“உனக்கு செல்லம்மா மாதிரி ஒரு பெண் கிடைத்து இருக்கு.. ஆனா பாரு ஒரே பெண் கிட்ட தான் அவன் மனசு தடுமாறிச்சி.. ஆனா அவனுக்கு ரொம்ப பிடித்த பெண்ணிடம் தைரியமா என்னை கல்யாணம் செய்து கொள்.” என்று கேட்க கூட முடியாது இருக்கான்..
இது பத்தி எல்லாம் உனக்கு என்ன.. நீ ஜோரா செல்லம்மாவை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமா இரு.. அது தான் மேரஜ் டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்கலே..” என்று தன் மனது ஆதாங்கத்தை கொட்டி விட்டு சென்று விட்டான்.
சிறிது யோசித்த மனீஷ் பேசியில் தேவிக்கு அழைப்பு விடுத்தான்.. “ நான் உன்னை மீட் பண்ணனுமே தேவி..” என்று கேட்டதற்க்கு தேவி எந்த வித தயக்கமும் இல்லாது..
உடனே… “ எங்கு அண்ணா. எப்போது..? என்று கேட்டாள்..
மனீஷ் இடம் நேரம் சொல்ல தேவி சரியாக மனீஷ் சொன்ன இடத்திற்க்கு சொன்ன நேரத்தில் வந்து விட்டாள்..
“ஏதாவது சாப்பிடுறியா தேவி..” என்று கேட்டதுமே அந்த ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட அந்த ஒட்டலை பார்த்து விட்டு.
தயக்கத்துடன்.. “ ஒரு காபி போதும் அண்ணா..” என்று விட்டாள்.. அவளின் உணர்வை புரிந்து கொண்ட மனீஷும் தேவி சொன்ன காபியோடு ஒரு சான் விஜ் தனக்கும் சேர்த்து வாங்கியவன் எதுவும் பேசாது அமைதியாக சாப்பிட்டு முடிக்க..
தேவியும் அவன் அமைதியை கவனித்தப்படி தன் காபியையும் சான்விஜ்ஜையும் முடித்த பின்..
“ இதுக்கு தான் அழைத்திங்களா அண்ணா.?” என்று தாங்கள் சாப்பிட்டதை சுட்டு காட்டி கேட்டாள்..
அதற்க்கு மனீஷ் சிரித்து கொண்டவன்.. பின்.. “ உன் கிட்ட ஒரு விசயத்தை பத்தி பேசனும்.. இது பர்சனல் தான்.. இது வரை நான் பெண்களை பெண்களாக தான் பார்த்து இருக்கிறேன்.. இந்த சென்டிமென்ட் இது எல்லாம் எனக்கு ஒத்து வராதது.
ஆனால் உன் அண்ணா என்ற அந்த அழைப்பை நிஜமா நான் உணர்ந்து அந்த உறவை ஏத்து கொள்கிறேன் தேவி..
அதுவும் உன் போல ஒரு பெண்ணுக்கு நான் அண்ணனாக இருக்க நிஜமா சந்தோஷமா இருக்கு எனக்கு..” என்ற மனீஷின் பேச்சில் மற்றதை எல்லாம் விடுத்து தேவி..
“அது என்ன என் போல பெண்..?” என்ற கேள்விக்கு மனீஷ் அவள் உடையின் டாப்சின் கை முனையில் லேசாக படிந்து இருந்த கீசரை சுட்டி காண்பித்து.
“ உன் போல உழைக்கும் பெண்.. உன் போல தன் மானம் சுயமரியாதை மிக்க பெண்.. உன் போல நேர்மையான பெண்.. இன்னும் என்ன என்ன சொல்ல முடியுமோ அது எல்லாமான பெண்.. நீ என்னை அண்ணனா ஏத்து கொண்டது.. எனக்கு அவ்வளவு பெருமையா இருக்கு..” என்று மனீஷ் சொல்ல சொல்ல தேவிக்கு ஒரு மாதிரி கூச்சமாக போய் விட்டது..
இருந்தும் அதை காட்டாது.. “ இவ்வளவும் நானா.. பாரேன் எனக்கு தெரியாது எனக்குள் இவ்வளவு இருக்கா.” என்று அதை விளையாட்டு பேச்சாக மாற்ற முயல.
ஆனால் மனீஷ்.. “ இத்தனையும் பார்த்த உன்னை சஞ்சயின் மனைவியா பார்க்க எனக்கு ஆசையா இருக்கு தேவி.” என்ற மனீஷின் பேச்சில், தேவி அவனை அதிர்ந்து எல்லாம் பார்க்கவில்லை. மனீஷ் மீது ஆராயும் பார்வை மட்டும் தான் செலுத்தினாள்..
மனீஷ் தன்னை பேச அழைத்ததுமே இதை அவள் ஒரளவுக்கு எதிர் பார்த்தாள் தான்.. அதனால் அவள் அதிர எல்லாம் இல்லை..
