Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-30

இரவு உறங்கும் வரை வசீகரன் உடன் இருந்து இருந்தாலும், உடலின் அசதியிலும், அலுப்பிலும் உறங்கினாலும் கூட, கொஞ்ச நேரத்திலேயே உமையாளின் உறக்கம் கலைந்து விட்டது. அர்த்த சாமத்தில், உடன் உறங்கும் அத்தைக்கு விழிப்பு தட்டா வண்ணம் எழுந்தவள், முன்பு தான் தங்கி இருந்த அறையில் தான் இப்போதும் இருக்க, அது அவளுக்கு வசதியாய் போய் விட்டது. அரவம் எழுப்பாமல், விளக்கை போடாமல், பால்கனிக்கு சென்றவள், பனியில் நின்று, முடிவிலா அந்தகாரத்தை வெறித்து பார்க்க ஆரம்பித்தாள். இடது கை […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-29 (2)

இது நடந்த இரண்டு தினங்களுக்கு பிறகு, வசீகரன் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வர, அவனின் தந்தை வரவேற்பறையில் அமர்ந்திருக்க, யோசனையுடன் தான் அவன் அவரை பார்த்தான். அவரோ, “கரன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா” என்று அழைக்க, எதுவும் பேசாமல் வந்து அமர்ந்தான் வசீகரன், “அந்த பொண்ணு வீட்டுல போய் பேசலாம், அவங்களுக்கு நாள் எப்போ தோதுபடும்னு கேட்டு சொல்லு” என்று சொல்ல, அவர் சொல்ல வருவதை புரிந்து கொள்ள இரண்டு நிமிடம் பிடித்தது வசீகரனுக்கு. புரிந்த […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-29 (1)

அன்று அலுவலகத்தில் வசீகரன், தனது அறையில் இருக்க, அவனின் எண்ணங்களோ உமையாள் வரவேற்பிற்கு, பிறகு நடந்தவைகளை அசைபோட்டு கொண்டிருந்தது. உமையாள், கிருஷ்ணா வரவேற்பு முடிந்த, இரண்டு நாட்களில், உமையாளின் அப்பா மற்றும் பாட்டி அவர்களின் நாட்டிற்கு திரும்பினர். ஒரு வாரத்தில் எல்லாரும் இயல்பிற்கு திரும்பிய பிறகு, வசீகரன் அவனின் பெற்றோரிடம், அவனின் காதலை சொல்ல முடிவு செய்து, அவர்களை கூடத்திற்கு அழைத்தான். தன் பெற்றோர் வந்தவுடன், அவர்களுக்கு எதிரில் அமர்ந்தவன், அவனின் தந்தையை பார்த்து கொண்டே, “அப்பா, […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்- 28 (1)

கிருஷ்ணாவுக்கோ நடப்பது எல்லாம் கனவு போலவே இருந்தது. எத்தனை, எத்தனையோ தடைகள் என நேற்று வரை சோர்ந்திருக்க, ஒரே நாளில் யாரோ மந்திர கோலை சுழற்றியது போல எல்லாமே இன்ப மாயமாய் மாறிய உணர்வு அவனுக்கு. அன்று உமையாள் அவளின் அப்பாவிடம் பேசிய பிறகு, மறுநாள் ஜெயவர்மரிடமும் பேசி, ஒரு நல்ல நாளை வரவேற்பிற்கு குறித்தனர். ஜெயந்தி அம்மாள் தான் உமையாளின் மீது கோவத்தில் இருந்தார். வசீகரன், உமையாள் இருவருமே, அவருடைய பிள்ளைகள் தான். எப்போதும் இருவருக்கும் […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-28 (2)

உமையாள் இன்னுமே மோன நிலையில் இருக்க, இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்க, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்த கிருஷ்ணா, அவளை மென்மையாக பக்கவாட்டில் அணைத்தவாறு, “சரி அப்புறம் என்ன ஆச்சு” என்று கேட்க, அவ்ளோ “திரு திரு” வென முழிக்க, அவளை அள்ளிக்கொள்ள துடித்த கைகளை, அவளை அணைத்து சமாதான படுத்தியவன், மீண்டும், “அதான் நீ என்ன லவ் பண்றனு கண்டுபிடிச்சிட்ட, அப்புறம்” என்று விளக்க, ஒரு அளவுக்கு இயல்புக்கு வந்திருந்த உமையாள், கரகரத்த […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-27

