அடுத்த இரண்டு நிமிடத்தில் சௌமியாவின் பெற்றோரும் அங்கே வந்திட, இருவரையும் பொதுவாய் பார்த்து சிரித்தவர்கள் “எப்படி மிஸ் படிக்கிறா??” என்று லட்சுமியிடம் கேட்க, “ப்ரைட் ஸ்டூடன்ட்.. ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட் போல.. அதுலயும் கொஞ்சம் ட்ரைன் பண்ணா நல்லாருக்கும்..” என்றாள் சௌமியாவைப் பற்றி நன்கறிந்து.. “விளையாட போனா படிப்பு போயிடுமே..” என்று சௌமியாவின் அம்மா சொல்ல, “அதெல்லாம் இல்லை.. படிக்கிற பிள்ளைங்க எப்பவுமே நல்லா படிப்பாங்க.. அதுக்கூட அவங்களுக்கு பிடிச்சதையும் பண்ண வச்சா இன்னும் நல்ல நிலைக்கு வருவாங்க..” […]
எப்போது எப்போது என்று லட்சுமி எதிர்பார்க்கும் போதெல்லாம் கிடைக்காத இந்த வரம், கிடைக்கும் போது கண்டிப்பாய் கிடைக்கும் என்றெண்ணி, குடும்பத்திலும் வேலைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கும் போது தானாகாவே கிடைக்க, அந்த நொடி லட்சுமி எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கு மட்டுமே தெரியும்.. ஈசனுக்கோ என்ன சொல்ல என்றே தெரியவில்லை. மௌனமாய் லட்சுமியின் கைகளை பிடித்து அமர்ந்திருந்தான். அவளுக்கோ கண்களில் நீர் கோர்த்திருந்தது.. நீர் நிறைந்த கண்களோடும், உதட்டில் ஒட்டிய புன்னகையோடும் ஈசனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவள் […]
ஆனந்தம் – 68 நான்கு ஆண்டுகளுக்கு பிறகு…. மாவூற்று வேலப்பர் கோவில்.. ஈசனது குடும்பத்தில் எந்தவித முதல் விசேசமும் அங்குதான் நடைபெறும். இன்றும் அப்படியே.. ஈசன் லட்சுமியும் புதல்வன் ‘தியானேஷ்வரன்’க்கு முதல் மொட்டை. ஆக அனைவரும் மாவூற்று வேலப்பர் கோவிலில் இருந்தனர்.. கோவிலின் கீழ் பிரகாரத்தில் விழாவிற்கு வந்த ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.. தாய் மாமன் முறைக்கு மனோஜ் மடியில் வைத்துத்தான் முடி இறக்கினர்.. முத்தரசிக்கும் மனோஜிற்கும் அத்தனை சந்தோசம்.. மனோஜ் இப்போது பழையபடி நன்றாகிவிட்டான். […]
வேலாயுதம் இறந்த அன்று கூட லட்சுமி இப்படி அழவில்லை.. ஈசனுக்குத் துணையாய் நின்று அனைத்து வேலைகளையும் செய்தாள். கண்கள் கலங்கி இருந்தாலும், அனைவரும் அழுவதைப் பார்த்தாலும் அவள் அழவில்லை. அவள் உள்ளத்தில் எத்தனையோ இருந்தது.. ஆனால் அதற்க்கெல்லாம் அப்போது நேரமில்லை என்பதுபோல் இருந்தாள்.. ‘அழறதுன்னா அழு லஷ்மி..’ என்று ஈசன் சொன்னபோது கூட, ‘இப்போ அதுக்கான நேரமில்லை மாமா..’ என்றுவிட்டாள்,. ஆனால் இப்போது நன்றாய் பேசிக்கொண்டு இருந்தவள் அழ, ஈசனுக்கு என்னவோ போலானது. சரி ஏதுவாக இருந்தாலும், […]
“பணம் இப்போ பிரச்சனை இல்லை லட்சுமி.. நம்மலே சமாளிச்சுக்கலாம்.. ஸ்டே மட்டும் திரும்ப வாங்கிடலாம்..” என்று கஜேந்திரன் சொல்ல, “இல்ல மாமா.. வேணாம்.. மனோஜ் நல்லாகி அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையும் போது எந்த காரணத்துக்காகவும் சித்தப்பா பண்ண எதுவுமே அவன் மேல விழக்கூடாது.. உன் அப்பா இப்படி பண்ணிட்டார்.. அது இதுன்னு எதுவுமே அவனை பாதிக்க கூடாது.. முக்கியமா சித்தப்பா பண்ண வேலைக்கு அவன் கடன்பட்டு நிக்க கூடாது…” என, அங்கே பெருத்த அமைதி.. ஈசனுக்கோ […]
