ஐந்து நட்சத்திரம் அந்தஸ்த்து கொண்ட அந்த ஒட்டலில் மீனலோச்சனியும், மனீஷுக்கு தொழில் கற்று தந்த சுகன்லால் சேட்டும் அமர்ந்து தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தனர்..
இதில் பெரும் பங்கு பேச்சு பேசியது சுகன்லால் தான்.. அதாவது தான் இல்லை என்றால் இன்று மனீஷும் இல்லை.. க்ளாசிக் கோல்ட் அவுஸ்சும் இல்லை என்பது போன்று தான் அவர் பேச்சுக்கள் இருந்தது..
“ என் மகளை கல்யாணம் செய்ய அவனுக்கு என்ன அவ்வளவு கசப்பு..? நாங்க எல்லாம் வேறு இனத்தில் பெண் கொடுக்கவே மாட்டோம்.. எங்களை போன்ற இடத்தில் பெண் கிடைப்பது என்பது அவ்வளவு ஈஸியா..? என்ற வகையாக தான் அவர் பேச்சுக்கள் இருந்தன..
அதுவும் கடைசியாக அவர் சொன்ன.. “ நான் இல்லை என்றால், அவன் அப்பன் போல தான் எல்லார் காலையும் பிடித்து கொண்டு இருந்து இருப்பான்…” என்று பேசினார்..
ஆக மொத்தம்.. வெங்கட பூபதி தன் பாரம்பரியம் திமிரில் பேசிய பேச்சு போல தான் சுகன்லால் தன் மகளை கட்டவில்லை என்ற வையிற்று எரிச்சலில் பேசினார்..
இறுதியாக.. “ அப்பனுக்கும், மகனுக்கும் அந்த பெண் தான் கண்ணில் தெரியுது போல..” என்று தன் பேச்சை முடித்தார்..
சுகன்லால் பேசும் வரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த மீனா… இடையில் பேசாததிற்க்கு ஒரு காரணமும் இருக்கிறது தான்..
“ ம் என் கிட்ட கூட அவ்வளவு நெருக்கமா பழகினான்.. நான் இவனுக்காக அந்த பாரம்பரியம் வீட்டு பையன் கூட பழகி அவனுக்கு உதவி செய்தேன்.. ஆனால் அவனுக்கு ஆசைக்கு மட்டும் நான் போல.. கல்யாணம் செய்ய செல்லம்மா வேண்டுமாம்..” என்று மீனாவும் தன் ஆதங்கத்தை கொட்டினாள்..
சுகன் லாலோ.. கடவுளே இதை எல்லாம் கேட்க வேண்டி இருக்கிறதே என்று தான் மனதில் நினைத்தது.. ஆனால் அதை வெளியில் காட்டி கொள்ளவில்லை..
அவருக்குமே இப்போது மீனாவின் உதவி தேவையாக இருந்தது.. அதனால் அமைதி காத்தார்..
அதுவும் மீனா இப்போது சொன்ன பாரம்பரிய வீட்டு பையன் கூட பழகியது.. அதிலேயே தனக்கு உணடான விசயத்தை எடுத்து கொண்டவராக..
“ உன் கிட்ட பழகினதுக்கு ஆதாரம் இருக்கா..?” என்று ஆவளோடு கேட்டார்..
மீனாவோ உதடு பிதிக்கி.. “ இல்ல சார்.. எல்லாத்தையும் மனீஷ் கிட்ட கொடுத்து விட்டேன்.. எனக்கு ஒன்று வேண்டும் என்று கூட தனியா எடுத்து வைத்து கொள்ளவில்லை.. நான் அந்த அளவுக்கு அவனை நம்பினேன் சார்..”
மனீஷ் என்னவோ அவளை காதலித்து கல்யாணம் செய்து கொள்வேன் என்று வாக்கு கொடுத்து, இப்போது ஏமாற்றி விட்டது போல தான் அவள் பேச்சுக்கள் இருந்தது..
இதை அனைத்தும் மனதில் கிண்டலோடு தான் கேட்டு கொண்டு இருந்தார் சுகன்லால்.. இவளை போல அவர் வயதில் எத்தனை பேரை பார்த்து இருப்பார்..
மனீஷ் ஏன் இவளை கழட்டி விட்டான் என்பது இப்போது அவருக்கு தெள்ளி தெளிவாக புரிந்தது..
சுகன்லால் மீனாவை பார்த்து.. மனீஷுக்கு எதிராக கூட்டு சேர அழைத்து இவ்வளவு தொகை தருகிறேன் என்ற உடனே..
