சில வருடங்களுக்குப் பிறகு… மகாதேவனின் வீடு அன்று விழாக்கோலத்தில் இருந்தது. மிகவும் எளிமையான அமைப்பு, ஆனாலும் அங்கே சந்தோஷம் தெரிந்தது. பூக்கள், வண்ண விளக்குகள் என்று சிறிய அளவில் பார்ட்டி. கைலாஷ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். இங்கே தென்றல் வீட்டில் குருவின் சட்டையை சரி செய்து கொண்டு இருந்தாள். “blazer அஹ் மாட்டுங்க” என்று அவனிடம் சொல்ல, “இதுவே சிம்பிளா நல்லாயிருக்கே” குரு மறுத்தான். “நான் சொல்லணும்” என்ற தென்றல் அவளே மாட்டிவிட, […]
இரண்டு வருடங்களுக்குப் பிறகு… குரு வேலை முடிந்து வந்தான். கதவு திறந்திருக்க, மகேந்திரன் அவரின் ஐந்து மாத பேத்தி அருவியோடு திளைத்திருந்தார். எப்போது மகன் வந்தாலும் வரவேற்பாய்ப் பார்த்து நாலு வார்த்தை பேசுவார். பேத்தி வந்த பின் கவனமெல்லாம் அவளிடம். குரு கொஞ்சம் புகைந்தபடியே அறைக்குள் போனான். “அப்பாவுக்கு திருடன் வந்தா கூட தெரியாது போல. பாப்பாவை கொஞ்சிட்டு இருக்கார்” தென்றலிடம் சொல்லியபடி சட்டையைக் கழட்டினான் குரு. “பின்ன, இன்னும் மாமா உங்களையே கொஞ்சிட்டு இருப்பாரா?” கிண்டலாகக் […]
அனுராகம் 25 காலையில் வீட்டுக்குள் நுழையவுமே, அறைக்குள் புகுந்த குரு அவசரமாகக் கிளம்பினான். “இன்னிக்கு லீவ் போட்டா என்னடா? நீ சொல்ல வேண்டாமா தென்றல்” என்று கீதாஞ்சலி கேட்க “அத்த! நேத்தே கேட்டு டோஸ் வாங்கிட்டேன். போகட்டும் விடுங்க” என்றுவிட்டாள். கிளம்பி வந்து வேகவேகமாக குரு சூடான இட்லியை வாயில் போட, மகேந்திரனுக்கு மகனிடம், “டேய்! என்னடா அவசரம்? பொறுமையா சாப்பிடு. காலையிலதானே வந்த, டென்ஷனோட ஏன் போகணும்.?” என்று திட்டினார். “அப்பா! நிறைய லீவ் ஆகிடுச்சு. […]
அனுராகம் 24 வெண்ணிற இரவென்றால் என்னவென்பதை அவ்விரவில் கண்டான் குரு. அன்று காலையில் காஷ்மீர் வந்திறங்கியவர்கள் இப்போதுதான் மெத்தை விட்டு எழுந்தனர். பனிக்காற்றாய் தென்றலை சூழ்ந்து புது உணர்வில் மிதந்து, கிறங்கி மயங்கி உறங்கி மீண்டும் கிறங்கி என்று பொழுது ஓடி, இப்போதுதான் குளித்து வந்தான். தென்றல் குளிக்க சென்றிருக்க, எதிரே இருந்த சாலையை தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்க எங்கும் வெண்பனி! குரு புதிதாய் புலர்ந்து மலர்ந்து நின்றான். கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இலைகள் உதிர்ந்து, பனியால் […]
தென்றல் “நான் போய் பேக் பண்றேன் அத்த” என்று சொல்லி அறைக்குள் போக, குருவும் சென்றான். “தென்றல்!” குரு மென்மையாக அவளை அழைக்க, மெத்தை மீதிருந்த ட்ராலியில் உடைகளை குனிந்தபடி அடுக்கிக் கொண்டிருந்த தென்றல் “ப்ளீஸ் குரு, கிளம்புறப்ப சண்டை வேண்டாம்” என்றாள். பிறந்த வீட்டினை பிரிந்த ஏக்கம், அப்பா… அம்மா.. குருவோடான வாழ்க்கை என்று கலவையான கவலைகள்! “எஸ், சண்டை வேண்டாம்” என்றபடி தென்றலின் தோளைப்பற்றி நிமிர்த்தினான் குரு. தென்றல் முகம் தவிப்பில் தத்தளித்தது. “என்னாச்சும்மா?” […]
