தது சுகனே… ஜெயந்தியை பற்றி சஞ்சய்க்கு ஒன்றும் தெரியாததினால், செல்லம்மாவிடம்..
“ என்ன செல்லம்மா.. யார் தெரியாத பெண்ணை எல்லாம் கடையில் வைப்பியா..? அதோடு வீடு எல்லாம் நீயே பார்த்து வைத்து இருக்க.. ..” என்று கேட்டான்..
அவனின் முன் அனுபவம்.. அதாவது மீனலோச்சனி அவனுக்கு கற்று தந்த பாடம் அவனை அது போல பேச வைத்தது..
செல்லம்மா உடனே.. “ ஜெயந்தி என் பிரண்ட் தான் அண்ணா.. அவளை பத்தி எல்லாம் எனக்கு தெரியும்.. அதோடு பார்த்த உடனே நம்பி விடும் ஆளும் நான் இல்லை..” என்று சொல்லி விட்டு அடுத்து சஞ்சய் பேச தொடங்கும் முன்னவே அந்த இடத்தில் இருந்து சென்று விட்டாள்..
எங்கு அங்கு இருந்தால் அண்ணன் மனது புண்படும் படி பேசி விடுவேனோ என்று பயந்து..
ஆம் பயந்து தான் சென்று விட்டாள்… முதலில் அண்ணன் உடல் நிலை.. அது தான் முக்கியம் என்று சஞ்சய்க்கு செல்லம்மா அனைத்தும் பார்த்து பார்த்து செய்தாலுமே, அதற்க்கு மனீஷுமே ஒரு காரணமாக இருந்தாலுமே, சஞ்சய் சரியாக இருந்து இருந்தால் மனீஷால் ஒன்றும் செய்து இருக்க முடியாது என்று தான் அவள் எண்ணம்..
அதோடு இதை நான் செய்து இருந்தால், என்ன ஆகி இருக்கும்.. இதே அண்ணன் குடும்ப கவுரவம் என்று என்னை என்ன பேசி இருப்பான் என்றும் நினைக்காது அவளாள் இருக்க முடியவில்லை..
அதோடு சஞ்ச்ய் ஜெயந்தியை பற்றிய தன் சந்தேகத்தை பேசும் போதே செல்லாம்மாவுக்கு அவன் யாரை நினைத்து இப்படி பேசுகிறான் என்பது புரிந்து விட்டது..
வைரக்கல் தரம் பார்க்க தெரிந்தவனுக்கு, மனிதர்களில் கண்ணாடி கல்லுக்கும்.. வைரத்திற்க்கும் வித்தியாசம் தெரியாது போய் விட்டதே என்ற கோபமும் செல்லம்மாவுக்கு..
செல்லம்மாவின் வாழ்க்கை இப்படி சென்று கொண்டு இருக்கும் போது மனீஷூக்கு திருமணம் செய்தே தீருவேன் என்ற முடிவோடு ரஜினி பாய்.. பார்க்கும் இடத்தில் எல்லாம் மகனின் ஜாதகம்.. கல்யாண பதிவு செய்யும் இடத்தில் அனைத்திலும் பதிவு செய்து.. மிக தீவிர பெண் தேடும் வேட்டையில் இறங்கி விட்டார்..
அதனால் மனீஷ் இரவு சாப்பாட அமரும் போது எல்லாம் பெண் புகைப்படங்களோடு அந்த பெண்ணின் விவரத்தோடு அவன் முன் இருக்கும்..
முதலில் எல்லாம்.. இந்த பெண் எனக்கு தோது இல்லை;. பிடிக்கவில்லை.. என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தட்டி கழித்து கொண்டு வந்தான்..
ரஜினி பாய் முதலில் மனீஷ் மறுக்கும் போது எல்லாம் அவன் சொன்ன காரணம் உண்மை தான் என்று தான் நம்பினார்.. காரணம்.. முன் போல் எல்லாம் மனீஷ் வீட்டிற்க்கு தாமதமாக எல்லாம் வருவது கிடையாது..
அதோடு அவன் மது அருந்தாது வருவதோடு தங்களோடு வீட்டு விசயங்களும் பேசியதில், மனீஷை மகனாக வளர்த்த ரஜினி பாய்க்கு மனீஷ் மீது நம்பிக்கை வந்து விட்டது..