முகம் புன்னகையில் மலர்ந்து, மகிழ்ச்சி வாசம் எங்கும் வீச, ஒய்யாராமய் நடந்த வந்த உமையாள், வசீகரனின் அருகில் வந்தவள், தலையை மட்டும் அவனின் தோளில் சாய்ந்து, அமர்ந்து கொண்டாள். எப்போதாவது ஆறுதல் தேடும் நேரங்களில், அவள் இப்படி செய்வாள் என்பதால், இன்றைக்கு நடந்த நிகழ்வின் தாக்கம் அவளுக்கு இன்னும் உள்ளது என்று புரிந்து கொண்ட, வசேகரனும் ஆதரவாய் அவளின் தலையில் தடவி கொடுத்தவன், “என்னடா பேசிட்டியா, என்ன சொல்றாரு உன்னோட வீ….ட்….டு… கா.…ர…ர்..” என்று கிண்டல் செய்ய, […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-26

வசீகரனும், பாலாவும், வெயில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி கொண்டிருந்த அந்த காலை வேளையில், தோட்டத்தில் நிழலான இடத்தை தேடி அமர்ந்து இருந்தனர். உமையாள் கண்ணீரோடு “வசீ” என்று அழைத்து கிருஷ்ணாவிடம் பேச ஆரம்பித்ததுமே, அவர்களுக்கு தனிமை கொடுத்து, இருவரும் வெளியே வந்து விட்டனர். கிருஷ்ணாவுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகு தான், பாலாவின் மூளை நடந்த நிகழ்வை அலச ஆரம்பித்தது. உமையாளின் கிருஷ்ணாவிற்கான தவிப்பு, அவனுக்கு ஆச்சர்யமாக, அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது. திரும்பி தன் […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-25

மயங்கி விழுந்த உமையாளை தன் கைகளில் தாங்கிய வசீகரன், அவளை அருகில் இருந்த சோபாவில் படுக்க வைத்தப்படியே பாலாவிடம், “என்ன ஆச்சு பாலா” என்று பதட்டமாக கேட்க, பாலாவோ, கண் முன்னே அரங்கேறும் நிகழ்வுகளின் கணத்தை தாங்க முடியாத தடுமாற்றதுடன், “அது…..அது…. வந்து….. கரன், உமா திடிர்னு மூச்சு விட முடியாம கஷ்டப்பட்டா, அப்புறம் மயங்கிட்டடா” என்று உமையாளின் நிலையை மட்டும் விளங்கினான் பாலா. உமையாளுக்கு அதீத மன அழுத்தத்தில் தான் இப்படி நடக்கும் என்று அறிந்த […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-24

ஜெயவர்மர் வீட்டுக்கு வந்து, ஒரு வாரத்திற்கும் மேலே கடந்து இருந்த நிலையில், பெருமளவு உடல்நிலை தேறி விட்டார். காயங்களில் தையல்கள் எல்லாம் கூட கரைந்துவிட்டன. முறையான உணவும், சரியான மருந்துகளும், சிறப்பான கவனிப்பும் அவரை வெகுவிரைவில் குணமாக்கி இருந்தன. எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருந்த மனிதர், இப்போது உடல்நிலை சரி இல்லாத நிலையில், யாருமில்லா தனிமையில் தவிப்பாரே என்று தான், உமையாள் அலுவகம் கூட செல்லாமல், தன் நேரங்களை அவரோடு செலவிட்டது. அன்றும் தங்களின் […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-23

காலையில் தூக்கம் கொஞ்சம், கொஞ்சமாக கலைய, கண் விழித்த உமையாளுக்கு, அரைகுறை தூக்கத்திலும், தான் இருக்கும் அறையின் வித்தியாசம் கண்களில் விழ, அடுத்த நொடி மூளை சுறுசுறுப்பானது. தூக்கம் முற்றிலும் கண்களில் இருந்து விடைபெற்று ஓட, அறையை சுற்றிலும் பார்வையை ஓட்டிய படியே எழுந்து அமர்ந்தால் உமையாள். நேற்று நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர, அப்போது தான், தான் இருப்பது கிருஷ்ணாவின் வீட்டில் என்பது புரிந்தது. ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள், எழுந்து […]

Readmore