இதோ குண்டடி பட்டு நான் படுத்து இருப்பதில் கூட எனக்கு கவலை இல்லை.. ஆனால் அவர்கள் செய்ய நினைத்த காரியம்.. ஒருவருக்குள் ஒருவர் நீ தானே இதை செய்தே.. நீ தானே இதை செய்ய சொன்ன.. உன்னால் தான்.. நீ தான் என்பது போல் மாற்றி மாற்றி ஒருவருக்கு ஒருவர் மற்றவர்களை நன்றாகவே மாட்டி விட்டு தான் தப்பிக்க பார்த்ததில், யார்..? யார்..? என்ன ..? என்ன..? செய்தார்கள்.. என்ன செய்ய நினைத்தார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியது..
இது எல்லாம் வெளியில் வைத்து சஞ்சய் இடத்தில் நடைப்பெற்றதால்.. மனீஷ் நேரில் பார்க்க வில்லை என்றாலும், சுகன் தன் செல்லில் பிடித்த வீடியோ மூலம் மனீஷுக்கு தெரிய வந்ததில், யார் எவ்வளவு கெஞ்சியும் மனீஷ் மனது இறங்கவில்லை.
அதுவும் சுகன் லால் சேட் தான் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது .. அதுவும் எதற்க்கு என்று தெரியவந்ததில்..
“ அந்த பெண்ணை நான் சின்ன வயதில் இருந்து பார்த்து வளர்ந்தவன் எப்படி அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்வேன்.. இத்தனை செய்தவர்.. என்னிடம் அவர் ஆசையை நேரில் சொல்லி இருந்தால், அப்போதே அந்த பிரச்சனை முடிந்து இருக்குமே..
அதோடு தொழில் கத்து கொடுத்தேன் என்கிறாறே.. கத்து கொடுத்தார் என்பதோடு நான் விரும்பி கத்து கொண்டேன்.. வேலை என் படிப்பின் இடையே சிறிது நேரம் கிடைத்தாலும், நான் அவர் நகை கடைக்கு தான் போவேன்.. வேலையாள் போல் வேலையும் பார்த்து இருக்கேன்.. சம்பளம் என்று அவர் கொடுத்தது கிடையாது.. நான் அதை எதிர் பார்க்கவும் இல்லை என்பது வேறு…
நகை பற்றிய சந்தேகங்களை நான் கேட்கும் போது எல்லாம் அவர் சொல்லி கொடுக்க காரணம் செருப்பு கடை பையனால் நகை கடையா வைக்க முடியும் என்ற அலாட்சியம் தான்.. என்னை மேல தூக்கி விட வேண்டும் எல்லாம் அவர் நினைக்கவில்லை..
மேலே ஏறியதும்.. பெண்ணை கொடுக்க நினைக்கிறார்.. முன் எல்லாம் அது போல ஒரு பேச்சு கூட பேசியது கிடையாது.. ஏன் என் பழக்கம் எல்லாம் அவர் நகை கடையோடு மட்டும் தான்.. அப்போது எல்லாம் வீட்டுக்கு அழைத்தது கூட கிடையாது…”
சஞ்சய் .” உங்களுக்கு தொழில் கத்து கொடுத்தவர். அதனால அவரை மட்டுமாவது ..” என்ற சஞ்சயின் பேச்சை முடிக்க கூட விடாது சொல்லி முடித்த மனீஷ்..
இதுவும் சொன்னான்.. “ அன்னைக்கு சரியான நேரத்திற்க்கு செல்லம்மாவை நீ பார்த்த. நீ பார்க்காது போய் இருந்தா செல்லம்மாவின் இப்போதையே நிலையை யோசித்து பார்.. அவர் பெண் வயது தான் செல்லம்மாவுக்கு.. அவர் பத்து நாள் கஸ்டடியில் வைத்து இருக்க மட்டும் தான் நான் சொன்னேன் என்று சொல்றான்..
அப்படி ஒரு பெண்.. அது போலான இடத்தில், அது போலான ஆட்களோடு பத்து நாள் என்ன பத்து மணி நேரம் கூட பாதுகாப்பா இருக்க முடியுமா.? சொல்..
