அத்தியாயம் : 19 எந்த விசயம் அவளுக்குத் தெரியக் கூடாது என்று அவன், இத்தனை நாளாக நினைத்திருந்தானோ அது அவளுக்கும் தெரிந்து இருக்கிறது. அதனால் தான் இப்படி எல்லாம் அவள் நடந்து கொண்டிருக்கிறாள் என்பது தெரிய வந்ததும், அந்த நிலையிலும் மனைவியை நினைத்து மனம் கலங்கினான் வீரபாண்டியன். அவனைக் கண்டு கொள்ளாமல், “யமுனா அண்ணியை பெரிய பணக்காரருக்கு கட்டிக்கொடுக்கலாம்னு நினைச்சு நடக்காததால், கோபத்துல வார்த்தைகளை அள்ளித் தெளிக்கும் உங்க மாமாவும், சித்தப்பாவும் எப்பவும் ‘அருணாச்சலம், அருணாச்சலம்’னு ஏலம் […]
அத்தியாயம் : 17 காலை நேரம் விஷ்ணுபிரியாவுடன் முன்பு ஜெயக்குமாரி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்தாள் தேவசேனா. மருத்துவரைப் பார்த்து பேசிவிட்டு வெளியே வந்தவள், அங்கு எதிர்பாராத விதமாக சித்தி சங்கீதாவை சந்தித்ததும், விரைந்து சென்று அவரது கைப்பற்றினாள். எதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் என்று கேட்டு அறிந்து கொண்டவள், சந்திரன் உண்ணாமல் உறங்காமல் சதா படுக்கையில் விழுந்து கிடப்பதாகவும், ‘திருமணமே வேண்டாம். நான் இப்படியே கடைசி வரை இருந்துடுறேன். என்னை விட்டுருங்க’ என்று சொல்லிக் கொண்டு இருப்பதாகவும், அருணாச்சலம் […]
அத்தியாயம் : 16 வீரபாண்டியனை கண்ட விஷ்ணு பதற்றத்தை மறைத்தபடி, “சார்! நான் வெளியூருக்குப் போவதால் எனக்கு விடுமுறை வேணும். அதான், உங்களை நேர்ல பார்த்துக் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான். உடனே அவன், “என்ன விடுமுறையா? அதுவும் யமுனா கல்யாண நேரத்துலயா? அதெல்லாம் இப்ப தர முடியாது. கல்யாணம் முடிஞ்ச பிறகு போ! ஆமாம், வீட்டுக்கு வந்தவன் கூடத்தில் உட்கார்ந்து பேசுவதை விட்டு இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று கேட்டான். அவனது குரலில் […]
அத்தியாயம் :14 அறைக்குள் நுழைந்த தேவசேனா, அமைதியுடன் படுக்கையில் அமர்ந்திருக்க, அவளையே பார்த்துக்கொண்டு வந்த கணவனை கண்டதும், ப்ரீஃப்கேஸில் இருந்து புடவை, நகைகளை எடுப்பது போல் திரும்பி கொண்டாள். எத்தனை நேரம் தான் குடைந்து கொண்டு இருக்க முடியும்? மறுபடியும் திரும்பி தானே ஆக வேண்டும். வந்தவன் சென்றிருப்பான் என்று நினைத்து அவள் ஆயாசமாக திரும்பி பார்க்க, அங்கு அவளையே பார்த்து நின்றான் வீரபாண்டியன்! “எடுத்துட்டியா? இல்லை, இன்னும் தேடணுமா?” தனது நடிப்பை அவன் கண்டு கொண்டான் […]
அத்தியாயம் : 13 மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்த வீரபாண்டியன், வெளியே பார்த்திருந்த மனைவி தேவசேனாவை ஏறிட்டான். அவள் முகம் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக இருந்தது. காலையில் எழுந்த நேரம் முதல் சிரிப்பும், சிவப்புமாய் காட்சியளித்த அவள் முகம் இப்போது, உணர்ச்சிகளை தொலைத்துக் காணப்பட்டது. தொழிற்சாலைக்கு வரும் வரை நன்றாக இருந்தவள், அதன் பிறகு அடியோடு மாறி விட்டாள். காரில் பின் இருக்கையில் அமர்ந்தவன் யோசனையுடன் வெளியே பார்க்க, அவர்களையே பார்த்திருந்த விஷ்ணு […]
