Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 25 (3)

நான்கு வருடங்கள் கழித்து,  மொட்டை மாடி பயிற்சி வலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார் கார்த்திகேயன். இம்முறை பேட் செய்துக் கொண்டிருந்தது அவரது நான்கு வயது பேரன்.  “ஸ்லோ பால் போடாத தாத்தா” என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்தான் நிரஞ்சனின் புதல்வன். இல்லை, நந்தனாவின் பிள்ளை என்று சொல்ல வேண்டுமோ? அவன் செய்யும் சேட்டைகளை, ரகளைகளை ரசித்து அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தாள் நந்தனா.  “சரிங்க செல்லக் குட்டி. இந்த பாலை அடிங்க பார்ப்போம்” என்று அடுத்த […]


இனியொரு பிரிவேது – 25 (2)

கொல்கத்தா அணி பதட்டம் இல்லாது தான் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக் காரர்கள் அதிரடி காட்ட, மிரண்டு போனான் நிரஞ்சன். அதிலும் அந்நேரம் அவன் உதவிக்காக கேப்டனை பார்க்க, எந்த உதவியும் செய்ய அவர் தயாராக இல்லை.  “டிரஸ்ட் யுவர் இன்ஸ்ட்டிங்ட் நிரஞ், உனக்கு சரின்னு தோன்றதை செய். எல்லாமே சரியா வரும்” ஏற்கனவே அவர் சொன்ன அறிவுரை அவன் மனதில் வந்து போனது. கண்ணை மூடி தன்னை முழுதாக நம்பினான் நிரஞ்சன்.  அவன் கண்கள் அனிச்சையாய் […]


இனியொரு பிரிவேது – 25 (1)

ஓராண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில் சேர்ந்த நந்தனாவிற்கு இம்முறை அவளின் வேலை அத்தனை சுலபமாக இல்லை. பல சங்கடங்களை அவள் தொடக்கத்தில் சந்திக்க நேர்ந்தது. காரணம் அவளது உடல்நிலை. பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வீடியோ பார்த்து குறிப்புகள் எடுக்க வேண்டிய வேலை அவளது. கர்ப்பத்தின் காரணமாக தொடர்ந்து ஒரே இருக்கையில் மணிக் கணக்கான அவளால் அமர முடியவில்லை. கூடுதலாக வாந்தி, உடல் சோர்வு என்று வைத்து செய்தது அவளது வயிற்று சிசு.  […]


இனியொரு பிரிவேது – 24 (2)

மாலை இருவரும் ஒன்றாக பயிற்சி மைதானத்திற்கு கிளம்பினார்கள்.  காரில் இருந்து இறங்கியவளுக்கு கடந்த சில வருடங்களில் நடந்த அனைத்துமே கனவு போல தான் இருந்தது. இனி வரப் போகும் காலங்களை மிகுந்த முதிர்ச்சியுடன் எதிர்க் கொள்ள வேண்டும், பிரச்சனைகளை சரியாக கையாள வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஸ்டேடியத்தின் படிகளில் கால் வைத்தாள் நந்தனா. வெகு இயல்பாக அவள் கைப் பிடித்து அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனான் நிரஞ்சன். அந்நேரம் அவனது அருகாமை […]


இனியொரு பிரிவேது – 24 (1)

நிரஞ்சன் மீண்டும் மீண்டும் அலைபேசியை பார்த்துக் கொண்டேயிருந்தான். அதில் இருந்த நந்தனாவின் இமெயிலை வாசித்துக் கொண்டேயிருந்தான். அவன் கைகளில் மெலிதான நடுக்கம். ஆள்காட்டி விரலால் அவனது கரத்தில் இதயம் வரைந்துக் கொண்டிருந்தாள் நந்தனா. எதையுமே உணரவில்லை அவன். அவன் கண்கள் ஆழமாய் அலைபேசிக்குள் அமிழ்ந்திருந்தது. நந்தனா மீண்டும் வேலையில் சேர விரும்புவதாக சென்னை அணி நிர்வாகத்திற்கும், சிவராஜிற்கும் தனித்தனியாக அலுவல் ரீதியான கடிதம் எழுதி இருந்தாள். ஆனால், மெயிலை அனுப்பாமல் அப்படியே ட்ராஃப்ட்டில்(Draft) வைத்திருந்தாள்.  அந்த முடிவை […]


இனியொரு பிரிவேது – 23 (2)

