“போய் வாழைப்பழத்தை குடுடா… வந்துட்டான் எனக்கு ஆர்டர் போட” மகன் தலையில் வலிக்காமல் கொட்டினான். அந்த சிறு வாண்டோ தூசு போல் தட்டிவிட்டு, “ப்பா வாங்க நான் காளையனுக்கு பருத்தி கொட்டையும், பேரீச்சம்பழமும் குடுக்கணும், மாடு குளிக்கவே இல்ல இன்னும்” என்றான் மீண்டும் தந்தையின் தினசரி வழக்கத்தை நினைவுபடுத்தி. “அடேய் அலாரம்… எனக்கு தெரியும்டா” தானாய் எதையும் செய்யும் பழக்கம் கொண்ட தேவாவிற்கு மகன் கட்டளைபோடுவது எப்பொழுதும் பிடிக்காது. பிடித்தாலும் முறைத்துக்கொண்டு மகனை பார்த்தான். வேதவிர்க்கு தந்தையின் […]
வாழைமரம், மாவிலை தோரணம், அழகிய வண்ண கோலம், சரசரக்கும் பட்டுப்புடவை அணிந்த பெண்கள், அவர்களுக்கு ஈடாய் பட்டு வேஷ்டியில் சுற்றிய ஆண்கள் என அவ்விடமே வண்ணமயமாக இருக்க, சித்திரை வெயிலில் எவர் முகமும் சிறிதும் வடிவிடாமல் தென்னை மரங்கள் சாமரம் வீசியது. காலை ஏழு மணி தான் ஆனாலும் வீடே ஜெகஜோதியாக மின்னியது. எங்கு திரும்பினும் சிரிப்பின் சாயல். அழகின் பிரதிபலிப்பு. “டேய் மச்சான்… இங்க வா” தலையை ஆட்டி அருகில் தூரத்தில் நின்றவனை அழைத்தாள் ஆறு […]
“அண்ணா கல்யாணம் பத்தி எதுவுமே பேசலயே ஆனந்த்… எனக்கு அண்ணனை பாக்குறப்போ எல்லாம் கஷ்டமா இருக்கு. எனக்காக இவ்வளவு செய்ய யோசிச்சவனுக்கு நான் எதுவுமே செய்ய முடியல பாருங்க” சோகம் பேசியவள் பார்த்து சிரித்தான். “அத பத்தி அம்மா ஏற்கனவே பெரிம்மாகிட்ட பேசிட்டாங்க, தாராளமா சந்தோஷ் நிலா கல்யாணத்தை ஏற்பாடு பண்ண சொல்லி. இனி பொண்ணு கேக்க வேண்டிய உங்க வேலை தான் பாக்கி” அகம் மலர்ந்து பிரகாசித்தது பெண்ணுக்கு, “நிஜமா சொல்றிங்களா?” அவன் ஆமாம் என்க […]
தேவா வீட்டிற்கு வந்த கையேடு மனைவியை அழைத்து மதுரையில் பெற்றோரையும் சகோதரியையும் அழைத்து விருதுநகர் புறப்பட்டுவிட்டான். தல பொங்கல் என இரண்டு ஜோடிகளுக்கும் விருந்து உபசாரங்கள் ஏகபோகமாக இருந்தது. ஒரு வார களைப்பு கூட மறைந்து தேவா வீட்டினரோடு ஒன்றிட பல மாதங்கள் அவர்களை விட்டு தள்ளியிருந்த பைரவியும் கூட அவர்களோடு சேர்ந்திட, புது இணைப்பாக பைரவியோடு இஷா ஒன்றியது தான் அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியது. பயத்தோடு பைரவி தன்னுடைய அத்தையை பார்க்க மெல்ல தலையை அசைத்து […]
பைரவி தோளை குலுக்கி உன் சாமர்த்தியம் என கை நீட்டிட, “இதுல என்ன பெரியப்பா? நம்ம ஊர், எங்க போனாலும் நம்ம பயலுக மட்டும் தான் இருப்போம். ஒரு பயமும் இல்லை. அதுவுமில்லாம மருந்தெல்லாம் எங்க இருக்குனு அவளுக்கு தான் தெரியும். போன ஒடனே வந்துடுவோம். நீங்க படுங்க” பேசிக்கொண்டே வாகனம் நோக்கி அவன் செல்ல மற்றவர் பேசுவதற்கு இடம் தரவில்லை தேவா. அவசர அவசரமாக மனைவியை இழுத்து வந்தவன் வாகனம் வீட்டினை தாண்டிய பிறகே நிதானமடைந்தது. […]
