Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அருகினில் என் தூரமே – 14(3)

தூரம் 14(3) கோவிலிலிருந்து கிளம்பும்போது, சித்ரஞ்சன் கொஞ்சம் தயங்கியே  “வசு! நீ வண்டி ஓட்டுறியா?” என்று கேட்டான். பல வருடங்களாக வசுந்த்ரா இப்படியான வண்டிகள் ஓட்டுவதில்லை. ஏனோ ஒரு கோபம், பிடிவாதம். ‘எங்கப்பாவோட வண்டிதான் ஓட்டுவேன்’ என்ற எண்ணம். சித்ரஞ்சன் சில முறை ஆசையாய்க் கேட்டும் மகனை பள்ளியில் விட, அழைக்க என்று ஸ்கூட்டி வாங்கி ஓட்டியவள் சித்ரஞ்சன் வண்டியைத் தொட மாட்டாள். ‘உனக்குப் பிடிச்சதை செய்ய மாட்டேன்’ என்ற பிடிவாதம். இப்போது அப்பா, அண்ணனிடம் உண்மையைப் […]

Readmore

அருகினில் என் தூரமே – 14(2)

தூரம் 14(2) “எங்க வீட்ல லாலாவுக்கு இருக்க பீரிடம் எனக்குக் கிடையாது சக்தி. அது உனக்கும் நல்லா தெரியும். எனக்கு எங்கண்ணனை பிடிக்கும்தான், அவனுக்கும் அப்படித்தான்! அவனும் நானும் மாறி மாறி கலாய்ச்சிப்போம், அதெல்லாம் எங்களுக்குள்ள. ஆனா உன் முன்னாடி அவன் என்னை பேசினப்போ அந்த தடிமாடு மேலயும் எனக்குக் கோவம், உன் மேலயும் எனக்குக் கோவம்.” “ஹே! அவன் உடனே உன்னை சமாதானப்படுத்த தானே வந்தான்.”  “டேய் பரதேசி! இதான் என் பிரச்சனை. உன் ப்ரண்ட் […]

Readmore

அருகினில் என் தூரமே – 14(1)

தூரம் 14(1)  சித்ரஞ்சன், வசுந்த்ரா, லாலா மூவரும் சுதந்திர விலாசத்துக்குள் நுழைந்தனர்.  “சாப்பிட வா சித்து” என்று சித்ரா அழைக்க “என்ன சீராடி முடிஞ்சாச்சா” என்று மருமகளிடம் கேட்டார் அஞ்சம்மாள். சித்ரஞ்சன் அம்மாவை முறைக்க, வசுந்த்ரா உடனே  “எங்க வீடு பக்கத்துல தானேத்த இருக்கு, எப்போ வேணுமோ அப்ப எல்லாம் போய் சீராடிப்பேன்” என்றதும் திலகர் மருமகளிடம் “என்னம்மா என்ன சொன்னாங்க உன் வீட்ல?” என்று விசாரித்தார். “சித்தப்பாவை பாராட்டியிருப்பாங்க தாத்தா” என்று லாலா இயல்பாக சொல்ல, […]

Readmore

அருகினில் என் தூரமே – 13

தூரம் 13 “என்ன சித்தப்பா எட்டி எட்டிப் பார்க்கிறீங்க?” லாலா சித்ரஞ்சன் பின்னே நின்று கேட்டான்.  “ம்ம், உன் சித்தியைத்தான் தேடுறேன். வெளியேவே காணும்.” என்றபடி திரும்பிய சித்ரஞ்சன் தாடையைத் தடவியபடி யோசனையோடு  “டேய் லாலா! காலையில இருந்து உன் சித்தி நம்ம வீட்டுப் பக்கம் வரலயாடா?” என்றான். “காலையில போன நீங்களே இப்பதான் வரீங்க. சித்தி பதினைஞ்சு வருச ப்ளாஷ்பேக் சொல்லிட்டு வரணும்ல. லேட்டாகும்தானே சித்தப்பா. வராங்களோ இல்லை தாத்தா விடாம இருக்காரோ?” என்று வேண்டுமென்றே […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 15(2)

புது விஜயம் 15(2) நமக்குப் பிடித்தவர்களை, நம்மைப் பிடித்தவர்களை பிரிவது என்பது மிகவும் கடினமானது. பிரிவை விட பிரியத்தைப் பிரிவது இன்னும் கடினம். பிரதாபன் இரண்டையும் ஒருங்கே அனுபவித்தான். ஒன்று மட்டும் நிச்சயம் அவனுக்குத் தெரியும், தாரிணி தன்னை பிரிந்தாலும் அவள் பிரியம் போகாதென்று.  அது கர்வம் கொடுத்த அதே நேரம் கவலையும் கொடுத்தது. இரவுக்கு இரட்டிப்பு சுவையுண்டு. இரவுகள் எல்லாவற்றையும் மிகையாகக் காட்டும். காதலை, காமத்தை, அச்சத்தை, ஆனந்தத்தை  எல்லாவற்றையும் மிகைப்படுத்தும். பிரதாபனுக்கு அவ்விரவு அப்படித்தான் […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 15(1)

