அவளின் நெற்றியில் முத்தம் வைத்து கண்களை மூடியவனிடம் விஜி”ஜனா! காலையில் உங்க அம்மாவை எப்படி பார்ப்பேனு, பயமா இருக்கு…” என அவன் மார்பில் படுத்திருந்த நிலையிலே கூறினாள்.
“என்ன பயம்..? எப்பவும் போல தான் பார்க்கனும்” என கண்களை விரித்து, அவளை அணைத்த நிலையில் விட்டத்தைப் பார்த்துக் கூறினான்.
“என்ன கிண்டலா.? நீங்க பாட்டுக்கும் சொல்லிட்டு என்னைய மாட்டிவிட்டீங்க அவங்களுக்கு நான் தான் இப்ப டார்கெட்டில் இருப்பேன்”
“உன் மனசுல அம்மா பேசியது ஆழமா பதிஞ்சிருக்குல, அது மாறனுமுல அப்ப அம்மாக்கு இது தெரியனும்..”
அவனிடம் இருந்து நிமிர்ந்தவள், “அப்ப! உங்க மனசுல அது பதியலையா ஜனா..?” எனக் கேட்டாள்.
“அவங்க என் அம்மா விஜி, அவங்க என் முன்னாடி எது பேசினாலும் எனக்கு அந்த நேரத்துல கோபம் வருமே தவிர, அத நான் லைஃப் லாங்க் கேரி பண்ண முடியாது, பிகாஸ் எங்க உறவு அப்படி, கோழி மிதிச்சு குஞ்சு செத்துடாது கதை தான் ஃபைனலா நிக்கும். ஆனா நீயும் அப்படி போகனுமுனு அவசியமில்லை, அப்படி போனு நானும் சொல்ல மாட்டேன். சோ! அம்மா உன் கிட்ட அப்படி பேசி இருக்க கூடாதுனு உணரனும், அதுக்காக தான் சொன்னேன், அவங்களும் யோசிப்பாங்க.
அம்மா நெகட்டிவ் பெர்சன் இல்லை, புரியாம சண்டைப் போட, அன்னைக்கு அவங்க இருந்த கோபத்துல வார்த்தையை விட்டாங்க, என்னைய மட்டுமே நம்பி இருக்கும் குடும்பம் இது. அவங்க பேசினது எனக்குமே வருத்தம் தான், ஆனாலும் அவங்க என் அம்மா விஜி….” என முடித்தவனை கண்கள் சிமிட்டாமல் நோக்கினாள்.
“ஏய்! என்ன….? ஏன் இப்டி பாக்குற…?”
“இல்ல! உங்களை மாதிரி நானும் யோசிச்சு இருந்தா, என் அப்பாவை புரிஞ்சுகிட்டு அவர் கூட கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாமோ…” எனக் கண்கள் கலங்கினாள்.
“நீ ஏன் குழப்பிக்கிற…? அது முடிஞ்சுப் போச்சு…”
“இல்ல ஜனா! நீங்க மட்டும் எனக்கு அன்னைக்கு பேசுனு சப்போர்ட் பண்ணலனா, கடைசிவரை அப்பாவுடைய ஏக்கத்திற்கு பாவி ஆகியிருப்பேன். இப்ப ஏதோ ஒரு திருப்தி கிடைச்சிருக்கு, என் அப்பா கூட பேசிட்டேனு”
“ஸீ! என் அம்மா, உன் அப்பா பிரச்சனை ஒன்னு இல்ல, அதையும் தாண்டி பிரச்சனை சின்னதா, பெருசா என்பதை விட பிரச்சனையை பாக்குற விதம் தான் முக்கியம், ஆனா பாக்குற கண்களை விட பாதிக்கப்படுற மனதிற்கு வலிகள் அதிகம். உன் கதையில் நீ பாதிக்கப்பட்டவ, நான் பார்வையாளன்.
