Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகில் கலந்தாட

​அழகில் கலந்தாட – 28 (3)

“மம்மி, என் ட்ரெஸ்…” என்று மயூரன் கேட்க, “உன்னோடதும் தான் மயூ குட்டி. ரெண்டுபேர் ட்ரெஸும் அழகா க்யூட்டா இருக்கு…” என இரு பிள்ளைகளையும் கன்னம் கிள்ளி கொஞ்சியபடி. “பேபி, மயூண்ணா, டாடி ஜீன்ஸ். மம்மி சேரி…” என்று ரிஷாத்மிகா உதட்டை பிதுக்கியபடி தந்தையை பார்க்க, “வித் ப்ளஷர் பேபி. மம்மிக்கும் உன் ட்ரெஸ் போலவே டிஸைன் பண்ண நான் ரெடி….” என்றவன் கள்ளப்புன்னகையுடன் சௌபர்ணிகாவை பார்த்து கண் சிமிட்ட, “ஓஹ், போட்டுக்கலாமே? ட்ரெஸ் எங்க?…” என்று […]


அழகில் கலந்தாட – 28 (2)

“தெளிவா இருந்துக்கோடா ரிஷபான்னு எனக்கே ரெட் அலர்ட் குடுக்கற. ஹ்ம்ம், பார்ப்போம்…” என்றவன் முகத்திலும் புரிந்துணர்வின் மென்னகை. சௌபர்ணிகா சொல்லியவிதத்தில் அவனுக்குமே அதுவே சரியென்று தோன்றியது. எதையுமே பேசி, தீர்மானித்து நடக்க இது ஒன்றும் திட்டமிடும் விழா ஏற்பாடு அல்லவே. வாழ்க்கை, வாழ்ந்து தான் உணரவேண்டும். சிலபல சறுக்கல்கள் இருந்தாலும் எழுந்து மீண்டும் பயணத்தை தொடர வேண்டும். இரு கை ஓசையின் இணைவு தான் வாழ்வியலின் அங்கம். இருவரின் புரிந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் மட்டுமே அவர்கள் சந்தோஷத்தின் ஆணிவேர். […]


அழகில் கலந்தாட – 28 (1)

அழகில் – 28             சௌபர்ணிகா அமர்ந்த இடம் விட்டு அசையவில்லை. ஆரோனை பாராமல் அவனை தவிர்த்து பார்வைகள் எங்கெங்கோ அலைபாய்ந்தது. அத்தனை நாட்கள் அவள் அனுபவித்த அத்தனை துயரங்களும் ஒன்றுமே இல்லை என்பதை போல் காண்பித்துவிட்டானே? ‘எல்லாம் தெரியுமாம். எப்பொழுதோ தெரியுமாம்’ சட்டென அதனை கிரகிக்க முடியாமல் இன்னும் அந்த அதிர்விலேயே அவளிருக்க, நாசியில் காபியின் நறுமணம். “பிடி. குடிச்சிட்டு சிந்தனை செய்யலாம்…” என்றான் ஆரோன் ரிஷபன் நக்கலாக. “என்ன கிண்டலா?…” “அப்படியா தெரியுது?…” என்றவன் […]


அழகில் கலந்தாட – 27 (2)

சௌபர்ணிகாவிற்கு தன் அண்ணனாவது எதுவும் தெரியாமல் நிம்மதியாக இருக்கட்டுமே என்ற எண்ணம். “ண்ணா அண்ணியும் எதுவும் சாப்பிடலை. போய் டீ, காபி ஏதாவது குடிச்சிட்டு வாங்க…” என்று சொல்ல, “நீ…” என்ற இஷாந்த், “ஓகே, நாங்க போய்ட்டு வரோம்…” என அவர்களுக்கு தனிமை கொடுத்து எழுந்து சென்றவன், “ப்பா டீ சாப்பிடலாம் வரீங்களா?…” என தகப்பனையும் ஒதுக்கமுடியாமல் கேட்க ‘இல்லை’ என்றார் அவர். “நீங்க மாத்திரை எடுக்கனும். நீங்களும் எதுவுமே சாப்பிடலை. ப்ளீஸ் வாங்க…” என்று விடமுடியாமல் […]


அழகில் கலந்தாட – 27 (1)

அழகில் – 27               மருத்துவர்கள் மாற்றி மாற்றி சபர்மதியின் அறைக்குள் செல்வதும் வருவதுமாய் இருக்க சௌபர்ணிகா அமர்ந்த இடத்தை விட்டு அசையவில்லை. அந்த அவசர சிகிச்சை பிரிவின் முன் உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தவளை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஆரோன் ரிஷபன். “பக்கத்துல போங்க ஆரோன்…” இஷாந்த் சொல்ல, “நோ…” என்றான் மறுப்பாய் தலையசைத்தபடி சௌபர்ணிகாவை பார்த்துக்கொண்டே. “அவ ரொம்ப டவுனா ஃபீல் பண்ணுவா. இப்ப நீங்க பக்கத்துல இருக்கனும்…” இஷாந்திற்கு தங்கையின் அந்த முகம் காண […]


அழகில் கலந்தாட – 26 (2)