அவளின் மிரண்ட பார்வை, அவனை சத்தமாக சிரிக்க வைத்தது.  “என்ன பிரச்சனை உனக்கு நந்து? நாம இதுக்கு முன்னாடி இப்படி சாப்பிட்டது இல்லையா? பேசினது இல்லையா? நம்ம வீட்ல எத்தனை நாள் பால்கனில இப்படி உட்கார்ந்து நிலா வெளிச்சத்துல சாப்பிட்டு இருப்போம். சண்டை போட்டு இருப்போம்? என்ன, இங்க மொட்டை மாடி, அங்க பால்கனி. அவ்ளோ தான் வித்தியாசம். இதுக்கு ஏன் இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?”  “நான் நல்லா தான் இருக்கேன் நிரஞ்சன்” என்றாள், அவனை மேலும் […]


இனியொரு பிரிவேது – 23 (1)

நிரஞ்சன், சுகாஸ் இருவரும் மைதானத்தில் இருந்து வெளியேற, சென்னை அணி ஓடி வந்து அவர்களை அணைத்துக் கொண்டது.  சுகாஸின் மனைவி பிரியாவின் முகத்தை சரியாக அந்நேரம் ஒளிபரப்ப, அவள் கண்களில் தான் எத்தனை மகிழ்ச்சி. கைக் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு மலர்ந்த புன்னகையுடன் நின்றிருந்தாள் பிரியா.  அவளின் மகிழ்ச்சியை நந்தனாவும் உணர, இதழ்கள் தாமாக புன்னகைத்தன. சென்னை அணியினர் வரிசையாக எதிரணிக்கு கைக் கொடுத்துக் கொண்டே செல்ல, நந்தனாவின் பார்வை பட்டாம் பூச்சியாய் நிரஞ்சனை‌ சுற்றியே […]


இனியொரு பிரிவேது – 22 (2)

நிரஞ்சனுடன் பேசி விட்டு உறங்கப் போனாள். ஆனால், மறுநாள் முழுவதும் அவன் அழைக்கவே இல்லை.  நந்தனா குட்டி போட்ட பூனை போல வீட்டை சுற்றி வந்தாள். அவளுக்கு படபடப்பாக இருந்தது. காரணம் அன்றைக்கு தான் சென்னை அணி அந்த வருடத்தின் முதல் ஐபிஎல் போட்டியை ஆடவிருந்தது.  கார்த்திகேயன் அதிசயமாக அன்று சீக்கிரமே வீடு திரும்பி இருந்தார். மகளின் நடவடிக்கைகளை ஓரக் கண்ணால் பார்த்தாரே தவிர, எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அவர்.  மாலை நெருங்க நெருங்க அறைக்குள்ளேயே அலை […]


இனியொரு பிரிவேது – 22 (1)

“நந்து.. நந்தனா.. நந்து.. சாரி.. கண்ணு முழிச்சுக்கோ நந்து.. பயமா இருக்கு நந்து. இப்படி பண்ணாத. கண் முழிச்சு என்னை நாலு அடி அடிச்சுடு. உன் இஷ்டம் போல திட்டு. ஆனா, இப்படி பேசாம படுத்திருக்காத நந்து. என்னால உன்னை இப்படி பார்க்க முடியல. தப்பு பண்ணிட்டேன் நந்து. அதுக்காக இப்படியா என்னை தண்டிப்ப?” கதறலாய் கேட்டுக் கொண்டே இருந்த குரலில் இருந்த பயம், அன்பு, உரிமை, பரிதவிப்பு என கலவையான உணர்வுகள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் […]


இனியொரு பிரிவேது – 21 (2)

இரண்டு வாரங்கள் தென் ஆப்ரிக்காவிற்கு ஒரு நாள் தொடர் விளையாட சென்று விட்டு அவன் வீடு வர, பிரிவை தாங்க இயலாமையால் எப்போதும் இல்லாத விதமாக, “எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. நீ ஊர் சுத்திட்டே இருக்க. பொண்டாட்டி கூட இருக்கணும்னு பொறுப்பே இல்லாம, விளையாட போற” என்று புகார் வாசித்து சிணுங்கினாள் நந்தனா.  சிரித்துக் கொண்டே, “என் மேனேஜரா ஆகிடுறியா பொண்டாட்டி?” என்று அவன் கேட்க, அதற்கு அதிர்ச்சியுடன் விழி விரித்தாளே தவிர […]