உன் அப்பாவோட பாசம் மாறவே இல்ல, அது கடைசிவரை ஒரே மாதிரி தான் இருந்துச்சு, ஆனா என்ன ஒன்னு உன்னைய சுத்தி இருந்த மாமா எல்லாரும் அவங்க கோபத்துக்கு உன்னைய பகடையா யூஸ் பண்ண, உன்னால அப்பா பாசத்தைப் பத்தி யோசிக்கவே முடியாம போச்சு.
யாருமே இதை யோசிக்கவே இல்ல, உன் அம்மா தான் லீகலி வைய்ப், சித்தி இல்லீகலுனு. உன் அப்பாவும் அம்மாவை முறையா பிரிய கேக்கவே இல்லை. அவரு விருப்பமும், போராட்டமும் உன்னைய கூப்புடுவதில் தான் இருந்திருக்கு. இது எல்லாத்துக்குமே மூலக்காரணம் உன் அம்மா விஜி, பட் நோ யூஸ் டு டிஸ்கஸ் நவ் அபௌவட் இட்.
உன் சித்தி சுயநலமா யோசிச்சு இருந்தாலும் அவங்க லைஃப் பிளாங் தான். ஸி! இப்ப அவங்க ஏஜ்க்கு புருசனோடு சந்தோஷமா வாழ வேண்டியவங்க. ஆனா…? ஆக மொத்தம் யாருமே சந்தோஷமா வாழலை. செகண்ட் சாய்ஸ் சரி, தப்பு தாண்டி அத அசெப்ட் பண்ற மனங்கள் தான் வேறுபாடு. டைவர்ஸ் பண்ணிட்டு போனா ரைட், அதுவே டைவர்ஸ் பண்ணாம ஹேப்பெண்ட் மீன் ராங்…
அப்ப உன் அப்பா டைவர்ஸ் பண்ணிட்டு போய் இருந்தால் இட்ஸ் ரைட் சாய்ஸ் தான். அவருக்கு அது தெரியலனு இல்ல, அவரு யோசிக்கல….
உன்னால புரிஞ்சுக்க முடியுற பக்குவம் இருந்திருந்தா, ஒரு வேளை உனக்கு அப்பாவோட புரிதலுக்குரிய சந்தர்ப்பம் கிடைச்சு இருந்தா இன்னேரம் டாடி பிரின்செஸா இருந்திருப்ப…” எனச் சிரித்தான்.
“இப்பவும் நான் டாடி பிரின்செஸ் தான் ஜனா”
“அப்கோர்ஸ்!”
“ம்ம்ம்! உங்களை நான் சின்ன வயசுலயே பாத்து இருக்க கூடாதா..?” என அவன் மார்பில் சாய்ந்தாள்.
“அப்ப பாத்திருந்தா, உன் மாமா கிட்ட போய் மாமா! மாமா! இவன் என்னைய ஃபாலோ பண்றானு போட்டுக் கொடுத்திருப்ப ஜிமிக்கி” எனச் சிரித்தான்.
“போடா!” என அவனை அடித்தாள்.
“வெளியிலா…?”
“போங்களே!” என்றாலும் அவனை விடாமல் அணைந்திருந்தாள்.
“அது எப்டி பொண்டாட்டி, ஜெயில் கம்பி மாதிரி அரெஸ்ட் பண்ணிட்டு போங்களேனு சொன்னா” எனத் திரும்பி அவளை இடையோடு இறுக்கி, நெற்றியில் முட்டினான்.
“எனக்கு இப்ப ஹேப்பியா இருக்கு ஜனா”
“ஓ! என்ன ஹேப்பி..?”
“தெரியலயே! என் அப்பா டைரில ஒரு பேஜ் காட்டினல…”
“ம்ம்ம்!”
“அவரு ஆசை நிறைவேறுமா..?”
“ம்ம்ம்! கண்டிப்பா, ஆனா வெயிட் பண்ணனும்..”
“எவ்ளோ நாள்…?”
“அது தெரியாதும்மா”
“ம்ம்ம்! பத்து மாசம் போதும் ஜனா..”
“அடிப்பாவி! உனக்காக என் அம்மா கிட்ட வசனம் எல்லாம் பேசிட்டு வந்தேன். நீ என்னனா இப்டி பொசுக்குனு சொல்ற..”
