Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம்

ஹிருதயம் – 11 (2)

மாப்பிள்ளை அரவிந்த் பணக்காரக் களையுடன் கோர்ட்சூட் சகிதம் சுமாராகத் தான் இருந்தான். பார்த்ததுமே பார்ன் வித் சில்வர் ஸ்பூனென்று சொல்லும்படியான தோற்றத்தில் பளீரென்று சிரித்துக் கொண்டிருந்தவனை ஆராய்ச்சிப் பார்வையால் ஊடுருவிக் கொண்டிருந்த மானவ், “ஹே மானவ்..” என ஏற்ற இறக்கங்களுடன் அழைத்தபடி அருகே வந்து நின்றவளைப் பாராமலே, “மாப்பிள்ளை பேர் என்ன? என்ன வேலை பார்க்கறாரு..” என்றான், யோசனையாய். “அரவிந்த்! அரவிந்த் ராமசாமி. இந்தியால எல்லா இடங்கள்லயும் கம்பெனிஸ் வைச்சு நடத்துறாங்களாம்னு அப்பா சொன்னாரு. இதைத் தவிர […]


ஹிருதயம் – 11 (1)

இதயநிலா அவனை மிதப்பாய் பார்த்தபடி, “இப்போ என்ன செய்ய போறீங்க?” என்று கேட்ட நேரத்தில், வேகமாக வந்து நிலத்தை உரசிக் கொண்டு நின்றது கருநீல நிற காரொன்று! “ஆங்!” என திகைத்து விழித்தவள், தான் போட்ட மாஸ்டர் பிளான்கள் அனைத்தும் வீணாகிப் போன கடுப்புடன் மானவ்வை நோக்க, “உங்ககிட்ட அப்போவே சொல்ல மறந்ததால நான் கார் புக் பண்ணியிருந்தேன், டாக்டர். உங்க காரை யூஸ் பண்ண முடிஞ்சிருந்தா இதை கான்செல் பண்ணிக்கலாம் நினைச்சேன். சரி வாங்க, ஆல்ரெடி […]


ஹிருதயம் – 10 (2)

முறுக்கிக் கொண்டு சென்றவள், போன வேகத்திலே மீண்டும் அவன் முன் வந்து நின்றாள். சட்டென்று நிமிர்ந்தவன், “என்னவாம்?” என முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, “டைம் சொல்லவே இல்லையே!” என்றாள், மொட்டையாக. தொங்கிப் போன அவனது முகம் அவளுக்கு படு ரசனையையும், உல்லாச சிரிப்பையும் வரவழைத்தது என்றால் அது மிகையில்லை. “எதைப் பத்தி கேட்குறீங்க?” ‘அட என் மங்குனி மாமா!’ என வெளிப்படையாகவே நெற்றியில் அறைந்து கொண்டவள், “வெளிய போறதா சொன்னிங்களே மானவ். எத்தன மணிக்கு கிளம்ப […]


ஹிருதயம் – 10 (1)

உறக்கக் கலக்கம் நீங்காமல் கூடத்து சோபாவில் அமர்ந்திருந்தாள், மந்த்ரா. இதயநிலாவும், மாளவிகாவும் அங்கிருந்த வெற்றுச்சாடியில் பூக்கொத்து போட்டுக் அழகு பார்த்துக் கொண்டிருந்தனர். அடுப்பறையிலிருந்து வந்து ஹால் மேஜையில் பலகாரங்கள் அடங்கிய தேநீர் தட்டை பட்டென்று வைத்த கோதை, “இதைக் கொண்டு போய் கொடு மந்த்ரா..” என்று விட்டுச் செல்ல, “நான் இன்னுமே குளிக்கல..” என சிணுங்கினாள், சிறியவள். அவளை ஏறிட்ட இதயநிலா, “சரிதான் மந்த்ரா, நான் எடுத்துட்டு போறேன். நீ போய் பிரெஷ்ஷாகு!” என கூறியபடி அவசரமாகத் […]


ஹிருதயம் – 09 (2)

அதைத் தகர்த்தெறியும் முகமாய், “இதுக்கு முன்னவே மாளவி உங்களைப் பத்தி நிறைய சொல்லிருக்கா என்கிட்ட..” என இதயநிலா கூற, “என்ன!” என்றான், ஒற்றை வார்த்தையில். மாலையில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு மாளவிகாவிடம் மனம் விட்டுப் பேச நேரம் கிடைக்காதபடியால், “அவளுக்கு உங்களை ரொம்பப் புடிக்கும். மார்னிங் கூட உங்க ரெண்டு பேரோட போட்டோஸ் காட்டினா. சின்ன வயசுலயே வீட்டை விட்டுப் போய்ட்டிங்களாமே மானவ்?” என்க, “ஓ, அவளோட சொந்த அண்ணன் பத்தி அவ உங்க கிட்ட சொல்லிருக்கா […]


ஹிருதயம் – 09 (1)