“எல்லா புள்ளைங்க மாதிரி தான் அதுவரைக்கும் எங்கப்பா எனக்கு ஹீரோன்னு நினைச்சிருந்தேன். ஆனா நீங்க அப்படி இல்லை. கல்யாணத்துல முதல்படியே நம்பிக்கை தான். எங்கம்மாவோட நம்பிக்கையை உடைச்சதோட இல்லாம இப்ப வரைக்கும் அதை உணராம இருக்கீங்க பாருங்க…” “நீங்கலாம் மனுஷனே கிடையாது. இப்பவும் உங்களை உங்க பிள்ளைங்க தவறா நினைச்சிடக்கூடாதுன்னு பதட்டப்படற நீங்க எங்க? இத்தனை வருஷம் பிள்ளைங்களுக்கு தெரிஞ்சிட கூடாதுன்னு உங்க கௌரவத்தையும் சேர்த்து காப்பாத்த நினைச்ச எங்கம்மா. நீங்கல்லாம் எங்கம்மாவுக்கு தகுதியே கிடையாது…” “இப்பவும் […]


அழகில் கலந்தாட – 26 (1)

அழகில் – 26               ஜெயந்தனுக்கு பொறுக்கவில்லை. அவரும் சௌபர்ணிகா வந்ததிலிருந்து பார்த்துவிட்டார். தாயும், பிள்ளைகளும் என்னவோ பேசிக்கொண்டாலும் எதுவும் அவரின் கவனத்திற்கு வரவில்லை. ஆனால் என்னவோ உள்ளது என தெரிகிறது. இந்த வீட்டில் தான் யார் என்ற கேள்வி அவரின் அமைதியை சோதிக்க மருமகளிடம் கூட கேட்டுவிட்டார். “என்னம்மா சொல்றான் இஷாந்த்?…” என்று கேட்க, “எனக்கு தெரியலை மாமா. எதை பத்தி கேட்கறீங்க?…” என்றாள் அவள் அப்பாவியாய். நிஜத்திற்கும் அவளுக்குமே முழுதாய் தெரியவில்லை. ஆனால் இஷாந்த் […]


​அழகில் கலந்தாட – 25 (4)

மனைவியின் நிலை புரிந்தாலும் பின்னாளில் இது எப்படியான பிரச்சனையை கொண்டுவரும் என அறிந்திருந்தான். அதுவும் நடாஷா ஒரு அழகி. போதை தெளிந்தால் இதனை எந்த எல்லைக்கும் அவள் கொண்டுசெல்ல கூடும். பாதிப்பு சௌபர்ணிகாவிற்கு. நடாஷா மயக்கத்திற்கு சென்றிருக்க அவளை அப்படியே கீழே விட்டவன் சௌபர்ணிகாவை பிடித்து உலுக்கிவிட்டான். “என்ன காரியம் பண்ணிருக்க நீ?…” என்று ஆத்திரம் குறையாமல் கேட்க, “ரிஷி, அவ அவ உங்களை கிஸ் பண்ண…” என உதடு துடிக்க சொல்லியவள் முகமெல்லாம் வேதனையின் சாயல். […]


அழகில் கலந்தாட – 25 (3)

“இவ்வளோ டெப்த் எனக்கு தெரியாது ரிஷி. அந்தளவுக்கு இதை கவனிக்க எனக்கு நேரமும் இருந்ததில்லை…” என்று அவள் பார்வையை ஓடவிட, “மேம் ஸ்டாட்டர்…” என உஷா உணவு வகைகளை எடுத்து வர, “வெஜ் ஐட்டம் மட்டும் எடுத்துக்கோ. மஷ்ரூம் தந்தூரி, பனீர் டிக்கா இருக்கு பார்…” என்று அவளுக்கு எடுத்து வைத்தான். உணவு நேரம் இருந்தாலும் இன்னும் அநேகமானோர் அதனை ஆரம்பிக்கவில்லை. உற்சாகபானம் இன்னும் அல்லோலகப்பட்டது. அவ்விடத்தில் இருந்தவர்கள் அனைவரின் கையிலும் அந்த தங்கநிற திரவம் இடம்பெற்றிருக்க […]


அழகில் கலந்தாட – 25 (2)

“ப்ளீஸ், ப்ளீஸ் ப்ளீஸ் பிபி. நான் சொல்றேன்ல. கிளம்பி வா. உஷாவை உனக்காக தான் அனுப்பியிருக்கேன்…” “சரி பார்ட்டி எங்க? இந்த ஹோட்டல் தானே?…” “இல்லம்மா, நைட்க்கு அங்க ஹால் கிடைக்கலை. அதனால வேற ஹால் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. அங்க இருந்து ஒரு ட்வென்டி மினிட்ஸ் ட்ராவல் தான்….” “ரிஷி உங்களுக்கு ட்ரெஸ்…” “எப்பவும் ஒரு ரஃப் செட் வச்சிருப்பேன். அது இருக்கு. நீ ரெடியாகி வா. சில்க் ப்யூட்டி ஐம் வெய்ட்டிங்…” என்று அவசரமாய் சொல்லி […]