“சோ வாட்! என்னோட எண்ணம் அவங்களை என் கிட்ட மன்னிப்புக் கேக்க வைப்பதில்லை, அவங்க உணரனும், என் மனக்காயத்தை அவ்ளோ தான். அல்மோஸ்ட் அவங்க ஃபீல் பண்ணதா சொன்னாங்கள அதுவே போதும். நான் கொடுமைக்காரி இல்ல கோல்ட்” என அவன் விழிகளையே நோக்கினாள்.
“நிஜமா தான் சொல்றீயா…?”
“ம்ம்ம்! கொஞ்சம் நேரம் முன்னாடி வரை இது தோணல, ஆனா இப்ப தோணுது, உங்கள மாதிரி மனசுல எதையும் ஆழமா கேரி பண்ணாம இருந்தா மத்தவங்க ஃபீல் புரியுமுனு நினைக்கிறேன். சோ! அதோட முதல் ஸ்டெப்பா இப்பவே என் மனசுல இருந்த நெகட்டிவ் ஃபீல் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஹேப்பியா ஃப்ரீயா வாழப் போறேன்.”.
“பாருடா! இது என்ன புது அவதாரமா இருக்கு?”
“இது ஜனாவோட ஜிமிக்கி புதுசா மாறியிருக்கா”
“அப்போ அப்பா ஜி……?”
“அது ஆன் தி வே!” எனக் கண்களைச் சிமிட்டினாள்.
“ஜிமிக்கி!” என அவளின் மேல் தாவினான்.
“என்ன…?”
“என்னனா, நான் இனிமே பேச மாட்டேன், உஷ்! நீயும் தான்…” என அவளின் இதழில் இதழ் பதித்தான்.
விழிகளை மெல்ல மூடியவள், அவனை முதுகோடு கைக்ககோர்த்தாள்.
தாம்பத்யம் என்பது இரு மனமும் விரும்பும் போது நிகழ்ந்திட்டால் அதன் அன்பு எல்லைக் கடக்கும். ஆனால் முறையான தாம்பத்யம் முதல் நாளிலே முடிந்திடாது.
ஒவ்வொரு நாளையும் அடிமையாக்கும் அதன் உணர்வுகள் சப்தமில்லாமல் முத்தமிட, தம்பதிகளின் அன்பு பெருகிட ஒவ்வொரு இரவும் கணவன், மனைவி அடிப்பணிந்திட வேண்டும்.
ஜனாவின் முதல் தேடல் இன்று
தொடங்கியது, பெண்ணிற்கு என்ற சில விதிமுறைகள் உண்டு தாம்பத்யத்தில்.
அதைப் புரிந்துக் கொண்ட ஆண் அதன் உணர்வை முழுமையாக மனைவிக்கு கொடுப்பதன் மூலம் இருமடங்கான அன்பினை பெற இயலும்.
விஜியின் உடலில் புரியாத உணர்வுகள் தோன்றியது, கணவனே ஆனாலும் சில கூச்சங்கள் வருவதைத் தடுக்க இயலவில்லை. அது இயற்கையான பெண்மையின் குணம் அல்லவா…?
“ஜனா, ப்ளீஸ்!” எனத் தடுத்தாள், அவன் விரல்களின் தீண்டல் பலவித உணர்வை அவஸ்தையாக்கிட, முடியாத நிலையில் கணவனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“ஜிமிக்கி! டோன்ட் கன்ட்ரோல் மீ” என அவளிடம் இருந்து கையை உருவியவன், அவளின் மேல் படர்ந்து, கைகளை இறுக்கிக் கொண்டு, அவளின் கவனத்தை மெல்ல தன்வசமாக்கினான்.
இதழுடன் இதழைப் பதித்துவிட்டு நிமிர்ந்தவன்”இட்ஸ் மை டைம்!” எனக் கூறி, அடுத்து அவளின் சத்தம் வெளியில் வராமல் மறுபடியும் இதழ் பதித்தான்…
விஜி அவனின் திட்டத்தை அறிந்த போது கைகளை உருவிக் கொண்டு, முதுகில் அடித்தாள். ஜனா அவளின் அடிகளை தாங்கிக் கொண்டு விழிகளில் சிரிப்பினைப் பதிலாக அனுப்பினான்.
