தேவி இப்படி கேட்டு கொண்டே தன் எதிரில் அமர்ந்தவளை பார்த்து அவளையும் அவள் கேள்வியிலும் சஞ்சய் முதலில் அதிர்ந்தான் தான்..
பின் என்ன நினைத்தானோ.. மனதில் இருப்பதை பேசி விடலாம் என்று ஒரு முடிவு எடுத்தவனாக தன் தங்கையை பார்த்தான்..
சஞ்சயின் பார்வையில் செல்லம்மா எழுந்து கொள்ள பார்க்க.. அவள் கை பிடித்து தடுத்து நிறுத்திய தேவி..
“நீயும் இரு செல்லம்மா..” என்று விட்டாள்..தேவியின் இந்த பேச்சில் செல்லம்மா சங்கடமாக தன் அண்ணனை பார்த்தாள்..
தேவியையும், தன் தங்கையையும் மாறி மாறி பார்த்தவன் பின் என்ன நினைத்தானோ.. தன் தங்கையின் முன் நிலையிலேயே தன் விருப்பத்தை தேவியிடம் கூறி விட்டான்./
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தேவி.. ஆனா பார் என் விருப்பத்தை உன் கிட்ட சொல்ல கூட.. எனக்கு அவ்வளவு தயக்கமா இருக்கு..
என் தாத்தா சொல்லிட்டு இருப்பார் என் பேரனுக்கு பட்டத்து இளவரசியை கூட்டிட்டு வர போறேன் என்று..
ஆனா பார்.. பொய்யான காதலில் ஒரு பெண்ணை பார்த்த பாவத்திற்க்கு இப்போ உண்மையா காதலிக்கும் பெண்ணிடம் என் காதல் சொல்ல கூட வழி இல்லாது நிற்கிறேன் இப்போ.. “ என்ற வார்த்தையில் இப்போது இடையிட்டு தடுத்து நிறுத்திய தேவி..
“ அந்த காதல் பொய் காதல் என்று எப்படி சொல்றிங்க..? அந்த பெண் பொய்த்து போனாலும் உங்க காதல் நிஜம் தானே.. அது எப்படி பொய் என்று சொல்லுவிங்க என்று கேட்டதற்க்கு.
“ இல்ல அது பொய் காதல் தான்.. அது எனக்கு உணர்த்தியது உன் மீது எனக்கு வந்த உண்மையான காதலினால் தான்.” என்ற சஞ்சயின் இந்த பேச்சில்.
தேவி சிரித்து கொண்டு.. அப்புறம் .. என்பது போல அவனை பார்த்தாள்.. தேவி தன்னை கிண்டல் செய்கிறாள் என்று உணர்ந்தும்.
“ நீ என் பேச்சை நம்பவில்லை என்றாலும், நீ கிண்டல் செய்தாலும் இது தான் உண்மை.
மீனா என்னை சீட் செய்து விட்டாள் என்று எனக்கு தெரிந்ததும் இப்படி அசிங்கம்மா நான் ஏமாந்து போனேன் என்று தான் எனக்கு தோனுச்சே தவிர. வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை..
அதோட மனீஷ் என்னை மிரட்டவும் என் குடும்பம் என் தங்கை வாழ்வு இது தான் என் கண் முன் வந்தது வேறு எதுவும் கிடையாது..
இதில் எந்த இடத்திலும் மீனா கிடைக்காது போய் விட்டாளே.. என்ற எண்ணம் எதுவும் எனக்கு தோன்றவில்லை..
ஆனா உன் விசயத்தில் எனக்கு இது எல்லாம் தோனுது.. எனக்கு நீ கிடைக்காது போய் விடுவாயோ என்று ஒரு பயம் எனக்கு வருது.. கூடவே நீ எனக்கு கிடைத்து விட்டாலுமே, என்னால் உன் வாழ்க்கை பாழாகி விடுமோ என்ற பயமும் கூடவே வருது..” என்று சஞ்சய் பேசி கொண்டு இருக்கும் போதே அவன் முகம் ஒரு மாதிரியாக ஆகி விட.
செல்லம்மாவுக்கு மட்டும் அல்லாது தேவிக்குமே மனத்தில் பயம்.. தேவி செல்லம்மாவிடம்.. “ ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போகலாம் செல்லம்மா.. “ என்று பதட்டமாக பேச.
செல்லம்மாவுக்கும் அது தான் தோன்றியது. “ அண்ணா வா அண்ணா போய் விடலாம்..” என்று சொல்லி அண்ணனின் மருத்துவ அறிக்கையை எடுத்து வர சொல்ல செல்லம்மா சுகனை பேசியில் அழைக்க முயல.