அவங்க திட்டம் அப்படி நடந்தா நான் செல்லம்மாவை ஏரெடுத்தும் பார்க்க மாட்டேன் என்று தானே அவங்க நினைத்தாங்க…
எப்படி நடந்து இருந்தாலுமே, நான் செல்லம்மாவை மட்டும் தான் மேரஜ் செய்து இருப்பேன்..” என்ற இந்த பேச்சை கேட்டு கொண்டு இருந்த சுகன் சஞ்சய் மட்டும் அல்லாது.. அப்போது தான் அந்த அறைக்குள் நுழைந்த செல்லம்மாவும் அப்படியே நின்று விட்டாள்.
“ ஏன்னா என்ன நடந்து இருந்தாலுமே, கண்டிப்பா அது செல்லம்மாவின் விருப்பத்தோடு நடந்து இருக்காது.. ஆனால் இது வரை நான் வாழ்ந்த வாழ்வின் அனைத்து செயல்களுமே என் விருப்பப்படி தான் நடந்தன.. இப்போ சொல்லுங்க எப்படி இருந்தாலுமே என்னை தான் செல்லம்மாவுக்கு நிராகரிக்க தகுதி இருக்கே தவிர. எனக்கு கிடையாது..” என்றவனின் பேச்சில் சஞ்சய்க்கு அத்தனை நேரம் இருந்த அந்த சங்கடங்கம் நீங்கி விட்டது தான் ..
ஆனால் இதோ இப்போது இவை அனைத்தும் கேள்விப்பட்டு கும்பகோணத்தில் இருந்து வருகை தரும் தன் வீட்டு ஆட்களை எப்படி சமாளிப்பது என்று நினைத்தால் தான் சஞ்சய்க்கு பயம்..
அதை சொல்ல தான் சஞ்சய் சுகனோடு மனீஷ் அறைக்கு வந்தது.. அங்கு மனீஷின் பெற்றோர்களை பார்க்கவும்.. இதை எப்படி சொல்வது என்று தயங்கி நின்று விட்டான்..
காரணம் சாருகேசனை பார்த்ததும் அவனுக்குமே தன் தாத்தா பேசிய பேச்சுக்கள் தான் நியாபகத்தில் வந்தன. அதனால் ஒரு வித சங்கடத்துடன் நிற்க.
சாருகேசன் தான். “ எப்படி தம்பி இருக்க.? இப்போ உடம்புக்கு பரவாயில்லையா…? என்று விசாரித்தார்..
சாருகேசன். உடம்புக்கு பரவாயில்லையா எனும் போதே சஞ்சய் பார்வை மனீஷ் மீது தான் சென்றது.. என் உடம்புக்கு வந்ததே உன்னாலே தானேடா என்பது போல் ஒரு பார்வையை பார்த்து வைக்க..
மனீஷோ.. “ அப்பா மச்சானுக்கு உடம்புக்கு என்ன அது எல்லாம் நல்லா தான் இருக்கார்.” என்று பேச்சை மாற்றும் படி செய்து விட்ட மனீஷ்..
இந்த அறைக்குள் நுழையும் போதே சஞ்ச்ய் முகத்தில் தெரிந்த பதட்டத்தை மனீஷ் கவனித்து விட்டதால்.
“ ஏதாவது பிரச்சனையா சஞ்சய்.?” என்று கேட்டதற்க்கு சஞ்சய் தயம்கினாலும்.
“ வீட்டுக்கு இங்கு நடந்த விசயம் தெரிந்து விட்டது மனீஷ்.. தாத்தா போனில் அப்படி ஒரு திட்டு.. அங்க எல்லோரும் சென்னைக்கு தான் வர போறாத சொன்னாங்க ..” என்று சொல்லியவன்.. தன் தங்கையிடன்..
“வீட்டில் இருந்து போன் வந்தா நீ எடுக்க மாட்டியா…?” என்று கோபத்துடன் செல்லம்மாவை கடிந்தும் கொண்டான்..
அதற்க்கு செல்லம்மா.. “ போனை எடுத்தா பொய் சொன்னது போல ஆகி விடும்..” என்ற பேச்சில் சஞ்சய் தேவியை பார்த்து கொண்டே..
“ ஏன் நீ பொய் சொன்னதே இல்லையா..? என்ன..?”