ஆனால் சஞ்சய்க்கு கவுன்சிலிங் கொடுக்கும் போது தன் பேசியில் அவன் சொன்னதை பதிவு செய்ததை தேவியை கேட்க வைத்தவன் பின் சஞ்சய் தன்னிடம் பேசியதை அவனுக்கே தெரியாது பதிவு செய்ததையும் கேட்க வைத்து.
“ அவன் நல்லவன் என்று நான் உனக்கு சொல்ல தேவையில்லை தேவி.. நான் மட்டும் அந்த விசயம் செய்யாது இருந்து இருந்தால், அவன் இன்னைக்கு உன்னிடம் தைரியமா அவன் காதலை சொல்லி இருப்பான்.. சுகன் சொன்னது போல அவ்வளவு தப்பு செய்த எனக்கு செல்லம்மா மாதிரி நல்ல பெண் மனைவி.
ஆனா பார். நான் அனுப்பிய அந்த பெண்ணை கல்யாணம் செய்யும் நோக்கத்தோடு தான் அவளிடம் பழகினான்.. ஆனா அவன் இப்போது கெட்டவன்.. இது என்ன நியாயம் தேவி.” என்ற மனீஷின் வார்த்தை தேவியை யோசிக்க வைத்ததோ இல்லையோ.. சஞ்சய் பேசிய அந்த பதிவு அவளை ரொம்பவே யோசிக்க வைத்தது..
அவளின் யோசனையின் முடிவில்.. “ அவங்க வீட்டில் என்னை ஏத்துப்பாங்களா அண்ணா.?” என்ற இந்த கேள்விக்கு மனீஷ் தேவியிடம் பதில் கூறாது..
செல்லம்மா வீட்டு பெரியவர்களை தேவியின் வீட்டுக்கு பெண் கேட்டு கேட்பார்கள் என்று தேவிக்கு நிரூபித்தான்.
செல்லம்மா வீட்டவர்களும் உடனே தேவியை பெண் கேட்டு வர காரணம்.. முன் சஞ்சய் தான் செய்த தவறை சொன்னதோடு அவனின் உடல் நிலையையும் பார்த்த பின்னும்.. அவனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பேரன் மகிழ்ச்சியோடு இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.. வெங்கட பூபதி அவர்கள்..
காரணம் சஞ்சய்க்கு என்ன தான் கவுன்சிலிங் கொடுத்து அவனின் மனநிலையை தேற்றி இருந்தாலுமே, தேவியின் நிலையில் அவன் மனது தடுமாறும் நிலையில் தான் அவன் இருந்தான்..
அதனால் மனீஷ் வந்து விசயம் சொன்னதுமே பேத்தியின் திருமணத்தோடு பேரனின் திருமணத்தையும் வைத்து கொள்ளலாம் என்ற முடிவோடு தான் வெங்கட பூபதி தேவியின் வீட்டிற்க்கு சென்றது.
இது வரை போகாத பகுதிக்கு வெங்கட பூபதியின் பாதம் போனது.. தன் பேரனின் நல் வாழ்வுக்காக.
தேவியின் வீட்டில் அவள் அம்மாவும் தங்கையும், அவ்வளவு பெரிய மனிதர்கள் தங்கள் வீட்டிற்க்கு வந்ததையே அதிர்ச்சியோடு பார்த்து இருக்க. உங்கள் பெண்ணை என் பேரனுக்கு கேட்டு வந்து இருக்கோம் என்ற இந்த செய்தியில் தேவியின் அன்னையின் கைகள் வெளிப்படையாகவே உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது..
அந்த சமயம் தேவி சரி செய்த ஒரு டூ வீலரை ட்ரையல் பார்த்து வந்தவள் ..
“ அம்மா டீ வைத்து விட்டாயா.?” என்று கேட்டு கொண்டே தன் கையில் இருந்த அழுக்கை அதை விட அழுக்கான துணிக் கொண்டு துடைத்த வாறே வந்தவள்..
அங்கு இருந்தவர்களை பார்த்து அவளுமே அதிர்ச்சியில் நின்று விட்டாள் தான்..சஞ்சயின் இரு பக்கமும் அமர்ந்திருந்த சுகனும் மனீஷும் தான்..
சஞ்சயிடம் .. “ இது போல ஒரு காஸ்டியூமில் இது வரை யாரும் பெண் பார்த்து இருக்க மாட்டாங்க..” என்று கேலியில் இறங்க.
சஞ்சயும் அவர்களின் கேலிக்கு பதிலடியாக.. “ ஏன்னா இது போல ஒரு உடையிலும் என் ஆளு தான் அழகா இருப்பாள் அதனால்..” என்று விட்டான்.
அதற்க்கு மனீஷ்.. “ அப்போ உன் தங்கை மேக்கப் எல்லாம் போட்டு தான் அழகா இருக்கிறாள் என்று சொல்றியா.?” என்று தன் மச்சானிடம் சந்தேகம் கேட்டவன்.. அதை தெளிவு படுத்தி கொள்ள..
“ செல்லம்மா..” என்று அழைக்க அவன் வாயை மூடிய சஞ்சய்..