அவர் சொன்ன தொகையை விட கொஞ்சம் அதிகம் கூட்டி.. “ இவ்வளவு என்றால் உதவி செய்கிறேன்..” என்றதோடு வயது வித்தியாசம் இல்லாது அவரிடமே இழைய..
ஒரு விரலை ஆட்டி அதுவும் மீனாவின் மேனி மீது கூட அந்த விரல் படாது தள்ளி நில்..
“ எனக்கு இந்த உதவி மட்டுமே போதும்.. இந்த சேவை எல்லாம் தேவை இல்லை என்று விட்டார்..”
ஆவர் இப்படி பேசினார் என்றதும் அவர் ஏகப்பத்தினி விரதன் என்று நினைத்து விடாதீர்கள்.. வயதில் அப்படி இப்படி என்று இருந்தவர் தான்..
அந்த அப்படி இப்படி திருமணம் முடிந்த பின்.. சிறிது குறைந்து பின்.. பெண்கள் அதுவும் மூன்று பெண் குழந்தைகள் ஆன பின்.. அதுவும் அவர்கள் வளர வளர சுத்தமாக அந்த பக்கம் செல்லாது இப்போது மனைவி மட்டுமே அடைக்கலம் என்று இருக்கும் ரகம்..
அதனால் தான் மனீஷின் இந்த செயலை அவர் பெரியதாக எடுத்து கொள்ளாது, இப்போது கூட தன் மூன்றாம் மகளை மனீஷுக்கு கொடுக்கும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார் மீனலோச்சனியின் உதவியோடு..
சுகன்லால் மனீஷ் பராம்பரியம் மீது கேஸ் போட்டது.. பின் தேவி கோல்டன் அவுஸ் மீது கேஸ் போட்டது.. முடிவில் மனீஷ் தேவியிடம் மன்னிப்பு கேட்டது.. என்று ஆராய்ந்ததில் அவருக்கு முதலில் கை காட்டிய நபர் மீனலோச்சனி..
பணம் கொடுத்து கேட்டதில் அனைத்து தகவல்களை கக்கி விட்டாள்..
செல்லம்மா ஜெயந்தி திருமணம் விசயம் முதல் கொண்டு.. ஆம் மீனாவுக்கு தெரிந்தது தான்.. “
“ இனி நமக்கு இடையே ஒன்றும் இல்லை.. சென்னைக்கு போய் விடு..” என்றவுடன் எல்லாம் மீனா சென்னைக்கு போய்விடவில்லை..
அதே ஒட்டலில் வேறு ஒரு அறையில் தங்கி கொண்டாள்.. காரணம் மீனா மனீஷ் அறையை விட்டு சென்ற பின்.. சென்னைக்கு கிளம்பலாம் என்று அனைத்து உடைகளையும் அடிக்கி வைக்கும் போது தான் மனீஷ் அறையில் தன் பேசியை வைத்து விட்டது நியாபகத்தில் வந்தது..
அதை எடுக்க மனீஷ் அறைக்கு போகும் போது தான் மனீஷ் தன் சித்தியிடம் செல்லம்மா புகைப்படத்தை பார்த்து கொண்டே பேசியது மீனா காதில் விழுந்தது..
மனீஷின் மொத்த கவனமும் தன் பேசியில் இருந்த செல்லம்மா புகைப்படத்தில் மட்டுமே இருந்ததால், மீனா வந்ததையோ, அவள் பேசியை எடுத்து கொண்டது மட்டும் அல்லாது, மனீஷின் பின் பக்கம் வந்து எக்கி அவன் பேசியில் இருந்த செல்லம்மா புகைப்படத்தை பார்த்ததையோ, கடைசியாக அவன் சித்தியிடம் பெயர் ஜெயந்தியா..? என்றதையும் கேட்டு கொண்டே மனீஷ் தனக்கு புக் செய்த அறைக்கு வந்தவள்..
பின் சென்னை செல்லாது அதே ஒட்டலில் இன்னொரு அறை எடுத்து தங்கி கொண்டாள்.. காரணம் மனீஷ் கை பேசியில் பார்த்த செல்லம்மாவின் புகைப்படத்தால்..
ஏன் என்றால் செல்லம்மாவை மீனாவுக்கு நன்கு தெரியும்.. சஞ்சயோடான பழக்கம்.. மீனாவுக்கு தான் காரணப்பழக்கம்.. ஆனால் நம் சஞ்சய் தான் தீவிரமாக கல்யாணம் செய்யும் எண்ணத்தோடு தானே பழகியது..
அதனால் தன் கை பேசியில் இருந்த அனைவரின் புகைப்படத்தை காட்டியதோடு, அவர்களை பற்றிய அனைத்து விவரத்தையுமே கூறி இருக்கிறான்.. அந்த விவரப்பட்டியலில் பெயருமே அடக்கம்..
