Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 30.2

  மாலை வேளை நெருங்கி இருந்தது.   வீரனையும் வேலனையும் தயார் செய்துவிட்டு தாங்களும் ரேக்ளாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர் விக்ரமனும் குலசேகரனும்.   ஆம் ரேக்ளாவே தான்!   ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மேற்கொண்ட போராட்டமானது வெற்றியைப் பெற்றிருந்தது. மத்திய அரசு அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே இன்பத்தில் திளைக்க வைத்திருந்தது.   பலரும் விழிப்புணர்வு பெற்று அழிவின் பிடியில் இருந்த பாரம்பரிய இனங்களை போற்றிப் பாதுகாக்க ஆரம்பித்தனர். தமிழர் வாழ்வியலும் பண்பாடும் கலாச்சாரமும் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 30.1

மண்வாசம் 30 :   காலத்தின் கால்களை நிறுத்திட நினைத்தாலும் முடியாதே!   ஐந்து ஓட்டங்கள் நிகழ்ந்து ஐந்து வருடங்கள் கடந்திருந்தன. காலங்கள் கடந்திருந்தாலும் கம்பீரம் குறையாது காட்சி தந்தார் கந்தசாமி.   மகிழ்ச்சிக்கு குறைவில்லாத போது கம்பீரம் குலைந்திருக்க வாய்ப்பில்லையே. பாசமிகு மனைவி பண்பான மகன் பணிவான மருமகள் அனைவருக்கும் மேல் அவரையே ஆட்டிப் படைக்கும் அவள்! இவர்கள் உடனிருக்க மன நிறைவானதொரு வாழ்க்கை. இதற்கு மேல் வேறென்ன வேண்டும் அவருக்கு?     தன் அறையில் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 29 Pre Final

மண்வாசம் 29:   ஜல்லிக்கட்டு ரேக்ளா போன்ற விளையாட்டுகளில் இடம்பெறும் காளைகள் பெரிதோர் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாய் விலங்குகள் நல வாரியம் கொடுத்த புகாரின் பேரில் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கின் தீர்ப்பானது சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சு விரட்டு போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போது சிங்காநல்லூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து அமைதி வழியில் மேற்கொள்ளும் அறப்போராட்டம் பற்றி அவர்களுடன் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 28

மண்வாசம் 28 :   இடி இடிக்க மழை பொழிய இருகரையும் பெருகி வர பெருகி வரும் தண்ணியிலே பெண்களெல்லாம் நீராட   மழைத்துளியும் மண்வாசமும் போட்டிபோட, சாலையில் இறங்கி கொடையோடு நடைபோட்டார் சுப்பாத்தாள்.   “இந்த மழையில கொட புடிச்சுக்கிட்டு எங்க போற சுப்பாத்தா?” என்ற ராமாத்தாளின் குரலில் நின்றவர்,   “அட இன்னிக்கு நம்ம நாயகி பேத்திக்கு வளைகாப்பு முடிச்சு கூட்டியாறாங்கல்லோ. அதேன் ஒரெட்டு போய் பாத்துப்போட்டு வரலாம்ன்னு” என,   “அப்படியா சமாசராம். […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 27.2

  பொழுது விடிந்ததும் விக்ரமனோடு தன் பிறந்த வீட்டை நோக்கிக் கிளம்பி இருந்தாள் வேங்கையரசி.   முன்பொருநாள் அருந்தமிழுக்காக தன் வீட்டில் அடியெடுத்து வைக்கமாட்டேன் என்று சொல்லிச் சென்றவள் தான் இன்று அதே அக்காவிற்காக அடியெடுத்து வைக்கவும் இருக்கிறாள்.   அரசியின் வருகையைத் தான் நாயகியும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.   நேற்றைய பொழுதில் இருந்து நாயகியிடம் பேசுவதையே தவிர்த்திருந்தார் ஆறுச்சாமி. அருந்தமிழை சந்தித்துவிட்டு வந்ததை மறைக்காது மகனிடம் கூறியது தான் அதன் காரணம். அதோடு நில்லாது,   […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 27.1

