Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் வாழ ஆசை

உன்னில் வாழ ஆசை – 17(2)

பின்னர் கீழே இறங்கி வந்தவள் , படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு , “வாங்க…டைம் ஓவர்……” என்று சொல்ல ப்ர்ணவும் பாரதியும் ஓடி வந்து சாரி சொல்ல இருவரையும் மடி மேல் அமர வைக்க அவள் முயல, “ப்ர்ணவ் பிக் பாய் ஆகிட்ட…அம்மா மடி பத்தல….” என்று சொல்ல அவள் பின்னால் சத்யா ஒரு படியில் அமர , ப்ரணவ் தந்தையின் மடியில் உட்கார , கணவன் மடியிலிருந்த மகனுக்கும் தன் மடியில் இருந்த மகளுக்கும் முத்தம் கொடுத்தவள் […]


உன்னில் வாழ ஆசை – 17(1)

ஆசை 17 இரண்டு மாதங்களுக்குப் பிறகு…. இரவு நேர வேலை முடிந்து காலையில் தனது அறைக்குள் நுழைந்தான் சத்யசாகரன்.அவன் தனது டையைத் தளர்த்தி விட்டு…..மெத்தையில் விழ, அப்போது பார்த்து குளித்து முடித்துச் சேலை உடுத்தி குளியறையிலிருந்து வெளியே வந்தாள் அகல்யா. மனைவியைப் பார்த்தவுடனே அவன் புன்னகை செய்தவாறே , “குட் நைட் லயா…” என “குட் நைட்” என்று அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு , “சீக்கிரம் எழுந்து சாப்பிட்டுத் திரும்பத் தூங்குங்க…..நான் கோர்ட்டுக்குப் போயிட்டு வந்துடுறேன்…” […]


உன்னில் வாழ ஆசை – 16

ஆசை 16 காலண்டரில் தேதி கிழிக்கப்பட்டு ஒரு மாதம் ஒடிப்போனது.வாசு காருடன் அகல்யாவின் யோகா க்ளாஸ் முன் காத்திருந்தான்.அகல்யாவுக்குக்காகக் கார்…ஆனால் காத்திருப்பு நீரஜாவுக்காக.. ஐயாவுக்கும் காதல் அணுக்கள் உயிர்பெற ஆரம்பித்து விட்டன.உயிர்ப்பித்தவள் நீரஜா..!! மன நலனுக்காகவும் உடல் நலனுக்காகவும் அகல்யா யோகா மற்றும் தியான வகுப்புகளில் சேர்ந்திருந்தாள்.ஒரு மாதமாகப் போகிறாள்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசு அகல்யாவை அழைத்துச் செல்வான்..இப்போதோ நேரம் உருவாக்கிக்கொண்டு வந்து விடுகிறான். நேசம் வந்தால் நேரமும் வரும் போலும்…!! எல்லாம் நீரஜாவுக்காக..!! அகல்யா வகுப்பில் சேர்ந்த […]


உன்னில் வாழ ஆசை – 15

ஆசை 15 அகல்யா ரோட்டை க்ராஸ் செய்து ஆட்டோ பிடிக்கப் போக , அவள் கைப்பிடித்த சத்யா அவளைப் பரபரவென்று இழுத்து அவனின் காரினுள் தள்ளினான். இதைக் கண்ட ரிஷி வேகமாய்ச் சத்யாவின் காரருகே செல்ல , கதவை லாக் செய்த சத்யா ஜன்னல் வழியே ரிஷியிடம் திரும்பி , “ரிஷி ப்ளீஸ்….ஒரு டென் மினிட்ஸ்….இருடா……நான் இவ கிட்ட பேசணும்…அவள நான் ஒன்னும் செய்ய மாட்டேன்…” என்றவன் வேகமாகக் காரை எடுத்துக் கொண்டு அருகே இருந்த மெரினா […]


உன்னில் வாழ ஆசை – 14

அவனது உற்சாகத்துக்குக் காரணம் மஞ்சரியே மனமுவந்து தன் பெண்ணைச் சத்யாவுக்குத் தர சம்மதித்திருந்தார். சத்யா அன்று அகல்யாவிடம் பல்ப் வாங்கிய பின் அவள் மனம் மாற வேண்டி காத்திருக்க, அகல்யாவோ எப்போதும் ஒருவித இறுக்கத்தோடயே காணப்பட்டாள். மஞ்சரியும் மகளது அமைதியையும் ஒதுக்கத்தையும் கவனிக்கவே செய்தார்.அதனால் கொஞ்ச நாள் திருமணப் பேச்சை ஒத்திவைத்தார்.ஆனால் கூட இயல்பான அகல்யா மீளவில்லை.அதில் வாசுவும் நந்தினியும் தான் மாட்டிக்கொண்டு முழித்தனர்.அவர்களிடம் தான் அதிகமாய் எரிந்து விழுந்தாள். அவளின் நடவடிக்கைக் கண்டு மஞ்சரி ஒரு […]