இரவு நேரம்! ஆங்காங்கு மின்னிய நட்சத்திரத் தோரணைகளின் மத்தியில் சகல ஒப்பனைகளுடன் நிலாமகள் ஜொலித்துக் கொண்டிருக்க, கள்ளமற்றவளின் விரசமில்லா கண் சிமிட்டலை ரசித்தபடி தலைக்குக் கீழ் கை கோர்த்து மொட்டைமாடித் தரையில் உல்லாசமாகப் படுத்திருந்தான், மானவ். மொட்டை மாடியை ஒட்டினாற்போல் இருக்கும் அறையை தானே சுயமாக சுத்தப்படுத்தி, சற்றுநேரம் அங்குமிங்குமாய் அலைந்து திரிந்து விட்டு சிறு குளியலைப் போட்டுக் கொண்டு அறையினுள் நுழைகையில் பெட் சைட் டேபிளில் பல்லிளித்தது, இரவுணவு. பல நாட்களாய் தன் கைப்பட சமைத்து […]


ஹிருதயம் – 08

அமைதி! ஊசி விழுந்தாலும் பெருத்த ஒலி எழுப்புமளவுக்கு அசாத்திய அமைதி! இது புயலுக்கு முன்னரான மயான அமைதி என்பதில் ஐயமில்லை. எப்போது வேண்டுமானாலும் புயலடிக்கலாம்! காலநிலையை தலை கீழாக சுழற்றிப் போடலாம்! அமைதியை மொத்தமாக சூறையாடி ஏப்பம் விட்டு திருப்திப்படலாம்! ஆனந்த அதிர்ச்சியில் கோலிகுண்டாய் விரிந்து கொண்ட கண்களை இமைக்க மறந்து, “அ..அண்ணா..” என விசும்பிய மாளவிகாவிடன் முணுமுணுப்பு, ‘மானவ்! மானவ் இங்க என்ன பண்ணுறாரு?’ என கண்களால் கண்டதை நம்ப முடியாமல் மலைத்து நின்றவளின் சந்தேகத்துக்கு […]


ஹிருதயம் – 07

இதயநிலாவின் விருப்பங்கள் எதுவாயிருப்பினும், அவளின் மனம் கோணாமல் அவற்றை செய்து கொடுப்பதில் சௌந்தர்ய ராஜமூர்த்திக்கு இணையாகத் தான் வேறாரும் இல்லையே! ஒருமுறை மெரினா கடற்கரையில் பெரிதாக ஏற்பாடு செய்யப்படிருந்த இரவுநேர மியூசிக் ஷோவுக்கு சென்றேயாக வேண்டுமென்று அடம் பிடித்து நின்றவளை அவர் டிரைவருடன் காரில் அனுப்பி வைத்திருந்தார். அன்று மிக முக்கியமான பிஸினஸ் மீட்டிங் இருப்பதால் அவரால் சுயமாக மகளை அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை! ஆனால் “ஷோ முடிய எப்படியும் லேட் நைட் ஆகிடும். அங்க […]


ஹிருதயம் – 06 (2)

“ஆனா அண்ணா, அவங்களை எங்களை இன்வைட் பண்ணவே இல்ல. மாளவிகாவுக்கு கலியாணம்னு ஒத்தயா ஒரு வார்த்தை சொன்னதும் எந்த நம்பிக்கைல நீ பெட்டிய கட்டுற? நன்றி மறக்காதனு கத்துக் கொடுத்த மம்மி ஜான், அழையாத வீட்டுக்கு நுழையாதனு சொல்லித் தரல?” – சபரிஷ் சூடாக வினாத் தொடுத்தான். நியாயமான கேள்வி தான்! ஆனால் அதற்கும், “அது மூணாவது மனுஷங்களுக்கு பொருந்துற விஷயம் சபரி. சொந்த வீட்டு கலியாணத்துக்குப் போக யாராவது அழைப்பிதழ் எதிர்பார்ப்பாங்களா சொல்லு..” என அழகாய் […]


ஹிருதயம் – 06 (1)

தலையை இரு கைகளால் தாங்கிப் பிடித்தபடி தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் மானவ். வின்வின்னென்று வலித்த தலை வேறு அவனது எரிச்சலை பன்மடங்காகப் பெருக்கி கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்தது. கடமுடாவென சத்தம் எழுப்பிய வயிற்றைக் கவனிக்கவும் மனமின்றி, ‘எங்களைக் கொஞ்சம் பார்த்தா என்னவாம்?’ என்ற ஆதங்கத்தோடு வெகு நேரமாய் கீச்கீச்சென்று இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்த குருவிக் குஞ்சுகளை அண்ணாந்து பார்த்தவனுக்கு, அப்போதைக்கு எதையும் ரசிக்கும் எண்ணமில்லை என்பதே நிஜம்! வேறு நாட்களாக இருந்திருப்பின், அந்தி சாயும் பொழுதில் […]