Warning: session_start(): open(/home/admin/tmp/sess_419fe15c99f5b6eed2d053495624d8e0, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64

Warning: session_start(): Failed to read session data: files (path: /home/admin/tmp) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64
Tamil Novels at TamilNovelWriterssanthosh, Author at Tamil Novels at TamilNovelWriters

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கார்மேக மின்னல் நீ..!! – 19(2)

கெட்டிமேளச்சத்தம் கேட்டு உறைந்துப்போய் நின்றிருந்தவனுக்கு மீண்டும் உயிர்கொடுத்தது, “ஓய் சைக்கோ பேபி”என்றவளின் குரல்தான். குரல் வந்த திசைக்கேட்டு அவன் திரும்பியப்போது, அவளோ அன்று அவன் வாங்கிக்கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டு இருக்கரம் நீட்டி அவனை அழைத்தாள். ஆத்திரமும், சந்தோஷம் ஒருசேர ஓடிச்சென்றவன் அவள் கைகளுக்குள் அடங்கிப்போனான். காற்றுக்கூட புகமுடியாத அளவிற்கு அவளை தன்னில்புதைப்பதுப்போல இறுக்கமாக அணைத்தான். அந்நேரம் அவளை அணைக்க இருகரம் அவனுக்குப்போதவில்லைப்போலும். பின் அவள் முகம் முழுவதும் முத்தத் தடயங்களைப்பதிக்க, அவளும் காதலோடு ஏற்றுக்கொண்டாள். “பாப்பா-வ ரொம்ப […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 19(1)

அத்தியாயம் – 19 வீட்டிற்கு வந்தவர்கள் முன்னிலையில் எதுவும் பேச வேண்டாம் என்று அவர்கள் கிளம்பும் வரை பொறுமையை இழுத்துப்பிடித்துக் காத்துக்கொண்டிருந்தான் வசீகரன். அனைவரும் கிளம்பியவுடன், வித்யூத்தாவின் அறையை நோக்கி வேகமாக அடியெடுத்துவைத்தான். இங்கு வந்த ஆறுமாத காலங்களில் முதன் முறையாக அவளிடம் அனுமதி கேட்காமலேயே அவள் அறைக்குள் நுழைந்தான் வசீகரன். முட்டிக்காலில் முகம் புதைத்து கட்டிலில் அமர்ந்திருந்த வித்யூத்தா அறைத்திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். “நீங்க எதுக்காக உள்ள வர்றீங்க…? வெளியில போங்க…? அப்பா….” […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 18(2)

மான்டி மூலம் விஷயம் அறிந்தவன் நேராக சென்று நின்றது சித்தார்த் முன்புதான். நிச்சயம் வசீகரன் தன்னைத்தேடி வருவான் என்று அவனும் நினைத்திருந்தான். தயங்கியப்படி தன் முன் வந்திருந்த தன் அண்ணனைப்பார்த்தப்போது, அவனை ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டத்தான் சித்தார்த் நினைத்தான். ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் தன்னை ஒருவாறுக் கட்டுப்படுத்திக்கொண்டு, “சாரி உடன்பிறப்பே… திடீர்-னு கல்யாணம் பண்ணதால உங்கள கூப்பிடமுடியல” என்றான் கார் டிக்கியில் லக்கேஜ்களை எடுத்துவைத்தப்படி. அவனின் உடன்பிறப்பு என்ற வார்த்தையிலேயே வசீகரன் […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 18 (1)

அத்தியாயம் – 18 அவள் சென்னை வந்து முழுதாக மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால் வித்யூத்தாவிடம்தான் எந்த ஒரு சிறு மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தாள். சரியாக உண்பது இல்லை. உறங்குவது இல்லை. ஏன் யாரிடமும் பேசிவதுக்கூட இல்லை. எதோ தான் ஒரு தனித்தீவில் தனித்துவிடப்பட்டதாக இருந்தாள். நத்தை தன் கூட்டிற்குள் அடைந்திருப்பதுப்போல, தன் அறைக்குள்ளே  முடங்கிப்போனாள். அவளின் பொழுதுகள் ஒவ்வொரு நிமிடமும் வசீகரன் நினைவோடே கழிந்தன. முகில் மூலம் கிடைத்த வசீகரனின் நம்பருக்கு சுமார் ஆயிரம் […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 17(2)

“உன் மேல எந்த தப்பும் இல்லனும் அம்மாவுக்கு தெரியும் கரண்.. அம்மா உன்ன தேடி வந்தேன்பா. ஆனாஅதுக்குள்ள நீங்க அங்கஇருந்து கிளம்பிட்டீங்க. உனக்காகத்தான் நான் ஊட்டிக்கு வந்தேன். உங்க அப்பாவோட எஸ்டேட்ல  விசாரிச்சப்போ உங்க அப்பாவும் ,நீயும் ஆகிசிடண்ட்-ல இறந்துட்டதா சொன்னாங்க.” என்றார் தான் அறிந்த விவரங்களை. கற்பகத்தின் வார்த்தைகளை நம்பாததுப் போல தலையைத் திருப்பியவன், “அப்போ சித்தார்த் எப்படி.?” என்று அவருக்கு கிடுக்குப்பிடிப்போட்டான் வசீகரன். “நான் மாசமா இருந்ததே எனக்கு அப்புறமா தான்பா தெரிஞ்சிது. எனக்குள்ள […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 17(1)