ஆனந்தம் – 67 “அவர் மட்டும் கைல கிடைக்கட்டும் அப்புறமிருக்கு..” “ச்சே என்ன மனுஷன் இவர்… நம்பிக்கைத் துரோகி..” “வேலு சித்தப்பா வரட்டும் நிக்க வச்சு நல்லா கேட்கணும்..” “கூட இருந்தே இப்படி பண்ணிட்டானே.. இவனை சும்மாவே விடக்கூடாது..” இப்படியெல்லாம் அனைவரின் கோபங்களுக்கும், வருத்தங்களுக்கும், சொந்தக்காரரான வேலாயுதம் இன்று உயிரோடு இல்லை.. ‘வினாஸ காலே விபரீத புத்தி..’ அழிவு நேர்கையில் தான் புத்தியும் தடம்புரளுமாம்.. ஆனால் இவருக்கு, புத்தி தடம்புரண்டதால் தான் அழிவு நேர்ந்ததோ என்றிருந்தது […]
ஈசன் எல்லாம் பேசி முடித்து வேகமாய் அவர்களிடம் வந்தவன், முத்தரசி அழுவதை கண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க, “எங்களை மன்னிச்சிடுங்க தம்பி..” என்று அந்த நேரத்தில் முத்தரசி கையெடுத்து கும்பிட, “அச்சோ…. என்ன இது..” என்று கணவன் மனைவி இருவரும் சொல்ல, முத்தரசி இன்னும் இன்னும் அழுதார்.. யாருக்குமே என்ன பேசுவது என்பது தெரியவில்லை, முத்தரசி அழுதபடி இருக்க, லட்சுமியின் கண்களும் கண்ணீர் சுரந்துகொண்டு தான் இருந்தது. ஆனால் மௌனமாய் அழுதாள். ஈசன் மனோஜை […]
ஆனந்தம் – 66 “வாங்க சித்தப்பா..” என்று கஜேந்திரனை எஸ். பியே வந்து வரவேற்க, பின்னே வந்த ஈசனையும், லட்சுமியையும் பார்த்தும் ஸ்நேகமாய் ஒரு புன்னகையும் சிந்த, அவர்களோ சம்பிரதாயத்திற்காக சிரித்தாலும், முகமெல்லாம் யோசனையாய் இருந்தது. “வேல் பாண்டி என்னாச்சு கிடைச்சிட்டாங்களா..??” என்று கஜேந்திரன் கேட்க, “சித்தப்பா உள்ள வாங்க பேசிக்கலாம்.. ஈசா நீயும் வா..” என்றவன் லட்சுமியைப் பார்த்து, “நீங்களும் வாங்க அண்ணி..” என்று மரியாதைக்காக சொல்ல, சரியென்று மூவருமே அறைக்குள் செல்ல, அங்கேயே […]
ஆனாலும் பொறாமையில் வயிர் எரிய, “உங்க கடைல வேலை நடக்கிறது என் கடைல தூசி விழுது.. சாமான் எல்லாம் பாலாகுது..” என்று சின்ன சின்னதாய் குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்க, அதெல்லாம் கண்டுகொள்ளாது வேலைகள் அதன்போக்கில் நடந்துகொண்டிருக்க, இடையில் ஒருநாள் வேலைக்கு வந்த ஆட்களை துரைசாமி வம்பிழுக்க, அது பெரும் பிரச்சனையாய் போனது.. ஈசன் என்னவென்று போய் பார்க்க, அவர்களோ துரைசாமி மன்னிப்புக் கேட்காமல் எதுவும் நடக்காது என, இந்த துரைசாமி விசயத்தில் தான் இத்தனை நாள் சும்மா […]
ஆனந்தம் – 65 பள்ளிக்கூட வேலைகள் ஒருபக்கம் தொடங்கியிருக்க, புது இடத்தில் பண்ணை அமைக்கவென்று வேலைகள் வேறு ஜரூராய் நடந்துகொண்டு இருக்க, லட்சுமி சொன்னது போல் சூப்பர் மார்கெட்டை விஸ்தரிப்பு செய்யவும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தது. பெரிது படுத்தவேண்டும் என்று லட்சுமி சொல்லிவிட்டாள் தான்.. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கையில், மதுரையில் இடம் விற்ற பணத்தில், பண்ணைக்கான இடம் வாங்கிய பணம் போக மீதமிருந்ததை லட்சுமி அப்படியே ஈசனிடம் கொடுக்க, இந்த முறை வேண்டவே வேணாம் […]