உன்னில் வாழ ஆசை – 13

ஆசை 13 வீட்டிற்குக் கையில் காயத்துடன் வந்த மகளைக் கண்ட மஞ்சரி பதற , அவள் நடந்ததைச் சொன்னாள்.ஆனால் மகளின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக மஞ்சரி அவளை எதுவும் சொல்லாது ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டார். வாசு நேராகக் கோர்ட்டிலிருந்து சுந்தரலிங்கத்தின் வீட்டுக்குச் சென்றான்.அவன் எப்போதாவது ராஜேஸ்வரனோடு அங்குச் செல்வான்.அதனால் அவர்கள் இவனுக்குப் பழக்கம்.அவனைச் சுந்தரமும் பார்வதியும் வரவேற்க , சிறிது நேரம் அவர்களோடு பேசியவன் , “அங்கிள் சத்யா இருக்காரா….?” “ம்…இருக்கானே பா……மேல தான் இருக்கான்…” “நான் […]


உன்னில் வாழ ஆசை – 12

ஆசை 12 “உங்க கல்யாணத்துக்குக் கண்டிப்ப என்னை இன்வைட் பண்ணுங்க….சார்……அகல்யா கூட நடந்தால் மட்டும்….” என்று சொல்லி சென்று விட சத்யசாகரனும் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான்.அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. நீரஜா சொன்னது அனைத்தும் உண்மைதான்.அவன் அகல்யா நினைக்கக் கூடாது என்று எண்ணியிருக்க எண்ணெமெல்லாம் அவள் தான்.. என்ன செய்வான் அவன்…? அதுவும் அவன் அமெரிக்கா செல்லும் முன் அவள் என்னை ஞாபகம் வந்தால் சொல்லுங்க என்று சொல்லிய பின் அவளது ஞாபகமே..!! நினைக்கக் கூடாதென […]


உன்னில் வாழ ஆசை – 11

ஆசை 11 ஏர்ப்போர்ட்டில் அவளின் வருகையைச் சத்யா எதிர்ப்பார்க்கவில்லை.அவள் எந்த நேரத்தில் என்னை நினை என்று சொன்னாளே அவளை நினைக்கக் கூடாதென அவன் நினைக்க , அவன் கெட்ட நேரம் எப்போதுமே அவள் நினைவுதான்.குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த கதை தான்..!! இங்கே இந்தியாவில் அகல்யாவோ தனியாக இருந்த சத்யாவின் பெற்றோரோடு ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டாள்.பார்வதிக்கும் அகல்யாவை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் இந்தியா வந்த பின் சத்யாவோ அவளுக்குத் தான் ஏற்றவனல்ல என்ற […]


உன்னில் வாழ ஆசை – 10

ஆசை 10 அவன் அவளைக் கண்டு கொள்ளாது சென்று விட ,அவன் பின்னேயே சென்றவள் , “மிஸ்டர்….சத்யா……” என அவன் அருகில் போய் அழைக்க , அவளது ஸ்கூட்டி அருகில் தான் அவன் வண்டியும் நின்றது. “எஸ்…” என்று அவன் இவளை நோக்க “சாரி…” என்றாள் நிமிர்வாக , தவறு செய்தால் அதை ஒத்துக்கொள்வது சிறப்பு….அதைத் திருத்திக் கொள்வது மிகச்சிறப்பு. “எதுக்கு…?” “இல்ல….உங்களுக்கு எதிரா நான் தான் ஆஜரானேன்…அதான்..கோர்ட்ல உங்கள…கண்டபடி பேசினேன்…க்ராஸ் கொஸ்டின்லாம் கேட்டேன்….பட்…செய்யாத தப்புக்கு நீங்க […]


உன்னில் வாழ ஆசை – 9

ஆசை 9 அதுவரையில் அவனால் யோசிக்கவே முடியவில்லை.சத்யசாகரன் மொத்தமாக அவனது மனைவியால் மீள முடியா சுழலில் சிக்கிக் கொண்டான். அவளைப் பற்றி அவனுக்குத் தெரிந்தவற்றை அலசி ஆராயத் தொடங்கினான்.எங்காவது ஒரு இம்மியளவு வாய்ப்புக் கிடைத்து அவன் குற்றமற்றவன் என்ற நிரூபிக்க முடியுமா என்று நினைத்தான். ஆனால் இப்படி இருட்டறைக்குள் சிறைக்கம்பிகளின் பின் இருந்து கொண்டு தன்னால் எதும் செய்ய முடியாது என்று உணர்ந்தவன், அந்த வாரம் தன்னைக் காண வந்த தந்தையிடம் தன்னை எப்படியாவது பரோலில் எடுக்குமாறு […]