Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயத்தின் தேடலன்றோ நீ

இதயத்தின் தேடலன்றோ நீ…!!! – 8(2)

தன்னுடைய கம்பெனியின் ஒவ்வொரு பகுதிக்கும் அவளை அழைத்துசென்று அவன் சுற்றி காட்ட அவனின் திறமைகளை பார்த்து அவளால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. தன்னுடைய வொர்க்கர்களிடம் அவன் தன்மையாக நடந்துகொள்ளும் விதமும், தவறே செய்தாலும் அதை தட்டிக்கொடுத்து அவன் சரிசெய்யவதையும் பார்த்தவளுக்கு அவனின் அணுகுமுறைகள் ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும்தான் ஏற்படுத்தியது. அவனின் அசிஸ்டெண்ட் மூலமாக தான் இருப்பது மும்பையில் என்று தெரிந்து கொண்டவளுக்கு ஆத்விக்-கின் நினைவுதான் வந்தது. எப்படியும் இங்கிருந்து செல்வதற்குள் ஆத்விக்கை கண்டுபிடித்தாக வேண்டும் என்று நினைத்தவள் மறுப்பேதும் […]


இதயத்தின் தேடலன்றோ நீ…!!! – 8(1)

ஓட்டமும் நடையுமாக அறைக்கு திரும்பியவள் சென்று நின்றது என்னவோ ஷவரின் அடியில்தான். அவன் இதழ்தீண்டிய கூந்தல் பகுதியை கசக்கி தண்ணீரில் அலசியவள் ஒரு ஷாம்பு பாட்டிலையே காலி செய்திருந்தாள். என்ன செய்தும் அவளுக்கு திருப்தி ஏற்படாமல் போகவே, கத்தரிக்கோலை எடுத்து கூந்தலை வெட்ட முனைந்தவளின் கரங்கள் ஏனோ வெட்ட முடியாமல் நடுங்கின. நிச்சயம் அது அவளால் முடியாத காரியம்தான். அவளின் ஆத்விற்கு அவளிடம் பிடித்த ஒன்றல்லவா அது. அதை எப்படி அவளால் வெட்டி வீச முடியும்..? தன்னால் […]


இதயத்தின் தேடலன்றோ நீ..!!! – 7(2)

அந்த செமினார் அறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவள் செமினார் எடுத்து கொண்டிருந்தாள். எல்லாமே நன்றாக சென்றுக்கொண்டிருந்த தருணத்தில்தான் அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்திருந்தான் யாதவ் கிருஷ்ணன். அவன் வருகையால் அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த மாணவர்களுமே ஒரு கணம் பதறித்தான் போயினர். “இங்கயும் வந்துட்டானா..?” என்று நினைத்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவன் சொன்ன லஞ்ச் டைம் கடந்து அரைமணிநேரம் ஆனதை. எங்கே அனைவரின் முன்னிலையும் தன்னை இழுத்து சென்று விடுவானோ என்ற பயத்தில் அவள் டேபிளை இறுக்கமாக […]


இதயத்தின் தேடலன்றோ நீ..!!! – 7(1)

போகமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவளை போகவைத்த மழையின் மீது கோவப்படுவதா..? இல்லை தான் வரமேட்டேன் என்று தெரிந்தும் பிடிவாதமாக மழையில் நனைந்த அவன் மீது கோவப்படுவதா..? என்றே அவளுக்கு தெரியவில்லை. எப்போதெல்லாம் அவனை விட்டு விலகவேண்டுமென்று அவள் நினைக்கிறாளோ அப்போதெல்லாம் அவளை அவனருகில்தான் இருத்திப்பார்கிறது காலம். அன்றுகூட அவன் மூஞ்சிக்காற்றுக்கு போராடிக்கு கொண்டிருக்கும் போது அவள்தானே அவனருகில் இருந்து அவளை காப்பாற்றினாள். அதேபாணியில்தான் மழையும் இன்று அவனருகில் அவளை இருக்க வைத்தது. அவள் மடியில் தலைசாய்த்து மருந்தின் […]


இதயத்தின் தேடலன்றோ நீ..!!! – 6(2)

அன்று தன் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அவள் தன் அறைக்கு சென்று கொண்டிருக்கும் போதுதான், அவள் அருகே சென்று காரை நிறுத்தினான் யாதவ். அவள் ஏறுவதற்கு வாகாக காரின் முன் பக்க கதவைத்திறந்தவள், “கெட் இன் யாழி” என்று கூற, அவளோ, “எனக்கு கால் இருக்கு” என்றுக் கூறியவாறு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அவனோ காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவளை பின் தொடர, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவளோ “எதுக்கு இப்படி பின்னாடியே வர்றீங்க..? யாராவதுப் பார்த்தா […]


இதயத்தின் தேடலன்றோ நீ..!!! – 6(1)

