“நீங்க ரெண்டுப் பேரும் இவளோட சொத்தை ஆட்டைப் போட தான் வந்தீங்களா..?” என ரெனி சீறினாள்.
“ஹலோ! நாங்க ஒன்னும் ஆட்டை எல்லாம் போட வரல, காசு கொடுப்பாங்க டோன்ட் வொரி” என அசாதாரணமாக கூறினான் அமர்.
“டேய்! பேசாம இருடா” என அதட்டினான் ஜனா.
ஜனாவின் தம்பி காபி கப்களோடு வரவும், பிளேட்டை வாங்கிக் கொண்டு”நீ போ!” என தம்பியை அனுப்பி வைத்தான் ஜனா, அதை இருவரிடமும் நீட்டினான்.
ரெனி வேண்டாமென்று கூறவும், “ஏய்! அந்த சின்ன பையன் நமக்காக போட்டு வந்தது, எடுத்துக்கோடி” எனக் கூறினாள்.
ரெனி எடுக்க, விஜியும் எடுத்துக் கொண்டாள்.
“ஜனா! அந்த இடத்திற்கு இவ்வளவு பணத்தை உங்களுக்கு தரேனு சொன்னாங்களா…”
“ஜிமிக்கி! எனக்கு தெரிந்தவரை நான் சொல்றேன், ஏனா உன் மாமாக்கள் பற்றி எல்லாம் தெரியாது, என் பாஸ் பிஸ்னெஸ் பெருசு கண்ஸ்ட்ரக்சன், ரியல் எஸ்டேட், ஃபைனாஸ் இப்படி.
எங்க கம்பேனியோட ஃபாரின் கிளைன்ட் ஒரு மெகா ப்ராஜெட்டை பாஸ்க்கு கொடுத்திருக்காங்க. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் நிறைய ஆப்சன்களோடு, டூரிஸ்ட் அட்ராக்ட் செய்ய, அதுக்காக ஒரு இடத்தை தேர்வுப் பண்ணி, அதை சுத்தி இருக்க இடங்களை எல்லாம் வாங்கி, ப்ராஜெட் ஸ்டார்ட் பண்ற முழுப்பொறுப்பும் எங்க கம்பேனியோடது.
அந்த இடத்தை சுற்றி முக்கால்வாசி இடங்களை நல்ல விலையில் மாத்திக் கொடுத்துட்டாங்க, பிகாஸ் அது விவசாய நிலங்கள் இல்லை ஜிமிக்கி, சேவ் பண்ண இடமாக வாங்கிப் போட்டவர்கள் தான் அங்கு. அதை நல்ல விலைக் கொடுக்கவும் உரிமையாளர்கள் கொடுத்துட்டாங்க.
ஆனால் சிலர் மறுப்பு தெரிவித்தனர், அவர்களை எல்லாம் கம்பேனி சமாதானம் படுத்தி எப்படியோ சைன் வாங்கியாச்சு.
ஆனால் உன்னோட இடம் மட்டும் இடையில் இருக்க, எங்க கம்பேனி
பி ஆர் ஓ உன் கிட்ட பேசி வேலைக்கு ஆகலைனு ரிப்போர்ட் பண்ணாங்க.
எனக்கு அப்ப வரை இது எதுமே தெரியாது, பாஸ் மீட்டிங் போட்டு இந்த ப்ராஜெட் பற்றி விளக்கினார். அப்ப ஒரு இடம் மட்டும் சைன் ஆகாம இருக்கு, அது ஒரு பொண்ணு சைன் போடனும், உங்கள யாராவது அந்த பொண்ணுக் கிட்ட பேசி அந்த இடத்தை வாங்கிட்டா, ஸ்பெஷலா நான் உங்களுக்கு ஏதாவது செய்றேன், ஆனா அந்த பொண்ணை கட்டாயப்படுத்தாமல், அந்த பொண்ணே விருப்பப்பட்டு எழுதிக் கொடுக்கனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் என சொன்னார்.
