“நாங்க பீடி கம்பெனில இருந்து பேசுறோங்க. சரோஜா மா உங்க அம்மாவா?” “ஆமா. அம்மாக்கு என்ன ஆச்சு?”, என்று உண்மையிலே பதட்டத்தில் தான் கேட்டான். “திடீர்னு மயங்கி கீழே விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கோம். நீங்க வறீங்களா?” “நான் இப்ப வேலைல இருக்கேன். எங்க மாமாவை அனுப்பி வைக்கிறேன். அவர் வர வரைக்கும் கொஞ்சம் அவங்களைப் பாத்துக்கோங்க”, என்றவன் எந்த ஹாஸ்பிட்டல் என்று விவரம் போனை வைத்தவன் உடனே சிதம்பரத்தை அழைத்தான். […]
அவனும் உடை மாற்றியதும் சிதம்பரம் வீட்டுக்கு செல்ல அங்கே அனைவரும் அவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். “என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க? கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாமே?”, என்று கேட்டான் சேகர். “மச்சான் நேத்து நைட் தூங்கிருப்பாரா என்ன?”, என்று தேவியின் கணவன் கேட்க “முத ராத்திரி அன்னைக்கு யாராவது தூங்குவாங்களா?”, என்று கேட்டான் ஜெயாவின் கணவன். “போங்க மாப்ள”, என்று தமிழ் அழகாக வெட்கப் பட அவனை அப்படிப் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. […]
எனைச் சுற்றி ஏகாந்தம் அத்தியாயம் 9 மணமக்கள் இருவரும் ஆவலுடன் எதிர் பார்த்த முதலிரவு வந்தே விட்டது. அந்த வீட்டில் அவளும் அவனும் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டுச் சென்றிருந்தார்கள். வைஷ்ணவி அலங்காரம் செய்து விட்டு முதலிரவுக்கு என அலங்காரம் செய்யப் பட்ட அறைக்குள் அவளை விட்டுவிட்டுச் சென்றதும் கொஞ்சம் படபடப்பாக தான் அமர்ந்திருந்தாள் கயல். நெஞ்சம் எல்லாம் அதிர்ந்து போய் இருந்தது. அவன் ஒன்றும் அவளுக்கு புதியவன் இல்லை. […]
அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் கயல். அவளை தயார் செய்து விட்டு மற்றவர்கள் வெளியே சென்று அமர எப்போது தமிழ் வீட்டினார் வருவார்கள் என்று தவம் இருந்தாள். இரண்டு வேன்களில் வந்து தமிழ் வீட்டினர் இறங்கியதும் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. மூன்று தங்கைகளும் கயலுக்காக சேலை பூ சீர் வரிசைகளை கொண்டு வந்து இறக்கி இருக்க சபையே நிறைந்திருந்தது. “ரொம்ப எளிமையா தானே இந்த கல்யாணம் நடக்குறதா இருந்துச்சு. ஆனா நடக்குறதைப் பாத்தா ரொம்ப […]
அதை எடுத்தவன் “சொல்லுங்க மாமா”, என்றான். “தூங்கிட்டீங்களா மாப்ள? தொல்லை பண்ணிட்டேனா?”, என்று அவர் கேட்க “அப்படி எல்லாம் இல்லை மாமா. சும்மா வானத்தை பாத்துட்டு தான் படுத்திருக்கேன். என்ன விஷயம் சொல்லுங்க?”, என்று கேட்டான். “நாளான்னைக்கு காயலுக்கு பிறந்த நாள் மாப்ள. அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன். உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்ல? திடீர்னு நினைவு வந்துச்சு. அதான் உடனே சொல்லணும்னு கூப்பிட்டேன். சரி மாப்ள தூங்குங்க. வைக்கிறேன்”, என்று சொல்ல “நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க […]
எனைச் சுற்றி ஏகாந்தம் அத்தியாயம் 8 அடுத்ததாக தமிழுக்கு உடை எடுத்து முடித்தார்கள். மீனாட்சி, சிதம்பரம் மற்றும் சரோஜாவுக்கு கூட உடை எடுத்து விட்டான். வைஷ்ணவி குடும்பத்துக்கும் அவன் எடுத்துக் கொடுக்க வைஷ்ணவியும் சேகரும் வேண்டாம் என்றார்கள். சேகரின் அன்னைக்கு கூட அவன் எடுத்துக் கொடுத்தான். சேகர் மறுக்க “அப்படின்னா நீங்க என்னை தம்பியா நினைக்கலையா?”, என்று கேட்டான் தமிழ். அதற்கு மேல் சேகரால் மறுக்க முடிய வில்லை. “எப்பவும் நீ என் தம்பி […]
அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது, அவளது அம்மாவைப் பற்றி என பல தகவல்களைக் கேட்க அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள். மணி இரண்டு அடித்ததும் அதற்கு மேல் இருக்க அவனுக்கு தயக்கமாக இருந்தது. அவள் மடியில் இருந்து எழுந்தவன் “சரி கயல் நேரம் ஆச்சு. உன் அப்பா சித்தி எல்லாரும் வந்தாலும் வந்திருவாங்க. அவங்க வரும் போது நான் இங்க இருந்தா நல்லா இருக்காது. நான் கிளம்புறேன்”, என்றான். அவன் கிளம்புறேன் என்று சொன்னதும் […]
எனைச் சுற்றி ஏகாந்தம் அத்தியாயம் 7 தான் கோப பட்டு எழுந்து சென்றால் கயல் தன்னை சமாதானம் செய்வாள் என்று எண்ணினான் தமிழ். சமாதானப் படுத்த வில்லை என்றாலும் தன்னுடைய அன்னையின் பேச்சுக்காக கோபமாவது படுவாள் என்று தான் எண்ணினான். ஆனால் அவனது நினைப்பை பொய்யாக்கி விட்டு அவனை பின் பக்கமாக கட்டி அணைப்பாள் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. அவளது இரண்டு கரமும் அவன் வயிற்றைச் சுற்றி இருக்க […]
“சொல்லுங்க மாமா” “கயலுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா மாப்ள?” “இல்லையே மாமா, என் கிட்ட நல்லா தான் பேசிட்டு இருந்தா. திடீர்னு பேசலை. அதான் உங்க கிட்ட கேக்குறேன். என்ன சொன்னா மாமா? என் மேல கோபமா இருக்காளா? ஆனா நான் என்ன பண்ணினேன்னு தெரியலையே?”, என்று பரிதவிப்புடன் கேட்டான். “உங்க கிட்ட பேச மாட்டேன்னு சொல்றா மாப்ள… அது மட்டுமில்லாம….” “என்ன மாமா?” “இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்றா….” […]
எனைச் சுற்றி ஏகாந்தம் அத்தியாயம் 6 தமிழ் வீட்டுக்கு வரும் போது சரோஜா திண்ணையில் தான் அமர்ந்திருந்தாள். “இந்த அம்மா கிட்ட கல்யாணம் பத்தி தகவல் சொல்லணுமே? எப்படிச் சொல்ல?”, என்று எண்ணமிட்டவன் மற்றொரு திண்ணையில் அமர்ந்து தங்கைகளை கான்பரன்ஸ் காலில் அழைத்தான். “சொல்லுண்ணா”, என்றாள் தேவி. “உங்க மூணு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணினேன்”, என்று ஆரம்பிக்க சரோஜாவும் அந்த பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள். […]