இதயம் 7 “பொண்ணை அழைச்சிட்டு வாங்க,” என்று புரோகிதர் குரல் கொடுத்ததும், அனைவரின் பார்வையும் மணமேடைக்கு திரும்பியது. தேவிகாவோ கணவனை கேள்வியாக பார்க்கவும், “நான் போய் பொண்ணை கூட்டிட்டு வரேன்.” என்று கண்ணப்பன் சொல்லிவிட்டு போக, “நீங்க போய் கூட்டிட்டு வருவது நல்லா இருக்காதுங்க, அதனால நானும் வரேன்,” என்றார் தேவிகா. “ஏன் என் மருமகளை நான் கூட்டிட்டு வந்தா என்ன தப்பு?” என்று கேட்டுவிட்டு கண்ணப்பன் மட்டும் செல்ல, ‘அப்படி யாரை இவர் மருமக மருமகன்னு […]
இதயம் 6 சக்திவாசன் திருமணத்திற்காக அவர்களது நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள், ஊர்க்காரர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். அதிலும் முக்கியமாக சக்திக்கு பார்த்திருக்கும் பெண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவர்களிடம் அதிகம் இருந்ததனாலேயே இந்த திருமணத்தை யாரும் தவறவிடவில்லை. மண்டபத்தில் அதைப்பற்றியே அனைவரும் கூடி கூடி பேசி கொண்டிருந்தது மட்டுமில்லாமல், “இன்னும் பொண்ணு யாருன்னு சொல்லலையே வாத்தியாரே,” என்று கண்ணப்பனிடம் கேட்டனர். அவரோ, “பத்து மணிக்கு தானே முகூர்த்தம். அப்போ தெரிஞ்சிட போகுது, அதுக்குள்ள […]
இதயம் 5 தந்தையின் முடிவை நம்ப முடியாமல் நின்றிருந்த சக்திவாசன், “என்ன ப்பா, நான் சொல்றதை காதில் வாங்கினீங்களா இல்லையா? எந்த தைரியத்துல அவங்களை கல்யாணத்துக்கு வரச் சொல்றீங்க, ஏற்கனவே பட்ட அவமானமெல்லாம் போதாதா? திரும்ப ஊரை கூட்டி வேற அவமானப்படணுமா நாம எல்லோரும்,” என்று இன்னும் அதே கோபத்துடன் அவன் பேச, “யாருக்கும் எந்த அவமானமும் நடக்காது. நான் எதையும் யோசிக்காம செய்ய மாட்டேன். நான் சொன்னது சொன்னது தான், நாளை மறுநாள் உன்னோட கல்யாணம் […]
இதயம் 4 விழுப்புரத்தில் இருச்சக்கர வாகனம் விற்பனையகத்தில் சக்திவாசனோடு நின்றிருந்தாள் சிவமித்ரா. அவளை காரில் தான் அழைத்து சென்றிருந்தான். அந்த பயணம் முழுவதுமே அவளோடு அவன் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி நடந்து கொள்வது ஒருபக்கம் அவளுக்கு கோபத்தை வரவழைத்தாலும், அவனுக்கு நாளை மறுநாள் திருமணம். அவனது மனைவியாக வரப்போகும் பெண்ணுக்கு எல்லாம் தெரியுமோ என்னவோ? அதனால் இதற்குப்பிறகு முடிந்தவரை இவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே அனைவருக்கும் நல்லது. அதனால் இவன் பேசவில்லையென்றாலும் பரவாயில்லை என்று நினைத்து கொண்டாள். […]
இதயம் 3 சக்திவாசன் அங்கிருந்து சென்றதும், “ஸ்கூலில் ஏதோ கட்டிட வேலை நடக்குது போலயே மாமா,” என்று கண்ணப்பனிடம் சிவமித்ரா கேட்க, “ஆமாம் ம்மா, நம்ம ஸ்கூல் கேர்ள்ஸ் டாய்லட் அங்கங்க இடிஞ்சு மோசமா இருக்கு, அதுல போக பிள்ளைங்க ரொம்ப சங்கடப்படுது, கவர்மென்ட்க்கு மனு எழுதி போட்டும் உடனே எந்த நடவடிக்கையும் எடுக்கல, அதான் நாமளே ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு பக்கத்தில் டாய்லட் கட்டுவோம்னு நான் யோசனை கூறினேன். ஆனா சக்தி தான் அந்த […]
இதயம் 2 வெளியில் இருந்தவர்களுக்கு சக்திவாசன் கோபமாக கத்துவது கேட்டு, எல்லாம் அங்கு வந்தவர்கள், சிவமித்ரா அவனது அறையில் இருப்பதை புரியாமல் பார்க்க, “அய்யோ இது எங்க ரூம்னு நினைச்சிட்டு இங்க வந்துட்டியா ம்மா, இப்போ இது சக்தி ரூம். அதை உனக்கு சொல்லி அனுப்பியிருக்கணும், என்னோட தப்பு தான்,” என்ற கண்ணப்பன், அதற்காக தான் மகன் கோபமாக பேசுகிறானோ என நினைத்து, “தெரியாம தானே டா உன்னோட ரூம்க்குள்ள வந்துட்டா, அதுக்கு இப்படியா கத்துவ?” என்று […]
இதயம் 1 விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவர்களின் சொந்த ஊரான அந்த கிராமத்திற்குள் கார் நுழையும்போதே அங்கங்கே ஸ்பீக்கர் வைத்து அதில் மேளச்சத்தம் காதை கிழிக்கவும், “ஊரில் ஏதாச்சும் விசேஷமா ம்மா? மேளச்சத்தம் ரொம்ப பெருசா கேட்குது?” என்று சிவமித்ரா கேட்க, “தெரியலையே மித்து, இந்த சமயம் இந்த ஊர் கோவிலில் கூட ஏதும் திருவிழா இல்லையே, இது கல்யாண மாசமில்லையா? யார் வீட்டிலோ கல்யாணம் போல, அதுக்காக தான் இந்த மேளச்சத்தமா இருக்கும்,” என்று ராஜலஷ்மி […]