நான் அப்பாக்காக பணம் கேட்டு அல்ரெடி நிறைய வாங்கியிருந்ததால் புதுசா லோன் கிடையாதுனு சொல்லிட்டாங்க.
பாஸ் சொன்னதும், எனக்கு நம்ம செஞ்சா என்னனு தோணுச்சு, நான் சைன் வாங்கி தரேனு சொன்னேன், பாஸ் எப்படி வாங்க முடியுமுனு கேட்டார், நான் யோசிக்கவும், அவரே சொன்னது இது தான்.
இங்க பாரு ஜனா நான் பக்கா பிஸ்னெஸ் மேன் எனக்கு எல்லாமே பிஸ்னெஸ் மைண்ட் தான், நீ அந்த பொண்ணை கரெக்ட் பண்ணி எப்படியாச்சும் சைன் வாங்கினால் உன்னோட அப்பாக்கு செலவு முழுப்பொறுப்பையும் நான் ஏத்துக்குறேன், ஏனா! இது பல கோடிகள் ப்ராஜெட் அந்த இடமும், உன்னோட அப்பா செலவும் ஒரு விசயமே இல்லை, எங்களுக்கு தேவை நிலம், அதுக்கு கூடுதலாவே விலை வச்சு கொடுத்துடலாம். ஆனா அந்த பொண்ணு நீ சொல்றதை கேக்குற மாதிரி மாத்தினால் வேலைக்கு ஆகும் சொல்லிட்டேன்…. இது தான் பாஸ் சொன்னது.
எனக்கு அந்த நேரம் அப்பாக்காக பணம் கிடைச்சா போதுமுனு ஓகே சொல்லிட்டேன். ஆனா உன்னோட உணர்வுகளில் விளையாட எனக்கு விருப்பமில்லை, அதான் ப்ரண்டு ஆகலாமுனு கேட்டு உன் பின்னாடி சுற்றினேன்.
ஆனா இது என்ன மாமாக்கள் கதை…?”
என முடித்தான் கேள்வியோடு.
“ஓ! இப்படி எல்லாம் கூட சீப்பா போவாங்களா….? ச்சே! கேக்கவே அசிங்கமா இருக்கு, ஏய்! விஜி நீ வா போகலாம், நீ ஏன் உன் இடத்தைக் கொடுக்கனும்…? வா! போய் போலிஸ் கம்பளைன்ட் பண்ணலாம்” என விஜி கையை இழுத்தாள் ரெனி.
“இரு ரெனி!” என அவளோட. கையை தள்ளி விட்ட விஜி,
“ஜனா! நீங்க சொன்னது உண்மை தான், என் அப்பா ஃபாரினில் இருந்தப்ப எனக்காக வாங்கிய நிலம் அது, நான் மைனரா இருந்தேனு அம்மாவை கார்டியனாக போட்டு என் பெயரில் வாங்கி சேவிங் செய்தார், என்னோட சின்ன வயசிலே. அப்பா தெரிந்தவர் மூலமாக இன்வெஸ்ட்மென்ட் பண்ணது, எங்க ஊரு தஞ்சாவூர் பக்கம்.
ஆனால் அப்பா வாங்கியது இங்க சென்னையில், அந்த இடத்தைக் கூட நான் பார்த்ததில்லை. ரீசன்டா பெரிய மாமா அந்த இடத்தைக் கேக்குறதா சொன்னாங்க, அப்படி யாராவது இடத்தைப் பற்றி வந்து பேசினால் போலிஸ் கம்பளைன்ட் கொடுப்பேனு சொல்ல சொல்லி இருந்தாங்க.
என் கிட்டையும் வந்துப் பேசி பாத்தாங்க உங்க கம்பேனியில் இருந்து, நான் முடியாதுனு போலிஸ் பத்தி கூறவும் அப்புறம் காண்டெக்டே இல்லை.
