Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இருள் தூவும் நிசப்தம்

இருள் தூவும் நிசப்தம் – 18 (2)

சில நேரம் மீராவுமே. இன்னும் அந்த ஜன்னலில் மகா நின்ற கோலம் கண்ணை விட்டு மறையவில்லை. அன்றைய நாள் போலில்லாது பயத்தில் உடல் உதறுவதை விட வேதனையில் மனம் உதறியது. “என் குலசாமி அவ. கடைசி வரைக்கு போராடி செத்திருக்கு அந்த புள்ள. என்னிக்கும் அத மறக்கமாட்டேன்…” என்று ராகவியிடமும் சொல்லி மகாலட்சுமியை வணங்க செய்தார். ராகவி இப்போது உடலளவிலும் தேறியிருக்க கல்லூரிக்கு செல்லவும் ஆரம்பித்திருந்தாள். கொல்லத்தில் அந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து அன்றாட சம்பவங்களுக்குள் […]


இருள் தூவும் நிசப்தம் – 18 (1)

நிசப்தம் – 18             அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்து இருந்தாலும் வெளியே அந்த குற்றத்திற்கு துணை போனவர்களை எல்லாம் காவல்துறையினர் விசாரணை வைத்து கைது செய்தனர். மகாவின் வழக்கு மட்டுமல்ல, காணாமல் போன அத்தனை பெண்குழந்தைகளின் வழக்கும் மறுவிசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அனைத்திற்கும் காரணமானவர்களின் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியது. அதில் பூச்சியப்பனின் பங்கு பெரிது. ஒருவரையும் விடவில்லை. தங்களுடைய துறையில் இருந்தவர்கள் முதற்கொண்டு கூண்டில் நிறுத்திவிட்டான். மாநிலத்தையே புரட்டிபோட்டது அந்த […]


இருள் தூவும் நிசப்தம் – 17 (2)

“நீங்க பன்றது எவ்வளோ பெரிய பவம் தெரியுமா? கொஞ்சமாவது மனுஷ தன்மையோட நடந்துக்கோங்க. இதுவரைக்கும் செஞ்சதை விட்டுங்க. இல்லைன்னா இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்பீங்க…” என்று ஆவேசத்துடன் மீரா சொல்ல, “தெரியாம செஞ்சா அதுக்கு பேர் பாவம். நாங்க செய்யறது யாகம்…” என்ற காஞ்சனா, “அது யார் தெரியுமா?…” என்று ஓரிடத்தில் காண்பிக்க அங்கே மனித தோல், எலும்புகளால் ஆன இருக்கையில் இளைஞன் ஒருவன் படுக்க வைக்கப்பட்டிருந்தான். “என் மகன். ஆனா பிறந்ததுல இருந்தே இதே நிலை தான். […]


இருள் தூவும் நிசப்தம் – 17 (1)

நிசப்தம் – 17              பூச்சியப்பனின் முன்னால் நின்ற காவலர் தலைகுனிந்து நிற்க அவன் முகத்தில் கோபத்தின் உச்சம். “ஒருத்தரை சந்தேகப்பட எத்தனை தான் எவிடென்ஸ் தேவைன்னாலும் சில நேரம் நம்ம உள்ளுணர்வு ஒன்னு சொல்லும். அதுக்கு கொஞ்சமாவது மதிப்பு குடுக்க வேண்டாமா?…” என்றவனின் கேள்வியில் செய்வதறியாது பார்த்தார் காவல்துறை ஆய்வாளர். “நான் வர நேரமாகிடும்ன்னு தானே உங்களுக்கு இன்பார்ம் பண்ணி இங்க கவனிக்க சொன்னது? இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?…” என எரிந்து விழுந்தவன் அங்கே முதலுதவி […]


இருள் தூவும் நிசப்தம் – 16 ()

மடமடவென அந்த வீட்டின் கதவை தட்ட உள்ளிருந்து சில நொடிகள் அசாத்தியம் மௌனம். “கதவை உடைங்க…” என்ற அதிகாரியின் சொல்லில் கதவை உடைக்கும் முன் கதவு திறக்கப்பட்டது. “யார் நீங்க? இந்த நேரம் என்ன வேணும்?…” என்றார் ஒரு வயோதிகர் மலையாளத்தில். “நீங்க தான் அச்சுத்கனா?…” என கேட்டு மடமடவென வீட்டினை சோதனை போட உள்ளே அனுமதியின்றி நுழைந்துவிட்டனர். தரணிதரனும், மீராவும் எதிர்பார்ப்புடன் பார்க்க அங்கே எந்த மாற்றமும் இல்லை. வீடு வெகு சாதாரணமாக மற்றவர்கள் வீட்டில் […]


இருள் தூவும் நிசப்தம் – 16 (1)

