Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 28.2

அவனுக்கு கொஞ்சம் பயமாகவும் கலக்கமாகவும் இருந்தது , எப்படி தங்குவாள் இப்பொழுதே ஒன்றும் சாப்பிட முடியவில்லை மிகவும் சோர்ந்து விடுகிறாள் , இதில் தனிமையும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும் என்று யோசனையாகவே இருந்தது. அவள் விரும்பி செய்யாமல் இருப்பானா , கிஷோரின் தாயிடம் கூற அடுத்த நாளே பெட்டி நிறைய ஆன்ஞலி சக்கையோடு வந்துவிட்டார் அவளை பார்க்க. இரு தினங்கள் இங்கயே இருந்து விட்டு சென்றார் , மருமகளையும் பார்த்த போல ஆயிற்றே . ஷ்யாமா […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 28.1

இரண்டு வாரம் என்று சொல்லி சென்றவர்கள் மூன்று வாரம் கடந்து உத்தமப்பாளையம் வந்து சேர்ந்திருந்தனர். தும்பியின் முகத்தில் தெரிந்த தெளிச்சமும் , எப்பொழுதும் உறைந்திருக்கும் புன்னகையும் பெரியவர்களுக்கு நிம்மதி அளித்தது அங்கிருந்து வந்த பிறகு அவளில் நிறைய மாற்றங்கள். தன்னில் இறுகி இருந்தவள் மீண்டும் துடிப்பானாள் , வீட்டின் தோட்டத்தில்  புதிதாக தேச்சி பூ (இட்லிப்பூ) இடம் பெற்றது , பூஜை அறையில் புதிதாக  கார்முகில் வர்ணன் கம்பீரமாக வீற்றிருந்தார். காலை தினமும் அவர்  கழுத்துக்கு  துளசி […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 27.1

இரவும் இல்லை பகலும் இல்லை இணைந்த கையில் பிரிவும் இல்லை சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா ஹிமாச்சல் மலைமுகட்டில் பணிப் போர்வை சுற்றிய மலைகளை அவன் கை அணைப்பில் கட்டுண்டு ரசித்துக் கொண்டிருந்தாள் , ஏன் என்றே தெரியாமல் விழியில் நீர் நிறைந்தது. இயற்க்கைக்கு நம்மை அமைதிப்படுத்தும் […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -26.2

உள்ளே நுழைந்து கதவை அடைந்தவன்  , நேரே சென்று கட்டிலில் படுத்து அவள் இடையோடு கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்து அணைத்தான் , உறக்கம் கலைந்தவள் அந்த அணைப்பில் உயிர்த்தாள். சட்டென்று திரும்பி பார்க்க “தும்பிமா…” என்ற அவனின் அழைப்பில் உயிர் சிலிர்த்து அடங்கியது . உண்மையா கனவா!! மறைந்துவிடுவான என்ற தவிப்பில் அவன் கையை இறுக பற்ற “வந்துட்டேண்டா” என்றவன் அவளை திருப்பி தன் மார்பில் போட்டுக்கொண்டு “தூங்கு” என்க சில நொடிகளில் அவளிடம் சீரான […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -26.1

வீட்டில் லக்ஷ்மியம்மாவின் குரல் இப்பொழுது கொஞ்சம் ஓங்கி ஒலிக்க தொடங்கியது , பாதி நேரமும் ப்ரகாஷுடன் அமர்ந்து கதைகளை பேசிக்கொண்டிருந்தார். இப்பொழுது எல்லாம் பிரகாஷ் அனைவருடனும் ஒன்றாக அமர்ந்தே உணவு எடுத்துக் கொள்கிறார் அங்கே இங்கே சொல்லி வைத்ததில் நிறைய இடங்களில் இருந்து சம்பந்தம் வந்தது , ராஜீவின் குடும்பத்தை பற்றி கேள்விப்பட்ட உடன் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்கள். அதைப்பற்றிய கவலையே இல்லமால் சுற்றிக் கொண்டிருந்தான் ராஜீவ்,  இன்று ஒரு பெண்ணின் தந்தை தங்களுக்கு திருமணத்திற்கு […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -25.2