இயற்கையான வலியும் அன்பும் கலந்திட முதலில் கணவனை அடித்தவள், அதே கைகளால் அணைத்துக் கொண்டாள்.
ஒற்றை கையால் அவனின் கேசத்தை வருடியவள், அப்படியே களைத்து இழுத்து முறைத்தாள். இருவரின் சீண்டல்களும் நீண்டுக் கொண்டே செல்ல, விடியல் வேண்டாமென்று வேண்டினாலும் அது வருவதற்கு ஆயுத்தமானது.
விடிந்தது முதல் விஜி சாதரணமாக இருந்தாள் மாமியாரிடம், ஆனால் வசந்தா தான் மனதளவில் சுருங்கி இருந்தார்.
விஜியிடம் அதைப் பற்றி பேச முடியாமல் கொஞ்சம் மாமியார் உந்துதல் இருக்க அவளிடம் விலகியே இருந்தார்.
விஜி தானாக சென்றுப் பேசி எப்பவும் போல் இருந்தாள்.
ஜனாவும், விஜியும் பகலில் காதல் சமிஞைகளும், இரவில் கணவன், மனைவி சமிஞைகளும் சேர ஒவ்வொரு நாளையும் அன்பின் பரிமாற்றத்தால் மெருகேற்றினர்.
முத்தையாவிற்கு பொங்கல் படையல் வர, விஜி முன்னாடி செல்லவும், வேலையின் பொருட்டு ஜனா குடும்பத்துடன் பின்னால் செல்லவும் முடிவு எடுத்திருந்தனர்.
விஜி ஊருக்கு கிளம்பிக் கொண்டு இருக்க, வசந்தா விஜியிடம் சென்றுப் பேசினார்.
“விஜி! அன்னைக்கு ஏதோ ஒரு சூழ்நிலையில் பேசிட்டேன். அதை மனசுல வச்சுக்காத, நானும் தினமும் உன் கிட்ட பேசனும் நெனப்பேன் ஆனா ஏதோ ஒன்னு தடுக்கும். இன்னைக்கு சொல்லிட்டா மனசு நிம்மதியாகும் தோணுச்சு… அதான் என்னை மன்னிச்சுடும்மா” என்றார்.
“அத்த! அதை எல்லாம் நான் மறந்துட்டேன். ஜனா அன்னைக்கு உங்கக் கிட்ட பேசிட்டாருனு சண்டைப் போட்டேன், அவரு கொடுத்த விளக்கம் எனக்கு சரியா பட்டுச்சு” என அதைக் கூறினாள்.
வசந்தாவிற்கு மகனை எண்ணிப் பெருமையாக இருந்தது.
“அதான் எனக்குமே எதும் மனசுல இல்ல” என்று அதனோடு நிறுத்தினாள்.
விஜி ஊரிற்கு சென்றதும், ஜனா தான் பொழுதுப் போகாமல் தவித்தான்.
ஒரு வழியாக அனைவருமே பொங்கல் முதல் நாள் சென்றனர்.
ஜனா விஜியைப் பார்க்க கண்களால் தேடினான், ஜமுனா”தம்பி! விஜி ரூமுல இருக்கு போய் பாருங்க” என்றாள்.
“ஏன், உடம்பு முடியலையா..? அப்பா, அம்மா வந்திருக்காங்க, வெளியில் வரல” எனக் கேட்டான்.
“நீங்க போங்க உங்களுக்கே புரியும்” என்றாள்.
ஜனா வேகமாக அறைக்குள் செல்ல, அவனின் வருகைக்காகவே காத்திருந்தவள் அவன் நுழைந்த வேகத்தில் கட்டிப்பிடித்தாள்.
“விஜி! என்ன ஆச்சு..?” என்றான் பதறியவாறு.
“அப்பாவோட டைரி ஆசை நிறைவேற போது கோல்ட்” என்றாள்.