அதோடு வயது,. அதுவும் சென்னையில் நீண்ட வருடங்கள் தனித்து இருந்து விட்டான்.. மேலும் பண சேர சேர.. இந்த பெண்களே தான் மேல வந்து விழுதுங்களே… தானே வந்து விழுந்தா ஒரு வயது பையன் என்ன தான் செய்வான்..? என்று ஒரு தாயாக ரஜினி பாயின் மனது மகனுக்கு வக்காலத்து வாங்கியது.
அதோடு நாம் பெண் பார்க்கிறேன் என்று ஒத்து கொண்டது.. ஜெயந்தியை பிடித்து இருக்கிறது என்று சொன்னது.. அதோடு ஜெயந்தி வேண்டாம் என்று சொல்லியும் மனீஷ் கோபப்படாது விட்டு விட்டது..
செல்லம்மா விசயத்தில் பயந்தது போல் அடுத்து ஒன்றும் நடவாது போனதோடு… மனீஷ் மீது போட்ட தேவி வழக்கில்.. மனீஷ் மன்னிப்பு கேட்டது என்றதில் தன் மகன் மாறி விட்டான் என்று முழுமையாக நம்பியதால், மனீஷ் மீது சந்தேகம் படவில்லை..
ஆனால் ஒரு நிலைக்கு மேல் தினம் தினம் இந்த கூத்தை பார்க்கும் சாருகேசனோ.. மகனிடம்.. “ உன் மனதில் என்ன தான் நினைத்து கொண்டு இருக்க..? பார்க்கும் பெண்ணை எல்லாம் நொட்டை சொல்லிட்டு இருக்க..
இப்போ உன் வயது முப்பது முடிந்து விட்டது… இன்னும் கொஞ்ச நாள் போனால், நீ வேண்டாம் என்று சொன்ன பெண்கள் கூட உன்னை வேண்டாம் என்று சொல்வாங்க…
வயது ஆவதற்க்குள் சட்டு புட்டு என்று.. ஒரு பெண்ணை சொல்.. கல்யாணத்தை முடித்து விடலாம்..” என்று விட்டார்..
மனீஷ் தந்தை சொன்ன மற்றதை விட.. அவர் குறிப்பிட்டு சொன்ன வயது… அவன் மனதிற்க்குள் ஒரு கணக்கு போட்டது… அது செல்லம்மாவின் வயது இருபத்திரெண்டு.. இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் எட்டு… என்று கணக்கு போட்டது..
அதோடு செல்லம்மா வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்க ஆர்ம்பித்து விட்டார்கள்.. எவ்வளவு இடத்தை தான் நாம் கலைத்து விட முடியும்.. இதற்க்கு சீக்கிரம் ஒரு தீர்வு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்..
ஆம் செல்லம்மாவுக்கு வந்த வரன்.. பார்த்திபன் ஒரு பெண்ணை விரும்பியதால் பிரச்சனை இல்லாது போய் விட்டது.. அடுத்து இரண்டு
செல்லம்மாவுக்கு வந்த வரனை மனீஷ் இடையில் புகுந்து கலைத்து விட்டான்.. அவன் யார் என்று தெரியாது தான்..
மனீஷ் இங்கு சென்னையில் செல்லம்மாவுக்கு வந்த வரனை கலைப்பதில் தான் இருந்தானே தவிர.. செல்லம்மாவின் மனதை தொடும் வேலையை ஒன்றும் அவன் செய்ய காணும்..ஆனால் இப்போது மனீஷ் தான் செல்லம்மாவிடம் பேச வேண்டும்.. என்று நினைத்து கொண்டு இருக்க..
அங்கு கும்பகோணத்தில் வெங்கடபூபதி தன் மனைவியிடம்.. “ எனக்கு மனசுக்கு என்னவோ தப்பாவே தோனுது .. நம்ம பேத்திக்கு கல்யாணம் என்று வரும் போது போட்டி போட்டுட்டு நீ நான் என்று வருவாங்க என்று நினைத்தேன்…
ஆனால் இப்போ நடப்பு பார்த்தா ஒன்னும் சரியா தோனல.. முதல் வரன் அந்த பார்த்திபன் தள்ளியது கூட எனக்கு அவ்வளவு பெருசா தோனல.. ஆனா சமீபத்துல முதல்ல அவங்களே ஆவலா வருவது.. பின் வேண்டாம் என்று சொல்றது… நடுவுல யாரோ ஏதோ செய்வது போல என் மனசுக்கு படுது ..” என்று தன் மனைவியிடம் தன் மனதில் இருப்பதை பகிர்ந்தார்…
எப்போதும் போல கணவன் பேசும் போது குறுக்கே எதுவும் சொல்லாது கேட்ட ஜானகி…
“ நம்ம பேத்தி ஜாதகத்தை எதற்க்கும் இன்னொரு முறை பார்த்து விடலாம்..” என்று தன் அபிப்ராயத்தை கூறினார்..