அதுக்கு அப்புறம் அதை பத்தி நினைக்கவே இல்லை, இப்ப நீங்க வந்து இருக்கீங்க..”
“ஆனால் என் கிட்ட உன்னோட மாமா பத்தி எல்லாம் சொல்லவே இல்லை, உன் டீடெய்ல்ஸ் கொடுத்தாங்க அவ்ளோதான்”
“ஜனா! மாமா பத்தி எல்லாம் சொன்னா நீ இவங்க கூட பேச மாட்டேனு, இவங்களை மட்டும் டார்கெட் பண்ண விட்டானுங்களோ” என சந்தேகமாக கேட்டான் அமர்.
“ம்ம்ம்! இருக்கலாமுடா”
“கடவுளே! அடியேய் விஜி இன்னும் என்னதுக்கு இவங்க கூடப் பேசிட்டு நிக்குற…? வா போகலாம்”
“ம்ம்ம்!” என்ற விஜி, “சாரி ஜனா! உங்க மேல நல்ல அபிப்ராயம் எனக்கு வந்திருக்கு, ஆனா என்னால எதுவும் செய்ய முடியாது, ஏனா! இப்ப நானும், அம்மாவும் மாமாங்க வீட்டில் தான் இருக்கோம்”
“ஏங்க! அந்த இடத்தை வாங்க பாஸ் எப்படி வேணாலும் யோசிக்கலாம் ஆனா ஏதோ பொண்ணு பெயரில் இருக்கு, நாளைக்கு இல்லீகலா பிரச்சனையில் மாட்டிக்க கூடாதுனு பாக்குறார் போல, அதான் இந்த வழியை பயன்படுத்தி இருக்கார்” என்றான் அமர்.
“நீங்க ஏன் குதிக்குறீங்க..? விஜியே அமைதியா இருக்கும் போது, இது கார்ப்பரேட் உலகம், இது எல்லாம் ஒரு விசயமே இல்லை. இவங்களை கிட்னாப் பண்ணி கையெழுத்து வாங்க எவ்வளவு நேரமாகும். பட்! இவங்க மாமானுங்க கிட்ட முதலில் பேசியிருப்பாங்க போல எங்க பக்கம், அதான் இப்ப சைலண்டா மூவ் பண்றாங்க, ஏனா! நாளைக்கு இவங்களுக்கு ஒன்னுனா மாமா எல்லாரும் பிரச்சனை பண்ணுவாங்கள, சோசியல் மீடியா பக்கம் போனால் மொத்த ப்ராஜெட்டுக்கும் ஆப்பு ஆகிடும், அதனால கவனமா நகர்த்துறாங்க முடிஞ்சளவு, ஜனா மூலமா விஜியே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டால் ஈஸியா முடியுமே, அவங்க ட்ரை பண்ணி பாக்குறாங்க.” என அமர் விளக்கினான்.
அமர் மெல்ல”இதுக்கு தான் கரெக்ட் பண்ண சொல்லி இருக்கார் நம்ம பாஸ்.. இதுவே நீ லவ் பண்ணியிருந்தால் நீயா..? மாமாவா..? யோசிப்பாங்கள..” என்றான் நண்பனிடம்.
அவனை முறைத்த ஜனா”நானா, மாமாவானு கேட்டால் மாமா தானு சொல்வாங்க ஜிமிக்கி, அது நம்ம கூமுட்டைங்களுக்கு தெரியாதுல, அந்த கால காதல் மெத்தடு எல்லாம் இப்ப அப்ளே ஆகுமாடா..?” என அவனிடம் மெல்ல அதட்டிவிட்டு.
“சரி! அந்த இடத்தை எதுக்கு உன் மாமா கொடுக்க யோசிக்குறாங்க, மத்த. இடங்கள் எல்லாம் போகும் போது, அது மட்டும் தனியா இருந்தால் ஒன்னுமே பண்ண முடியாதே, அது அவுட் பிளேஸ் வேற ஜிமிக்கி”
“நான் இடத்தை எல்லாம் பார்த்ததில்லை ஜனா, ஆனா அவங்க கிட்ட இதை பத்தி பெருசா நான் கேட்டுக்கல.. அவ்ளோ தான்”
“ம்ம்ம்!”