அதை தடுத்த சஞ்சய்.. “வேண்டாம் செல்லம்மா வேண்டாம்.” என்று மறுத்தான்.
தேவி இப்போது கோபத்துடன்.. “ இப்போ ஏன் வேண்டாம் என்று சொல்றிங்க சஞ்சய்.. இப்போ இது எனக்கு எமோஷனல் ப்ளாக் மெயில் செய்வது போல இருக்கு..” என்று கோபத்துடன் பேச..
வலியுடன் சிரித்து கொண்டே… “ தேவி இப்போ நீயே என்னை மேரஜ் செய்ய ஒத்து கொண்டாலும் நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.” என்ற சஞ்சயின் இந்த பேச்சில் தேவி மட்டும் அல்லாது செல்லம்மாவும் அதிர்ந்து போய் தான் அவனை பார்த்தது.
“ வேண்டாம் தேவி..இப்போ எல்லாம் எனக்கு இங்கு ரொம்ப பிடிக்குது.. சில சமயம் மூச்சு விட கூட கஷ்டமா இருக்கு. வேண்டாம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தேவி.. என்னை நீ கல்யாணம் செய்து கொண்டாள். இது போல ஹாஸ்ப்பிட்டல் கைய்யோடு தான் என்னை வைத்து அலைந்து கொண்டு இருக்கனும்.
பணம் என்ன தான் இருந்தாலும் உடம்பு சரியில்லாத கணவன் வாய்த்தால் அந்த வாழ்க்கை சுக படாது தேவி..
அப்போ ஏன் இப்போ என் காதலை சொன்ன என்று கூட நீ யோசிக்கலாம். சொல்லனும் என்று தோனுச்சி தேவி சொல்லனும் என்று தோனிச்சி. நல்ல பெண் கிட்ட நான் என் காதலை சொன்னேன்.. அந்த மனது திருப்தி எனக்கு வேண்டும் தேவி.” என்று அடுத்து சஞ்சய் என்ன என்ன பேசி இருப்பானோ..
சஞ்சய் தன் உடல் நிலையை பற்றி சொல்ல ஆரம்பித்த போதே செல்லம்மா சுகனை அழைத்து சொல்லி விட்டாள்..
அதனால் அவன் மருத்துவ அறிக்கையோடு வந்து விட வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தவனை குண்டு கட்டாக தூக்கி கொண்டு முன் சஞ்சயை சேர்த்த அந்த மருத்துவமனைக்கே அழைத்து வந்து விட்டனர்..
சஞ்சயின் நல்ல நேரம் அவனுக்கு முன்பு பார்த்த அந்த மருத்துவரே அங்கு இருக்க.. சுகன் எமெர்ஜென்சி என்று தான் சஞ்சயை அட்மிஷன் செய்தது..
அதே மருத்துவர் சஞ்சய்க்கு ஒரு முறைக்கு இரு முறை செக் செய்து விட்டு..
“இவருக்கு எதுவும் இல்லையே என்ன பிரச்சனை ..?” என்று அந்த மருத்துவர் இவர்களை கேள்வி கேட்க.,
தேவி தான். “ நல்லா வைத்து பாருங்க டாக்டர்.. அவர் வலி என்று சொல்றார்.” என்று அவர் கழுத்தில் இருந்த அந்த ஸ்டெதஸ் கோப்பை காண்பித்து பெண்ணவள் கூற.
இப்போது அந்த மருத்துவர் பெண்ணவளை பார்த்து முறைத்து பார்த்து விட்டு.. செல்லம்மாவிடம்
. “ என்னம்மா நடந்தது.. ? சொல்ல கூடிய விசயமா இருந்தா சொல்லும்மா.” என்று கூற செல்லம்மா தேவி மீது சஞ்சய்க்கு இருக்கும் காதல் தொட்டு.. கடைசியாக சஞ்சய் சொன்ன.
“ஏன்னை மேரஜ் செய்து கொண்டால் நீ மகிழ்ச்சியா இருக்க முடியாது அனைத்துமே சொல்லி விட்டார்..
இதை அனைத்துமே பொறுமையாக கேட்ட அந்த மருத்துவர்.
“ ஒரு சிலருக்கு உடல்நிலை சரியான பிறகும் மனதில் ஒரு பயம் தங்கி விடும்.. திரும்ப நமக்கு ஏதாவது வந்து விடுமோ என்று..
அதுவும் சஞ்சயின் வயது.. வந்த பிரச்சனை.. முதலில் இருந்தே இதனால் தன் எதிர்காலம் குறிப்பாக திருமண வாழ்வு பற்றிய ஒரு பயம் இருந்து இருக்கும்..
இப்போது தனக்கு பிடித்த பெண்ணை பார்த்த பின் அவரின் அந்த பயம் அதிகரித்து இருக்க கூடும்..
அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்கவும் ஆசை.. ஆனால் கல்யாணம் செய்த பின் ஏற்கனவே அவர் மனதில் இருந்த தன் மண வாழ்க்கை குறித்த அந்த பயத்தில், வேண்டாம் நம்மளை கல்யாணம் செய்து கொண்டால், நம்ம நோயினால் அவள் நல்லா இருக்க மாட்டாள்.. என்று அவரே மனதில் வாதி பிரதிவாதியாக மனதில் வாதாடிக் கொண்டு இருக்கிறார்..
அந்த மன அழுத்தம் தான்.. அவர் உடல் நிலைக்கு காரணம். வேறு ஒன்றும் இல்லை…அவர் மேரஜ் லைபுக்கு பிட் தான் என்று அவர் மனதில் படியும் படி அவருக்கு கொஞ்சம் கவுன்சிலிங் கொடுத்து விட்டால்
போதும்..” என்று கூறி முடித்த அந்த மருத்துவர்.அவர் சாப்பிட்ட உணவை கேட்டு தெரிந்து கொண்டு.
“ இது எல்லாம் வாயு.. அதனால கூட இருக்கலாம். வேறு ஒன்றும் கிடையாது.” என்று விட்டார்.
பின் மருத்துவர் சொன்னது போல சஞ்சய்க்கு கவுன்சிலிங்க் கொடுக்க பட சஞ்சய் முன்பை விட இப்போது மனதில் பெட்டராக உணர்ந்தான்..
சஞ்சயை கவுன்ஸ்லிங்க அழைத்து சென்றது எல்லாம் மனீஷ் தான்.. சஞ்சயை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது எல்லாம் மனீஷ் மனதளவில் அவ்வளவு வேதனைப்பட்டான்..
இது எல்லாம் தன்னால் தானே.. தன்னை போல இவன் இருப்பான் என்று நினைத்து தவறு செய்து விட்டேனே.. இவன் மனதளவில் இப்படி மென்மையானவனாக இருந்து இருப்பான் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை..
அதுவும் சஞ்சய்க்கு மருத்துவர் கவுஸ்சிலிங்க கொடுக்கும் போது மனீஷூம் அருகில் தான் இருந்தான்..
சஞ்சய் தன் மனதில் இருக்கும் அந்த பயத்தை சொல்லும் போது அவன் முகத்தில் வந்து போன அந்த வேதனையான முகம். தேவியை பற்றி சொல்லும் போது..
“ எனக்கு அவளை ரொம்ப பிடித்து இருக்கு.. ஆனா பாரு அவளுக்கு என்னை பிடிக்காது.. பரவாயில்லை அதுவும் நல்லது தான்.. என்னை மேரஜ் செய்தால் அவள் நல்லா இருக்க மாட்டாள்.. பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை அவள் ஆரோக்கியமானவனை கல்யாணம் செய்து கொண்டு நல்லா இருக்கனும்.. அவனுக்கு எந்த பண உதவி என்றாலும் நான் செய்து கொடுப்பேன்.. என்ற சஞ்சயின் பேச்சில் தேவி மீது இருந்த அவனின் அக்கறை தெரிந்தாலுமே, அவள் தனக்கு இல்லை என்ற அந்த வேதனை அப்பட்டமாக அவன் குரலில் தெரிந்தது..
பின் அந்த மருத்துவர் சஞ்சய்க்கு ஒன்றும் இல்லை.. நீ ரொம்ப ரொம்ப ஆரோக்கியமா தான் இருக்க.
உன்னை கல்யாணம் செய்த பெண்ணை நீ எல்லா விதத்திலுமே நல்ல முறையில் வைத்து கொள்ள முடியும்.” என்று பதிய வைத்து விட்டார்.
இப்போது சஞ்சய் முகத்தில் ஒரு தெளிவு தெரிய சுகன்.. அது தான் உன் பயம் எல்லாம் போயிடுச்சே மச்சான்.. தேவி கிட்ட உன் விருப்பம் சொல்லி விடேன்..” என்ற பேச்சுக்கு சஞ்சய்.
“ சொன்னேன் டா. ஆனா என்னை எல்லாம் அவளுக்கு பிடிக்காது டா.” என்ற சஞ்சயின் பேச்சில் அப்பட்டமாக அவனின் கைய்யாலாகாத தனம் அவன் குரலில் வெளிப்பட்டது..இந்த பேச்சு நடக்கும் போது மனீஷூம் அவர்கள் அருகில் தான் இருந்தான்..
சொன்ன சஞ்சய்.. அந்த இடத்தை விட்டு சென்று விட இப்போது சுகன் மனீஷை அப்படி ஒரு பார்வை பார்த்தான்..