அதனால் செல்லம்மாவை பேசியில் பார்த்து கொண்டு பெயர் ஜெயந்தி என்கிறானே.. என்ற தன் குழப்பத்தை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டி அவர்கள் பின் சென்று அனைத்தையும் அறிந்து கொண்டாள் தான்..
ஆனால் இதை வைத்து தான் என்ன செய்ய முடியும்..? சஞ்சயிடம் திரும்பவும் போக முடியாது.. ஆனால் இதை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று மீனா நினைக்கும் போது தான் சுகன்லால் மீனலோச்சனியிடம் வந்தது..
இதோ கூடி திட்டம் தீட்ட தான் அவர்களின் இன்றைய சந்திப்பு.. முதலில் மனீஷ், செல்லம்மா சென்ற மாலில் சந்திக்க தான் திட்டம்..
அங்கு மனீஷ் செல்லம்மாவின் பின் சென்றதை பார்த்து விட்டு இருவரும் இரு வேறு வகையில் புகைச்சல் ஏற்பட்டு தான் இங்கு வந்தது..
ஏதாவது சீக்கிரம் செய்ய வேண்டும் என்று சுகன்லால் சொல்ல. மீனா..
“ மனீஷுக்கும் அவன் அப்பாவுக்குமே அந்த பாரம்பரியம் மீது தானே ஒரு பிடித்தம் இருக்கு.. அந்த பாரம்பரியமே செல்லம்மாவிடம் இல்லாது போய் விட்டால்..
அதாவது வெங்கடபூபதியின் திமிர் பேச்சுக்கு பதில் அடி கொடுக்க மனீஷ் என்ன திட்டம் தீட்டினானோ.. அதே திட்டத்தை கொஞ்சம் மாற்றி செல்லம்மாவை வைத்து மீனலோச்சனி ஒரு திட்டத்தை சுகன்லாலிடம் சொன்னாள்..
“ செல்லம்மாவை உங்களுக்கு தெரிந்த ஆளுங்களை வைத்து கடத்தி எங்காவது ஒரு வாரம் வைத்து விட்டால் போதும்.. மனீஷின் பார்வை செல்லம்மா பக்கம் போகாது..
இதில் முக்கியமானது செல்லம்மா கடத்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.. “ என்று மீனலோச்சனி சொல்ல.. சுகன் லாலும் இந்த திட்டத்திற்க்கு ஒத்து கொண்டார்..
ஒரு நிபந்தனையுடன்,.. “ நாள் சீனில் எங்கும் வர மாட்டேன்… நீ தான் முன் இருந்து செய்யனும்.. நீ கேட்கும் ஆட்கள் எல்லாம் நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.. இந்த திட்டம் முடிந்த பின்.. உனக்கு நீ எதிர் பார்க்காத அளவுக்கு பணமும் வெளிநாட்டில் ஒரு நல்ல வேலைக்கும் ஏற்பாடு செய்து தருகிறேன்..” என்றதும் மீனலோச்சனி வாய் முழுவதும் இருந்த பல்லை காட்டி ஒத்து கொண்டாள்..
சுகன்லால் மீனலோச்சனிக்கு இவ்வளவு செய்ய காரணம் அவருக்குமே அந்த திட்டம் சரி வரும் என்று தான் தோன்றியது..
மீனலோச்சனையை வைத்தே இந்த திட்டட்தை நிறைவேறினால், மீனாவை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டால், அவள் மூலம் தான் மாட்ட மாட்டோம்…
அதோடு செல்லம்மா பெயர் கெட்ட பின் சிறிது நாள் கழித்து தன் மகளை திருமணம் செய்ய கேட்கலா.. கட்டினாலும் ஆச்சி.. இல்லை என்றாலுமே பரவாயில்லை…
அவருக்குமே மனீஷ் தன் மகளை கட்டிக் கொள்கிறானோ இல்லையோ.. ஆனால் அந்த செல்லம்மாவை திருமணம் செய்ய கூடாது..
இப்படி சுகன் லால் நினைப்பதற்க்கு காரணம் பொறாமை ஒரு பக்கம் இருந்தாலுமே, இரு பெரும் நகை மாளிகை ஒன்று கூடினால், பின் நாளில் தன் நகை கடைகள் மறைந்து விட வாய்ப்பு அதிகம்..
அதோடு தாங்கள் உயர்ந்த நிலையில் இருந்து, தன்னிடம் தொழில் கற்ற ஒருவன் தன்னை விட உயர்ந்தால், ஒரு சிலருக்கு அதை தாங்கி கொள்ள முடியாது.. அந்த ரகத்தை சேர்ந்தவர் தான் சுகன்லால்..