அத்தியாயம் – 17 மனம் முழுக்க அதிக மகிழ்ச்சி குடிக்கொண்டிருந்ததால், அன்று இரவு உறக்கம் வராமல், படுக்கையிலேயே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் வித்யூத்தா. அவனின் எத்தனை வருடக்கனவு நாளை நினைவாகப்போகிறது என்று நினைக்க நினைக்க அவள் உள்ளம் சந்தோஷத்தில் மூழ்கித்திளைத்தது. முகத்தில் அரும்பிய குறுநகையுடன் திரும்பி தன்னவனைப் பார்த்தால், அவனோ சிறுக்குழந்தைப்போல உறங்கிக்கொண்டிருந்தான். இனியும் படுக்கையில் புரள்வதில் அர்த்தமில்லை என்றுப்  படுக்கையை விட்டு எழுந்தவள்,  குளித்துவிட்டு  பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி மனதார இறைவனுக்கு நன்றி […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 16(2)

எப்போதும்போல வசீகரனின் மாத செக்கப்பிற்காக வித்யூத்தாவும், சித்தார்த்தும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, பரிசோத்திவிட்டு வீடு திரும்பும்போது, இரவு உணவை ஹோட்டலில் சாப்பிடலாம் என்று வசீகரன் சொல்லவே , மூவரும் அந்த உயர்தர ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அங்கே அவர்களுக்கு முன் வந்து காத்துக்கொண்டிருந்த மதுராவைப்பார்த்த சித்தார்த், ‘இதுவும் உன் வேலைத்தன’ என்பதுப்போல வசீகரனைக் கோவமாக பார்க்க, அவனோ முகத்தை வேறுப்பக்கமாக திரும்பிக்கொண்டான். மதுராவிடம் சித்தார்த்தை பேச வைக்க, வசீகரன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்காமல் போகவே, அவனை […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 16(1)

அத்தியாயம் – 16 அவனையும் கவனித்துக்கொண்டு, அலுவல் வேலைகளையும் பார்ப்பதால் வித்யூத்தா தன்னைக்கவனிக்க மறந்துப்போகவே, நாளும் இளைத்துக் கறுத்துப்போனாள். அன்று அலுவல் வேலை முடித்துவிட்டு வெகு தாமதமாகவே வீட்டிற்கு வந்தவள் பெயருக்கென்று அவனோடு சேர்ந்து உண்டுவிட்டு, உடையைக் கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் வீழ்ந்து உறங்கிப்போக, சிறிதுநேரம் அவள் உறங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தான் வசீகரன். அவள் உடலில் இருக்கும் அசதி, அப்பட்டமாய் அவள் முகம் அவனுக்கு எடுத்துரைக்க, அவள் கால்களை தன் மடியில் வைத்து இதமாக அழுத்திவிட்டான். அடுத்த […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!!- 15(2)

மீண்டும் அவள் மருத்துவமனைக்கு சென்றப்போது அவன் கண்விழித்துப் பேசும் செய்தியை அறிந்து ஆவலோடு அவனை பார்க்க சென்றாள். அவனைப் பார்த்துவிட்டு வெளியே வந்த மாறனின் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கவனித்தவள், “என்னாச்சி அங்கிள்” என்று வினவ, “நீயேப் போய் பாருமா..?” என்றவரை, கேள்வியாக பார்த்தப்படி அவன் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள். அவனோ ஒரு பூவைக்கையில் வைத்துக்கொண்டு அதைத் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான். “மிஸ்டர்.வசீகரன்… உங்களப்பார்க்க யார் வந்திருக்காங்கன்னு பாருங்க” என்று தலைமை மருத்துவர் சொல்ல, குரல் […]

Readmore

கார்மேக மின்னல் நீ..!! – 15(1)

அத்தியாயம் – 15 இன்றோடு வசீகரன் சென்னை வந்து ஒருவாராமாகி விட்டது. இந்த ஒரு வாரத்தில் அவளை ஒரு முறைக்கூட அவன் சென்று பார்க்கவில்லை. ஏன் வெளியுலகத்தையே பார்க்கப்பிடிக்காமல் தன்னுடைய கெஸ்ட் ஹவுசிலேயே தன்னை சிறைவைத்துக்கொண்டான். அன்று கொல்லிமலையிலிருந்து கிளம்பியவன் நேராக சென்றது சென்னையிலுள்ள தன்னுடைய கெஸ்ட் ஹவுசிற்குத்தான். ஆனால் மற்றவரின் பார்வைக்கோ தான் இன்னும் வெளிநாட்டில் இருப்பதாகவே காட்டிக்கொண்டான். ஒருவாரம் சாக்ஷி மற்றும் அமுதாவின் கவனிப்பால் உடல் நலம் தேறி அன்றுதான் வித்யூத்தா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் […]

Readmore