Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் தழுவும் விழியே

உயிர் தழுவும் விழியே – 26 (3)

எல்லாம் சென்று கடைசியாக கூத்தபிரான் பேசிய இடம் வரவும் பூமிநாதன் உதட்டை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கினான். “என்ன என்னிய தனியா வேற படம் பிடிச்சிருக்கானுவ? எப்பலே?…” என்று கூத்தபிரான் நன்றாக சாய்ந்தமர்ந்து பார்க்க பூமிநாதன் ஒரு கையால் வாயை பொத்திக்கொண்டான். அவனின் அடக்கமாட்டாத சிரிப்பே விழிக்கு என்னவோ சொல்ல என்னவென்றாள் தலையசைத்து. பேசாதே, அங்கே பார் என்று என்று பூமிநாதன் அவளிடம் காட்டவும் அனைவரின் கவனமும் அங்கே தான் சென்றது. “என்ன மாமோவ், ஒமக்கு மட்டும் சூம் […]


உயிர் தழுவும் விழியே – 26 (2)

“யாத்தே இந்த மனுசெம் கிறுக்க செத்த அடக்கேம்த்தா…” என்று சாமியை பார்த்து மயில் அலுப்புடன் சொல்லவும், “எனக்கா கிறுக்கு?…” என்றவரை பிடித்த பூமிநாதன், “ஐயா, செத்த கம்மின்னிருங்க. நா பாத்துக்கிடுதேம்…” என்றவன் விழியை முறைத்தான். “என்னத்த பாப்பியோ?…” என்று அந்த துண்டை உதறி தோளில் போட்டபடி சென்றுவிட்டார். “எக்கா கொண்டாந்த கூடையில இன்னொரு துண்டு இருக்கு. அத்த எடுக்க சொல்லு…” என்று சொல்ல, “யே ராசாங்கத்தாளுக்கு யேங்கிட்ட சொல்ல ஆவாதாக்கும்?…” என்றாள் இடக்காக. “யேலே பூமி நா […]


உயிர் தழுவும் விழியே – 26 (1)

உயிர் – 26          கோவிலை சுற்றிலும் பந்தல் போடப்பட்டு ஊர் மக்களுக்கு விருந்து நடந்துகொண்டிருந்தது. கூத்தபிரான், துளசி, பூமிநாதன் என்று அனைவரும் பரபரபாக வேலை  பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடந்துகொண்டிருக்கும் பந்தியில் கவனமாக இருந்தார்கள். வருகிறவர்களை எந்தவிதத்திலும் கவனிப்பு குறைவு என்று எண்ண வைத்துவிட கூடாதென்பதில் அத்தனை சிரத்தையாக இருந்தனர். அது செல்வியின் குழந்தைக்கு முப்பதாம் நாளிற்கான கோவில் பூஜை. அதையே அத்தன பெரிதாய், சிறப்பாய் செய்தார்கள். “கொடமாட்டு இருக்கேய்யா. அசத்திப்புட்டீக….” என்று சாப்பிட்டு முடித்து வந்த பூமியின் […]


உயிர் தழுவும் விழியே – 25 (3)

கூத்தபிரான் ஒதுங்கி நின்றுதான் பார்த்தார். யோகுவின் அருகில் கூட செல்லவில்லை. தண்ணீரை தெளித்து மயக்கதை போக்க விழித்துக்கொண்டவள் முதலில் பார்த்தது விழியை தான். “மன்னிச்சிக்கிடுத்தா சிட்டு, சிட்டு பாவம் பண்ணிட்டேம்த்தா. நெசமாங்காட்டி அன்னிக்கி அவம்பாவத்துல ஒன்னத்தையும் நம்பாம ஒன்னிய எம்புட்டுக்கு வெசனத்துல தள்ளிப்பிட்டேன். மன்னிச்சிக்கிடுத்தா. ஒங்கண்ணீரும்தேம் என்னிய, எம்புள்ளைய இங்க கொண்டாந்துருச்சு…” யோகுவின் அழுகை அந்த வீட்டையே புரட்டி போட்டது. அவள் மயங்கியது பரிதவித்து போன துளசிக்கு விழித்ததும் தான் நிம்மதியானது. இப்போது விழியை கட்டிக்கொண்டு அவள் […]


உயிர் தழுவும் விழியே – 25 (2)

அவருக்கு அனுமானம் கூட இல்லை. சண்டைக்கு தான் தேடி வந்துவிட்டார் என்று உள்ளுக்குள் பயத்துடன் இருந்தாலும் வெளியே சாந்தமாய் தான் இருந்தார். “செரி பொறப்புடுதேம்…” என்று வாசலுக்கு திரும்பியவர் சிந்தாவிடம் மன்னிப்பை கேட்க மனது உந்த வார்த்தையாய் அதனை கொண்டு வரமுடியவில்லை. “பொறவு…” என்று தயங்கி மயில் சிந்தாவுடன் வாசலில் நிற்க போவோர் வருவோர் கவனித்து அதிசயாமாக பார்த்துவிட்டே சென்றார்கள். “என்னன்னு சொல்லுங்க மதினி…” என்றவரின் கையை பிடித்துக்கொண்ட மயிலு, “எத்தையும் மனசில வெக்காம வீட்டுக்கு வாத்தா […]


