Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதவனின் அனிச்சமலரே 7 (3)

அனிச்சமலர் 3 சில மணி துளிகளில் பூஜை நிறைவு பெற, வந்திருந்த சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வைத்து மஞ்சள் குங்குமம் எடுத்து கொடுத்து கொண்டிருந்த பூங்கோதை பவித்ராவை அழைத்தார். “என்ன அத்தை” என்று வந்தவளிடம், “பூஜை ரூம்ல வந்தவவங்களுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலம்  கொஞ்சம் இருக்கு, அதை எடுத்துட்டு வாம்மா அப்டியே மஞ்சள் குங்குமமும் சேர்த்து எடுத்துட்டு வா” என்று பணிக்க, வேகமாக பூஜை அறை சென்ற பவித்ரா ஒவ்வொரு தாம்பூலமாக எடுத்து கொடுக்க, பாலா அவளுக்கு […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே-7(2)

அனிச்சமலர் 2. ‘தன்னை பற்றி தான் பேசுகிறாள்’ என தெரிந்தும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தான் பேச்சின் நாயகன். வந்தவர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்துவிட்டு வந்தவனின் காதில் மீராவின் குரல் சங்கீதமாய் ஒலிக்க, அடுத்த வேலையை கவனிக்க மனமில்லாமல் தன்னை பற்றி என்ன பேசுகிறாள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் சில நிமிடம் நின்று பேச்சை ஒட்டு கேட்டவன் சுற்றம் உணர்ந்து இதழில் புன்னகை உறைய அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான். “இதை விஷ்வா மாமா கேட்டா என்னாகும்?”. […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே-7 (1)

அனிச்சமலர் 1. பாலா பணிபுரியும் இருபத்தி நான்கு மணிநேர சேவையில் ஈடுபட்டிற்கும் மருத்துவமனை அது. நடுசாமம் என்றும் பாராமல் இரவு உறக்கத்தை தொலைத்து கிச்சை அளிக்க தொடங்கினர் நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் இரண்டு செவிலியர்கள். அவசர சிகிச்சை பிரிவு அறையின் முன்பு பதட்டமும் பயமும் கலந்த தவிப்புடன் அமர்ந்திருந்தார் மூர்த்தி. பாலா உள்ளே சென்று சில நிமிடங்கள் தான் கடந்திருந்தது, ஆனால் பல மணி நேரம் கடந்த உணர்வை தோற்றுவித்தது மூர்த்திக்கு. என்னவோ ஏதோ பயத்துடன் […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே- 7 precap

பாலா பணிபுரியும் இருபத்தி நான்கு மணிநேர சேவையில் ஈடுபட்டிற்கும் மருத்துவமனை அது. நடுசாமம் என்றும் பாராமல் இரவு உறக்கத்தை தொலைத்து கிச்சை அளிக்க தொடங்கினர் நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் இரண்டு செவிலியர்கள். அவசர சிகிச்சை பிரிவு அறையின் முன்பு பதட்டமும் பயமும் கலந்த தவிப்புடன் அமர்ந்திருந்தார் மூர்த்தி. பாலா உள்ளே சென்று சில நிமிடங்கள் தான் கடந்திருந்தது ஆனால், பல மணி நேரம் கடந்த உணர்வை தோற்றுவித்தது மூர்த்திக்கு. என்னவோ ஏதோ பயத்துடன் கலக்கம் நிறைந்த […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே 6(2)

முதல் நாள் பூங்கோதை அழைப்பு விடுத்ததற்கிணங்க மாலை பிருந்தாவனத்தில் நடைபெறும் வரலட்சுமி பூஜைக்காக அவசரமாக கிளம்பி கொண்டிருந்தாள் மீரா. ஒவ்வொரு உடையாக எடுத்து தன் மீது வைத்து கண்ணாடியில் பார்த்தவளின் முகம் அதிருப்தியை மட்டுமே காட்டியது. “எதுவுமே செட் ஆக மாட்டேங்கிது” என்று முகம் சுருக்கியவள், “ப்பா இங்க வாங்களேன்” என்று மூர்த்தியை அழைக்க, உள்ளே வந்தவர் “என்ன பாப்பா?”என்றார். “இந்த டிரெஸ்ல எது நல்லா இருக்கும்னு சொல்லுங்கப்பா எதை போட்டுட்டு போறதுன்னு குழப்பமா இருக்கு” என்று […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே 6(1)

