Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 6 -part-2

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 6 -part-2 மானூத்துப்பட்டி பாண்டியன் இல்லம், சிவபாண்டி கூடத்தில் அம்மா தம்பிகளோடு பேசிக் கொண்டிருந்தார். ராஜபாண்டியன், கௌசி, சென்னை சென்று வந் பிறகு பேச்சியம்மாளை பார்க்க வந்திருந்தனர். துரையும் செல்வியும் அவர்களோடு வந்தனர்.       ” ஆத்தா, சட்டசபையில அப்பாரை புகழ்ந்து பேசுனாங்க.” என அம்மாவிடம் முன்னாள் எம். எல்.ஏ வும், தங்கள் தகப்பனாருமான கருத்தபாண்டியன் ஐயாவைப் பற்றிச் சபையின் மூத்த உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுப் பேசியதைத் தான் பெருமையாகச் சொல்லிக் […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 6 part-1

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 6 part-1           சிவப்ரியா வீட்டுக்குச் செல்லும் முன் அவளைப் பிடித்து விட வேண்டும் என முத்துப்பாண்டி தனது இயந்திர கருப்புக் குதிரையை விரட்ட அவன் நினைத்ததை விட அவள் மெதுவாகவே சென்று கொண்டிருந்தாள். என்ன தான் இரண்டுமே இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும், பெண் பறவைக்கும், ஆண் குதிரைக்குமான வித்தியாசம் கட்டாயம் இருந்தது. அவள் வண்டியைத் தாண்டி சென்று வழியை மறித்தவன், அவனுடன் பள்ளியில் படித்த நண்பனின் ஹாலோ ப்ளாக் […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே! -5 part-2

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே! -5 part-2  உசிலம்பட்டியிலிருக்கும் செல்வமணியின் பெட்ரோல் பங்க் இப்பொழுது பாண்டிக் குடும்பத்தின் மிக முக்கியமான மீட்டிங்க் பாயிண்டாக இருந்தது. பக்கத்திலிருந்த கடை வளாகத்தில் பூங்குயிலின் அழகி புட்ஸை ஆட்களை வைத்து நடத்திக் கொண்டிருந்தான் செல்வம். அதனால் இவர்கள் அமர்ந்து பேசும் போது கொறிப்பதற்கு ஏதாவது கிடைத்துக் கொண்டே இருந்தது.          பூங்குயில் ஆரம்பித்த இந்தக் கடையை ஆரம்பக் காலத்தில் மாமியாரும் மருமகளுமாக நடத்தினர் , ஆனால் பூங்குயில் மாசமாக இருக்கவும், அவளால் சமாளிக்க […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே! -5 part-1

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே! -5 part-1        பாண்டியன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் , வழக்கம் போல் அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கூடல் மாநகரை நோக்கி வைகையைக் கடந்து தடதடவெனச் சத்தத்தில் தனது வேகத்தைக் குறைத்து, ஜனசந்தடியான கரிமேடு வழியாக மதுரா கோட்ஸ் மில்லின் அருகிலிருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் ஊர்ந்து மதுரை சந்திப்பின் முதல் நடைமேடையை வந்தடைந்தது.        பாண்டியன் விரைவுவண்டியில் இன்று நமது பாண்டிக் குடும்பத்தின் பெரிய பாண்டிகள் கூட்டுறவு மந்திரி சிவபாண்டியன், அவரது மனைவி […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-4 part-2

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-4 part-2 அவளது வண்டியை வரும் போதே பார்த்தவன் மனதில், செல்வமணி சொன்ன வார்த்தைகள் ,” குமரியானாலும் வச்சுக்குவாய்ங்களே தவிர, உனக்குத் தரமாட்டாய்ங்கே ” என்றது நினைவில் வந்தது. அதன் பிறகு அவளுக்கும் இது தெரியும் தானே, அதனால் தான் தன்னை , போதையிலிருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாமல் செல்கிறாள் என நினைத்தான். ஆனால் அவளும் குறை சொல்லும் அளவில் இல்லாமல் லட்சசனமான பெண் தான்,சாமர்தியமானவள், குடும்பத்தை […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-4 part-1