உயிர் தழுவும் விழியே – 25 (1)

உயிர் – 25          மாலை வரை விழியை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு வரவே இல்லை. மயலின் கால்கள் தான் தேய்ந்துபோனது வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து நடந்தே. இதில் துளசிக்கு அழைக்க அவன் காட்டிற்கு சென்றுவிட்டேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டான். கூத்தபிரானுக்கு அழைக்க முடியவில்லை. அழைத்தாலும் பிரயோஜனம் இல்லை. அதைவிட அழைக்கவே பயமாக இருந்தது. எங்கே தான் அழைத்து கோவித்துக்கொண்டு அங்கேயே இருந்துவிட்டால் என்னும் நினைப்பே அழைக்க சம்மதிக்கவில்லை. சரி வருவதற்குள் ஏதேனும் செய்வோம் என்று […]


உயிர் தழுவும் விழியே – 24 (2)

நல்ல எண்ணங்கள் எப்போதுமே நன்மையே பயக்கும் என்பதற்கு அவர்களின் மகிழ்ச்சியான முகமே மனதின் நிம்மதிக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. அவர்களை போல இலகுவாய், இயல்பாய் இருக்க முடியாததே மயில் மற்றும் யோகுவிற்கு தண்டனையாக அமைந்தது. நன்கு மாதங்கள் கழித்து யோகு இப்போது புகுந்த வீட்டிற்கு அழைத்துவரப்பட்டிருக்க, இருக்கிறாள் ஆனால் இல்லை என்னும் விதமாக தான் அவளின் சூழ்நிலை. எத்தனை அகங்காரம் எடுத்து அவள் ஆடினாளோ அத்தனைக்கும் முடிவு கட்டுவதை போல நிகழ்ந்துவிட்ட ஒன்றால் அவள் அடங்கி ஒடுங்கி தான் […]


உயிர் தழுவும் விழியே – 24 (1)

உயிர் – 24           செல்வியும், சந்தானலட்சுமியும் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்ப துளசி வந்து சேர்ந்தான். “இதேம் நீயி வீட்டுக்கு வார லச்சணமாக்கும்?…” என செல்வி அவனை தாழ்வாரத்திலேயே பிடித்துக்கொண்டு அதட்ட, “எப்ப வந்தாக்கா?…” என்றான் அவளின் அதட்டலை கண்டுகொள்ளாமல். “அப்பதயே வந்துட்டோம். இப்பத்தேன் பொறப்படுதோம்…” சந்தானலட்சுமி சொல்ல, “செரி கெளம்புக…” என்று உள்ளே சென்றான். இன்னும் செல்விக்கு தெரிந்திருக்கவில்லை துளசிக்கு விஷயம் தெரியுமென்று. வீரபாண்டி சொல்லவில்லை எதையும். “எத்தே நடங்க, வாரேம்…” என்று அவரை முன்னால் அனுப்பியவள், […]


உயிர் தழுவும் விழியே – 23 (2)

அவர் இருமியத்தில் ரத்தமெல்லாம் கண்களில் வந்து நிற்க மூக்கில் நீர் வடிய ஆரம்பித்துவிட்டது. பதறிப்போய் அவரை அமைதிப்படுத்த முயல மயில் அரண்டுவிட்டார் திடீரென்று இப்படியானதும். “அவள போவ சொல்லு. எம்முன்னாடி அவ வந்தா யே உசுரு ஒடம்புல நிக்காது. கடசியா சொல்லுதேம்…” என்று என்று அந்த நிலையிலும் எச்சரித்தார் கூத்தபிரான். மயில் ஸ்தம்பித்து நிற்க அத்தனைபேருமே இந்த ரௌவுத்திரத்தில் ஆணியடித்ததை போலாகிவிட்டார்கள். “எம்பொணத்த கூட இவ தொடப்பிடாது…” என்று உறுதியாய் சொல்ல அந்தளவிற்கு என்ன செய்துவிட்டோம் என […]


உயிர் தழுவும் விழியே – 23 (1)

உயிர் – 23        ஒரு மாதம் ஆகியிருந்தது விழி அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்து. முதல் சில நாட்கள் முணுமுணுப்பு, சாடை பேச்சுமாக இருந்த மயில் கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சை குறைக்கவேண்டிய சூழல். கூத்தபிரானை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது மயிலுக்கு. முகத்தை பார்க்க கூட அனுமதிப்பேனா என்பதை போல இருக்கிறார். இந்த கோபத்தின் காரணம் என்னெவென்று தெரியாமல், தெரிந்துகொள்ளவும் முடியாமல் மயிலின் நிலையோ பரிதாபம். ஏன் என்று கேட்கவும் நாதியற்ற என்னும் பொருளை அவர் […]