Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனக்கொரு வரம் கொடு

எனக்கொரு வரம் கொடு – 4

  சௌதாமினி தோழிகளோடு வெளியில் வந்திருந்தாள். அனைவரும் காலையில் புதிதாக வந்திருந்த திரைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, மதிய உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு அருகிலிருந்த பார்க்கிற்கு வந்திருந்தார்கள்.   பெரும்பாலும் திருமணம் ஆனவர்களே! மீதம் இருப்பவர்களும் வரன் பார்த்துக் கொண்டு இருப்பவர்களாகவோ அல்லது வரன் அமைந்து திருமணம் நிச்சயம் ஆனவர்களாகவோ இருந்தார்கள்.   அடுத்த மாதம் திருமணம் முடிவாகியிருக்கும் தேவிகா கைப்பேசியும் கையுமாகவே அலைய, “இப்ப எல்லாம் அப்படி தான் இருப்பாங்கடி” என்று கேலி செய்தனர் மணமுடித்தவர்கள்.   […]


எனக்கொரு வரம் கொடு – 3

  காரை ஓட்டிக்கொண்டிருந்த சௌதாமினியின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. வசந்தன் தன் அக்காவை ஓரக்கண்ணால் பார்ப்பதும், மீண்டும் சாலையை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தான்.   இத்தனை ரணகளத்திலும் ஒரு நல்ல விஷயமாக அவனது பிரச்சினை எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு!   அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே? உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல் […]


எனக்கொரு வரம் கொடு – 2 (2)

  உடனேயே, “ஓ கூட ஒரு பொண்ணிருந்தா தான் உங்க கேமரா வேலை செய்யுமோ?” என்று நக்கலாகக் கேட்டவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சட்டென்று வேக எட்டுக்களில் சௌதாமினியை நெருங்கி தன் வலது கையால் அவளது வலது கரத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி தன்னருகே தன் கை வளைவில் நிற்க வைத்திருந்தான்.   அதில் அவள் திருதிருக்க, அவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த், ஓவியா இருவரும் விழிகள் தெறிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “இங்கே […]


எனக்கொரு வரம் கொடு – 2 (1)

  சௌதாமினி காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். எந்நாளும் இல்லாத திருநாளாக அன்றையதினம், தன் தோற்றத்தில் வெகு அக்கறை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.   ஆரஞ்சு வண்ண லெனன் புடவையும், அதை எடுத்துக்காட்டும் படியான அடர் நீல நிற டிசைனர் ப்ளௌஸும், ஒரு கையில் தங்க வளையலையும், மற்றொரு கையில் டைடன் வாட்சும் அணிந்து, மிதமான அலங்காரமும், வாசனைத் திரவியமுமாகத் தயாரானாள். அவளைப் பாந்தமாகத் தழுவிய புடவையின் முந்தானையைச் சரிய விட்டு உடுத்தியிருந்தவள், கழுத்தில் வழக்கமாக […]


எனக்கொரு வரம் கொடு – 1 (2)

   ஆனால், வருத்தம் என்பது அதோடு முடியக்கூடிய ஒன்றா? உண்மையாக வருந்துபவர்கள் அடுத்த முறை அந்த பிழையைச் செய்யத் துணியவே கூடாது அல்லவா? வசந்தன் ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. அவனது பிழைகள் கூடிக்கொண்டே இருக்கும். அதிலும் பல பிழைகள் இவ்வளவு துணிந்து விட்டானா என்ற பேரதிர்ச்சியை கொடுக்கும். வீட்டிலேயே திருடியிருக்கிறான் என்று இப்பொழுது அறிய நேரிட்டது போல!   சௌதாமினி நெருங்குவதைக் கண்டதும், வசந்தன் முன்பக்க காரின் கதவை அமைதியாகத் திறந்து விட்டான். அவன் முகத்தைப் பார்த்தபடியே […]


எனக்கொரு வரம் கொடு – 1 (1)

   அழகானதொரு பொன்மாலைப் பொழுதில், தஞ்சாவூர் திலகர் திடலில் செல்வி சௌதாமினியின் நாட்டிய விழா ஏற்பாடாகியிருந்தது. அந்த ஜில்லாவில் புகழ்பெற்று விளங்கும் இளம் பரத நாட்டிய கலைஞர்களுள் அவளும் ஒருத்தி ஆவாள். அவளின் பெயருக்கென்றே கூடும் கூட்டமும் ஏராளம். அவ்விழாவிலும் அவ்வாறே! அரங்கம் நிரம்பி வழிந்தது!   நாட்டிய மேடையில், தூண் பதாகைகள் (banners) வலப்புறம் மூன்றும், இடப்புறம் மூன்றுமாகச் சாய்வான வரிசையில் மேடையை அலங்கரித்தபடி அமைந்திருக்க, வலது புறம் நடராஜர் சிலையும், அதன் முன்பு இரண்டு […]