Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் 50(3)

அவன் உள்ளே வந்ததும், அமைதியாகவே இருந்தாள் அஞ்சலி. அவளை ரசித்துக்கொண்டே நின்றவன், “நம்ம லவ்க்கு எவ்ளோ இடைஞ்சல்ஸ் இல்ல.?” என்றான். அவன் அப்படிச் சொன்னதும், புருவத்தைச் சுருக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள். “நாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்ட நாள்ல இருந்து, இப்போ வரைக்கும் எத்தனை இடைஞ்சல்கள் இல்ல.? இதெல்லாம் தாண்டி ஒரு சில நல்லவங்களால தான் நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திருக்கோம்.” என்றான். அவளும் உண்மைதான் என்பதைப் போல் தலையாட்டினாள். “என்னை உடனே பார்க்கணும்னு சொன்ன, […]

Readmore

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் 50(2)

இன்னும் அந்த நொடி கூட தன் நம்ப முடியாத பார்வையிலேயே தான் அந்தப் பத்திரிக்கையை வைத்துக்கொண்டு நின்றாள் அஞ்சலி. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வந்துகொண்டே தான் இருந்தது.இப்போது வரை மகேஷ் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமலேயே கேட்டுக் கொண்டிருந்தாள்.      அதற்க்குள் அங்கே பானுமதியும், மீனாவும் வந்துவிட, தன் அன்னையை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் அஞ்சலி. சந்தோஷமாய் இருந்தாலும், இத்தனை நாள் தனக்குள்ளே தேக்கி வைத்த துக்கத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பமே அமையாமல் போனதால், அனைத்தையும் […]

Readmore

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் 50(1)

ஞாயிறு அன்று காலை ரகுராம் காபி குடித்துக்கொண்டிருந்த வேளையில், பரபரப்பாக உள்ளே நுழைந்தார் மகேஷ். அன்று தான் அவர் ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் முகமே சரியில்லை.      “என்னாச்சு.? ஏன் இவ்ளோ பரபரப்பா இருக்கே.? அஞ்சலிக்கு இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம். தலைக்கு மேல எவ்ளோ வேலை இருக்கு.? இப்போதான் வருவியா.? ஏதோ நான் வந்ததால பரவால்ல. அவள உன்னோட பொண்ணுன்னு சொன்னா மட்டும் பத்தாது, அதுக்குத் தகுந்த மாதிரி நடக்கவும் செய்யணும்.” என்று கோபமாய்ப் பேசினார் […]

Readmore