தேவியின் நட்பை வீட்டிற்க்கு தெரியாது செல்லம்மா மறைத்து தானே வைத்து இருந்தாள்.. அதை மனதில் நினைத்து தான் சங்கய் சொன்னது.
அதற்க்கும் செல்லம்மா. “ நான் பொய் சொன்னது இல்ல. உண்மையை மறைத்தேன்.. அவ்வளவு தான்.. “ என்ற அவள் சொல்வதும் வாஸ்த்தவம் தானே.
ஆனால் சஞ்சய்க்கு தேவி முன்னவே பார்த்து இருந்தால், மீனலோச்சனியின் வலையில் தான் மாட்டி இருக்க மாட்டேனே.. மனதில் அவ்வளவு ஆசை இருக்கு.. ஆனால் நான் அவளிடம் என் காதலை சொல்ல முடியவில்லையே.
அதுவும் தன் விசயங்கள் அனைத்துமே தேவிக்கு தெரியும் எனும் போது, சில சமயங்களில் அவள் முகத்தை பார்க்க கூட அவன் அவ்வளவு சங்கடப்பட்டான். இதில் எங்கு தன் விருப்பதை சொல்வது.. என்ற எண்ணம் தான் சஞ்சய்க்கு.. அதை தவிர செல்லம்மா தேவியோடான நட்பு என்பதில் அவனுக்கு எந்த வித ஆட்சேபனையும் கிடையாது.. இன்னும் கேட்டால் தேவியின் தரிசனத்தில் அவனின் மனது இனிமையை தான் உணர்ந்தது..
செல்லம்மா உண்மையை மறைத்தேன் என்றதில்.. சஞ்சய் … “ தேவி விசயம் சரி.. “ மனீஷை சுட்டி காட்டி..
“ இதற்க்கு வீட்டில் என்ன சொல்ல போறே…?” என்ற அவனின் கேள்விக்கும் செல்லம்மாவிடம் உடனே பதில் இருந்தது..
“ நீ தேவியை பார்த்து கேட்டப்பா என்ன சொன்னேன்.. உண்மையை தானே.. அதே போல் தான் ..” மனீஷை சுட்டி காட்டி.
“ இவர் யார் என்று கேட்டா உண்மையை சொல்ல போறேன்..” என்ற செல்லம்மாவின் பேச்சில் சட்டென்று இடை புகுந்து மனீஷ்..
“ உன் வீட்டு ஆட்களிடம் என்னை என்ன என்று சொல்வே..?” என்று கேட்ட மனீஷின் குரலில் இருந்த ஆர்வம் அங்கு இருந்த அனைவருக்கும் அப்பட்டமாகவே தெரிந்தது.
செல்லம்மா மனீஷின் கேள்விக்கு சிரித்து கொண்டே. “ அது தான் சொன்னனே.. உண்மையை சொல்வேன் ..” என்று தான் சொல்லினாளே தவிர. செல்லம்மா என்ன சொல்வேன் என்று சொல்லவில்லை..
“ அது தான் என்ன உண்மை.?” என்று மனீஷ் திரும்ப கேட்ட பின்னும் .. “ அது அவங்க கிட்டேயே சொல்லி விடுகிறேன்…” என்று தான் சொன்னாள்.
“ அதை என் கிட்ட தான் சொல்லனும்.. ஊருக்கு சொல்லும் போது காத்து வாக்குல அது என் காதில் விழுந்தா நான் கேட்டு கொள்ளனுமாம்..” என்று மெல்ல அவன் முனு முனுக்க. அது அங்கு இருந்த அனைவரின் காதிலும் விழுந்ததில் சிரித்து விட,.. இவர்களின் இந்த சிரிப்பு செல்லம்மா வீட்டவர்கள் வந்த பின் நிலைக்குமா..? அதுவும் குறிப்பாக வெங்கட பூபதி மனீஷை பேத்தியின் கணவனாக ஏற்றுக் கொள்வாரா…
மீண்டும் சாருகேசன் வெங்கட பூபதியான சந்திப்பில் என்ன நடக்கும்.. அது செல்லம்மா மனீஷ் காதலில் பிரச்சனையை தீர்க்குமா.? இல்லை பிரச்சனையை ஏற்படுத்துமா..? அடுத்த பதிவில் தெரிந்து விடும்…