Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 40 3

சூர்யா அர்ஜுனிடம் “டேய் பாஸ் பண்ணிடுவியா…இல்ல எதாவது டிப்ஸ் வேணுமா…” என்று சீண்ட…அர்ஜுன் சூர்யாவை பார்த்து முறைத்தவன் “அதெல்லாம் நாங்க பாஸ் பண்ணிடுவோம், நீ முதல்ல எடத்தைக் காலி பண்ணு…” என்ற சொல்ல… சூர்யா “இனிமே எங்களைக் கழட்டி விட்டுடுவியே.” என்று முணங்கி கொண்டே சென்றான். அர்ஜுனும், மீராவும் அவர்கள் அறைக்குச் சென்ற போது…இருவருமே மிகவும் களைத்து போய் இருந்தனர். விடியற்காலையில் எழுந்தது…பின் திருமணம் முடிந்து மதியம் அர்ஜுன் வீட்டிற்குச் சென்று, அங்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் […]


உனக்குள் என் உயிரே 40 2

மீரா தன் அழுகையை விழுங்கி கொண்டு “அம்மா வந்தாலும் விருந்தாளி மாதிரி தானப்பா வருவாங்க. அதுக்கு அவங்க வராமலே இருக்கட்டும். அவங்க யாரோ மாதிரி இருக்கிறதை பார்த்தா எனக்குக் கஷ்ட்டமா இருக்கும்.” என்றாள். ராம்நாத்திற்கு அவள் வேதனை புரிந்தது, அவர் அமைதியாக அங்கிருந்து சென்றார். ஆரு கர்ப்பமாக இருப்பதால்….அவள் வீடு அவள் அம்மா வீடு என்று மாறி மாறி இருந்தாள். அப்படி ஒரு நாள் அவள் அம்மா வீட்டில் இருக்கும் போது…அவளை பார்க்க சூர்யாவின் அம்மா வந்திருந்தார். […]


உனக்குள் என் உயிரே 40 1

இறுதி அத்தியாயம் இரண்டு வாரங்கள் கழித்து….. அன்று அர்ஜுன் மீரா திருமண நிச்சயதார்தம். மீராவின் வீடு அழகாக அலங்கரிக்கபட்டிருந்தது. ஹாலின் நடுவில் அர்ஜுன் வீட்டினர் கொண்டு வந்திருந்த இருப்பத்தியொரு தாம்பாள தட்டுக்கள் நிறையச் சீர்வரிசை பொருட்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி அர்ஜுனின் வீட்டினரும், முக்கியமான சொந்தங்களும் அமர்ந்து இருந்தனர். அதே போல் ராம்நாத்தின் முக்கியமான உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தனர். பெரியவர்கள் அனைவரும் திருமணத் தேதி பற்றிப் பேச… “ஆறு மாசம் கழிச்சு வைங்க, நான் திரும்ப […]


உனக்குள் என் உயிரே 39 2

சூர்யா அர்ஜுனுக்குப் போன் செய்து… “நாங்க எல்லோரும் மீராவோட அப்பார்ட்மென்ட்க்கு தான் வரோம். ஆனா இங்க இருந்து நாங்க வர நேரம் ஆகும். அதனால நீ இன்னும் கொஞ்ச நேரம் ஏர்போர்ட்ல இருந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு, மெதுவா கிளம்பு…” என்று சொல்ல… அர்ஜுன் மேலும் எதோ கேட்க வர… “அர்ஜுன் ரொம்ப டயர்ட்டா இருக்கு, எதுனாலும் நேர்ல பேசலாம் ப்ளீஸ்….” சூர்யா சொல்ல…அர்ஜுனும் சரி நேரில் பேசுவோம் என்று போன்னை வைத்துவிட்டான். சூர்யா எல்லோரையும் அழைத்துக் கொண்டு […]


உனக்குள் என் உயிரே 39 1

அத்தியாயம் 39 மீராவிற்கு அந்தப் பள்ளியில் வேலை பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளி, மாலை ஐந்து மணி வரை இருக்கும். மீராவிற்கு ஒரு நாளைக்கு ஆறு வகுப்புகள் இருக்கும். ஓய்வு நேரத்தில் பள்ளியில் நடை பெரும் விழாகளுக்கு, மாணவிகளைத் தயார் செய்வது அவள் பொறுப்பு. அதனால் அதற்குத் திட்டமிடுதல், மாணவிகளுக்குப் பயிற்சி கொடுப்பது என்று நேரம் சென்றுவிடும். மாலை ஐந்தில் இருந்து ஆறு மணி வரை மாணவிகள் விளையாடும் நேரம். மீராவும் […]


