Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!!!

இல்லறம் Final 4

அவளின் கண்களில் அவ்வளவு காதல். காதலோடு சேர்ந்து மன்னிப்பையும் சேர்த்து யாசகமாய் கேட்டது.  “நீ எதையும் பத்தி யோசிக்காம தூங்கு” என்றவளின் அருகில் படுத்திருந்த தணலனை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…  இரவு நீண்ட நேரம் ஏதோ சிந்தனையில் இருந்த தணலன், விடி விளக்கின் வெளிச்சத்தில் மெல்லிய ஒலி கேட்க மெல்ல திரும்பி யமுனாவை பார்த்தான்…  அழுதுக் கொண்டே உறங்கியிருப்பாள் போல விழிகள் முடியிருந்தது. ஆனால் உதடுகளோ எதையோ முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது…  என்ன சொல்கிறாள் […]


இல்லறம் Final 3

தேவா திருமணத்திற்கு வரவில்லை என்று விட்டாள். அதனால் தணலன் குடும்பம் மட்டுமே புறப்பட்டு வந்திருந்தனர்…  அங்கிருந்த அனைவரிடமும் யமுனாவை அறிமுகப்படுத்தி வைத்திருந்தான். பத்திரிக்கையில் முதற்கொண்டு அவர்களின் பெயர் இடம்பெற்றது.  அன்று அங்கீகாரம் இல்லாத உறவை நினைத்து கலங்கி நின்றாள். இன்று உலகமே பார்க்கும் வகையில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தணலன் வாங்கிக் கொடுத்து விட்டான். அதை நினைத்துப் பார்க்கும் பொழுதே தணலனனின் மேல் பெருங்காதல் தோன்றியது…  மும்பையில் இருந்து வீடு வரும் வரை யமுனாவிற்கு மனதில் ஒரு புத்துணர்ச்சியும் […]


இல்லறம் Final 2

அன்று காலையில் யமுனாவின் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. யாவருக்கும் நின்று பேச நேரமில்லை. அனைவரும் மும்பைக்கு செல்வதற்காக அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்…  தணலன் தயாரித்துக் கொடுத்திருந்த அந்த நகையின் உரிமையாளர் தான், தணலனையும் தேவாவையும் கல்யாணத்திற்கு முறைப்படி வீட்டிற்கே வந்து அழைத்திருந்தார். அதுவும் குடும்பத்தோடு வரவேண்டும் என்ற அழைப்பு வேறு விடுக்க. தணலனால் தட்ட முடியவில்லை.  இந்தக்கல்யாணத்திற்கு செல்வதற்கு முதல் காரணம் யமுனாவை வெளியுலகிற்கு தன் மனைவியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்பினான்…  அங்கு […]


இல்லறம் Final 1

இறுதி அத்தியாயம் அடுத்து இரண்டு நாட்கள் அமைதியின் திருவுருவமாக இருந்தாள் தேவா. யாரிடமும் எதுவும் பேசவில்லை. முதல் முறை மணியின் கோபத்தை கண்கூடாக பார்க்கிறாள்.  அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உயிர்வரை சென்று வலித்தது. அவன் பல தடவை தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தியிருக்கிறானே தவிர ஒரு நாள் கூட, ‘தன்னை வேண்டாம்’ என்று அவன் கூறியதில்லை.  ஆனால் இன்று அவன் கூறிய வார்த்தை ஏனோ இதயத்தை யாரோ பிடுங்கி எடுத்தாற் போன்று வலிக்க ஆரம்பித்தது. மற்ற […]


இல்லறம் 24 3

கங்கா மோகனாவின் வீட்டிற்கு வந்திறங்கினாள் எப்பொழுதும் போல் நிறையுடன் யமுனா விளையாட ஆரம்பிக்க அதையே ஒரு வித ஏக்கத்துடன் பார்க்க ஆரம்பித்தாள் கங்கா. அவளின் ஏக்கமான பார்வையை பார்த்த யமுனா அவளின் அருகில் வந்து அமர்ந்தாள். யமுனாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு வந்து நின்றாள் நிறை… “சித்தி சாய்ந்தடம்மா சாய்ந்தாடு விளையாடுவோமா?” என்ற நிறையினை தோளில் சுமந்து கொண்டு மெல்ல மேலும் கீழும் ஆட்டிட, கிளிப்பிள்ளை அவளோ கிளுக்கென சிரித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது… “யமுனா எனக்கொரு […]