மண்வாசம் : 27   மாட்டுப் பண்ணை!   சேகரித்து வைத்திருக்கும் காளையின் விந்தணுவை பசுவின் கருப்பையில் ஊசியால் செலுத்தி செயற்கை கருவூட்டல் மூலம் கருவுற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் அரசி.   சீமை மாடுகளே பண்ணை முழுவதும் காணப்பட்டன.    “நாட்டு மாடுக வளக்குறது இல்லைங்களா?” என்று உரிமையாளர் பாலசாமியிடம் இயல்பாய் கேட்க,   “அதுக என்னங்க வெறும் ரெண்டு லிட்டர் கிட்ட தான் பால் கொடுக்கும். ஆனா இந்த மாடுக அஞ்சுல இருந்து பத்து […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 26

மண்வாசம் 26 :   தென்னை ஆராய்ச்சி நிலையம்!   காணும் திசையெங்கும் அரிய வகை மரங்களும் மலர்ச்செடிகளும் அணிவகுக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட தென்னை ஆராய்ச்சி நிலையத்தையும் மண் பரிசோதனை நிலையத்தையும் தன்னுள் கொண்டிருந்தது அந்த பெரிய கட்டிடம்.   அங்கு தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள் அரும்பு.   ஆம்! அவள் கனவு கைசேர்ந்திருந்தது. சேர்த்திருந்தான் அவள் மாமன்.   சில நிமிடங்களில் அவள் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை எடுத்துக்கொண்டு அவள் அறைக்குத் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 25.2

  கன்னத்தில் கைவைத்து சோகமே உருவாய் அமர்ந்திருந்தார் சாரதா.   என்றும் மட்டை மில்லுக்கு வரும் மகனை அங்கு சுற்றி இங்கு சுற்றி எப்படியாவது ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வார். இன்று அவன் வந்திருக்கவில்லை. தமிழோடு வெளியே செல்வதாய் தெரிவித்திருந்தான் என்றாலும் எத்தனை நாளைக்கு இப்படியே மகனையும் மருமகளையும் பிரிந்திருப்பதென்ற சோகம் அவர் மனதை வாட்டியது.   ஆயிரம் முறை கைபேசியில் பேசினாலும் அருகாமையைத் தான் நாடுகிறது தாய் மனம்.   “சாரதா! இந்த மாசத்துக்கான […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 25.1

  மண்வாசம் 25 :   முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் இருந்தாள் அருந்தமிழ்.   தினமும் மாறனோடு இருக்கும் வரையில் அவள் அகம் கொண்டிருக்கும் ஆனந்தமும் அமைதியும் அவன் மட்டை மில்லுக்கு கிளம்பிச் சென்றபின் மொத்தமாய் வடிந்துவிடும்.   மனையின் தனிமையும் மனதின் வெறுமையும் அருந்தமிழை பெரிதாய் வாட்டியது.   வீட்டில் தனியாக இருப்பதற்கு தானும் மில்லுக்கு வருவதாய் அருந்தமிழ் தெரிவித்தபோது அதை மறுத்துவிட்டான் மாறன். ஆட்கள் வேலை செய்யும்போது அங்கும் இங்கும் சென்று பலதையும் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 24.2

  இருள் சூழ்ந்த வேளையில் கட்டுத்தரையில் நின்றிருந்தாள் அத்தைக்கருப்பனின் கட்டைக்காரி!   அகலாமலும் அணுகாமலும் இருக்கும் நிலையில் என்ன முயன்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட அச்சிறு பிளவை சரி செய்ய முடியவில்லை.   நாட்கள் மட்டுமே நகர்கின்றதே தவிர அவர்களுக்குள்ளான நெருக்கம் என்னவோ சிறிதும் கூடி இருக்கவில்லை. வெறுமனே உதட்டளவில் பேசிச் சிரிப்பது எல்லாம் மனதை சென்றடைவதில்லை. அருகாமையில் இருந்த போதும் மனமானது மட்டும் விலகிச் செல்வது வேதனையையே கொடுத்தது.   இருவருமே கடந்த நாட்களைப் பற்றி மனம் […]

Readmore