அத்தியாயம் : 12 வீட்டிற்குள் வந்த தேவசேனாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. வீரபாண்டியனின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் வந்து செவியில் மோதி, அவளது ஒட்டு மொத்த நிம்மதியையும் பறித்தது. அறைக்குள் சென்றால் உறக்கம் வர மறுத்தது. விஷ்ணுபிரியாவை தேடிச் சென்று அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். மகளிடம் காணப்பட்ட மாற்றம் பெற்றவளை வியப்புக்கு உள்ளாக்கியது. இப்போது சில நாளாக அவள் அடிக்கடி தாயின் மடி தேடி வந்து விடுகிறாள். நினைவு தெரிந்த […]
அத்தியாயம் : 11 வீரபாண்டியனின் பேச்சுக்கள் சில நேரம் சிரிப்பை ஏற்படுத்தினாலும், அவன் முன்பு சிரிக்கவும் முடிவதில்லை. அவனை எதிர்த்துப் பேசவும் நா எழவில்லை. ஆனால், உண்மையாக விரும்பியவர்களை பிரித்து வைத்து விட்டு, ஊருக்கு உபதேசம் செய்பவன் போலவே அவன் தெரிந்தான். திருமணத்திற்கு முன்பு சுதந்திரமாக பேசி பழகிய தேவசேனாவிற்கு, அவளது திடீரென்ற திருமணமும், இரவில் அவன் வருகையும், பொடி வைத்த பேச்சும் அவனை விட்டு விலக்கி நிறுத்தியது. தினமும் இரவில் தன் அருகில் உறங்கும் கணவனிடம் […]
அத்தியாயம் : 10 காலை நேரம் புளுதி பறக்க வேகமாக சென்று கொண்டிருந்த வாகனத்தில், கணவன் அருகில் அமர்ந்திருந்தாள் தேவசேனா. விஷ்ணு வாகனத்தை இயக்கி வர, அவனுடன் பேசியபடி இருந்தான் வீரபாண்டியன். நேற்றிரவு அவன் நடந்து கொண்ட விதமும், இப்போதைய அவனது அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது போல் தெரிந்தது. அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் தொழில் விசயமாக பேசிக்கொண்டு இருந்தான். அவனது கம்பீரமும், ஆளுமையும் அவளின் விழியசைக்க மறுத்தன. கண்கள் அவனையே பார்த்தன. அவனது வலது […]
அத்தியாயம் : 9 மகனது திருமணத்தை நேரில் கண்டுகளித்த ஜெயக்குமாரி, எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். திருமாங்கல்யத்தை ‘தேவசேனா’வின் கழுத்தில் சூட்டிய வீரபாண்டியன், அவளது கரம் பற்றி அழைத்து வந்து, தன் தாயின் பாதங்களை தொட்டு வணங்கினான். பெற்ற மனம் குளிர்ந்து போனது. அவர்கள் இருவரின் தலை மீது கரம் பதித்து, இறந்து விட்ட கணவர் சந்தானபாரதி மற்றும் மகன் மீது மிகுந்த பாசமுடைய மாமனார் இருவரிடமும் ‘அவர்களது வாழ்க்கையில் எந்தவொரு குறையும் இல்லாமல், பதினாறு வகையான செளபாக்கியங்களையும் பெற்று […]
அத்தியாயம் : 8 நேற்று குடும்ப கோவிலில் பூஜைகள் நடைபெறும் விசயத்தைக் கேள்விப்பட்ட சங்கீதா, அவரது கணவரிடம் அங்கு போகும் விசயமாக கேட்டார். அதில் சிறிதளவும் விருப்பம் இல்லா விட்டாலும், மனைவியின் மனதை வருத்த மனமின்றி அவர் அமைதியாக இருக்க, “நம்ம பையனுக்கு ஒரு நல்லது நடக்கறப்போ, குல தெய்வம் கோவிலுக்குப் போயி வழிபட்டு வருவது நல்லதுல்லயா? தேவாவும் இந்த ஊருக்கு வந்தப்பவே அந்த கோவிலுக்கு போறது பற்றி கேட்டிருந்தா. நாங்க எல்லாருமா சேர்ந்து போயிட்டு வர்றோமே?” […]