Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரினை தேடிடும் வேரென நான் – 13  

  நீரினை தேடிடும் வேரென நான்  – 13       என்ன தான் வெளிப்பார்வைக்கு இருவரும் சிரித்துப்பேசி விளையாடிக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றினாலும், இருவரின் மனத்தினுள்ளும் சில பல விஷயங்கள் எரிந்துகொண்டு தான் இருந்தன.       அதிலும் ஞமலிக்கு என்னவானது என்று தெரியாமல் யாதவும், அருஞ்சுனையனின் போர் முடிவு என்னவானது என்று புரியாத ஜானவியும் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்தனர்.       ஒருவருக்கான விடை மற்றவரிடம் இருக்கிறது என்று தெரிந்த பொழுதும் கூட, முன்ஜென்மத்தில் நடந்த கசப்பான […]

Readmore

நீரினை தேடிடும் வேரென நான் – 8

அந்த லாரி விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே லாரி ஓட்டுனரின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என குகன் கூறியிருந்தார். ஆனால் அன்றிரவே அந்த ஆள் இறந்துவிட்டான். அதுவும் கொலைசெய்யப்பட்து இறந்துவிட்டான் என்று குகன் கூறியதும் ஏற்கனவே இருக்கும் மர்மத்தின் முடிச்சுகள் மேலும் இறுகிவிட்டது போல தோன்றியது யாதவிற்கு. உடனே அரசுமருத்துவமனைக்கு விரைந்தவன், அங்கு இருந்த அந்த ஓட்டுனரின் உடலைப் பார்வையிட்டான்.அவன் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடக்க, அவனை சுற்றி தடவியல் நிபுணர்கள் அங்கிருக்கும் தடயங்களை சேகரித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அவ்வறையை விட்டு வெளியே  வந்த யாதவ், குகனை நோக்கிச் சென்றான். அவன் அருகே வருவதைக் கண்ட குகனோ, “சார்.. அந்த டிரைவருக்கு காவலா நம்ம கான்ஸ்டபிள்ஸ் ரெண்டு பேர் இருந்துருக்காங்க. ஆனா அந்த கொலைகாரன் டாக்டர் மாதிரி வந்து கொலை செஞ்சுட்டு போயிருக்கான்.” என்று கூறினான். அதைக் கேட்ட யாதவோ.. , சிறு நக்கலுடன்..”எல்லாரும் சினிமா நிறைய பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கு. ஆதி சார் காணாமபோனதுல இருந்து எல்லாமே சினிமால வர்றதுமாதிரி ரொம்ப மர்மமா நடக்குதுல்ல?” என்று வினவினான். “ஆமா சார்.. ஆனா இது யாருக்கோ நடக்குது, அத நாம ஒரு கேசா பார்க்கறோம் அப்படின்னா நம்ம மனசு இவ்வளவு பலவீனப்படாது.ஆனா இதுல சம்பந்தப்பட்டிருக்கறது நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்கன்னு நினைக்கறப்போ என்னால முழுசா கான்சண்ட்ரேட் பண்ண முடியல சார்.” என்று சிறு கலக்கத்துடன் குகன் கூறவும்.. அவனது முதுகை மெல்ல தட்டிக்கொடுத்த யாதவோ, “ஹ்ம்ம்.. நானும் அப்பாவும் நாளைக்கு காலையில வீட்டுக்கு வரோம். ரெடியா இருங்க சரியா? அப்பறம் இந்த கேஸ் உன் அசிஸ்டன்ஸ் கிட்ட கொடு. கொஞ்ச நாள் கழிச்சு நீ டேக் ஓவர் பண்ணிக்கலாம். இப்போவே அவங்க கிட்ட சொல்லிட்டு உடனே வீட்டுக்கு போய் நல்லா தூங்கு. ஏன்னா நாளையில இருந்து நாம ரொம்ப பிசி ஆகிடுவோம்.”  