தன்னை வைத்து திட்டம் வகுத்தது தெரியாது இப்போது எல்லாம் செல்லம்மா முன்பை விட மகிழ்ச்சியாக இருந்தாள்..
காரணம் திருமணம் இப்போது வேண்டாம் இன்னும் இரண்டு வருடம் சென்று பார்க்கலாம் என்று தாத்தா சொன்னதில் இருந்து செல்லம்மா இன்னும் தீவிரமாக தன் நகை கடையில் தொழில் கற்று கொள்ள முனைந்தாள்..
அதோடு தேவியின் படிப்பும் முடிந்து விட.. ஒரு நல்ல கம்பெனியில் டிசைனிங்க் பிரிவில் வேலை கிடைத்து விட்டது..
வருமானம் என்பது அவள் தன் மெக்கானிக் கடையில் கிடைப்பதை விட குறைவு தான்.. ஆனாலும் அவள் பின் காலத்தில் தனித்து கார் ஷோ ரூம் வைக்க இது போலான அனுபவம் தேவை என்பதால் வேலையில் சேர்ந்து விட்டாள்..
கூடவே அவள் நிரந்தரவாடிக்கை ஆள்கள் இப்போதும் அவர்கள் வண்டியை தேவியின் மெக்கானிக் கடையில் தான் விடுக்கிறார்கள்,..
மாலை வந்தும், சனி ஞாயிறு கிழமைகளிலும் அந்த வேலையை செய்வதால் தேவியின் வருமானம் கூடி தான் போனது..
ஜெயந்தி சுகன் காதல் அடுத்த கட்ட நகர்வாக சுகன் தன் பெற்றோரிடம் ஜெயந்தியை திருமணம் செய்து கொள்வதை பற்றி சொல்லி விட்டான்..
சுகன் தன் பெற்றோரிடம் ஜெயந்தியின் விசயம் சொன்னது கூட ஒரு தகவலாக தான்.. காரணம் வேலை இல்லாத போது ஒரு மாதிரியாகவும்.. இப்போது தன்னை ஒரு மாதிரியாகவும் நடத்தும்.. அது பெற்றோர்களே ஆனாலும் பிடிக்காது தன் வீட்டவர்களின் இருந்து ஒதுங்கி தான் போனான்..
சென்னையில் தோழிகள் மூவரும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சந்தித்து கொண்டு அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது..
ஆனால் மனீஷ்… இப்போது எல்லாம் வீட்டில் ரஜின் பாய் கல்யாணத்தை பற்றியதான பேச்சுக்கள் தான்..
அதோடு அவனுக்குமே செல்லம்மாவோடான திருமணத்தை ஆவளோடு எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்..
கூடவே செல்லம்மாவை நெருங்கும் வழி தான் அவனுக்கு புரியவில்லை.. அடுத்த பிரான்ஞ்ச் திறக்க இடம் என்று அனைத்து ஏற்பாட்டையும் பார்த்து விட்டான்..
ஆனால் அந்த கடையை செல்லம்மா திறந்து வைக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு, அதனால் அந்த கடை திறப்பு விழாவை தள்ளி வைத்து இருந்தான்..
அதனால் கொஞ்சம் பணம் நஷ்டம் தான் அவனுக்கு, அதில் அவனுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் கிடையாது.. பணம் நஷ்டம் ஆனாலுமே, வாழ்க்கை லாபத்தை அடைய செல்லம்மாவை திருமணம் செய்தால் தான் கிடைக்கும் என்றதில் காத்திருந்தான்..
அதோடு இப்போது எல்லாம் செல்லம்மாவை வெற்றி பெருவதில் அவனுக்கு இன்பம் கிடையாது… செல்லம்மாவை வெற்றி பெற பார்ப்பதில் தான் தன் சந்தோஷமே அடங்கி இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான்..
வெற்றியா..? தோல்வியா…? என்பது அல்ல வாழ்க்கை.. வாழ்க்கையில் வெற்றி பெற வருங்கால மனைவியிடம் தோல்வி அடைய மனீஷ் காத்து கொண்டு தான் இருக்கிறான்..
இங்கு சுகன்லாலும் செல்லம்மாவை மீனாவின் உதவியோடு ஆட்களோடு வலையை விரித்து… அதாவது மீனா என்ற வலையை விரித்து செல்லம்மாவை மீனா அழைத்த இடத்திற்க்கு வர வழைத்து அவளை கடத்த திட்டம் தீட்டி காத்து இருந்தனர்..