உனக்குள் என் உயிரே 38 2

உனக்குள் என் உயிரே “சொல்லுங்கப்பா…” “அர்ஜுன், நீ எப்ப இங்க வர்ற…இந்நேரம் உன்னோட வேலை முடிஞ்சிருக்கனுமே…” ஒன்றும் தெரியாதது போல் கணேசன் கேட்க.. “இல்லப்பா நான் இனி அங்க வர்றதா இல்லை. ஆஸ்திரேலியால தான் இருக்கப் போறேன்.” என்றான் அர்ஜுன் உறுதியாக… “என்ன சொல்ற அர்ஜுன், நீ வேலை பார்த்தது எல்லாம் போதும். உடனே கிளம்பி இங்க வா.” சிறிது நேரம் மெளனமாக இருந்த அர்ஜுன் “நான் எதுக்குப்பா அங்க வரணும்? இனி எனக்கு அங்க என்ன […]


உனக்குள் என் உயிரே 38 1

அத்தியாயம் 38 ராம்நாத் சென்று ஷ்யமளாவின் பெற்றோரிடம் அனைத்தையும் சொல்லி நியாயம் கேட்க… நீங்க போங்க, இனி அவள் மீரா விஷயத்தில் தலையிடாமல்… நாங்க பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி அவரை அவர்கள் அனுப்பி வைத்தனர். வீடு திரும்பிய ராம்நாத் வருணை விட்டு மீராவை அழைத்து வர சொல்லி… “மீரா, நானும் மீனாட்சியும் போய் அர்ஜுன் வீட்ல பேசுறோம். உன் அம்மா கண்டிப்பா இது மட்டும் சொல்லி இருக்க மாட்டா… அவங்களுக்குக் கோபம் வர மாதிரி வேறையும் […]


உனக்குள் என் உயிரே 37 2

வருண் இத்தனை நாள் மீரா வராமல் இருந்ததிற்குக் காரணம் கேட்க… மீரா இப்போது அவன் சின்னப் பிள்ளை இல்லை என்பதால்… அவனிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் சொன்னாள். அவளுக்கும் அவள் மனதில் இருப்பதை யாரிடமாவது சொன்னால் தான் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது. மீரா சொன்னதை எல்லாம் கேட்கும் போது வருணுக்கு இப்படிக் கூட ஒருவரை காதலிக்க முடியுமா என்று தோன்றியது. அவள் அர்ஜுன் மேல் உயிரையே வைத்திருந்தும், அவன் அம்மாவிற்காக அவனைப் பார்க்காமல் இருக்கிறாள் என்று […]


உனக்குள் என் உயிரே 37 1

உனக்குள் என் உயிரே அத்தியாயம் 37 அர்ஜுன் நேராகப் பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குத் தான் சென்றான். அவனும் அன்று மீரா செய்தது போல்… மற்ற சந்நிதியில் சென்று சாமி கும்பிட்டவன், அன்று மீராவுக்குச் செயின் போட்டுவிட்ட இடத்திற்கு வந்து அமர்ந்து கண் மூடி வேண்டினான். “நான் அன்னைக்கு மீரா கழுத்தில செயின் போடும் போது, அவ இன்னையில் இருந்து என்னோட மனைவி, இனி நடக்கும் கல்யாணம் ஊருக்காகத்தான்னு நினைத்துதான் போட்டேன். எங்க அம்மா […]


உனக்குள் என் உயிரே 36 2

“நீ மீரா மேல எதாவது குறை இருந்தா சொல்லு… அதைவிட்டுட்டு அவள் வேற இனம், வசதியானவ… இதெல்லாம் ஒரு காரணமா… நீ பார்க்கிற மருமகள் மட்டும் வந்து இந்தக் குடும்பத்தோட ஒத்து வாழ்வான்னு உனக்குத் தெரியுமா… தெரியாம நீயா எதாவது பேச கூடாது.” கணேசன் சொல்ல… “ரஞ்சனா வீட்லயும், ஆரு வீட்லையும் நாம பேசினா கேட்டுக்கப் போறாங்க… இதுல பெரிசா பேசவோ இல்லை… கவலைபடவோ என்ன இருக்கு மா?” ஆதி கேட்க… “ஓ… உங்க எல்லோருக்கும் இந்த […]