புது விஜயம் 15 பிரதாபன் என்ன பேசினான் என்று வினயனுக்குத் தெரியவில்லை. தாரிணியின் அழுகை சத்தம் மட்டுமே அந்த காருக்குள் கேட்டது. வீடு வந்ததும் தாரிணி இறங்கி அப்படியே நின்றாள்.  ‘தேவையில்லை’ என்ற பிரதாபனின் ‘பதம்’ பாவையை பதம் பார்த்திருந்தது. விருப்பமின்மை என்பது வேறு, வேண்டாம் என்பது வேறல்லவா?  நான் எப்படி அவனுக்கு முக்கியமில்லாமல் போனேன் என்ற ஆற்றாமையைத் தாரிணியால்  தாங்கமுடியவில்லை.  தாரிணியின் கைப்பையில் இருந்து சாவியெடுத்து வினயனே வீட்டைத் திறந்தான். தாரிணி உள்ளே நுழைந்தவள் மூங்கில் […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 14(2)

புது விஜயம் 14(2) பிரதாபன் நிச்சயம் தாரிணியின் வருகையை எதிர்ப்பார்க்கவில்லை. நேற்றுவரை  மாநாட்டை நல்ல விதமாக முடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஓடியவன் இன்று வழக்கமான வேலைகளைப் பார்க்க நினைத்து ஆலப்புழா வந்திருந்தான். அந்த ஷிகாராவை செலுத்திக்கொண்டிருந்தவன் வேகம் அவன் மனதோடு ஒத்திருந்தது. இதே காயலுக்கு காதலோடு காதலியோடு வர வேண்டும் என்ற ஆவல் அவனுக்கிருந்தது. தாரிணி பிரதாபனின் தீரா பெருங்கனவு! அவனுக்குப் பிரியமான கனவு!  தாரிணியோடுனான தருணங்கள் அவனுக்கு எப்போது பிடித்தவை, அதனை எதிர்நோக்கிக் காத்திருப்பவன் சில […]

Readmore

அருகினில் என் தூரமே- 12

தூரம் 12 சக்தி எதையும் சொல்ல வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. சரோஜினி அடிவாங்கி இருக்கிறாள், அதுவும் தன்னை காதலிப்பதால் என்பதே சக்திவேலை தூண்டிவிட போதுமானதாக இருந்தது. சக்தி நல்ல பிள்ளைதான், ஆனால் யாராவது சீண்டிவிட்டால் அவன் பதிலுக்கு எதையாவது செய்துவிடுவான். யோசிக்கவே மாட்டான். அப்படித்தான் சித்ரஞ்சன் வசுந்த்ரா விஷயம் அவனுக்குத் தெரிந்தும் கூட வீட்டிலோ ஏன் சரோஜினியிடம் கூட பகிரவில்லை.  அதுவும் சித்ரஞ்சனே தாத்தாவிடம் பேசுகிறேன் என்று சொன்ன பின் அவன் சொல்வது சரியல்ல என்றே அமைதியானான்.  ‘என் […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் – 14(1)

புது விஜயம் 14(1) அது நாள்வரை தாரிணிக்குப் பிரதாபனை பிடிக்கும். பார்க்க பிடிக்கும், பேச பிடிக்கும், அவன் உடனிருப்பு பிடிக்கும். களரி பயிற்சி முடியவும் சிறிது நேரம் எதாவது பேசுவார்கள் இல்லை அமைதியாக அமர்ந்து அமைதியைப் பகிர்வார்கள். இல்லை சில கணங்கள் தேனீர் சுவையோடு கழிப்பர்.  பேச்சோ, தேனீரோ, அமைதியோ எதுவானாலும் பிரதாபனுக்குத் தாரிணியோடு இருக்கும் நிமிடங்கள் சுவையானவை! அவன் ரசிப்பவை!  பிரதாபன் கொஞ்சம் தனிமை விரும்பி என்றாலும் கூட அவன் மனதுக்குப் பிரியமானவர்களிடம் மிகவும் நெருக்கமாக […]

Readmore

அருகினில் என் தூரமே – 11(2)

சித்ரஞ்சனுக்கு லாலா எப்படி நட்பானான் என்று புரியவில்லை. அதுவும் தன் விஷயம் சொல்லுமளவு நெருக்கமான சினேகிதமா? தலையே சுற்றியது.  இரவு வீடு சென்றவன் முகம் யோசனையையும் சோர்வையும் காட்ட, வசுந்த்ரா கேட்டதற்கும் ஒழுங்காக பதிலில்லை. “என்னாச்சு ரஞ்சன்? ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்று வசுந்த்ரா மீண்டும் மீண்டும் கேட்க சித்ரஞ்சன் எல்லாம் சொல்லிவிட்டான். “உங்களை யார் சக்திகிட்ட சொல்ல சொன்னா? அவன் என்ன பெரிய மனுஷனா?” என்று வசுந்த்ராவும் திட்ட  “அடியே! அவனுக்கு நான் சொல்லல, லாலா […]

Readmore