என்று ஏற்கனவே குழம்பி இருந்தவனின் மனதை மேலும் நன்றாகக் குழப்பி விட்டு விட்டுச் சென்றான் யாதவ். குகனும் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாதவனாய், தனது சகாக்களிடம் மற்ற வேலைகள் ஒப்படைத்துவிட்டு, சில பல ஆணைகளும் பிறப்பித்துவிட்டே வீடு போய் சேர்ந்தான். தனது வீட்டில், மறுநாள் தனது குடும்பத்தினருடன் யாதவ் வருகிறானென்று அறிவித்துவிட்டு, அதன்பின்பே தனதறைக்கு சென்றான் குகன். மறுநாள் காலையில் தனது குடும்பத்தினருடன் மட்டுமல்லாது தனது நண்பர்கள் புடைசூழ ஜானவியின் வீட்டிற்கு வந்த யாதவை ஜானவியின் வீட்டினர் அனைவரும் குழப்பத்துடன் ஏறிட்டனர். ஆனால் அதிரடியாக வீட்டினுள் நுழைந்த அவனோ.. “கிளம்பும் கிளம்புங்க.. ஒரு ரெண்டு செட் மட்டும் துணி எடுத்துக்கோங்க. அப்பறம் கல்யாணத்துக்கு தேவையாநமத்த சாமான் எல்லாம் உடனே எடுத்துக்கோங்க. கல்யாணத் துணி மட்டும் இன்னும் ரெடி ஆகலையா? அப்போ அது நாளைக்கு காலையில உங்களுக்கு கிடைக்கும். அதனால இருக்கற நகை துணி மணி மட்டும் போதும் கிளம்புங்க..” என்று அவர்களை விரட்டிக்கொண்டிருந்தவனை அவர்கள் அதிர்ந்து போய் நோக்க.. யாதவோ, “என்ன பார்த்துட்டே இருக்கீங்க? சொன்னது கேக்கலையா? கிளம்புங்க சீக்கிரம். விவரம் எல்லாம் நான் அப்பறம் சொல்றேன்.” என்று கூறிவிட்டு அனைவரையும் தான் கொண்டு வந்திருந்த ஒரு அரசுப்பேருந்தில் ஏற்றினான். அதைக்கண்டும் மற்றவர்கள் திகைக்க.. அவர்களை சமாதானப் படுத்தும் நோக்கமாக, “இப்போ அவசரத்துல எனக்கு வேற எந்த வண்டியும் கிடைக்கல. அதுமட்டுமில்லாம நாம யாருக்கும் தெரியாம போகணும்னா இது தான் வழி.” இந்தச் சிறு விளக்கம் மட்டுமே அளித்தவன், அவர்களை மேலும் எந்தக் கேள்வியும் கேட்கவிடாது பார்த்துக்கொண்டான். நடப்பது என்னவென்று புரியாத போதும்கூட குகன் யாதவின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பினைக் கொடுத்தான். அவர்கள் அனைவரும் சென்ற இடம் சேலத்திற்கு வெகு தொலைவில் இருந்த ஒரு கிராமத்தின் பாழடைந்த காவல் நிலையம். அதுவரை எதுவுமே பேசாமல் இருந்த ஜானவியோ, “ஹ்ம்ம்.. போலீஸ்காரருக் கல்யாணமண்டபம் போலீஸ் ஸ்டேஷனா? அதுவும் தும்மினா கூட இடிஞ்சி விழற போலீஸ் ஸ்டேஷன்.. அருமை.. மிக அருமை..” என்று கலாய்த்தாள். அதைக்கேட்ட யாதவோ..” மேடம் தான் பெரிய தொல் பொருள் ஆராய்ச்சியாளர் இல்ல? அதான் அவங்களுக்கு தகுந்த மாதிரி இருக்கணும்ல?” என்று கூறவும், ஜானவியோ “ஹ்ம்ம்” என்று நொடித்துவிட்டு அப்பால் சென்றாள். அங்கிருந்த மற்றவர் அனைவரும்.. யாதவின் நண்பர்கள் உட்பட ஜானவியின் கேலிக்கு பயந்தே அவளை அணுகாமல் இருந்தனர். மறுநாள் காலை அந்த பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாகக் காணப்பட்டது.  எல்லோரும் எதிர்பார்ப்பது போல கெட்டி மேளம் முழங்க நாத ஒலியில் அது மிதக்கவில்லை. மாறாக, யாதவ், ஜானவி, விபின் குடும்பத்தினரின் கலகல ஒளியும் அவர்களின் நண்பர்களின் கலாட்டாக்களுமே அங்கு அரங்கேறின. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கிளம்பி அந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள யாதவின் குலதெய்வ கோவிலில் திருமணத்திற்காகச் சென்றிருந்தனர். ஆம். அங்கு தான் யாதவ்- ஜானவியி திருமணமும், விபின் – சாதனா திருமணமும் அரங்கேறுவதாய் இருந்தது. அந்தச் சிறு கோவிலில் போடப்பட்டிருந்த ஒரே மேடையில் இரு ஜோடிகளும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். அய்யர் மாங்கல்ய தாரணம் செய்ய திருமாங்கல்யத்தை நீட்டும்போது விபினோ சட்டென எடுத்து கெட்டி மேளம் கெட்டிமேளம் என்று கூறுவதற்கு முன்பே சாதனாவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட அங்கிருந்தோருக்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு […]

Readmore