“ அது தான் பார்த்துட்டு தானே குருபலன் வந்தாச்சி என்று வரன் பார்க்க ஆரம்பித்தோம்..” என்று வெங்கடபூபதி சொன்னதற்க்கு ..
ஜானகி.. “ ஜாதகம் பார்த்தோம் தான்,., ஆனா நாம நம் பேத்தி ஜாதகம் எடுக்கும் சமயம் நம்ம குடும்ப ஜோதிடர் அவர் அம்மாவுக்கு சாங்கியம் செய்ய காசிக்கு சென்று இருந்தார்..
ஜாதகத்தை வெளியில் எடுத்துட்டு பார்க்காம போவது சகுண தடை என்று தான் வேறு ஜோதிடர் கிட்ட போனது.. அவர் குருபலன் வந்து இருக்கு மட்டும் தானே சொன்னார்… நான் பேசுவதை புதுசா கேட்பது போல கேட்கிறிங்க.. நீங்களும் தானே வந்திங்க..” என்று கடைசியாக மனைவியாக கணவனின் நியாபக மறதியை குத்தி காட்டி சொன்னவர் பின் அடுத்த வாரமே ஒரு நல்ல நாளில் மீண்டும் செல்லம்மாவின் ஜாதகம் அவர்களின் குடும்ப ஜோதிடரிடம் காட்டப்பட்டது..
செல்லம்மா ஜாதகத்தை கணித்தவர் அவரே.. இப்போது திரும்பவும் அதை பார்க்க தேவையில்லை தான்.. இருந்தும் மீண்டும் ஒரு முறை உன்னிப்பாக பார்த்தார்..
ஏன் என்றால் ஒரு முறைக்கு இரு முறை பார்த்து சொல்ல வேண்டும்.. தான் சொல்வது தவறு என்றால் .. அது தான் மிக பெரிய தவறாக அமைந்து விடும்.. ஏன் என்றால் அவர் சொல்ல போவது அப்படி பட்டதான விசயம் தான்..
ஜோதிடரின் பார்வை கூர்மை பெற்றதிலேயே வயதான இருவரின் பார்வையும் அந்த ஜோதிடர் மீது கூர்மையாக பதிந்தது..
அவர்கள் பயந்தது போல் தான் அந்த ஜோதிடர்… “ உங்கள் பேத்தியோட ஜாதகம் அந்த சீதாபிராட்டியை ஒத்த ஜாதகம் அம்மா..” என்று ஜானகியை பார்த்து சொன்னதிலேயே அந்த மூதாட்டியின் கை தன்னால் தன் நெஞ்சி மீது பதிந்தது…
சீதா அனைவரும் போற்றும் பத்தினி தெய்வம்.. ஆனால் அவர் வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களும் துயரங்களும் சொன்னதும் கேட்டதும் குறைவாக தான் இருக்கு,.. ஏன் என்றால் எழுதுவதோ சொல்வதோ சீதா இல்லையே… ஆனால் சீதா இல்லாதவர்கள் எழுதியதியவர்கள் படித்ததில.. சீதா இல்லாது வேறு ஒருவர் வாய் மூலமாக சொன்னதிலேயே சீதாவின் துன்பமான வாழ்க்கை நமக்கு புரிந்த போது.. உண்மையில் நிஜம் சீதாவே எழுதி இருந்தால், சொல்லி இருந்தால்..
அந்த மூதாட்டிக்கு தெரியும்.. சீதா தன் பத்தினிதனத்தை நிரூப்பிக்கும் முன் பட்ட துன்பங்கள்… அதன் பின்னும் வாழ்ந்த அவள் வாழ்க்கை.. போதும் போதும்.. என சொல்லி தன் அன்னை பூமா தேவியின் மடிமீதே தன்னை ஒப்பு வித்தது…
ஆனால் இது நவீன காலம் அன்றோ… செல்லம்மா சீதா இல்லையே… இந்த நவீன சீதாவுக்கு என்ன ஆகும் என்பதும்.. மனீஷ் செல்லம்மாவுக்கு ராமனா….? ராவணனா..? என்பதையும் பார்க்கலாம்…