ரெனி கண் காட்டினாள் போகலாமென்று.
“சரி! நாங்க கிளம்புறோம்”
“ஓகே!”
“டேய்! என்னடா ஓகேனு சொல்ற, அப்பாக்கு பணம் எப்படி ரெடிப் பண்ணுவ…? ஏங்க உங்க மாமாங்க கிட்ட பேசிப் பாருங்களே, ப்ளீஸ்” என்றான் அமர்.
விஜி பதில் சொல்ல தடுமாறினாள்.
“இல்ல விஜி! நீங்க கிளம்புங்க” என்றான் ஜனா.
அப்போது தான் உணர்ந்தாள் அதுவரை ஜிமிக்கி, வா, போ என பேசிய அவனின் பேச்சு சட்டென்று மரியாதையாக மாறியதை, எப்பொழுது வா, போ சொன்னான் என தெரியவில்லை ஆனால் அழைத்தது நினைவில் ஏறியது.
விஜி, ரெனியும் கீழே இறங்கி வந்தனர்.
ஹாலில் மாரிமுத்து அமர்ந்திருந்தார்.
இறங்கி வந்தவர்களை பார்த்தவர், ஏற்கனவே அப்பு அண்ணனோட ப்ரண்ட்ஸ் வந்திருக்காங்கனு சொல்லிருந்தமையால், இருவரையும் வரவேற்றார்.
போட்டோவில் கம்பீரமாக இருந்தவர், நேரில் உடல் இளைத்துக் காணப்பட்டார்.
“உட்காரும்மா! நல்லா இருக்கீங்களா..? நீங்க எந்த ஊரு…?”
வசந்தாவும் வர, அவரும் சிரித்தவாறே வரவேற்றார்.
“நான் தஞ்சாவூர் பக்கம் சார்” என்றாள் விஜி.
“நான் மதுரைங்க” என்றாள் ரெனி.
“ஓ! என் கூட வெளிநாட்டில் ஒருத்தர் இருந்தார் தஞ்சாவூலரில் இருந்து பேருக் கூட, என்னமோ வரும்… ஆ! முத்தையா க….” என இழுத்தார் மாரிமுத்து.
“முத்தையா கண்ணு!” என்றாள் அவசரமாக ரெனி.
“ஆமாம்மா! அதே பெயர் தான்.. உங்களுக்கு தெரியுமா.?”
“சார்! அது இவ அப்பா பெயர் தான்..” என விஜியை பார்த்தாள் ரெனி.
“அப்படியா! அப்பா நல்லா இருக்காரம்மா…?” என ஆவலாக விசாரிக்கவும், விஜி அமைதியாக இருந்தாள்.
“சார்! அவளோட அப்பா இறந்து பல வருசங்கள் ஆச்சு..” என்றாள் மெல்ல.
ஓரளவிற்கு ஜனா ஏற்கனவே யூகித்திருந்ததால் தான் அப்பாவை பற்றியே அவன் கேட்கவில்லை. இப்பொழுது அது உறுதியானதும் கொஞ்சம் சங்கடமாகியது.
“அய்யோ! குடும்பத்தை பிரிய முடியாமல் தான் அவர் வந்ததே ஊருக்கு, வந்தும் இப்படி ஆகிட்டா…? என்ன வாழ்க்கையோ அத்தனை வருசம் உழைச்ச எனக்கும் கொடுத்து வைக்கலை, அவருக்கும் கொடுத்து வைக்கலை” என வருத்தமாக கூறினார்.
“சார்! இப்படி பேசாதீங்க, ஜனா சொன்னார் உங்க உடல்நிலை பற்றி. எல்லாம் சரியாகும், கவலைப்படாதீங்க, நாங்க கிளம்புறோம்” என எழுந்தாள் விஜி.