அவரின் கைகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டவள்  “போக மாட்டேன்” என்றாள் திடமாக , அந்த நேரம் உள்ளே வந்தனர் ஷ்யாமாவும் ராஜீவும். அவர்களை பார்த்தவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை , ராஜீவ் அவரின் காலை சென்று பிடித்து “மன்னிச்சுடுங்க” என்றான் உண்மையான வருத்தத்தோடு. அருகில் வர சொல்லி கை காண்பித்தார் ஷ்யாமாவும் கை கூப்பி மன்னிப்பு வேண்ட  “வேண்டாம்” என்று தலை அசைத்தார். இருவரையும் பார்த்து “பழசை மறந்துடுங்க” என்றார் , மருமகளின் தலையில் கை வைத்து […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -25.1

ஜெகனின் முன் அமைதியாக நின்றிருந்தான் ராஜீவ் “உங்க அம்மாவை  பத்தி யோசி , உங்க அப்பாவை ரெம்யாவை நெனச்சு தினம் தினம் வேதனைப்படுறாங்க , அவங்களுக்கு கொஞ்சமாவது நிம்மதிய குடுக்கலாம் யோசி” என்க. அவனையே பார்த்தவன்  “உனக்கு என் மேல கோவம் இல்லையா” என்க. “ஏன் இல்லாம , நீ கொஞ்சம் உருப்படியா இருந்திருந்தா என் தும்பி இன்னும் நல்லா  இருந்திருப்பா , நீயும் அவளை உன் குடும்பத்துல இருந்து ஒதுக்கி தான வெச்சிருந்த” என்றவன். “உனக்காக […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 24.2

எஸ்டேட் பங்களா சென்ற ஜெகன் நேரே உள்ளே செல்ல ஹால் சோபாவில் விழிகள் மூடி படுத்திருந்தார் அச்சுதன் , யாரோ வரும் அரவம் கேட்டு பார்த்தவர் , அவர்களை கண்டவுடன் மெல்ல எழுந்து அமர. “ராஜீவ் மேனேஜர் யாரு வர சொல்லுங்க” என்றான் ஜெகன். அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்றார் மேனேஜர்  “இந்த எஸ்டேட் பங்களா யார் பேர்ல இருக்குனு தெரியுமா” என்க. அவர் தயக்கமாக அச்சுதனை பார்த்துக்கொண்டே “சாரோட பொண்ணு பேர்ல…” என்க  “இல்ல.. […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 24.1

“தைரியம் இருந்தா தொட்டு பாரு” என்றவன் குரலில் அண்ணன் தம்பிக்கு நடுக்கம் பிறக்க , அழுத்தமான அடிகளுடன் உள்ளே வந்தவன் ஷ்யாமாவின் பின் நின்றவள் கை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தான். பார்வை சங்கரனிடம் நிலைத்திருக்க , சங்கரன் தளர்ந்து நின்றார் “பிள்ளைகளை வளக்கும்போது தவறிட்டு அவங்க தவறான அப்பறம் அழுது எந்த பலனும் இல்ல , ஒரு அப்பாவா என்ன  செய்யனுமோ அத செய் , ஆத்மாக்களுக்கு மோக்ஷம் கிடைக்கட்டும்”. “இனிமேல் ஒரு பிறவி […]


அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 23.2

இரவு சென்றவன் இதுவரை திரும்பவில்லை , தொடர்பு கொள்ளவும் இல்லை பலமுறை அழைத்து பார்த்தும் பலன் இல்லை . “அம்முவை கடத்திவிட்டார்கள்” என்று ஹரி ஜெயன் மீது கிஷோர் வழக்கு பதிந்திருக்க , அவனுக்கு அதிகாலையில் மூணார் காவல் துறையிடம் இருந்து வந்து சேர்ந்தது அந்த தகவல். அதை தொடர்ந்து மூணார் அரசு மருத்துவமனை சென்றவன் அங்கு ராஜீவை கண்டான் , விவரங்களை அறிந்து கொண்டவன் , தனி ஒருவனாக அனைத்திற்கும் ஓடி நடந்து சோர்ந்திருந்த ராஜீவை […]