“ஜிமிக்கி!” என்றான் புரிந்தும் புரியாமலும்.
“ம்ம்ம்! டாக்டர் கிட்ட போயிட்டு வந்துட்டேன். உங்களுக்கு ஃபோனில் சொல்ல நெனச்சேன். பட் சர்ப்ரைஸ்… வீ ஆர் பிரகென்ட்…” என்றாள் தலை சாய்த்து..
“ஹேய்!” என முத்தம் வைத்தவன், அவளைத் தூக்கி சுற்ற, அதற்குள் விசயம் அறிந்து வசந்தா ஓடிவர, “டேய்! இப்டி தூக்காதடா” என மகனை அதட்டினார்.
ஜனா மெதுவாக மனைவியை இறக்கிட, வசந்தா மருமகளை அணைத்துக் கொண்டார்.
****
சில மாதங்கள் கடந்தது….
பிரசவ அறை முன் ஜனா மனதில் சொல்ல முடியாத பயத்துடன் நடந்துக் கொண்டு இருந்தான்.
யார் ஆறுதல் கூறியும் அடங்கவில்லை அவன் மனம்…
அமர்”அமைதியா இருடா, ஆல் இஸ் வெல்” என்றான்.
ரெனியும் அதே ஆறுதல் கூறினாள்.
தர்மா குடும்பமும் நின்றது, மங்கையை ஜெய், சுந்தருடன் விட்டு வந்திருந்தார்கள்.
மனைவியின் பெரிய அலறலின் முடிவில், ஜனா, விஜியின் வாரிசு உலகத்தை எட்டிப் பார்த்தது.
சிறிது நேரத்தில் குழந்தையுடன் வெளியில் வந்த டாக்டர்”கங்கிராட்ஸ்! ஜனா, உங்கப் பொண்ணை பாருங்க” என்றார்.
கையில் குழந்தையை வாங்கும் முன்னே,
“டாக்டர்! விஜி எப்டி இருக்கா…?” எனக் கேட்டான்.
“விஜி ஃபைன், போய் பாருங்க” என்றார்.
குழந்தையை வாங்கிப் பார்த்த ஜனாவின் கண்களுக்கு, தன் மகள் குட்டி ஜிமிக்கியின் உருவமாக தெரிந்தாள்.
தன் மகளைக் கொஞ்சியவன் கையில் இருந்து வாங்கிய வசந்தா”இங்கக் கொடுடா, நீ போய் உன் பொண்டாட்டியை பாரு, எங்களுக்கு இவ போதும்” எனக் கொஞ்ச தொடங்கினார்கள் வரிசையாக.
ஜனா உள்ளே செல்ல, விஜி சிரிப்புடன் அவன் கையில் குழந்தையைத் தேடினாள்.
“அம்மா கிட்ட…” என்றவன், அவள் அருகே சென்று நெற்றியில் முத்தம் வைத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் உள்ளே நுழைய, அவர்களுடன் வந்த நர்ஸ் விஜிக்கு ட்ரிப்ஸ் மாட்டிக் கொண்டு இருந்தார்.
“ஆமா! நானும் அத்தான் தான் பொறப்பாருனு ஆசையா இருந்தேனுங்க” என்றனர் ஜமுனா, தர்மா.
“எப்படியோ குழந்தை பிறந்துட்டு, நான் ஹேப்பி…” என்றாள் ரெனி.
“ஆமா விஜி! உங்க புருசன் ஆன டென்சனுக்கு, இந்த ஹாஸ்பிடல் எல்லா வார்டும் கண்ணீர் விட்டிருக்கும், எனக்கு இப்டி ஒரு அட்டென்டர் இல்லைனு…” என நக்கலடித்தான் அமர்.
“ஏங்க! யாரு முத்தையா..?” என நர்ஸ் கேட்டார், அவர் கொஞ்சம் வயதானவர்.