நிசப்தம் – 16 ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லிய திசையில் தேடி அலைந்து ஓய்ந்துவிட்டனர். பூச்சியப்பன் சல்லடையாக தேடியும் அவர்கள் கிடைக்காததில் ஆவேசத்தில் இருந்தான். “எங்கடா எங்க போய் தொலைஞ்சாங்க? எப்படி எங்க தேடியும் கிடைக்கலை?…” என்று கிட்டத்தட்ட வெறி கொள்ளும் அளவிற்கு போயிருந்தான். இந்தளவு அவன் ஆவேசம் கொண்டதே இல்லை. இயலாமையின் ஒரு விதமாய் கோபம் வெளிப்பட உடன் இருந்தவர்கள் அனைவரும் அரண்டு போயினர். “இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ஸார்…” என்று மீரா அவனுக்கு […]


இருள் தூவும் நிசப்தம் – 15 (2)

“சரோஜாக்கா, உங்களுக்கு தெரியுமா?ஞாபகம் வருதா?…” என தரணிதரன்  அவர் அருகில் அமர்ந்து கேட்டான். “தாமரை மொட்டு மாலை. தங்க விளக்கு…” என சரோஜா குரல் உள்ளே சென்றுகொண்டே குரல் குழற ஆரம்பித்தது. மருந்தின் வீரியம் அவரை மயக்கத்தில் ஆழ்த்த முனைய அதை உதறிக்கொண்டு பேச முயன்றார் சரோஜா. அனைவருமே சரோஜாவின் அருகில் வந்துவிட்டனர். தரணிதரன் அவரருகே மண்டியிட்டு முகத்தை நிமிர்த்தி கேட்டான். “சொல்லுக்கா. ஞாபகம் இருக்கா? எங்க பார்த்த. சொல்லுக்கா…” “தாமரை மாலை…” என விட்டு விட்டு […]


இருள் தூவும் நிசப்தம் – 15 (1)

நிசப்தம் – 15              நள்ளிரவை தாண்டியும் தொடர்ந்தது தேடல். கொஞ்சமும் சலிக்காமல் பைக்கில் மீராவுடன் தரணிதரன். ராகவியை தேடாத இடமில்லை. ஊரின் எல்லைக்கே வந்தாகிற்று. இதற்கு மேல் எப்படி தேட? ஓய்ந்து போனார்கள் இருவருமே. “அவ்வளோ தானா? எதுவுமே இல்லையா? வழியே கிடைக்கலையே….” என நடுரோட்டில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள் மீரா. கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்துகொண்டிருக்க வாடிய மலராய் சருகாகிக்கொண்டிருந்தாள் கடக்கும் ஒவ்வொரு நிமிஷத்திற்கும். “மீரா எழுந்திரிங்க. இப்படி நீங்களே துவண்டுட்டா எப்படி? தேடுவோம். நம்பிக்கையா தேடுவோம்…” […]


இருள் தூவும் நிசப்தம் – 14 (2)

“இதுக்கு வேற எதுவும் பண்ண முடியாதா சாமி? மகா இங்க உங்களோட வட்டத்துக்குள்ள தானே இருக்கா? தெய்வ சக்தியை மீறியா நடக்கும்?…” மீராவிற்கு நம்பவே முடியவில்லை. “சில நேரம் நிலவை இருள் சூழும் இல்லையா? அதை மாதிரி. சூரியனை கிரகணம் பிடிச்சுக்கற மாதிரி. காலநிலை எப்பவும், எப்படி வேணும்னாலும் மாறும்….” என்றார். “நீங்களே இப்படி சொன்னா எப்படி சாமி?…” என மீரா ஆற்றமாட்டாமல் கேட்க, “நிதர்சனம் எதுவோ அதை தான் நான் சொல்றேன்…” என்றவர், “அதுக்காக தான் […]


இருள் தூவும் நிசப்தம் – 14 (1)

நிசப்தம் – 14             அவர்கள் இருவரும் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வீடு வரவே மாலையாகியிருந்தது. வீட்டிற்கு வந்ததும் தரணிதரன் மீராவை விட்டுவிட்டு தான் வீட்டிற்குள் சென்றான். இன்னும் நடராஜனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை அவன். சொல்லவும் நேரமில்லை. ஆனால் பேச்சி எல்லாம் சொல்லியிருந்தார். அவரை பேச்சி தான் உணவு கொடுத்து பார்த்துக்கொண்டார். கோபியும் தன் நண்பர்கள், சில சொந்தங்களுடன் ராகவியை தேட கிளம்பியிருக்க பெரியவரை தனியே விடமுடியாதே நடராஜனை. தரணிதரன் மீராவுடன் செல்லும் பொழுது கோகிலாவும், பேச்சியும் […]