“எனக்கு வேலையிருக்குடா” என்றவர் “அடே வினயா! காரை ஸ்டார்ட் பண்ணு” என்று உத்தரவிட அவன் அண்ணனை பார்க்க, ஜெய் மெதுவே அப்பாவின் கார் அருகே போனவன் கார் சாவியை கையில் எடுத்து ஜீப் நோக்கி நடந்தான்.
“டேய் ஜெய்! ஜெய்” என்று அவர் கத்த
“பக்கத்துல தானே வீடு நடந்து வாங்க, கார் அப்புறம் எடுத்துக்கலாம்” என்று சொல்லி முன்னால் சென்றுவிட்டான். அவனின் வீடு நாலுகெட்டு வீட்டின் நடுமுற்றத்தில் நின்றான் ஜெய். பாலாவும், வினய்யும் நடந்து வந்தனர்.
“ரொம்ப பண்றடா ஜெய்” என்று பாலச்சந்திரன் வந்ததும் மகனிடம் பாய, அவனோ
“ஒரு நாள் பேச்சைக் கேட்கலன்னா கோவம் வருதே, அப்போ அச்சச்சனுக்கு இருக்க கோவம் நியாயம்தானேப்பா?” என்று கேட்டான்.
“பிந்து என்னடா பண்ணுவா, அம்மா இல்லாத பொண்ணு. சொந்த பந்தத்தோட இருக்க ஆசைப்படுறா” பாலச்சந்திரன் தணிந்து பேச
“அதுக்கு உங்க ப்ரண்டு வந்து மன்னிப்புக் கேட்டிருக்கலாமே, இப்பவும் அவருக்கு ரோஷம். அவருக்கு அச்சச்சன், அச்சம்மா யாரும் வேண்டாம்?” என்றான் புருவம் உயர்த்தி.