ஜனா கூறவும், “ஓ! அப்படி இல்லங்க, செத்துப் போனவங்க ஆம்பளையா இருந்தா ஆம்பளை புள்ளை தான் பொறக்கனும் இல்ல, அவங்க பொம்பளை புள்ளையாவும் பொறக்கலாம், அதுவும் மூத்தது பொண்ணுனா அதிர்ஷ்டம் சொல்லுவாங்க” என்றவர்,
“ஒரு ஆள் இங்க இருங்க, மத்தவங்க வெளியில் இருங்கம்மா” எனக் கூறிவிட்டு வெளியேறினார்.
வசந்தா”ஜனா! நீ பேசிட்டு வா, நாங்க வெளியில் இருக்கோம்” எனக் குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு, விஜியிடம் தலை அசைத்துவிட்டுச் சென்றார்.
மற்றவர்களும் நகர்ந்தார்கள், ஜனா”விஜி! இப்ப உனக்கு ஹேப்பியா..?” எனக் கேட்டான்.
……………………………
முத்தையாவின் டைரியின் ஒரு பக்கம்….
இறப்பதற்கு முதல் நாள் எழுதியது.
“ஜிமிக்கிமா! எங்க என் மீதி இருக்க வாழ்நாளில் உன் கூடப் பேச முடியாம போயிடுமோனு ஏங்கி தவிச்சேன், ஆனா என் ஏக்கம் தீர்ந்துப் போச்சுடா. நாளைக்கே நான் செத்தாலும் முழுச் சந்தோஷம் தான். நான் எப்ப சாவேனு எனக்கு தெரியாது, ஆனா சாவு நெருங்குது.
இந்த ஜென்மம் எனக்கு வேண்டாமுடா, இந்த உறவு சபிக்கப்பட்ட விதியா போச்சு. நான் அடுத்த ஜென்மத்துல வரேன்டா ஜிமிக்கி, அதுவும் உன் வயித்துல ஒரு பொண்ணா பொறக்கனும் அந்த கடவுள் கிட்ட வேண்டிட்டே சாவுறேன். ஏனா! அந்த உறவுல தான் நான் என் பொண்ணுக் கூடவே இருக்க முடியும்.
அப்பா செத்தா நீ கலங்காத, என் பொறுப்புல மாப்பிள்ளை இருக்கார், அவரு உன்னைய பாத்துப்பார். மறுபடியும் உன் அப்பா எந்தவித பாவமும் செய்யாத பச்சப்பிள்ளையா வரேன்….” என்று எழுதி இருந்தார்.
…………………………………………
“ஹேப்பி ஜனா! இதை விட வேற என்ன வேணும்..”
“ம்ம்ம்ம்! இந்த ஜிமிக்கி வயிற்றில் என் குட்டி ஜிமிக்கியா உங்கப்பா ஜனனமாகிட்டார்.”
“ஜிமிக்கியின் ஜனனம்” எனக் கூறி தன் மகளைக் கொஞ்சினான்.
“உங்கக் காதல் இல்லைனா உங்க பொண்டாட்டி ஜிமிக்கியும் இல்ல, இந்த ஜனனம் இல்ல, ஐ லவ் யூ கோல்ட்!” என மெல்ல சிரித்தாள்.
“ஐ லவ் யூ ஜிமிக்கி!” என ஒரு பக்கம் தன் ஜிமிக்கியையும், மறுபக்கம் குட்டி ஜிமிக்கியையும் அணைத்துக் கொண்டான் அவளின் கோல்ட்(தங்க பையன்).
விஜிக்கு கிடைத்த ஜனாவின் காதல் அவள் பிறப்பின் மூலம் உருவாகி பிரிந்த தந்தைக் காதலையும் சேர்த்து வைத்தது.
தந்தையின் மறு உருவம் கணவன் என்பர், அந்த கணவன் மூலமாக விஜிக்கு தந்தையே ஜனனம் எடுப்பார் என்பது அவளின் காதல் பரிசு.
தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றி நண்பர்களே.
இக்கதையைப் படித்தவர்கள் பிடித்திருப்பின் கதையைப் பற்றிய விமர்சனங்களைத் தரவும். 😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤
மீண்டும் சந்திப்போம்!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.