சில நிமிடங்கள் அவளுக்கும் மூச்சு கொடுத்து தானும் மூச்செடுத்தவன் பிறவி பயனில் முதல் பாதியை அடைந்த நிம்மதியில் இடைவெளியிட, புயலாய் அவன் மார்பினில் சாய்ந்தாள். இடை வளைத்து தன்னோடு அவளை அனைத்தவன் மீண்டும் அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்க செய்தான். அவள் முகத்தின் செந்நிறம் தங்கள் முதல் முத்தத்தின் பிரதிபலிப்பை கூற, திருப்த்தியோடு மெல்ல புன்னகைத்தவன், இதழ் கடித்து உணர்ச்சியில் இருந்தவள் இதழை விரலின் உதவியோடு பிரித்தான். “சக்கரை… என்னமா இனிக்கிறடி” மீண்டும் மூன்று நொடி […]
நண்பர்களின் ஆரவாரத்தை அடக்கி இரண்டு காளைகளையும் தங்கள் வாகனத்தில் ஏற்றி முழு சந்தோசத்தோடு ஊர் வந்து சேர வழக்கம் போல் இருக்கும் ஆரவாரத்தோடு இணைந்து கொட்டு சத்தமும் வரவேற்றது அவனை. “டேய் என்னடா இதெல்லாம்?” சிரித்த தேவா கழுத்தில் ஒரு மாலையை போட மறுக்காமல் ஏற்றுக்கொண்டான் அவன். “இதெல்லாம் கேள்வி கேக்க கூடாது மாபிள்ளை, அனுபவிக்கனும்” என குணா தானும் இளைஞர்களோடு சேர்ந்து ஆட ஊரின் நுழைவிலிருந்து தோட்டம் வரை இரண்டு காளைகளையும் இருபுறமும் வைத்து அளப்பறையை […]
மார்கழி மாத குளிர்காற்று உடலை உறையவைத்து சில்லிட்டாலும், உறக்கம் வராமல் அமைதியாக அமர்ந்திருக்கும் காளையனை விழி அகலாமல் பார்த்தான் தேவா. இன்னும் மூன்று மணி நேரத்தில் மாட்டை வாடிவாசலுக்கு அழைத்து செல்ல வேண்டும். அது வரை உறக்கம் வந்தாலும் வராதது போல் வாடை காற்றை நுகர்ந்துகொண்டே மாட்டுக்கு காவலாய் நிற்க வேண்டும். அலங்காநல்லூரில் தெரிந்த ஒருவரின் வீட்டில் தான் இருந்தான் தேவா மற்றும் அவன் நண்பர்கள். ஆனாலும் பாதுகாவலன் ஒருவன் நிச்சயம் காளையனுக்கு தேவை. காரணம் சில […]
“பேச கூடாதது எல்லாம் பேசிட்டு இப்ப ஒக்காந்து இழுவுனா எல்லாம் சரியாகிடுமா?” உணவை உண்ணாமல் அதை பார்த்தபடியே அமர்ந்திருக்கும் மகளை எத்தனை திட்டியும் மனம் ஆறவில்லை சீதாவிற்கு. அன்று தேவா பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து மீளாத பைரவியை தேவா நேரமாகிறதென வீட்டிற்கு அழைக்க, மாட்டேன் என சொல்லவும் உன் விருப்பம் என அவனும் சென்றுவிட்டான். இதோ பத்து நாட்கள் ஆகிறது அவனும் சென்று. ஒரு முறை கூட அவனும் கைபேசியில் கூட பேசவில்லை, அவளும் பேச […]
வாகனம் மதுரை நோக்கி பயணப்பட தேவா பக்கமே திரும்பவில்லை பைரவி. மதுரையை தாண்டியதும் ஆள் அரவமில்லாத ஒரு காலியிடத்தில் வாகனத்தை நிறுத்தி அவளை திரும்பி அமர்ந்துவிட்டான் தேவா. ஐந்து நிமிடம் பத்து நிமிடம், அரை மணி நேரம் கடந்திருக்க, அவன் பார்வை தன்னை துளைப்பதையும் தெரிந்து கவனிக்காதது போல் அமர்ந்திருக்க பசி மயக்கம் பார்வையை மந்தமாக்கியது. தண்ணீரை கூட எப்பொழுது இறுதியாக அருந்தினோம் என நினைவில் இல்லை. பசியே கோவத்தை தூண்டிவிட தலை திருப்பாது, “என்ன எதிர் […]