அவன் கொடுத்த அதிர்ச்சியின் விளைவால் அவளுக்கு ஜீரமே வந்துவிட, விடுமுறை நாட்களில் கூட மருத்துவமனை பக்கம் செல்பவள் அவனால் இரண்டுநாட்கள் விடுப்பே எடுத்திருந்தாள். அவளை பார்த்துக்கொள்வதற்காக வந்த மீராவையும், “எனக்கு யாரோட உதவியும் தேவையில்லை. என்னப்பார்த்துக்க எனக்கு தெரியும்” என்று கூறி அனுப்பிவைத்துவிட்டாள். ஜீரத்தால் அடித்துப்போட்டாற்போல உடம்பு வலிக்க சமைத்து கூட அவளால் சாப்பிட முடியவில்லை. அதனால் பிரட்டை மட்டுமே உண்டு மருந்து மாத்திரை, ஊசி போட்டுக்கொண்டவள் அன்றைய நாள் முழுவதும் உறக்கத்திலேயேதான் இருந்தாள். அடுத்தநாள் மதியத்திலிருந்துதான் […]


இதயத்தின் தேடலன்றோ நீ..!! – 5(2)

உண்மையில் யாழினிக்கும் படிப்பிற்கும் வெகு தூரம் என்றுதான் சொல்லவேண்டும். பரிட்சையில் அவள் வாங்கும் பூஜ்ஜியம் மார்க் கூட அவள் எழுதும் பதிலுக்கு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். எதோ ஊருக்குள் தெரிந்த வாத்தியார் என்பதால் ஐந்தாவது வகுப்பை எட்டியிருந்தாள். “பரிட்சையில வாங்குற முட்டையை எல்லாம் வேகவச்சி சாப்பிடுவியா..? இல்ல ஆம்லெட் போட்டு சாப்டுவியான்னு இவக்கிட்ட டீச்சர் கேட்டாங்க அத்த…” என்று சொல்லிவிட்டு மீண்டும் தென்னரசு வாய்விட்டு நகைக்க, யாழினியோ ஆத்விக்கைப் பார்த்தாள் அவனும் நகைக்கிறானாயென்று. ஆனால் ஆத்விக்கோ தென்னரசின் […]


இதயத்தின் தேடலன்றோ நீ…!!! – 5(1)

அத்தியாயம் – 5 கான்ஃப்ரன்ஸ்-காக அமெரிக்கா சென்றிருந்த மெய்யப்பன் இரண்டு நாட்கள் கழித்தே சென்னை திரும்ப, யாதவ் குறித்த அனைத்து தகவல்களையும் அவரிடம் ஒப்படைத்தவள் அன்று இரவே ஊருக்கு கிளம்பியிருந்தாள். காரில் அழைத்து சென்றுவிடுவதாக வெங்கட் சொன்னப்போது பிடிவாதமாக மறுத்தவள், எப்போதும்போல் பேருந்திலேயே செல்ல ஆயத்தமானாள். சொல்லப்போனால் அதுதான் அவளுக்கு பிடித்திருந்தது. படிப்பதற்காக சென்னை வந்தவள் அதன் பின் அதிகம் ஊர் பக்கமெல்லாம் செல்லவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவகாமியே அவளை சென்னை வந்து பார்த்து சென்றவண்ணமாக […]


இதயத்தின் தேடலன்றோ நீ..!!! – 4(2)

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் முதலில் தடுமாறிய கைலாஷ், பின் சிகிச்சைக்காக வர்ஷாவை வெளிநாடு அழைத்து செல்வதாக சொன்னப்போது, சத்யமூர்த்தியோ, “சரிடா உன் விருப்பம்” என்றதோடு முடித்துக்கொள்ள, யசோதாவோ, “எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க அண்ணா.. பசங்க இரண்டுபேரும் நல்லபடியாக சரியாகட்டும். அப்புறம் ஒரு நல்ல நாளாப்பார்த்து கல்யாணத்த வச்சிக்கலாம்” என்று சொல்ல, அதைக்கேட்டு கைலாஷின் முகமோ மாறிப்போனது. திருமணப்பேச்சி வார்த்தையை எப்படி முறிப்பது என்று உள்ளுக்குள் சில கணங்கள் தவித்த கைலாஷோ “இல்லம்மா..” என்று இழுக்க, யசோதாவோ புருவம் […]


இதயத்தின் தேடலன்றோ நீ..!!! – 4(1)

கேஸ் ஃபைலை தன் மார்போடு அணைத்தவாறு அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, அவனோ தன் கூர்மையான பார்வைகளாலேயே அவளை எடைப்போட்டுக் கொண்டிருந்தான். முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிதாக இருந்தது அவள் அணிந்திருந்த வட்டவடிவ கண்ணாடி. எந்தவித ஒப்பனைகளும் இல்லை என்பது அவள் முகத்தைப்பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது. திருத்தப்படாத ஐபுரோவிற்கு கீழ் இருந்த அவளின் கண்களைச்சுற்றி கருவளையம் கருமையாக படர்ந்திருந்தது. அவளின் இதழ்கள் கூட ஜீவனே இல்லாததுபோல் உலர்ந்து காய்ந்துப்போயிருந்தது. எண்ணெய் வைத்து நன்றாக வாரி இறுக்கமாக […]