“ வேண்டாம் நாத்தனார் பிரச்சனையை இப்போதே ஆரம்பிக்க வேண்டாம்.” என்று இளையவர்கள் கேலி கலாட்டாவில் பேச பெரியவர்கள்..
தேவியின் அம்மா. “ எனக்கு ஒன்னும் புரியலங்க அய்யா. உங்களை போல ஆளுங்களை எல்லாம் நாங்க கைய்யெடுத்து தான் கும்பிடுவோம் .. நீங்க சம்மந்தி ஆகனும் என்று சொல்றிங்க. இது எப்படி போகும் அய்யா..
எனக்கு என் பெண் வாழ்க்கை ரொம்ப முக்கியம் அய்யா. அவள் சின்ன வயசுல இருந்தே குடும்பத்திற்க்காக ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா ..
இனி வாழும் அவள் கல்யாண வாழ்க்கையாவது நல்லா இருக்கனும் என்று நான் நினைக்கிறேன்.. பெரியவங்க நீங்க உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்ல.. இப்போ கல்யாணம் செய்து விட்டு நாளை பின்ன உறவு முறை வீட்டுக்கோ இல்ல அறிந்தவங்க தெரிந்தவங்க வீட்டிற்க்கு போகும் போது என் மகளை பத்தி ஏலனமா ஒரு வார்த்தை பேசிட்டா…
என் மகள் தாங்க மாட்டாள் என்பதை விட. அந்த இடத்தில் அவள் இருக்க மாட்டாள் அய்யா.. அது இரண்டு பேர் வாழ்க்கையும் பாதிக்கும் ..” என்று தேவியின் அம்மா நாளை இது எல்லாம் நடக்கும் என்று சொல்ல.
முதலில் வெங்கட பூபதியும் பேரன் ஆசைப்பட்ட பெண் என்று தான் வந்தது.. இப்போது தேவி அம்மாவின் பேச்சை கேட்டதில் மனதில் அவருக்கு அவ்வளவு திருப்தி ..
தன் வீட்டுக்கு பெண் கொடுக்கவோ பெண் எடுக்கவோ ஆசைப்பட காரணம். தங்கள் பாராமரியம் அந்தஸ்த்து பணத்தை கொண்டே..
ஆனால் உங்கள் வீட்டிற்க்கு பெண் கொடுக்க தயக்கமே எனக்கு இது தான்.. ஏழ்மையாக, எந்த குடும்ப பின்னனியும் இல்லாது இருந்தாலும், பரவாயில்லை என் பெண் மகிழ்ச்சி மட்டும் தான் முக்கியம் என்று நினைக்கும் தேவியின் அம்மாவின் பேச்சில் வெங்கட பூபதிக்கு அவர்கள் மீது மதிப்பு கூடியது..
“ உங்கள் வீட்டு பெண்ணை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைம்மா. நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை கண்டிப்பா உங்க மகள் வாழ்வா..” என்று உறுதி அளிப்பது போல் தான் அவர் சொன்னது..
அப்போதும் தேவியின் அன்னைக்கு தயக்கமே.. இப்போது மனீஷ் சஞ்சயை முறைப்பது போல பார்த்ததில் சஞ்சய் ..
“ கண்டிப்பா நான் உங்க மகளை நல்லா பார்த்துப்பேன் அத்தை. நீங்க உங்க பெண்ணை எனக்கு கொடுங்க..” என்று சொன்னதோடு சாஷ்ட்டங்கமாக தேவியின் அன்னையின் காலில் விழுந்து விட்டான்..
செல்லம்மா தான்.. தன் அம்மாவிடம்.. “ ஒரு முறையாவது உங்க மகன் இது போல உங்க காலில் விழுந்து இருக்கானா பாரும்மா.” என்று சீரியஸாக சென்ற பேச்சு வார்த்தை பின் கலாட்டாவாகி அதன் பின் ஒரு சுப யோக சுப தினத்தில் ஜெயந்தியின் பெரியப்பா சுகனுக்கு அவளை திருமணம் செய்து கொடுக்க எப்போதோ ஒத்து கொண்டாலும் இவர்களின் திருமணத்திற்க்காக அந்த ஜோடியும் காத்து கிடந்ததால், மூன்று ஜோடிகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடக்கவில்லை என்றாலும் முன்னும் பின்னும் என்று நடந்து முடிந்தன.
மனீஷ் அவன் ஆசைப்படி அவனின் அந்த கிளையை.. செல்லம்மாவை வைத்தே தான் திறக்க வைத்தான்..
தொழிலில் வெற்றியா..? தோல்வியா…? என்றதில் வெற்றி தான் ஒருவரை உயர்த்தும்.. ஆனால் வாழ்க்கையில் தன் துணையின் வெற்றி மற்றவர்களுக்கு தோல்வி எனும் பட்சத்தில் தோல்வியும் ஒருவகைகள் நல்லதே.. இதில் யார் வெற்றி பெற்றது யார் தோல்வி அடைந்ததும் என்று பாராது இருப்பதே நல்லது..