“இருங்கம்மா! சாப்புட்டு போகலாம்” என்றார் வசந்தா.
“பரவாயில்லைங்க! நேரமாகுது போகனும்” என மறுத்தாள்.
“எப்பவோ பழகிய ஒருத்தர் பொண்ணு, இப்ப வந்து இருக்க, அடிக்கடி வாம்மா வீட்டுக்கு, ஜனா ஆபிஸா…?” எனக் கேட்டார்.
“இல்லப்பா! அமர் தெரிஞ்சவங்க, ஒரு வேலை விசயமா பாக்க வந்தாங்க” என எதையோ கூறிச் சமாளித்தான் ஜனா.
“சரிம்மா! போயிட்டு வாங்க, அமர் தெரிஞ்சவங்களா இருந்தால் என்ன, வந்துட்டு போங்க, அம்மா எப்படி இருக்காங்க…?”
“நல்லா இருக்காங்க”
“நீ ஒரே பொண்ணு தானா…?”
“ம்ம்ம்!”
“சரிம்மா! ஜனா போய் விட்டுட்டு வாப்பா..”
“டாக்ஸி நிக்குது சார். கிளம்புறோம். “
“என்ன சார்னு, மாமானு சொல்லும்மா கொஞ்ச நாட்கள் பழகினாலும் நானும் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் தான். அப்புறம் வாழ்க்கைப் போக்குல போயிட்டோம்”
விஜி தலையை மட்டுமே அசைத்தாள்.
“கிளம்புறோம் மாமா!” என்றாள் மெல்ல.
அவர்கள் வெளியில் சென்றனர். பின்னாடியே ஜனா, அமர் நடந்தனர்.
“சரி ஜனா! கிளம்புறோம்” என்றாள் விஜி.
ரெனி முதலில் ஏறி அமர்ந்தாள். பிறகு யோசனையுடன் அமர போன விஜி, மீண்டும் ஜனாவிடம் வந்து”ஜனா! நான் வேணா பெரிய மாமா கிட்ட பேசிப் பாக்குறேன், அந்த இடத்தைப் பற்றி, ஆனால் அவர் முடியாதுனு சொன்னால் நான் ஒன்னும் செய்ய முடியாது” என்றாள்.
“கொஞ்சம் நேரம் முன்னாடி விஜினு சொன்னீங்க, இப்ப ஜிமிக்கினு சொல்றீங்க கோல்ட், ஏன் என்னால உங்களுக்கு யூஸ் இல்லைனா…?”
“ச்சே! ச்சே! அப்படியில்லை ஜிமிக்கி, அமர் ரொம்ப கட்டாயப்படுத்தினான் அதான் நீ கிளம்ப சொன்னது, உன்னோட பக்கமும் புரியுது, பாவம் அம்மா, மாமா சப்போர்டில் இருக்கும் போது சுயமா முடிவு எடுக்க முடியாது தான். என்னால உணர முடியுது”
“சாரி! எனக்கு அந்த இடத்து மேல் எல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்லை, அப்பா அப்ப ஒரு சேவிங்காக வாங்கியது அவ்ளோ தான். பட்! உங்க பேமிலி அதனால பெனிஃபிட் ஆக வாய்ப்பிருக்கு, எனக்கும் நஷ்டமில்லையே, அதான் மாமா கிட்ட பேசிப் பாக்குறேன்”
“ம்ம்ம்ம்! தேங்க்ஸ்” என முகமே மலர்ந்தது அவன் மனம் மகிழ்வால்.
“அப்பா மேல எவ்வளவு பாசம் வச்சு இருக்கீங்கனு புரியுது, டோன்ட் வொரி”
தலையை மட்டுமே அசைத்தவன், கையை நீட்டினான், “எதிர்ப்பார்க்கலை நீ பேசுறேனு சொன்னதே போதும். முடிஞ்சளவு ட்ரைப் பண்ணு. அதுக்கு மேல் கடவுள் பொறுப்பு” எனக் கூறியவாறு.