இல்லறம் 24 2

மற்ற நாள்களிலும் நிறையை பார்க்க முடியவில்லை. வார இறுதியில் மட்டும் பார்க்கும் படி இருந்தது. அப்பொழுதும் விடாமல் யமுனா நிறையை தேடி வர, அவள் வரும் பொழுதெல்லாம் அவமானப்படுத்துவதை போல் பேச ஆரம்பித்தாள் தேவா. தேவாவின் வெடுக்கென்ற பேச்சும், செய்கையும் யமுனா மோகனா இருவருக்குமே பிடிக்கவில்லை. நிறைக்காக அப்பொழுதும் பொறுத்துக் கொண்டனர். தீபாவளி அன்று நிறைக்காக பார்த்து பார்த்து வாங்கிய ஆடையை மோகனாவின் கண் முன்னால் வேலைக்காரியின் கைவசம் கொடுத்தாள் தேவா. அதைப் பார்த்த மோகனாவின் மனம் […]


இல்லறம் 24 1

இல்லறம் 24, அதன் பின் எத்தனையோ நாள் மணி தேவாவை சமாதானப்படுத்திட முயன்றான். ஆனால் எதற்கும் பலனில்லை தேவாவிடத்தில். அவளின் பிடிவாதமும், கோபமும் ஷ்ரவன் பிறந்தபின்பும் மாறாமல் அப்படியே இருந்தது. அவர்கள் சொல்லிய வார்த்தையை அவ்வளவு எளிதாக அவளால் கடந்து விடமுடியவில்லை. அதுவும் கங்கா அனுபவித்த துன்பத்தை கண்கூடாக பார்த்தவளுக்கு, அவர்களின் வார்த்தையை கங்கா கேட்டிருந்தால். எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள் என நினைக்கும் போதே இதயத்தில் ஆழமான வலி ஒன்று உருவாகியது. ஷ்ரவனுக்கு இரண்டு வயதாகும் பொழுது தான் […]


இல்லறம் 23 2

கங்காவினை ஒரு புறம் கவனித்துக் கொண்டு, தேவாவின் திருமண ஏற்பாடுகளையும் ஊரே மெச்சும் அளவிற்கு செய்தான். மணிவண்ணன் தேவா இருவருடைய திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. தேவாவும் மணிவண்ணனுடன் வாழ்வதற்காக அவர்கள் வீட்டிற்கு தான் சென்றாள். அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது… மூன்று நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் தணலனை பற்றி அவர்கள் பேசிய பேச்சுக்களை இப்பொழுது நினைத்தாலும் தேவாவிற்கு கோபம் தான் வரும். மூன்றாவது நாள் மறுவீட்டிற்கு புறப்படுவதற்காக அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர் தேவாவும், மணிவண்ணனும்… […]


இல்லறம் 23 1

இல்லறம் 23, மணிவண்ணன் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த தேவாவின் விழியோரம் கண்ணீர் கசிந்து, அதன் துளிகள் கன்னத்தில் மெல்ல வழிந்தது… அவள் அகங்காரம் பிடித்தவள் தான். திமிருக்கே இலக்கணமானவள் தான். ஆனால் காதல் விஷயத்தில் மிகவும் பலகீனமானவள். தன் கண்ணீரை கூட யாரும் பார்க்காத வண்ணம் மறைத்தவாறு நின்றவளின் அருகில் வந்து நின்றான் தணலன்.. “அக்கா” என்ற குரலில் சட்டென திரும்ப தோன்றிடாமல், தன் முகத்தினை வேறுபக்கம் திருப்பி, கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்த […]


இல்லறம் 22 2

அது ஒரு மணப்பெண்ணுக்காக தயாரிக்கப்படுகிறது.. அவள் காலில் போடும் மிஞ்சியில் இருந்து, தலையில் மாட்டும் நெத்திச்சூட்டி வரை தயாரிப்பதற்கான வேலையில் தான் இருவரும் மும்முரமாக இறங்கியிருந்தனர்.. மணப்பெண்ணோ உலக அளவில் மிகவும் புகழ்ப்பெற்றவள்.. அவரின் தந்தையோ கோடியில் புரள்பவர்.. செட்டிநாடு முறைப்படி நகைகள் வேண்டுமென்று இவர்களை நாடிட.. தேவா அந்த வேலையில் தான் தன் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தாள்.. அந்தப் பெண் கல்யாணத்திற்கு போடப்படும் நகையின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் இருந்தது.. அதை பூர்த்தி செய்யும் […]