மனதில் பதிந்து போன மருண்ட பார்வை மனக்கண் முன்னே தோன்றி இம்சிக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் விஷ்வா.பஞ்சுமெத்தையும் பளிங்கு கல்லின் உணர்வை  தோற்றுவித்து அசௌகரியத்தை ஏற்படுத்தியது. ‘காதல் வந்து அழைத்த போது தான் பெயர் வைத்ததன் அர்த்தம் புரிகிறது’, வைரமுத்துவின் கவிதை அவன் இதழில் அர்த்தமற்ற புன்னகையை சிந்த வைத்தது. ‘காதலா என்றால் தெரியவில்லை ஆனால் ஊண் உறக்கம் தொலைத்து நினைவுகளில் அவள் மட்டுமே வலம் வந்தால் அதற்கு காதல் என்று தானே பெயர்?. […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே 5(2)

கள்ளிபால் கொடுத்த குழந்தை கதறி துடிப்பதை போல அவன் காதலும் கதறியது.காரிகையானவள் கள்ளதனமாய் குடியேறிய அந்த தருணம், அவன் மனதில் சொல்ல முடியாத பரவசம். அன்றிலிருந்து இன்றுவரை காதலின் அளவீடுகள் அதிகரித்து கொண்டு தான் சென்றனவே தவிர அணுவளவும் குறையவில்லை. வீட்டின் முன்பு பைக்கை நிறுத்த, இறக்கி கொண்டவள் “சரி பாலா நாளைக்கு பாக்கலாம்” என்று அவன் முகம் பார்க்க, கண்கள் கலங்கி கண்ணீர் தள்ளாடி ததும்பி கொண்டிருந்தது. கசங்கிய முகம் கண்டு பதறியவள் “என்னாச்சு பாலா […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே 5(1)

குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி ஊதலான மார்கழி நீளமான ராத்திரி நீ வந்து ஆதரி.. மாலை நெருங்கும் வேளையில் மனதை வருடும் விதமாய் பண்பலையில் பாடல் ஒலித்து கொண்டிருக்க, பாடலுடன் சேர்ந்து முணுமுணுப்பாக பாடி கொண்டே உறை ஊற்றியது போக மிச்சமிருந்த தயிர் பாலாடை அதனுடன் சிறிது தக்காளி சாறு கலந்த கலவையை முகத்தில் தடவி கொண்டிருந்தாள் மீரா. வெளியே மூர்த்தியின் பேச்சு குரல் கேட்டு மின்னலாய் தோன்றிய சிந்தனையில் வேகமாக சென்று கதவின் […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே 4(1)

சொன்னது போலவே மகளுடன் அருகில் இருந்த கோவிலுக்கு வந்திருந்தார் மூர்த்தி. கோவிலின் உள்ளே நுழைந்ததும் மீராவின் உடலில் சிலிர்ப்பு உண்டாகி ரோமங்கள் எழுந்து நிற்க, மனதில் ஒருவித பரவசம் பரவியது. கவலைகள் பயங்கள் அனைத்தும் பனியாய் கரைவது போல உணர்ந்தாள். கருவறையில் சாந்த சொரூபமாக காட்சியளித்த அன்னையின் முகத்தைப் பார்த்ததும் கண்களில் நீர் கோர்த்திட்டது மீராவிற்கு. எவரிடமும் சொல்லாததை கடவுளின் பாதத்தில் சமர்பித்தாள். ‘மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கும் எண்ணத்தை தகர்த்து வாழ்வில் அடுத்தடுத்த நிலையை நோக்கி செல்ல […]

Readmore

ஆதவனின் அனிச்சமலரே 4(2)

“மீரா கண்ணு” என்ற அழைப்பொலியில் இருவருமே திருப்பி பார்க்க, வதனத்தில் புன்னகை பூக்க நின்று கொண்டிருந்தார் பூங்கோதை. “அத்தை” என்று முகம் பிரகாசித்தவள் எழுந்து வேகமாக அவர் அருகில் சென்றாள். வாஞ்சையோடு கையை பற்றி கொண்டு “சென்னையில இருந்து எப்போ வந்த, வறேன்னு சொல்லவே இல்ல, எப்டிடா இருக்க, ரொம்ப மெலிஞ்சு போன மாதிரி தெரியிது சரியா சாப்பிடுறது இல்லையா?” என்று அவளை பார்த்த சந்தோஷ மிகுதியில் படபடவென பேசினார் பூங்கோதை. “அத்தை எதுக்கு இப்டி மூச்சு […]

Readmore