“ம்ம்ம்!” என அவளும் நீட்டினாள், இருவருமே கையைக் குலுக்கினர்.
ஒரு விதமான அன்பு பரிமாற்றம் நடந்தது இருவருக்குமே. சூழ்நிலையால் சந்திப்பிற்கு உள்ளாகியவர்கள் இத்தனை விரைவில் இந்தளவு புரிதலில் வந்து நிற்க முடியுமா…? என்ற கேள்வி உதயமானது.
இருவருமே உணர்வில் தத்தளித்து மீண்ட நொடியில் கையை விலக்கி கொண்டனர்.
விஜி காரில் ஏறி அமர்ந்தாள்.
கார் கிளம்பியதும், பை! சொன்னப்படி நின்றவனை எட்டிப் பார்த்தவாறு சென்றாள் விஜி.
“என்னடா! பிரியா விடைக் கொடுக்குற மாதிரி நிக்குற…?” என அமர் அருகில் வந்தான்.
“ம்ம்ம்! ஷி இஸ் சம்திங் குட் ஹார்ட் பொண்ணுடா, அப்பா இல்லாம டிப்பென்டுடா இருக்குற ஃபீல் கஷ்டமா இருக்கு போல”
“எப்படி சொல்ற….?”
“ம்ம்ம்! இன்னுமே மாமா முடிவை எதிர்ப்பாக்குறா பாரு..”
“ம்ம்ம்! அவர் சம்மதிக்க மாட்டாருடி.. அவங்க எல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்க, என்னால எதிர்த்தும் பேச முடியாது, அம்மா அவங்க பாதுகாப்பில் இருக்காங்க, என்னைய இத்தனை வருசங்கள் வளர்த்து இருக்காங்க, நான் எதுமே பேச முடியாத நிலை, ஆனால் ஜனா நிலை பாவமா இருக்கு”
“சரிடி! நீ என்ன பண்ண முடியும்..? ஜனா யாரோ, ஜஸ்ட் ஹெல்ப் கேட்டார் முடியாதுனு சொல்ல போற..”
“ம்ம்ம்! பட், ஜனா நல்லவர்டி”
“அவர் நல்லவர் தான், ஆனா உன் பேர்ல இருக்க இடத்தை அவங்க வாங்காம விட மாட்டாங்கனு தோணுது”
“யாரு.?”
“ஜனா பாஸ் க்ரூப்”
“ம்ம்ம்! அம்மாச்சி கிட்ட பேசினால் ஏதாவது செய்ய முடியுமானு பாக்கலாம், ட்ரை பண்றேன். எனக்குமே அந்த இடத்தின் மீது பெருசா விருப்பமில்லை, அந்த பணத்தை மாமாவையே எடுத்துக்க சொல்லிட்டால் யோசிப்பாங்கள”
“ஏய்! லூசாடி நீ..? அது உன்னோட ப்யூச்சருக்கு அப்பா கொடுத்ததுடி..”
“ம்ம்ம்! அது எனக்கு பிரச்சனையாகி நிக்குது, நாளைக்கே அந்த இடத்துக்காக வேற யாராவது ஏதாவது என்னை செய்துவிட்டால்..? அப்படி ஒன்னும் எனக்கு அது முக்கியமான இடமில்லையே, எப்படியும் விக்கப் போற இடம் தானேடி”
“சரி! யோசிடி.. அப்படி வித்துட்டா பணத்தை உன் பேரில் வை சொல்லிட்டேன். இந்த காலத்தில் மாமா, மச்சானு, யாரையும் நம்ப முடியாது”
“முதலில் விற்க ஏற்பாடு செய்றேன்” என கண்களை மூடினாள் பின்னால் சாய்ந்து.
ஏனோ ஜனா வந்து நின்றான் அவள் முன்.
‘ஜிமிக்கி!’ என சிரித்தவாறு.