சில நிமிட மௌனத்திற்குப் பின், குரு தென்றலை தட்டினான். தென்றல் விழியுயர்த்தி பார்க்க, “தூங்குவோமா, டயர்டா இருக்கு” என்றான். “ஓகே” என்று தென்றல் சொல்லி நகர்ந்து படுக்க, “உனக்கு ஓகே தானே தென்றல்?” என்றான் மீண்டும். “குரு! எனக்குப் புரியாதா?” என்றாள் புரிதலாக. இன்றைய இரவைப் பற்றி அவர்கள் ஏற்கனவே பேசியிருந்தது, நாளை இரவு இருவரும் காஷ்மீருக்குத் தேன் நிலவு செல்கின்றனர். ஷ்ரவன்-வருணின் திருமண பரிசு. அதனால் இன்று விலகல். “காலையில மறுவீடு போகணும் அம்மா சொன்னாங்க. […]
அனுராகம் 23 குருப்ரசாத் – தென்றல் ஜோடியாக மணமேடையில் நின்றனர். இருவருக்கும் இன்று வரவேற்பு. குரு மனதில் சஞ்சலமின்றி சந்தோஷமாக நின்றான், தென்றலுக்குள் சில கவலைகள் இருந்த போதிலும் அவளும் வெகு ஆவலாக, காதலுடன் எதிர்ப்பார்த்த நாளல்லவா? தென்றல் நிறைந்து நின்றிருந்தாள். மாலை ஐந்து மணிக்கு அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் தொடங்கிய நிகழ்வு, இப்போது பத்து மணி வரை தொடர தென்றலின் கால்கள் வலியெடுத்தது. கீழே உட்கார்ந்தபடி மேடையில் நின்ற மகனை ரசித்து பார்த்தார் மகேந்திரன். […]
அவர்கள் சென்றதும் மகேந்திரன் மகனை, “கல்யாணம் நம்ம செலவு, நம்ம இஷ்டப்படி பண்றோம், அவன் ஒன்னுமே சொல்லலயே. ரிசப்ஷனுக்கு ஒத்துக்கிட்டா என்னடா, அவனை கெஞ்ச விடுற” என்று திட்டினார். குரு அமைதியாக இருந்தான். கீதா மகனிடம் “அவர் உன் மாமனார்டா, என்னமோ சார்னு அவ்வளவு ஸ்டீரிக்டா பேசுற?” என்று கேட்க, அவரை முறைத்தான். “என் முன்னாடி அம்மாவை முறைப்பியா நீ?” என்று மகேந்திரன் கேட்க “அப்பா! எனக்கு அப்படி அவர்கிட்ட டக்குனு பேச வரல, அவரே அதை […]
அனுராகம் 22 சிறிது நேரம் தனிமையில் அதன் அமைதியில், மனதில் மையம் கொண்ட அனுராகத்தில் ஆழ்ந்து குருவும் தென்றலும் அப்படியே நின்றனர். இருவரின் கையும் பிணைந்து இருக்க, அதனை அழுத்திய குரு “போலாம் தென்றல்” என்றான். தென்றல் பதில் பேசாமல் அவனை ஒரு முறை அணைத்துக் கொண்டாள். “இந்த இடம், இந்த குரு எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன்” தென்றல் அவன் தோள் சாய்ந்தபடி, முகம் மட்டும் நிமிர்த்தி சொன்னாள். அவள் விழிகளில் பிரியத்தை தேடிடும் பாவனை […]
சிறிது நேரம் தனிமையில் அதன் அமைதியில், மனதில் மையம் கொண்ட அனுராகத்தில் ஆழ்ந்து குருவும் தென்றலும் அப்படியே நின்றனர். இருவரின் கையும் பிணைந்து இருக்க, அதனை அழுத்திய குரு “போலாம் தென்றல்” என்றான். தென்றல் பதில் பேசாமல் அவனை ஒரு முறை அணைத்துக் கொண்டாள். “இந்த இடம், இந்த குரு எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன்” தென்றல் அவன் தோள் சாய்ந்தபடி முகம் மட்டும் நிமிர்த்தி சொன்னாள். அவள் விழிகளில் பிரியத்தை தேடிடும் பாவனை குருவை அசைத்தது. […]