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-4 part-1       கொக்குளத்தில் சிவப்ரியா தனது தாத்தா ஆண்டித்தேவனின் நினைவுநாள் படையலுக்காகத் தனது அம்மா பரிமளாவுடன் அங்கே சென்றிருந்தாள். அவளது அப்பத்தா பாண்டியம்மாள் சாப்பிட்டு முடித்துக் கூடத்தில் அமர்ந்திருந்த போது பேச்சை ஆரம்பித்தார்.        சிவப்பிரியாவுக்கு இரண்டு பெரியப்பாக்கள், விருமன் ,ஈஸ்வரன் . அவர்களுக்குத் தலா இரண்டு மகன்கள் ஒரு மகள் என அவர்களும் பெரிய குடும்பம் தான். சிவப்ரியாவுக்குமே ஒரு தம்பி, தங்கை உண்டு.         பாண்டியம்மா, மூன்றாவது மருமகளிடம், ” பரிமளா, […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே ! -3 part-2

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே ! -3 part-2 ஹாலில் பேச்சுச் சத்தம் கேட்கவும், இருவரும் வெளியே வந்தனர். ஷோபாவில் முத்துப்பாண்டி அமர்ந்திருக்க, செல்லம்மாள் சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தவர், மகன், மருமகளிடம் உபசரணையை விட்டு விட்டு தோட்டத்துக்குச் சென்றார். செல்வம், “வாடா மாப்பிள்ளை” என வரவேற்க, பூவு முகத்தைத் திருப்பிக் கொண்டு அடுப்படிக்குச் சென்றாள்.      “அடியே, வீட்டுக்கு வந்தவனை, வா ண்டு சொல்லாம, என்னா பழகுறவ” என மனைவியைக் கடிந்தான் செல்வம்.         ” அவர் கம்பெனி வச்சு […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே ! -3 part-1

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே ! -3 part-1           உசிலம்பட்டி மானூத்துப்பட்டிக்கு இடைப்பட்ட தூரத்திலிருந்த செல்வமணியின் வீடு. செல்லம்மாள் இந்த வயதிலும் அதிகாலையில் வாசலைக் கூட்டித் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். முதல் நாள் மாலையிலேயே வேலைக்கு இருக்கும் பெண்மணி சுத்தம் செய்துவிட்டுப் போயிருந்தாலும், காலையில் தன் கைப்படச் செய்தால் தான் செல்லம்மாளுக்குத் திருப்தி. ஒன்றரை ஏக்கர் பரப்பில் சுற்று மதில்களோடு இருந்த பெரிய வீடு தான். போர்டிகோவில் ஏழுவருட பழைய கார் ஒருபுறம் இருக்க, குடும்பம் […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 2 part-2

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 2 part-2  பிள்ளைகளுக்கு மற்றவர் முகமூடி அணிவித்துக் கொண்டிருக்க, தனது அம்மா அசோதையுடன் நின்ற பூங்குயில் போனில் யாரையோ அழைத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த செல்வமணி அவளிடம் பிறர் கவனம் ஈர்க்காமல் சென்றான்.        ” அடியே குயிலு, அங்க கேக் வெட்டப் போறாய்ங்கே , நீ தனியா யார்கிட்ட பேசுறவ. வச்சுட்டு வா. அப்புறம் பேசலாம்” என்றான்.        ” இந்த முத்துப் பயலை காணோம் பாரு, அப்பலேயப் புடிச்சு, அப்பாவும் […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 2 part-1

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !- 2 part-1       மானூத்துப்பட்டி பாண்டியன் இல்லம் கருத்தபாண்டியன் பேச்சியம்மாளின் வாரிசுகள் தான் சிவபாண்டியன் மந்திரி , ராஜபாண்டியன் பிஸ்னஸ் மேன், வீரபாண்டியன் விவசாயி, துரைப்பாண்டியன் காவல்துறை சீனியர் இன்ஸ்பெக்டர். இவர்களோடு செல்லம்மாள், சோலையம்மா என்ற இரண்டு சகோதரிகள் உண்டு.       இந்த அறுவரில் மூத்த இரண்டு மகன்களும் சென்னையில் இருந்ததால் அங்கு ராஜபாண்டியன் மகன் தங்கப்பாண்டியன்- தான்வி திருமண நாளை கொண்டாடினர். அதே நேரத்தில் மானூத்துப்பட்டியில், சோலையம்மா- மாயத்தேவனின் மகன் வாசுவின் […]

Readmore